Tuesday, December 15, 2009

என் டர்ர்ர்ர்ர்ர்ர் கவிதைகள்

ஒரு கவிதையில் இரு கவிதைகள்


முந்தைய இரவின்
முயக்கம் தீராத
காதல் திருமண ஜோடியின்
கண்களிலும் முகத்திலும்
வழியும் சிரிப்பு

சுற்றி நிற்கும்
ஆண் கூட்டத்தை
பொருட்படுத்தாது
பசி தீர்த்த அன்னையின்
முகம் பார்க்கும்
மழலை சிரிப்பு

கொட்டும் மழைக்காய்
அரைமணி ஒதுங்கிய
பெட்ரோல் பங்கிலும்
காணக்கிடைக்கின்றன
சில கவிதைகள்




ஆளுக்கு ஒரு உலகம்


அண்ணி வீட்டு கடிகாரம்
அரைமணி அதிகமாய் காட்டும்,
ஆசிரியராய் அவர் இருக்கும் - பள்ளி
ஆரம்பிக்கும் நேரமது

எதிர்வீட்டு கடிகாரம் எப்போதும்
இருபது நிமிடம் முன்செல்லும்,
ஆலை சங்கொலிக்கும் முன்,
அங்கிருக்க வேண்டுமென்கிறார் அவர்

இக்கவிதை (!!) வரிகளை மனதில் ஓட்டியபடி,
சைக்கிளை மெதுவாய் ஓட்டியதால்,
கிளம்பிய ரயிலை ஓடிவந்து
பிடிக்கும்போது தான் தோன்றியது

ஒவ்வொருவருக்கும்
உலகம் மட்டும் வெவ்வேறல்ல
அவை இயங்கும் நேரங்களும்
தனித்தனி என்று




எதிர்க்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன (இவை கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை), உண்மை கவிஞர்கள் இவற்றை திருத்தி எழுதினாலும் நலம்


நன்றி
சங்கர்

24 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒவ்வொருவருக்கும்
உலகம் மட்டும் வெவ்வேறல்ல
அவை இயங்கும் நேரங்களும்
தனித்தனி என்று
//

ரொம்ப ரொம்ப நல்லா வந்துருக்கு சங்கர்..!

சங்கர் said...

வாங்க வசந்த், நன்றி

Priya said...

//முந்தைய இரவின்
முயக்கம் தீராத//...முயக்கம் or மயக்கம்?

//கொட்டும் மழைக்காய்
அரைமணி ஒதுங்கிய
பெட்ரோல் பங்கிலும்
காணக்கிடைக்கின்றன
சில கவிதைகள்//.....உண்மைதான் எதையும் ரசனையுடன் பார்த்தால், வாழ்வு கவிதையாய் இருக்கும்!

ரொம்ப நல்லாயிருக்கு

Chitra said...

ஒவ்வொருவருக்கும்
உலகம் மட்டும் வெவ்வேறல்ல
அவை இயங்கும் நேரங்களும்
தனித்தனி என்று ..................... உங்களுக்குள் தூங்கி கொண்டிருந்த கவிஞரை யாருங்க தட்டி எழுப்பி விட்டது? நல்லா இருக்கு - கவிதைகள்.

கலகலப்ரியா said...

superb shankar..! oru sottu..!

புலவன் புலிகேசி said...

என்டர் கவிதைகள் டெரரா இருக்குங்க...நல்ல சிந்தனை...

சங்கர் said...

//Priya said...
...முயக்கம் or மயக்கம்?//

அப்படி தான் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன், தப்பா இருந்தா யாராவது சொல்லுங்களேன்

நன்றி பிரியா

சங்கர் said...

//Chitra said...
உங்களுக்குள் தூங்கி கொண்டிருந்த கவிஞரை யாருங்க தட்டி எழுப்பி விட்டது? நல்லா இருக்கு - கவிதைகள்.//

எல்லா புகழும் நம்ம கேபிள் அண்ணனுக்கே,

சங்கர் said...

//கலகலப்ரியா said...
superb shankar..! oru sottu..!//

வாங்கக்கா, அப்புடியே ஒரு கவிதையும் சொல்லியிருந்தீங்கன்ன நல்லா இருக்கும்

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
என்டர் கவிதைகள் டெரரா இருக்குங்க...நல்ல சிந்தனை...//

எல்லாம் நீங்க கொடுக்குற ஊக்கம் தான்

Keddavan said...

கவிதை டக்கரா இருக்கிறது.

ஷங்கி said...

சிறகடிச்சுப் பறக்க ஆரம்பிச்சாச்சு போலிருக்கே?!
ம்ம், ம்ம்! நடக்கட்டும் நடக்கட்டும்!

பிரபாகர் said...

இரவே படித்து இரண்டவது ஆளாய் பின்னூட்டமிட முயற்சிக்க முடியவில்லை, அலுவலகத்தில், கமெண்ட் அதே விண்டோவில் இருப்பதால். எழுதிய வரிகளை மெயிலில் அனுப்பி இதோ இப்போது கீழே...


சங்கர்,

கவிதையிலும் நல்லா கலக்குறீங்க... நிஜமாய். நிறைய எழுதுங்க பாஸ் இதே மாதிரி.

முயக்கம் என்ற சொல் ஒன்றே போதும், நீர் கவிஞர்....

பிரபாகர்.

கலையரசன் said...

எல்லாமே அருமை!!

சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!!

பூங்குன்றன்.வே said...

//கொட்டும் மழைக்காய்
அரைமணி ஒதுங்கிய
பெட்ரோல் பங்கிலும்
காணக்கிடைக்கின்றன
சில கவிதைகள்//

அருமை பாஸ்.

சுசி said...

ரெண்டு கவிதைகளுமே அருமையா இருக்கு சங்கர்.
கலக்கறீங்க போங்க.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்குங்க எல்லாமே.

சங்கர் said...

//பிரபாகர் said...
முயக்கம் என்ற சொல் ஒன்றே போதும், நீர் கவிஞர்....//

அப்பாடா, இப்போ தான் நிம்மதியா இருக்கு

@Priya
அண்ணனே சொல்லிட்டாரு, அது 'முயக்கம்' தான்

சங்கர் said...

//rajeepan said...
கவிதை டக்கரா இருக்கிறது. //

வாங்க, மிக்க நன்றி

சங்கர் said...

//ஷங்கி said...

சிறகடிச்சுப் பறக்க ஆரம்பிச்சாச்சு போலிருக்கே?!
ம்ம், ம்ம்! நடக்கட்டும் நடக்கட்டும்! //

சொல்லிட்டீங்கல்ல, நடத்திடுவோம்,

சங்கர் said...

//கலையரசன் said...
எல்லாமே அருமை!!
சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!! //


வாங்க கலை, நீங்களும் அந்த பெட்ரோல் பங்கில் இருந்தீங்களா?

சங்கர் said...

//பூங்குன்றன்.வே said...
அருமை பாஸ். //

நன்றி

இன்னொரு கவிஞரும் சொல்லிட்டருப்பா, எல்லாரும் பாத்துக்குங்க

சங்கர் said...

//சுசி said...
ரெண்டு கவிதைகளுமே அருமையா இருக்கு சங்கர்.
கலக்கறீங்க போங்க. //

வாங்க சுசியக்கா,

கலங்குறது மூளை இல்லியே :))

சங்கர் said...

//விக்னேஷ்வரி said...

நல்லாருக்குங்க எல்லாமே. //

நன்றிங்க