Saturday, December 12, 2009

கேபிளாருக்கு சமர்ப்பணம்

ஒரு வாரமா ஹிட்ஸும் கொறஞ்சு போச்சு, பின்னூட்டங்களையும் காணும், பிரபாகர், ராகவன் (நைஜீரியா) போன்ற நம்ம ரெகுலர் கஸ்டமர்கள் கூட கடைப்பக்கம் எட்டிப்பாக்கல, வாரத்துக்கு ஒரு பதிவு போடவே மேட்டர் கிடைக்காம திண்டாடிக்கிட்டிருந்த நானே ஒரே வாரத்துல, ஒரு டெரர் கதை உட்பட, மூணு பதிவு போட்டும், நிலைமையில் முன்னேற்றம் எதுவும் இல்ல, என்ன ஆச்சுன்னு யோசிச்சுக்கிட்டே நேத்து ப்ளாக் திறந்து பார்த்தா ஒரு பாலோயர் அவுட்டு.

இது என்னடா புது சோதனை, என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே வலை மேஞ்சிக்கிட்டு இருந்தப்போ கேபிள் அண்ணாதையோட இந்தப்பதிவு கண்ணில்பட்டது. அண்ணன், ஒரு கவிதையை எழுதி படிக்கறவங்கள தலைப்பு வைக்க சொல்லிட்டாரு, பாத்தா 60 பின்னூட்டம், சரி இதுவும் நல்லாருக்கேன்னு, நானும் கவிதை எழுத உக்காந்துட்டேன்.

இதோ அந்த கருமம், மன்னிக்கவும், கவிதை,

"கடித்த உன்னை,
அடித்த கையில்,
படிந்த ரத்தம்,
உனதா? எனதா?"

இதை எழுதினப்புறம் தான் யோசிச்சேன். நீங்கல்லாம் ப்ளாக் பக்கம் வருவதே பெரிய விஷயம், இது மாதிரி கவிதையெல்லாம் (அப்படின்னு ஒத்துக்குவீங்களா என்பது வேற விஷயம்) படிக்கிறது அதவிட பெரிய விஷயம், இதுல உங்களை தலைப்பு வேற வைக்கச்சொன்னா, அப்புறம் "புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை" கதை மாதிரி ஆகிடப் போகுதுன்னு தோன்றியதால், தலைப்பு இதோ,

"கொசுவிடம் ஒரு கேள்வி"


பின்குறிப்பு:

1. இதுவே என்னுடைய கடைசிக் கவிதையாய் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு, முதல் பரிசை எனக்கே கொடுத்துவிடலாம் என அமைப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்வதால், யாரும் இக்கவிதையை உரையாடல் போட்டிக்கு பரிந்துரைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

2. இந்த பதிவிற்கும் போதுமான வரவேற்பு கிடைக்காவிட்டால், தொடர்ந்து கவிதை எழுதுவதாய் முடிவுசெய்திருக்கிறேன், என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி
சங்கர்

37 comments:

ஷங்கி said...

தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்! எல்லாமே எதிலிருந்தோதான் தொடங்குது! (என் பங்குக்கு நான் கடிக்க வேண்டாமா?)

Chitra said...

கொசு கடியா? கவிதை கடியா?
why blood? same blood.

சங்கர் said...

//ஷங்கி said...
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்! எல்லாமே எதிலிருந்தோதான் தொடங்குது! (என் பங்குக்கு நான் கடிக்க வேண்டாமா?)//

அப்போ அடுத்த கவிதைய படிக்க நீங்க தயாரா?

சங்கர் said...

//Chitra said...
கொசு கடியா? கவிதை கடியா?
why blood? same blood.//
நீங்க பாராட்டறீங்களா திட்டுறீங்களான்னே புரியல, என் கவிதை மாதிரி எளிதா எழுதுங்க அக்கா, அவ்வ்வ்வவ்வ்வ்

Cable சங்கர் said...

ஜெட்லி.. இதெல்லாம் கவிதையான்னு யாராவது கேட்டா என்கிட்ட அனுப்ப்புங்க.. அடுத்த வாரம் இன்னொரு கவிதை எழுதி அவங்களுக்கு அனுப்பிருவோம்... என்ன.. நீ ஒண்ணு.. நான் ஒண்ணு.. என்ன ரெடியா..

சங்கர் said...

//Cable Sankar said...
ஜெட்லி.. இதெல்லாம் கவிதையான்னு யாராவது கேட்டா என்கிட்ட அனுப்ப்புங்க.. அடுத்த வாரம் இன்னொரு கவிதை எழுதி அவங்களுக்கு அனுப்பிருவோம்... என்ன.. நீ ஒண்ணு.. நான் ஒண்ணு.. என்ன ரெடியா..//


இதுக்கே இன்னொரு பாலோயர் அவுட்டு, இருந்தாலும் பரவாயில்லை, நான் ரெடிங்க அண்ணா,

ஜெட்லி... said...

@ கேபிள்

அண்ணே எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம்
இதை எழுதியது நண்பர் சங்கர்...
எனக்கு என்டர் கவிதை கூட எழுத தெரியாது தலைவரே...

ஜெட்லி... said...

@ சங்கர்

ஒருத்தர் வேற இன்னைக்கு வெளிய போய்ட்டார்....
நாளைக்கு நம்ம புலனாய்வு குழு மூலம் அதை யார் என்று கண்டுபிடிப்போம்......

மணிஜி said...

வியாபாரத்தை கவனி தம்பி...

Sarathguru Vijayananda said...

உங்கள் கவிதையை பலர் நகைச்சுவையாக பார்த்தாலும், எனக்கு சீரியாஸாக பிடித்திருக்கிறது. தமாசாக ஒரு நல்ல கவிதை படைப்பது சுலபமல்ல.

இருந்தும் ஏனைய உங்களது நண்பர்கள் நகைச்சுவை பின்னூட்டம் போடுவதற்கு நட்பே காரணம் என்று நினைக்கிறேன்.

நல்ல கவிதை. ஒன்றே ஒன்று மட்டும்தான் உங்களிடமும் உங்கள் நண்பர்களிடம் கேட்க நினைக்கும் கேளிவி. உங்களின் நண்பர்கள் வட்டாரப்பதிவை மட்டுமே படித்து அதற்கு மட்டுமே பின்னூட்டம் இடுவது என்று ஏதாவது சட்டம் வைத்து செயல்படுகிறீர்களா என்ன?

அது என்ன உங்கள் வட்டாரத்தில் இருக்கும் பதிவர்கள் என்ன எழுதினாலும், உப்பு சப்பே இல்லாமல் ஏதும் எழுதினாலும் சுமார் 30 பின்னூட்டம் போடுகிறீர்கள்.

நண்பனின் கடமை தன் நண்பனை மேம்படுத்துவதும் அவனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதும்தான் என்ற இலக்கணம் இருந்தாலும், படைப்பு என்று வரும்போது ஒரு தரம் வேண்டாமா? அல்லது அப்படி தவறாக படைக்கும் போது நீங்கள் உங்கள் பின்னூட்டம் போடும்போது சுட்டிக் காட்டினால. பலரிலிருந்து ஒரு சில நல்ல படைப்பாளிகளை தமிழ் உலகிற்கு கொடுக்க முடியும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் என்பதை என் மனம் நம்ப மறுக்கிறது.

இது உங்களைப் போன்றோரின் நண்பர்களாக கருதி உங்களின் நலனுக்காகாவே எழுந்த ஆதங்கம்.

விஜயசாரதி
http://www.manalkayiru.com

சங்கர் said...

//ஜெட்லி said...
ஒருத்தர் வேற இன்னைக்கு வெளிய போய்ட்டார்....
நாளைக்கு நம்ம புலனாய்வு குழு மூலம் அதை யார் என்று கண்டுபிடிப்போம்......//

நான் ஏற்கனவே விசாரணை கமிஷன் அமைச்சிட்டேன், நாளைக்கு தெரிஞ்சுரும்

சங்கர் said...

//தண்டோரா ...... said...
வியாபாரத்தை கவனி தம்பி...//

வாங்கண்ணே, இப்போ தான் கொஞ்சம் களைகட்ட ஆரம்பிச்சிருக்கு, பார்க்கலாம்,

சங்கர் said...

//Sarathguru Vijayananda said...
ஒன்றே ஒன்று மட்டும்தான் உங்களிடமும் உங்கள் நண்பர்களிடம் கேட்க நினைக்கும் கேளிவி. உங்களின் நண்பர்கள் வட்டாரப்பதிவை மட்டுமே படித்து அதற்கு மட்டுமே பின்னூட்டம் இடுவது என்று ஏதாவது சட்டம் வைத்து செயல்படுகிறீர்களா என்ன?//

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, முன்னாடியே ஒரு நாள் உங்க வலைப்பூ பக்கம் வந்தேன், அன்னிக்கு என் இணைய இணைப்பு படுத்தின பாட்டில் எதுவும் ஒழுங்கா வரலை, அதுக்கப்புறம் வர சந்தர்ப்பம் அமையலை, இப்போ சொல்லிட்டீங்கல்ல, இனிவந்துருவோம்

//Sarathguru Vijayananda said...
உங்கள் கவிதையை பலர் நகைச்சுவையாக பார்த்தாலும், எனக்கு சீரியாஸாக பிடித்திருக்கிறது. தமாசாக ஒரு நல்ல கவிதை படைப்பது சுலபமல்ல.//


@கேபிள் அண்ணே, ஒருத்தர் சிக்கிட்டாரு, ஆரம்பிக்கலாமா?

Sarathguru Vijayananda said...

நன்றி நீங்கள் என் வலைப்பூவிற்கு வருகிறேன் என்று சொன்னதற்கு அல்ல. நான் இட்ட கருத்தை ஏற்று அதை மறைக்காமல் வெளியிட்டதற்கு.

உங்கள் இன்னொரு நண்பர் (வலைப்பூ ஞாபகமில்லை) ஒருவரின் வலைப்பூவில் இதே கருத்தை வெளியிட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என் அனுமானத்தை ஊர்ஜிதப்படுத்தியது.

சிக்கிட்டேன்னு சின்னபின்னமாக்க நீங்களும் கேபிளும் சேர்ந்து ரூம் ஏதும் போட்டுட்டீங்களா?

தமிழ் உதயம் said...

நீங்கள் எது எழுதினாலும் கவிதை தான்...
நண்பனின் கடமை தன் நண்பனை மேம்படுத்துவதும் அவனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதும்தான் என்ற இலக்கணம் இருந்தாலும், படைப்பு என்று வரும்போது ஒரு தரம் வேண்டாமா? அல்லது அப்படி தவறாக படைக்கும் போது நீங்கள் உங்கள் பின்னூட்டம் போடும்போது சுட்டிக் காட்டினால. பலரிலிருந்து ஒரு சில நல்ல படைப்பாளிகளை தமிழ் உலகிற்கு கொடுக்க முடியும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் என்பதை என் மனம் நம்ப மறுக்கிறது.
நன்றி சத்குரு விஜயானந்தா

Starjan (ஸ்டார்ஜன்) said...

கொசுவா , நீங்களான்னு ஒரு போராட்டமே நடந்திருக்குமே !

CS. Mohan Kumar said...

தம்பி மக்கள் உன்கிட்டே முக்கியமா எதிர் பார்ப்பது சினிமா குறித்த உன் காமெடி கலந்த எழுத்து. சங்கர் கொஞ்சம் கலந்து கட்டி variety-ஆ எழுதுறார்.

கண்ணா, இந்த followers, பின்னூட்டம், வோட்டு இதெல்லாம் நம்ம கையில இல்ல. எச்சச்ச, எச்சச்ச, கச்சச்ச, கச்சச்ச..

இதான் இந்த blog உலகில் நான் அறிந்த உண்மை.

தாராபுரத்தான் said...

இப்படீத்தான் ஆரம்பிக்கனும்,,தொடருங்கள்,,

தாராபுரத்தான் said...

இப்படீத்தான் ஆரம்பிக்கனும்,,தொடருங்கள்,,

சுசி said...

சங்கரு..

252 பேர் படிச்சிருக்காங்க..
19 பேர் கமன்டி இருக்காங்க..

ரெண்டாவதா சொன்ன முடிவ மட்டும் எடுத்திடாதீங்கப்பா.. பாவம் நாங்க.

சங்கர் said...

//Sarathguru Vijayananda said...
சிக்கிட்டேன்னு சின்னபின்னமாக்க நீங்களும் கேபிளும் சேர்ந்து ரூம் ஏதும் போட்டுட்டீங்களா? //

ரூம் போட்டு உக்கார்ற அளவுக்கு அது பெரிய விஷயமா?

சங்கர் said...

//tamiluthayam said...
நீங்கள் எது எழுதினாலும் கவிதை தான்... //

ஆகா, உங்களைத்தான் இத்தனை நாளா தேடிக்கிட்டிருந்தேன்

சங்கர் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கொசுவா , நீங்களான்னு ஒரு போராட்டமே நடந்திருக்குமே !//

கொசுவோட பெருசா எதுவும் போராடல, கவிதையோடதான் கொஞ்சம்,

சங்கர் said...

//Mohan Kumar said...
தம்பி மக்கள் உன்கிட்டே முக்கியமா எதிர் பார்ப்பது சினிமா குறித்த உன் காமெடி கலந்த எழுத்து. சங்கர் கொஞ்சம் கலந்து கட்டி variety-ஆ எழுதுறார்.//

அண்ணே, எழுதினது நான்தான்,


//கண்ணா, இந்த followers, பின்னூட்டம், வோட்டு இதெல்லாம் நம்ம கையில இல்ல. எச்சச்ச, எச்சச்ச, கச்சச்ச, கச்சச்ச..

இதான் இந்த blog உலகில் நான் அறிந்த உண்மை.//


அருமையான தத்துவக் கவிதை, Enter தான் சரியா குடுக்கலை

சங்கர் said...

//அப்பன் said...
இப்படீத்தான் ஆரம்பிக்கனும்,,தொடருங்கள்,,//


அவ்வளவு தைரியமானவரா நீங்க!!

@கேபிள் அண்ணே, இன்னொரு நல்லவரு மாட்டிக்கிட்டாரு

சங்கர் said...

சுசி அக்கா போட்ட கமெண்டு, ப்ளாகர் பண்ணின சில்மிஷத்துல காணாம போயிடுச்சு, இதோ அதன் மீள்பதிப்பு,

//சங்கரு..

252 பேர் படிச்சிருக்காங்க....
19 பேர் கமெண்டியிருக்காங்க..

ரெண்டாவதா சொன்ன முடிவ மட்டும் எடுத்திடாதீங்கப்பா.. பாவம் நாங்க. //

அந்த அளவு கொடுமைக்காரன் இல்லக்கா, ஆனாலும் நம்ம கேபிள் அண்ணா, ஷங்கி, விஜயசாரதி மற்றும் பலர் என்னிடம் இன்னும் நிறைய எதிர்பாக்குறாங்க, அதுதான் கொஞ்சம் யோசிக்கவைக்குது

ப்ரியமுடன் வசந்த் said...

சங்கரு அசத்திட்டீங்க நாலுவரினாலும் நச்...

சங்கர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
சங்கரு அசத்திட்டீங்க நாலுவரினாலும் நச்...//

நன்றி வசந்த்,

எல்லாரும் பாத்துக்குங்க நானும் கவிஞன் தான், கவிஞரே சொல்லிட்டாரு

கலகலப்ரியா said...

//"கடித்த உன்னை,
அடித்த கையில்,
படிந்த ரத்தம்,
உனதா? எனதா?"//

இந்தக் கடில எனக்கு கழுத்தில ரத்தம் வருது... மத்தவங்களுக்கு எல்லாம் கண்ணிலேயே ரத்தம் வருதாம்..! ஆனாலும் இதுவும் அறிவியல் புனைவுதான்... கொசுமை... ஐ மீன் அருமை...!

கலகலப்ரியா said...

//கவிஞரே சொல்லிட்டாரு//

இது கொடுமையிலும் கொடுமை...

சங்கர் said...

//கலகலப்ரியா said...
இந்தக் கடில எனக்கு கழுத்தில ரத்தம் வருது... மத்தவங்களுக்கு எல்லாம் கண்ணிலேயே ரத்தம் வருதாம்..! ஆனாலும் இதுவும் அறிவியல் புனைவுதான்... கொசுமை... ஐ மீன் அருமை...! //

இன்னொரு கவிஞரும் சொல்லிட்டாங்க, நிச்சயமா இது கவிதை தான்,

சங்கர் said...

//கலகலப்ரியா said...
//கவிஞரே சொல்லிட்டாரு//

இது கொடுமையிலும் கொடுமை... //

என்னை பாராட்டுறதுக்கு தானே உங்கள கூப்பிட்டேன், வசந்த ஏன் சேர்த்து பாராட்றீங்க

Thamira said...

என்னா மாதிரி திங்க் பண்ணுது பயபுள்ள..

சங்கர் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
என்னா மாதிரி திங்க் பண்ணுது பயபுள்ள..//

நன்றி,

எல்லாம் உங்கள மாதிரி பெரியவுங்கள பாத்து கத்துக்கிட்டது தான்

திருவாரூர் சரவணா said...
This comment has been removed by the author.
திருவாரூர் சரவணா said...

'எங்க...கவிதைன்னு எதோ சொன்னீங்களே...அது எங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? ' ண்ணா...நான் இப்படி கேட்கலை. நான் முதன் முதல்ல ஒரு கவிதை எழுதுனப்ப ( எண்டர் தட்டிதான்) கூடப் படிச்ச பசங்க கேட்டதுதான்.

இந்த மாதிரி ஆறு பேர் நானூத்தி முப்த்தேழு முறை சொன்னாலும் நீங்க உங்க முயற்சியை மனம் தளர்ந்து விட்டுடக் கூடாது. ஒ.கே. வா...

பிரபாகர் said...

சங்கர்,

புது வேலை, அதால வரமுடியல... சாரிங்க... வந்துட்டேன். இனி கண்டிப்பாய்...

பிரபாகர்.