பிடிக்கும் ஆனா பிடிக்காது!!
அண்ணன் மோகன் குமார் அவர்களின் அழைப்பின் பேரில் எனக்கு
பிடித்தவை மற்றும் பிடிக்காதவை.
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.
நடிகர்:
பிடித்தவர்: ரஜினி (அது என்னமோ தெரியல சின்ன வயசில்
இருந்தே ஒரு ஈர்ப்பு ),சசிகுமார்(நம்மில் ஒருவர் மாதிரி இருக்கிறார்)
பிடிக்காதவர் :தற்போது ராமகிருஷ்ணன்(கு.பூ.கொ.புறாவும் ஹீரோ.... ஓவர் பந்தா!!)...அப்புறம் நிறைய பேரு சிம்புவை
ஓவர் பந்தா அப்படின்னு சொல்வாங்க அது கரெக்ட் தான்,
இருந்தாலும் சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் இருக்கும்
ஒருவர் அனைத்திலும் வல்லவராக இருப்பவர் பந்தா பண்ணுவதில்
என்ன தப்பு??....
இயக்குனர்
பிடித்தவர்: அமீர்(மௌனம் பேசியதே), ராம் (கற்றது தமிழ்).
பிடிக்காதவர்:கே.பாலசந்தர்(அது என்னமோ தெரியல இவர் படம் என்றாலே எனக்கு ஆகவில்லை).
இசையமைப்பாளர்
பிடித்தவர்: யுவன் ஷங்கர் ராஜா, தமன்(ஈரம்),
சதீஷ் சக்ரவர்த்தி(லீலை). டைம் இருந்தா லீலை பாட்டை
கேட்டு பாருங்க, அதுவும் ஜில்லென்று ஒரு கலவரம்
செம...
பிடிக்காதவர்: எஸ்.ஏ.ராஜ்குமார்(காரணம்: லா லா லா தான்).
நடிகை
பிடித்தவர்: திறமையை காட்டும் அனைவரையுமே பிடிக்கும்...
(நடிப்பு திறமையை பத்தி தான் சொன்னேன்)
பிடிக்காதவர்: பத்மப்ரியா.
எழுத்தாளார்:
பிடித்தவர்: சுஜாதா, ராமகிருஷ்ணன்.
பிடிக்காதவர்: பிடிக்காதவங்க புக்கை இது வரைக்கும் படிச்சது இல்ல.
தொழிலதிபர்
பிடித்தவர் : ரங்கநாதன் (கெவின் கேர்)
பிடிக்காதவர்:அம்பானி சகோதரர்கள்....
வில்லன் நடிகர்
பிடித்தவர் : சம்பத் (இவருக்கு குரலே போதும்),கிஷோர்.
பிடிக்காதவர்: ஆசிஷ் வித்யார்த்தி...(ஆனால் இவரு காமெடி பண்ணிய மலைக்கோட்டை படம் எனக்கு பிடிக்கும்).
காமெடியன்
பிடித்தவர் : கவுண்டமணி , வடிவேலு
பிடிக்காதவர்: இப்போதைக்கு விவேக், கருணாஸ்.
அரசியல்வாதி :
பிடித்தவர்: சுப்ரமணிய சுவாமி.(இவர் அடிக்கிற காமெடி எல்லாம்
சூப்பர்)
பிடிக்காதவர்: ஊழல் பண்ணி மக்களின் வரி பணத்தை கொள்ளை
அடிக்கும் அனைவருமே.
இதற்கு மேல் யாரையும் மாட்டி விட விருப்பம் எனக்கு இல்லை...
நன்றி
உங்கள்
ஜெட்லி சரண்.
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
\\பிடிக்காதவர்: ஊழல் பண்ணி மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிக்கும் அனைவருமே.\\
அனைவருமே.( இது மட்டும்தான் பதில்ன்னு நினைக்கிறேன்.)
என்னா தல பிடிக்கும் பதிவர் பிடிக்காத பதிவர் பத்தி எல்லாம் எழுதல???
..........ரஜினி (அது என்னமோ தெரியல சின்ன வயசில்
இருந்தே ஒரு ஈர்ப்பு );
:கே.பாலசந்தர்(அது என்னமோ தெரியல இவர் படம் என்றாலே எனக்கு ஆகவில்லை).;
எஸ்.ஏ.ராஜ்குமார்(காரணம்: லா லா லா தான்).
ஆசிஷ் வித்யார்த்தி...(ஆனால் இவரு காமெடி பண்ணிய மலைக்கோட்டை படம் எனக்கு பிடிக்கும்)..............
எனக்கும் டிட்டோ....... என்ன ஒரு ஒற்றுமை, தம்பி!
// அப்புறம் நிறைய பேரு சிம்புவை
ஓவர் பந்தா அப்படின்னு சொல்வாங்க அது கரெக்ட் தான்,
இருந்தாலும் சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் இருக்கும்
ஒருவர் அனைத்திலும் வல்லவராக இருப்பவர் பந்தா பண்ணுவதில்
என்ன தப்பு??....
//
தப்பே இல்லங்க அவர் அப்பா பண்றதா விடவா ....
அமீர்(மௌனம் பேசியதே)
Interesting
சதீஷ் சக்ரவர்த்தி(லீலை)
கேக்கறன்
ஆசிஷ் வித்யார்த்தி...(ஆனால் இவரு காமெடி பண்ணிய மலைக்கோட்டை படம் எனக்கு பிடிக்கும்).
:)
(காரணம்: லா லா லா தான்).
:))))
பத்மபிரியாவை ஏன் பிடிக்காது!?
RULE: பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்!!!!
wheather AMBANI BROTHERS WERE IN TAMILNADU?
/ சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் இருக்கும்
ஒருவர் அனைத்திலும் வல்லவராக இருப்பவர் பந்தா பண்ணுவதில்
என்ன தப்பு??....//
அதுக்கு..ஆளப்பாரு ஆள..
@ ராஜு
கரெக்ட் பாஸ்.
@ யோ
எல்லாருமே நமக்கு பிடிச்சவங்க தான்
யோ...எங்கே ரொம்ப நாளா ஆளை காணோம்??
@ பேநா மூடி
அட அவரை லூஸ்ல விடுங்க பாஸ்....
@ அசோக்
சிரிப்புக்கு நன்றி தலைவரே...
@ சித்ரா
தங்கள் கருத்துக்கு நன்றி
@ வால்
கொடுத்த காசை விட அதிகமா நடிக்கிற மாதிரி
எனக்கு ஒரு பீலிங்க்ஸ்...அவ்வளவு தான் தலைவரே...
@ ஹசன்
இதுக்கு பேர் தான் பிரேக் தி ரூல்ஸ்
@ ப்ரியமுடன் வசந்த்
விடுங்க பாஸ்...
Post a Comment