Friday, December 4, 2009

ரேணிகுண்டா - விமர்சனம்

ரேணிகுண்டா - விமர்சனம்

பன்னீர்செல்வம் இயக்கத்திலும் கணேஷ் ராகவேந்திர இசையிலும்
வெளிவந்திருக்கும் படம் தான் ரேணிகுண்டா.அஞ்சு புது பசங்க
ஒரு புது கதாநாயகி என்றாலும் கதை என்னமோ பழசுதான்,
ஆனால் அதை எடுத்த விதம் கொஞ்சம் புதுசு.படத்துக்கு பெரிய
பலம் ஒளிப்பதிவாளர் சக்தி,காட்சி அமைப்புகளில் மனுஷன்
மிரட்டுறார்.



நாலு பேர் பக்கா ரவுடி அவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் சேரும்
அப்பாவி.அதன் பின் அவன் வாழ்வில் வரும் பெண் அந்த பெண்ணால் திருந்தி வாழ நினைக்கும் மற்றவர்கள்... திருந்தினார்களா??வாழ்ந்தார்களா??


ஜானி, இவர் தான் கதையின் நாயகன்.இயல்பாக நடித்து இருக்கிறார்.
படம் முழுவதும் அமைதியாக வரும் இவர் கடைசி காட்சிகளில்
கோபத்தை காட்டுகிறார்.நாயகி ஏதோ பத்தாவது படிக்கும் பெண்
போல இருக்கிறார்.நல்லா அழகா தான் இருக்கா,முகபாவத்தில்
நம்மை கவர்கிறார்.அதுவும் ஜானி மற்றும் அவர்கள் சகாவுடன்
கைதட்டி விளையாடும் சீன் அருமை.

டப்பாவாக வரும் பையன் தான் படத்தின் ரியல் ஹீரோ,மனுஷன்
சும்மா பிச்சு உதறுகிறான்.ஆரம்பத்தில் அவர் ஜெயிலில்
ஆரம்பிக்கும் லொள்ளு மற்றும் நக்கல் பேச்சுக்கள் கடைசி
வரை நம்மை சிரிக்க வைக்கிறது.ஒரு சீனில் கட்டை அவரை
விட நீளமாக இருக்கும் அதை எடுத்து அவனை போட போறேன்
என்று அவர் சீரியஸ்ஆக சொல்லும் போது நமக்கு அந்த கட்டையின்
நீளத்தை பார்த்தால் சிரிப்பு வந்து விடும்.இன்னொரு காட்சியில்
தெலுங்கில் கடலோர கவிதை "அட ஆத்தாடி" பாட்டை கேட்டு
அவர் செய்யும் சேட்டைகள் லக லக லக.....

கேங் தலைவனாக வரும் பையனும் மிக இயல்பாக நடித்து
இருக்கிறார்.ஜெயிலில் ஜானியை அடிக்கும் போலீஸ்காராரை
மிரட்டும் போது தியேட்டரில் செம கைதட்டு.மற்ற இருவருக்கும்
வாய்ப்பு அவ்வளவாக இல்லைஎன்றாலும் கொடுத்த வேலையை
சரியாக செய்து இருக்கிறார்கள்.

ஜானியின் அம்மா அப்பாவை தேவகோட்டையில் கார் ஏற்றி
கொல்லும் போது பொது மக்கள் யாரும் வந்து தட்டி கேட்கவில்லை
என்ற கோபத்தில் இருப்பார் ஜானி.ஆனால் ரேணிகுண்டாவில்
காதலியை பார்க்க ஓடும் போது ஒரு சின்ன சந்து உள்ள ஆட்டோ
இடித்து விடும் அப்போ அவரை பத்து பேர் வந்து தூக்கி
விடுவாங்க இதில் எதுவும் உள்குத்து இருக்கானு டைரக்டர் தான்
சொல்லணும்.

முதல் பாதி மின்னல் வேகம் ஆனால் காதல் காட்சிகள் கொஞ்சம்
அலுப்புட்ட வைக்கிறது.இரண்டாவது பாதியில் நாம் நினைக்கும்
சில காட்சிகள் திரையில் நடக்கும் முக்கியமா கிளைமாக்ஸ்.
படத்தில் வன்முறை அதிகம் அவர்கள் தலையில் அடி வாங்கும்
போது நம் தலையில் அடிப்பது போல் இருக்கிறது.தள்ளாகுளம்
மற்றும் மழை பாட்டு நன்று.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு கனத்த சோகத்துடன் வெளியே வந்தேன்...ச்சே கடைசியில் காதலர்களை சேர்த்து வச்சிருக்கலாமே என்றும் ஜானி மேல் பரிதாபமும் தோன்றியது.ஒரு வேளை இது தான் டைரக்டர்க்கு கிடைத்த வெற்றி போலும்.

ரேணிகுண்டாவுக்கு தரமான வெற்றி காத்திருக்கு....

இந்த விமர்சனம் அனைவரையும் சேர ஒட்டு மற்றும்
பின்னூட்டங்கள் போடவும்.

நன்றி: cinesnacks.in

உங்கள்
ஜெட்லி சரண்.

31 comments:

செ.சரவணக்குமார் said...

தியேட்டர் வாசல்லயே உட்கார்ந்து எழுதிய விமர்சனமா தல. கலக்கலா இருக்கு.

டக்கால்டி said...

Padam city of god maathiri irukkunu sollikiraangale...Athu unmaiya jet lee?

டக்கால்டி said...

Athukkulaye vimarsanamaa?

மீன்துள்ளியான் said...

நம்பி போகலாம் அப்படின்னு சொல்லுறீங்க .
பாத்துட்டு வந்து சொல்லுறேன் படம் எப்படின்னு
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

ச ம ர ன் said...

விமர்சனம் பண்றேன்னு.. க்ளைமாக்ஸ் அ சொல்லிட்டீங்களே பாஸ்..ரொம்ப எதிர்பாத்துக்கிட்டு இருந்தேன் படத்தை :)))

Anonymous said...

nice review..

Ashok D said...

மிக வேகமா படிக்கவைக்கிறீங்க.. குட் ஜெட்லி

Raju said...

செம ஃபாஸ்ட்டுயா நீஙக..!

Menaga Sathia said...

எப்படி ஜெட்லி இந்த மொக்கைபடத்தை பார்த்தீங்க.எப்படியோ எங்களை காப்பாத்தறீங்களே அதுக்காக ஒரு ஸ்பெஷல் நன்றி!!

Unknown said...

வெற்றி thaan pa jet li saran....

thamizhparavai said...

எனக்குத் தெரிஞ்சவரை முதல் தடவையா ஒரு படத்தைப் பாராட்டி இருக்கீங்க.. அப்ப நல்ல படமாத்தான் இருக்கும்..
நன்றி...

ஜெட்லி... said...

@ சரவணகுமார்

நன்றி சரவணா...
வீட்டு பக்கத்தில் தான் தியேட்டர் இருக்கிறது...

ஜெட்லி... said...

@ இங்கிலிஷ்காரன்..

இல்லை அப்படி இல்லை...
இது கொஞ்சம் வேற...

ஜெட்லி... said...

@ மீன்துள்ளியான்

கண்டிப்பா பார்த்துட்டு வந்து
சொல்லுங்க பாஸ்....

@ ச ம ர ன்

கிளைமாக்ஸ் ஒன்னும் புதுசு இல்ல
பாஸ்...அதனால் தான் சொன்னேன்...

ஜெட்லி... said...

@Sachanaa

நன்றி...

@ அசோக்

மிக்க நன்றி அண்ணே...

ஜெட்லி... said...

@ ராஜு

நன்றி நண்பரே

@ மேனகா

என்னங்க இந்த படத்தை நான்
எப்போ மொக்கைனு சொன்னேன்..??
நல்ல படம்ங்க இது...

ஜெட்லி... said...

@ சூர்யா

கண்டிப்பா வெற்றி தான்...



@தமிழ்ப்பறவை

தலைவரே நீங்க வரலாறு தெரியாம
சொல்றிங்க....பின்னாடி போய் நாடோடிகள்,
ஈரம்,குளிர்,போன்ற படங்களின் விமர்சனங்களை
படிக்கவும்...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெட்லி said...

நன்றி சரவணா...
வீட்டு பக்கத்தில் தான் தியேட்டர் இருக்கிறது...
//

சரித்தேன் சரவண்
:)))

நல்ல சுட சுட விமர்சனம்..

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நீங்க ‘ஜெட்’லி :)

Chitra said...

சீரியஸ் விமர்சனம்? படம் சீரியஸா? இல்லை, உங்களை சீரியஸ் ஆக படத்தில் involve ஆகி பாக்க வைத்துவிட்டதா?
nice review.

Chitra said...

இப்ப உங்களுக்கு படம் பாக்க வசதியா, உங்க வீட்டிலேயே ரிலீஸ் பண்ண பரிந்துரைக்கிறேன்.

ஜெட்லி... said...

@ ப்ரியமுடன் வசந்த்

நன்றி நண்பா....

@ எம்.எம்.அப்துல்லா

தலைவரே நான் சின்ன பையன்...
தம்பின்னு சொல்லுங்க

ஜெட்லி... said...

@ சித்ரா

தங்கள் பரிந்துரைக்கு நன்றி...
நல்ல படங்களை நன்றாக தான்
விமர்சனம் செய்ய முடியும்...

Unknown said...

அப்போ ஹிட்டா...

ஜெட்லி... said...

@பேநா மூடி

கண்டிப்பா ஹிட்...

கணேஷ் said...

உங்க விமர்சனம் தான் டாப் :)

பிரபாகர் said...

இந்த விமர்சனம் மாதிரி படமும் இருந்தால் ரொம்ப சந்தோசம்....

பிரபாகர்.

மீன்துள்ளியான் said...

போயிட்டு வந்து படத்தை பத்தி எழுதியாச்சு
http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_05.html


அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

250WcurrentIsay said...

padam nalla eduthurukkanga... aana 19 vayasu pasanga pannura alaparaigala paakka manasu kashtama iruku... I feel bad that i liked this movie....

good review again....

ஜெட்லி... said...

@ கணேஷ்

நன்றி நண்பரே ...

@ பிரபாகர்

அங்கே வரும் பொழுது பாருங்கள் அண்ணே....
இங்கே நல்ல ஒபெநிங்..


@ 250WcurrentIsay

நானும் அதை தான் நினைத்தேன்...படத்தை பார்த்து
விட்டு நம்ம பசங்க இன்னும் வன்முறையில் அதிகமா
பண்ணாம இருந்தால் சரி.

சண்முகா said...

nalla padhivu