Monday, December 28, 2009

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்கள்



இந்த ஆண்டு இதுவரை 125 நேரடி தமிழ் திரைப்படங்கள்
வெளியாகியுள்ளது.இதில் நான் பார்த்தது வெறும் 44 தமிழ்
படங்கள் மட்டுமே,அதாவது மூன்றில் ஒரு பங்கு.ஆனால்
அந்த 44 படத்தில் பல சூர மொக்கை படங்களை பார்த்துள்ளேன்
என்பது குறிப்பிடத்தக்கது.


மொக்கை படத்தை பற்றி தப்பா எடை போட்டுட கூடாது...
அமெரிக்காவில் ஒரு ஆய்வில் மொக்கை படத்தை பார்ப்பதால்
சகிப்பு தன்மை கண்டமேனிக்கு வளர்வதாக தெரிவித்து உள்ளனர்.


என்னை பொருத்த வரை மொக்கை படம் என்பது பொறுமையை
சோதிப்பதாக அமைய வேண்டும்...இன்றும் பலராலும் மொக்கை
படம் என்று அறியப்பட்டு வரும் குளிர் நூறு,மதுரை சம்பவம்(ஹீரோவை விட்டுடுங்க!!),சிந்தனை செய் போன்ற படங்கள் என்னை பொருத்தவரை நல்ல டைம் பாஸ் படம் ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் என்பேன்...... இந்த லிஸ்ட் நான் பார்த்த மொக்கை படங்களின் வரிசையே அப்புறம் எங்கப்பா அழகர் மலை,சிவகிரி,மரியாதை, ஆறுமுகம் படம்னு எல்லாம் கேக்க கூடாது நான் அந்த படங்களை பார்க்கவில்லை என்பது தான்
உண்மை(நம்புங்க!!).


10. குரு என் ஆளு - ஆளை உடு சாமி!!

நான் இந்த படத்தை ப்ளாக் எழுத வந்த பின்னர் தான் பார்த்தேன்
என்றாலும் இந்த படத்தை பற்றி விமர்சனம் வேற போட
வேண்டுமா என்று எண்ணி விமர்சனம் எழுதுவதை கைவிட்டு
விட்டேன்....விவேக் காமெடி செம மொக்கை.


9.இந்திர விழா: ஆண்டவா...

மொக்கை படமென்று தெரிந்தாலும் நமீதா இருக்கிறார் என்ற ஒரு காரணத்துக்காக தெரியாம தியேட்டருக்குள் போய்ட்டேன்...உள்ளே போன அங்கே விவேக் பெரிய மொக்கை போட்டாரு....

8.குங்கும பூவும் கொஞ்சு புறாவும்: பறந்து போச்சே....

இந்த படத்தில் டைட்டில் மற்றும் பாடல்கள் மட்டும் தான் நன்றாக இருந்தது.....ஹீரோவை கண்டால் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


7.யோகி: போகி புகை...!

அமீரை நாங்கள் இயக்குனராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம்...
படத்தை பற்றி வேறு எதுவும் சொல்ல விருப்பமில்லை...


6.மாசிலாமணி: மொக்கை மணி!!

அருமையான மொக்கை படம்... நகுலுக்கு முக பாவனைகள்
பயங்கரமா வருது.....அவரு சில காட்சிகளில் என்ன பீலிங்க்ஸ்
பண்ராருனே புரிய மாட்டிக்குது...(அதனாலதான் நான் இன்னும்
கந்தகோட்டை படம் பார்க்கவில்லை)


5. வாமணன்: கோமணம் கிளிஞ்சது!!

படத்தில் பெயர் மட்டும் தான் நல்லா இருந்தது...சந்தானம் காமெடி
ஒ.கே....மற்றபடி வாமணன் பற்றி சொல்வதருக்கு ஒன்னும்
இல்லை...

4.நான் அவனில்லை பார்ட்-2 : பார்ட்-3 வருமோ??

இந்த படத்தில் நான் என்ன எதிர்ப்பார்த்துட்டு போனேன்னோ அது
கொஞ்சம் கம்மி...மற்றபடி கதை திரைக்கதையெல்லாம் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் அந்த கடைசி சீன்லா ஜீவன் போப் டிரஸ்இல் வருவது மகா கொடுமைடா சாமி.....


3.மதுரை டூ தேனி : பஸ்க்கு டையரை காணோம்...

வித்தியாசமான முயற்சி என்றாலும் ஹீரோ விஜயகாந்த் அளவுக்கு
பேசியே பிரச்சனையை தீர்ப்பதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே
ஓவர்....படத்தின் கதை ஆரம்பிக்கும் போது நான் தியேட்டரில் இல்லை....(படம் முடியும் போது தான் கதை ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டேன்).


இரண்டாவது இடத்தை பிடிக்க மூன்று படங்கள் அடித்து கொள்கின்றன...


2.அதே நேரம் அதே இடம் : அதே அடி அதே வலி!!

இந்த படத்தை அலசி அலசி சோர்வு அடைஞ்சாச்சு....கடவுள்கிட்ட
வேண்டி கொள்வது இது ஒன்று தான்...இனிமே அதே நேரம்
அதே இடம் போன்ற படங்களை வெளிவரமால் மக்களை காப்பாற்று..


2.முத்திரை-நல்லா குத்துனாங்கயா!!


எப்படி படம் எடுக்க கூடாது என்று இந்த படத்தை பார்த்தால்
கற்று கொள்ளலாம்...ரொம்ப பெரிய லாஜிக் ஓட்டையை உள்ளடக்கிய
படம் முத்திரை......


2.தோரணை - செம ரோதணை.

விஷாலிடம் இருந்து மொக்கை படத்தை எதிர்பார்த்தேன் ஆனால்
இது மரண மொக்கைடா சாமி...எதோ சந்தானம் இருந்ததால்
தப்பிச்சேன்....

லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க மூன்று படங்கள் முந்துகிறது...


1. வில்லு - செம டல்லு

இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.....

1.கந்தசாமி: போதும்டா சாமி..

படத்தில் சில விஷயங்கள் புதுசாக இருந்தாலும் கதை பழசு என்பதாலும் சொன்ன விதத்தாலும் கந்தசாமி ஈர்க்கவில்லை.ஆனா ஒன்னு மட்டும் உண்மை இனிமே "என் பேரு மீனாகுமாரி" பாட்டில் வரும் முகேஷ் திவாரியின் pole ஆட்டத்தை எந்த நாயகனும் பீட் பண்ண முடியாது.....


1.சர்வம்: நாசம்!!

நான் மிகவும் எதிர்பார்த்த படம்...ஆனால் பயங்கர மொக்கை
திரைக்கதை...கதையும் கூட....ஒளிப்பதிவெல்லாம் குறை
சொல்ல முடியாது....விஷ்ணுவர்தனிடம் இருந்து 2010 இல்
நல்ல சுவாரசியமான படத்தை எதிர்பார்க்கிறேன் ....


என்னப்பா பத்துக்கு மேல லிஸ்ட் இருக்குனு நினைக்கிறிங்களா....அட விடுங்க சார் நானே நிறைய படத்தை பத்தி எழுத மறுந்துட்டேன்...

டிஸ்கி: நான் பல மரண மொக்கை படங்களை பார்த்து மக்களை
காப்பாற்றியுள்ளேன் என்று கருதி எனக்கு யாராவது தியாக செம்மல் விருது தருவாங்கன்னு பார்த்தா வீடு திரும்பல் மோகன்குமார் அண்ணே எனக்கு சிறந்த வில்லன் விருது கொடுத்துட்டாரு.... என்ன கொடுமை சார் இது!!

(மொக்கை படத்தை மொக்கைனு தான் சொல்லமுடியும்,
அதே போல் நல்ல படத்தை நான் கிண்டல் அடிப்பதில்லை!)

'

நீங்கள் இந்த ஆண்டு பார்த்த சிறந்த மொக்கை படங்களை கமெண்ட்இல் பகிர்ந்து கொள்ளுங்கள்...முடிஞ்சா ஒட்டு போடுங்கள்...

உங்கள்
ஜெட்லி சரண்.

நன்றி : indiaglitz

47 comments:

பாலா said...

///////
அமெரிக்காவில் ஒரு ஆய்வில் மொக்கை படத்தை பார்ப்பதால் சகிப்பு தன்மை கண்டமேனிக்கு வளர்வதாக தெரிவித்து உள்ளனர்.
//////

மொதல்ல இதுக்கு... பேடண்ட் உரிமை வாங்கணும்! :) :) :)

பாலா said...

ஹண்டர் இல்லாத இந்த லிஸ்டை, இந்த கோர்ட் தள்ளுபடி செய்கிறது.

பிரபாகர் said...

நல்லாருக்கு. இன்னமும் சில மரண மொக்கைகளை மிஸ் பண்ணிட்டிங்களேன்னு வருத்தமா இருக்கு. இருந்தாலும் நாம பாத்து பட்டதில்ல, படிச்சித்தான்...

பிரபாகர்.

திருவாரூர் சரவணா said...

பார்த்துங்க... இதுலயும் எங்களுக்கு ஏன் முதலிடம் கொடுக்கலன்னு சண்டைக்கு வந்துடப்போறாங்க...வேற யார்...ஹீரோக்கள்தான்.

புலவன் புலிகேசி said...

வரிசை சூப்பரு..முதலிடம் மூனும் தகுதியானது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதில் கந்தசாமி மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்..,

மீன்துள்ளியான் said...

உங்களுக்கு இன்று முதல் மொக்கை ரசிகர் என்று ஒரு பட்டம் வழங்கப்படுகிறது ..

உங்களுக்கு கோடம்பாக்கத்துல கட் அவுட் வைக்க முடிவு பண்ணி இருக்காங்களாம்

ஜெட்லி... said...

@ ஹாலிவுட் பாலா

//மொதல்ல இதுக்கு... பேடண்ட் உரிமை வாங்கணும்//

நல்ல ஐடியா....
வேட்டைக்காரன் சுமாருக்கு கிழே வருவதால்
என் பட்டியலில் இடம் பெறவில்லை....

ஜெட்லி... said...

@பிரபாகர்

நீங்க தப்பிச்சிட்டிங்க அண்ணே....

ஜெட்லி... said...

@ சரண்...

ஹா ஹா...யாரும் வரமாட்டங்கன்னு நினைக்கிறேன்

ஜெட்லி... said...

@ புலிகேசி

நன்றி நண்பரே

ஜெட்லி... said...

@ சுரேஷ்

கந்தசாமி பார்த்திங்களா ...
ரைட்!!

துளசி கோபால் said...

முதல் இடத்தைப் பிடிக்க மூணு படங்களுக்கிடையில் கடும்போட்டி போல இருக்கு!!!!

மொத்த மொக்கையில் 'வில்லு' மட்டும் 'ஓட்டிப் பார்த்தேன்':-)

ஜெட்லி... said...

@ மீன்துள்ளி

யோவ்..நீ என்னை மொக்கை பண்ணலாம்னு பார்த்தே..
இப்போ திருப்தியா??

ஜெட்லி... said...

@ துளசி கோபால்

//'வில்லு' மட்டும் 'ஓட்டிப் பார்த்தேன்':-) //

:)).. நன்றி

ஜெட்லி... said...

ஆஹா..வந்து சென்றவர்கள் அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சே...!!

Prathap Kumar S. said...

முதல் இடத்துல ஹண்டர் எங்கப்பா? நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு...

//ஹண்டர் இல்லாத இந்த லிஸ்டை, இந்த கோர்ட் தள்ளுபடி செய்கிறது. //

கன்னா பின்னா, தாறுமாறா ரிப்பீட்டு அடிக்கிறேன்...

கடைக்குட்டி said...

வேட்டைக்காரன் 2010 லிஸ்டல வருமா ???

கடைக்குட்டி said...

இப்பத்தான் வந்து இருக்கேன்.. படிக்கத் தவறிய பதிவுகளுக்கு ஆராமர கமெண்டுறேன்.. :-)

வாமனன் என்னும் ஒரு படத்தை பார்த்தே முடியல என்னால.. நீங்க உண்மைலேயே தெய்வம்ங்க,

ஆனா பொது சேவை பொது சேவை இப்பிடிமொக்க படத்த பாத்து தொலக்காதீங்க,, ஒடம்ப பாத்துக்கங்க. :-)

நாஸியா said...

கடைக்குட்டி said...
December 28, 2009 9:59 AM வேட்டைக்காரன் 2010 லிஸ்டல வருமா ???

எனக்கு அதே சந்தேகம் தான்

Unknown said...

தோரணைக்கு இரண்டாம் இடம் குடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்...

பின்னோக்கி said...

அருமையான லிஸ்ட்ங்க. நல்ல மொக்கை தேர்வு.
கு.பூ.கொ.புறாவும் தவிர மற்றவைகளை மொக்கைகள் என மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.

கு.பூ.கொ.பு - இயல்பான, கதை நடக்கும் இடத்தைச் சார்ந்த முக அமைப்புள்ள கதை நாயகி, நாயகன்.

நான் அவன் இல்லை - திரைக்கதை டெம்ளேட் வைத்து இன்னும் 100 பாகம் கூட எடுக்கலாம்.

RAM said...

நல்ல இறுக்கு ஐயா ரொம்ப நல்ல சொன்னிங்க இவிங்கல்ல்லாம் என்னத்துக்கு படம் எடுகுரைங்க மக்களை கிறுக்கு பிடிக்க வைசுருவானுங்க நன்றி ஐயா

ஜெட்லி... said...

@நாஞ்சில் பிரதாப்

வில்லுவை விட வேட்டை பரவாயில்லை ஜி,,,
அதான் லிஸ்ட்ல வரல!!

ஜெட்லி... said...

@ கடைக்குட்டி

//வேட்டைக்காரன் 2010 லிஸ்டல வருமா ??? //

உன் ஆர்வம் புரியுது ...வேட்டை
எந்த லிஸ்ட்லேயும் வராது....

ஜெட்லி... said...

@ கடைக்குட்டி

//ஆனா பொது சேவை பொது சேவை இப்பிடிமொக்க படத்த பாத்து தொலக்காதீங்க,, ஒடம்ப பாத்துக்கங்க. :-) ///

ரைட்....அப்போ யாரு முதல்ல பார்த்து சொல்றது??

ஜெட்லி... said...

@ நாஸியா

ஏன் உங்களுக்கு விஜய் மேல இந்த கொலைவெறின்னு தெரிஞ்சுக்கலாமா??

ஜெட்லி... said...

@பின்னோக்கி

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்ப்பா...
எனக்கு போர் அடிக்காம போச்சுன்னா போதும்

ஜெட்லி... said...

@ ராம்

நன்றி நண்பரே

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்க ஜெட்லி வளர்க நின் புகழ்...

:)))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

அட.. இன்னைக்குத்தான் நம்ம பட்டியலும் ரிலீஸ் ஆகியிருக்கு.. நீங்க போட்டிருக்கிற லிஸ்டுல ஒரு சிலது மட்டும்தான் தல நான் பார்க்கல.. நான் என்னோட போஸ்டுல உங்க லிங்க கொடுத்து இருக்கேன்..:-)))

Subankan said...

இவ்வளவு மொக்கைப்படங்களையும் நீங்க பாத்து விமர்சனம் எழுதினதாலதான் எங்களுக்கு சில பல நூறுகள், ஆயிரங்கள் மிச்சம். நன்றி தல.

Priya said...

நல்ல ஆர்டர் பண்ணியிருக்கீங்க‌!

பெருங்காயம் said...

இத்தனை மொக்கை படங்களையும் பார்த்திரிங்கிங்களா? பெரிய சாதனைதான். நான் முத்திரை மட்டும் பார்த்துள்ளேன். பெரிய எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க சென்று அது மொக்கையாக இருந்தால் பெரிய தலைவலிதான்.

ஜெட்லி... said...

@ வஸந்த்

நன்றி நண்பா .....

ஜெட்லி... said...

@ கார்த்திகைப் பாண்டியன்

மிக்க நன்றி அண்ணே...

ஜெட்லி... said...

@ Subankan

இப்படியே என்னை உசுபேத்தி உசுபேத்தி உடம்பை
ரணகளம் ஆக்குரிங்க....

ஜெட்லி... said...

@ பிரியா

மிக்க நன்றி....

ஜெட்லி... said...

@ விஜய்

நீங்க சொல்றது கரெக்ட் விஜய்...
ஆனால் நான் மொக்கை படம்னு தெரிஞ்சும் போவேன்,,,, :)

Paleo God said...

நல்ல காலம் இதில் 2 படங்கள் மட்டுமே நான் பார்த்தேன் 'க.சா வும் மாசியும்' இதெல்லாம் சேர்த்து யாராவது ஒரு படம் எடுக்காமலிருக்க வேண்டிக்கிறேன்...::))

CS. Mohan Kumar said...

தம்பி மாசிலாமணி இதில் சேக்கணுமா? Songs & படம் பரவல்லேயேப்பா !!

வில்லன் பட்டம் குடுத்தால் கோபமா என்ன? சும்மா கலாய்க்கத்தானே !

பித்தனின் வாக்கு said...

ஒரு வருசத்துக்கு 44 படங்களா. உங்க அம்மாவைத் சந்தித்து முதல்ல தம்பிக்கு பெண்ணு பாருங்க அம்மான்னு சொல்லனனும். நான் எல்லாம் நாலு படம் பார்த்தா பெரிய விஷயம். நல்ல விமர்சனம். அப்படியே இந்த சினிமாக்களுக்கு எவ்வளவு செலவு பண்ணூனிங்க கணக்குப் பார்த்தால் அடுத்த வருடம் படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும். நன்றி.

ஜெட்லி... said...

@பலா பட்டறை

//இதெல்லாம் சேர்த்து யாராவது ஒரு படம் எடுக்காமலிருக்க வேண்டிக்கிறேன்//

நானும் தான்...!

ஜெட்லி... said...

@மோகன் குமார்

கோபம்லாம் இல்லை...
மாசிலாமணி பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை..

ஜெட்லி... said...

பித்தனின் வாக்கு


ஏன் இப்படி உங்களுக்கு ஒரு கெட்ட எண்ணம்.... :)

Bala De BOSS said...

என்னதான் மொக்கைப் படமா இருந்தாலும், மக்களுக்காக, அதையும் பொறுத்துக்கிட்டு பார்த்துட்டு விமர்சனம் எழுதுற உங்க நல்ல மனசையும், பொது நல மனப்பான்மையையும் பாராட்டி உங்களுக்கு, "மக்களை காக்கும் விமர்சகர்" என்ற பட்டத்தை கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

சபா. பாண்டியன் said...

அமெரிக்காவில் ஒரு ஆய்வில் மொக்கை படத்தை பார்ப்பதால்
சகிப்பு தன்மை கண்டமேனிக்கு வளர்வதாக தெரிவித்து உள்ளனர் ada yappti ithu yellam