Saturday, December 19, 2009

12 Angry Men - (1957)

12 Angry Men - (1957)




வெறும் 12 நபர் ஒரு அறையில் அமர்ந்து விவாதம் செய்வதை வைத்து ஒரு ஒன்னரை மணி நேர சுவாரசியமான, "அட" சொல்ல வைக்கும் படம் எடுக்க முடியுமா?? அப்படி ஒரு படம் தான் "12 Angry Men".



அமெரிக்காவில் ஒரு கோர்ட் அறையில் ஒரு கொலை விசாரணை நடக்கிறது, அங்கு 12 நடுவர்கள் (Jury) விசாரணையை மேர்ப்பார்வையிடுகின்றனர். விசாரணை முடிந்து நீதிதிபதி அவர்களை தனி அறைக்கு சென்று விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தி கருத்து தெரிவிக்க கேட்டுக்கொள்கிறார். இது நடப்பது வெறும் மூன்று நிமிடங்கள் தான், மீதி ஒரு மணி நேரம் முப்பத்திமூன்று நிமிடம் இந்த நடுவர்களிடையே நடக்கும் விவாதம் தான் படம். இதை என் தங்கை கூறும் பொழுது என்னடா இது மொக்கையா இருக்கும் போல என்று நினைத்தேன், ஆனா வாய்ப்பேஇல்ல சும்மா கலக்குறாங்க.



ஒரு 18 வயது பையன் தன் தந்தையை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு, அதை அவன் செய்தானா இல்லையா?? கோர்ட்டில் நடந்த விசாரணையை பார்த்த நடுவர்களில் பதினோரு பேர் ஆம் அவன் கொலை செய்தான் "Guilty" என்றும் ஒருவர் மட்டும் (Henry Fonda இவர் தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட) இல்லை "Not Guilty" என்றும் வோட்டு போடுகிறார். இந்த ஒருவரை மற்ற பதினோரு பேறும் சேர்ந்து மாற்ற முயல்கின்றனர், அதில் அவர்கள் வென்றார்களா அந்த பையன் உண்மையிலேயே கொலை செய்தானா இல்லையா என்பது தான் படம்.

இதற்குள் அந்த காலத்து அமெரிக்காவின் சமூக சிக்கல்கள், மக்களின் ஏற்ற தாழ்வுகள், மனிதர்களின் இன்னொரு முகம் என்று பல விஷயங்களை கூறுகின்றனர். படம் முழுவதும் இந்த நடுவர்களின் பெயர் என்னவென்று நமக்கு தெரியாது, படம் முடியும் பொழுது தான் இருவர் மட்டும் பெயர் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் இங்கு நம்மூரிலோ அடை மொழி வடை மொழி புண்ணாக்கு என்று பல இத்தியாதிகள், எனக்கு தெரிந்து நான் பார்த்த ஒரு ஆங்கில சினிமாவில் கூட பெயரிலோ அல்லது நடிகர் பெயரிலோ எந்த ஒரு பில்ட்அப் இல்லை என்று தான் நம்மவர்கள் மாறுவார்களோ.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் பின்னணி இசை, ஒரு காட்சியில் Fan போடுவார்கள் அப்பொழுது இவர்கள் உரையாடலுக்கு நடுவில் அந்த சத்தம் மிக தெளிவாக அதே சமயம் இதை கெடுக்காத வகையில் ரொம்ப இயல்பாக இருக்கும். உரையாடல் தான் மொத்த படமுமே என்றாலும் அது மிக சாதாரண நடையில் தெளிவாக புரியும் படி ஆழமான வசனங்கள்.

Sidney Lumet இயக்கத்தில் Reginald rose கதை திரைக்கதையில் Henry Fonda தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய படம். பாருங்க உங்க கருத்தை கூறுங்க.

இன்னொரு உலக சினிமாவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

நன்றி

சித்து.

22 comments:

Unknown said...

me the first

பிரபாகர் said...

சித்து,
நல்லாருக்குங்க, உங்க விமர்சனம். பார்த்துடறேன். நேரமிருந்தா, The Bad and Beautiful பாருங்க! ரொம்ப அருமையா இருக்கும்.

பிரபாகர்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

லின்க் இருந்தா கொடுங்க தல..,

Paleo God said...

நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள்... ONE டப் (HDD) காத்திருக்கிறது... நன்றி..

Paleo God said...

SORRY ONE TB (HDD)...:))

சித்து said...

@பிரபாகர்

நீங்க சொல்லிடீங்கள கண்டிப்பா பார்க்குறேன் தல.

சித்து said...

@சுரேஷ் தல

http://www.torrentz.com/

இந்த இணையத்தில் இருந்து தான் நான் படங்கள், கேம்ஸ் அனைத்தும் இறக்குவேன்.

சித்து said...

@பலா பட்டறை

ஒரு TB HDD யா?? கலக்குங்க. கண்டிப்பா வாரம் ஒரு படமாவது அறிமுகப்படுத்தறேன்.

Sri said...

I just watched this a couple of months ago. As you said, this is an awesome movie. Screenplay is just too good.

Chitra said...

இங்கு நம்மூரிலோ அடை மொழி வடை மொழி புண்ணாக்கு என்று பல இத்தியாதிகள், எனக்கு தெரிந்து நான் பார்த்த ஒரு ஆங்கில சினிமாவில் கூட பெயரிலோ அல்லது நடிகர் பெயரிலோ எந்த ஒரு பில்ட்அப் இல்லை என்று தான் நம்மவர்கள் மாறுவார்களோ. ..........உள் குத்து பலமா விழுதே............... சரியா சொன்னீங்க. Story narration is awesome in this movie.

மீன்துள்ளியான் said...

ஜெட்லி எனக்கு CD வேணும் ...

புலவன் புலிகேசி said...

சொல்லிட்டீங்கள்ள பாத்து புடுவோம்...

சித்து said...

@ஸ்ரீ

ரொம்ப ரசித்து பார்த்திருப்பீங்களே, ஆம் திரைக்கதை தான் இந்த படத்தின் ஹீரோ.

சித்து said...

@மீன்துள்ளியான்

நான் இணையத்திலிருந்து Download செய்து பார்த்தேன் தல.

Priya said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... கண்டிப்பா பார்க்கனும்!

இளவட்டம் said...

நல்ல அறிமுகம்.

வெற்றி said...

இந்த பட டிவிடி எல்லாம் இப்போ கெடக்குமா..

http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_21.html

கொஞ்சம் வந்துட்டு போங்க...

சித்து said...

@பிரியா

கண்டிப்பா பாருங்க, பார்த்துட்டு உங்க கறுத்த சொல்லுங்க.

சித்து said...

@இளவட்டம்

வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க.

சித்து said...

@வெற்றி

இந்த பட DVD கிடைக்க வாய்ப்பு ரொம்ப கம்மி தான், ஆனா DVD Library போய் பாருங்க.

Vasanth said...

hi.. i am a great fan of this movie. fantastic screenplay throughout the movie. have seen this more than 15 times.

some more good (old) movies which I know:
The Magnificient Seven
True Grit
Beautiful Life
Ben Hur
Lawrence of Arabia
Anatomy of Murder
The Great Escape
Big Jake
The Sting

On7June said...

(chithu) Dei Dinosaur padam super.... naanum torrentla irunthu thaan download pannaen.

@VK2008
romba nandri aduthu en download listla ithaan.

@vetri
Ethuku DVD ellaam, venumnaa naan oru CDla write pandraen with subtitle