Friday, June 26, 2009

நாடோடிகள்.....விமர்சனம்

நாடோடிகள்

நண்பனின் காதலுக்கு உதவ போய் தங்கள் வாழ்க்கையை
தொலைத்த மூன்று நண்பர்களின் கதை.பிறகு அந்த
நண்பன் தங்களுக்கு துரோகம் செய்ததை எண்ணி என்ன செய்றாங்க அப்படின்னு நீங்க தியேட்டர்ல பாருங்க.....
படத்தின் திரைக்கதை மிக அருமை. படம் ஓடும்
நேரம் அதிகம் என்றாலும் (2:45 minutes) போர் அடிக்காமல்
செல்கிறது.

சசிகுமார் நட்புக்காக உயிரையும் தரும் பாத்திரம்.
ஆள் இதில் கொஞ்சம் கலகலப்பாகவே திரிகிறார்.
காதல் செய்கிறார், டான்ஸ் ஆடுகிறார். தன் நண்பன்
துரோகம் செய்து விட்டான் என்று தெரிந்தவுடன்
தன் கண்களில் கோப அனலை கக்குகிறார். இந்த
மாதிரி நமக்கு ஒரு நண்பன் இல்லையே என்றும்
ஏங்கும் அளவுக்கு.



அடுத்து பரணி கல்லூரி படத்தில் வந்த பையன், இவரின் காமெடி
சான்ஸ்ஏ இல்லை.இவருக்கு நடுவுல காது கேக்காம போய்டும்,
அப்போ கூட ஆள் பின்னுவார். கடைசியில் நண்பனை கொல்ல
துடிக்கும் அந்த காட்சிகளில் உண்மையிலே செம.


விஜய் செ-28 புகழ், தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக
செய்திரிக்கிறார். இவரின் அப்பாவாக வரும் புதுமுகம்
நச்சென்று மனதில் நிற்கிறார்.பையனின் காதலுக்கு அவரே
தூது போகிறார்.விஜய்க்கு கால் போனவுடன் தன்னம்பிக்கையாக
அவர் கூறும் வசனங்கள் டச்சிங்.

படத்தின் முதல் பாதியே ஒரு படத்தை பார்த்த திருப்தி
கிடைத்து விடும். இடைவேளை முன்னால் வரும் சேஸ்
காட்சிகள் அருமை.தன் நண்பனின் லவ் ஜெயிக்க சசி
அண்ட் கோ பண்ணும் தியாகங்கள் நட்பின் அருமையை
நமக்கு உணர்த்துகிறது.படத்துக்கு ஒளிப்பதிவு மிக பெரிய
பிளஸ். அந்த விளம்பர பிரியர் வரும் காட்சிகளில் தியேட்டர்
அதிர்கிறது , சும்மா கலக்குறாரு. கஞ்சா கருப்பு தன்
பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.


படத்தில் நாயகிகளுக்கு அவ்வளவு வேலை இல்லை.
அந்த சிவா சம்போ பாடல் காட்சிக்கு விறுவிறுப்பு தருகிறது.
ஆகா மொத்தத்தில் படம் சூப்பர். கடைசியில் கொஞ்சம்
சுப்ரமணியபுரம் வாசம் அடித்தாலும் படம் நச்.
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல சினிமா பார்த்த
திருப்தி கிடைத்தது.இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.



ஜெட்லி டவுட்:

சசி அண்ணே தன் நண்பனின் காதலை எத்தனை பேர்
அடித்தாலும் தூரத்தினாலும் சேர்த்து வைக்கிறார்.
(நண்பனின் அம்மா M.P, நண்பனின் காதலியின் அப்பன்
பெரிய தொழிலதிபர்.)

ஆனா சசி அவர்கள் அடுத்த தெருவுல இருக்கிற தன்
காதலி அத்தை பெண்ணை விட்டு கொடுப்பது, கொஞ்சம்
இடிக்குது. (இருந்தாலும் சசி அண்ணே உங்க நேர்மை
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு)

ஜெட்லி பஞ்ச்:

நாடோடிகள் படம் பார்த்த பின் நண்பனின் காதலை சேர்த்து
வைக்க பல நண்பர்கள் தயங்குவார்கள்.


நீங்கள் பெற்ற விவரம் அனைத்து மக்களையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.


நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

15 comments:

ரமேஷ் வைத்யா said...

ய்ய்யோஓஓஓவ்வ்வ்வ்வ்வ்.....

பசிக்குதே, சாப்பிட்டுட்டு வந்து விமர்சனம் போடலாம்னு பாத்தா அதுக்குள்ள... நல்லா இருப்பியா..?

நண்பரே, படத்தை மிகவும் ரசித்தேன். படம் சுப்பிரமணிய புரத்தைவிட அதிகமாக ஓடும். ஓரல் பப்ளிசிடி கியாரன்டீட். நான் இதுவரை 16 பேரை அழைத்துப் படம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்.

Anonymous said...

சொல்லிட்டீங்க இல்ல பாதுடுறோம் படத்தை...
நான் மிகவும் எதிர்பார்த்த படம் இது...
பாசிடிவ் ஆன விமர்சனத்தால் படம் பார்க்கும் எண்ணம் உதிர்த்திருக்கிறது...
நன்றி...

butterfly Surya said...

அலசல் அருமை.

நன்றி.

தீப்பெட்டி said...

நல்ல விமர்சனம்

கடைக்குட்டி said...

பாத்துருவோம்.. இன்னைக்கு கூட வெளில படத்துக்கு போலாம்னு பசங்க கூப்டப்ப.. நான் ரிஸ்க் எடுக்க விரும்பல..

நாளைக்கு பாத்துருவோம்.. :-)

(இசை ,ஒளிப்பதி,வசனம் பத்தியெல்லாம் சொல்லலியே.. ட்டெகினிகல் ஃபால்ட்டா???)

லோகு said...

ஒரு படம் விடாம பாக்கற போல..
தனியாவா.. பிகர் கூடவா..

Suresh said...

சூப்பர் அப்பு :-0 படம் நாளை காலை பார்த்தவுடன் சொல்கிறேன்

/ரமேஷ் வைத்யா said...
June 26, 2009 3:48 AM

ய்ய்யோஓஓஓவ்வ்வ்வ்வ்வ்.....

பசிக்குதே, சாப்பிட்டுட்டு வந்து விமர்சனம் போடலாம்னு பாத்தா அதுக்குள்ள... நல்லா இருப்பியா..?

நண்பரே, படத்தை மிகவும் ரசித்தேன். படம் சுப்பிரமணிய புரத்தைவிட அதிகமாக ஓடும். ஓரல் பப்ளிசிடி கியாரன்டீட். //

ஹா ஹா இது மாதிரி விட்ட தலைப்புகளும் விமர்சனங்களும் ஏராளம், அயன் பர்த்தவுடன் அதிகாலை 4 மணிக்கு அடிக்க ஆரம்பித்து 7 மணிக்கு முடித்து ரிலிஸ் செய்தேன் படத்தின் விமர்சனத்தை .. இல்லைனா சூடா இருக்க மாட்டிங்குது என்ன செய்ய

Anonymous said...

Padam Chance ae illa sema

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பரணி காதல் படத்துல நடிக்கல. அந்தப் படம் கல்லூரி. எழுதுறதுக்கு முன்னாடி யோசிங்கப்பா.

Vasanthan said...

சமுத்திரக்கனிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட நாயகி சொல்லிக் காட்டியதால் கோபமுற்ற இயக்குநர், காது கேளாத - வாய் பேசமுடியாத ஒருத்தியை நாயகியாகப் போட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

இதுவொரு முக்கிய குறிப்பு. தவறவிட்டு விட்டீர்கள்.

Doozie said...

Arumaiyana Padam...Nalla Message Sollirukkanga...

Vela said...

ada pavingala neengalam thirunthave matingala ithellam oru padam kuppai masala ithula ithu subramaniapuram vida nalla irukkunu comment vera hello mr.owner of this blog plz stop review on movies and save tammilnadu
verum vethu padam sasikumar such a waste of time go to hell

Vela said...

ada pavingala neengalam thirunthave matingala ithellam oru padam kuppai masala ithula ithu subramaniapuram vida nalla irukkunu comment vera hello mr.owner of this blog plz stop review on movies and save tammilnadu
verum vethu padam sasikumar such a waste of time go to hell

Bharathiraja said...

Really a nice film. But don't tell the suspence to others. Because in tamilnadu good films will come rarely, today only i saw the film its fantastic film after PASANGA, Guys please watch in theater, then only u will enjoy the film

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

படத்துல அட்வைஸ் கொஞ்சம் ஓவரா இருந்தா மாதிரி ஒரு பீலிங்.. மத்தபடிக்கு எனக்கும் பிடிச்சிருந்தது.. நல்ல படந்தான்..

எனக்கென்னமோ, இந்தளவுக்கு உயிரை கொடுத்து ஒருத்தங்களுக்கு உதவி செய்ய போறோம்ன்னா முதல்ல அதுக்கு அவங்களுக்கு தகுதி இருக்கான்னு பார்க்கணும்.. அதையெலாம் விட்டுட்டு இவங்களா இறங்கி வேலியில போற ஓணானை மடியில விட்டுகிட்ட மாதிரி இருந்தது..

அந்த பொண்ணு கிட்ட கூட பேசிப் பார்க்காம இவங்களா கிளம்பி போயி சண்டை போட்டு கூட்டிட்டு வராங்க..

உங்க டவுட் - அவரால அத்தை பொண்ணை தூக்கி வந்திருக்க முடியும், ஆனா தன் உறவுகளுக்காக (அப்பா, மாமா) விட்டு கொடுத்துட்ட மாதிரி தான் காட்டியிருக்காங்க..

பொண்ணோட அப்பா கடைசியில இவர் கிட்ட பேசுவார் - அது ரொம்பவே பிடிச்சிருந்தது..