Thursday, June 25, 2009

இது எங்க ஏரியா.......

இது எங்க ஏரியா.......


நம்ம சென்னை குறித்து பல்வேறு தகவல்களை
உங்களுடுன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில்
எங்க ஏரியா திருவான்மியூர் அமைந்து உள்ள தியேட்டர்கள்
குறித்து கூறுகிறேன்.


(திருவான்மியூர் சிக்னல்)

தியாகராஜா தியேட்டர்:

திருவான்மியுரின் பெரிய அடையாளம் இந்த தியேட்டர், பல
வருடங்கள் முன்னாடி கட்டப்பட்டது. ஆனால் DTS, A/C,
QUBE போன்று அனைத்து வசதிகளும் கொண்டுள்ள ஒரு
நடுத்தர மக்களுக்கு ஏற்ற தியேட்டர்.கிழே கட்டணம் 28
ரூபாய் பால்கனி 50 ரூபாய்.

முன்னணி மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்களுக்கு
கண்டிப்பாக முதல் மூன்று நாட்கள் பால்கனி கவுண்டரில்
டிக்கெட் தர மாட்டர்கள்.தியேட்டர் ஊழியர்களே ப்ளாக் டிக்கெட்
விற்ப்பார்கள்.அட்வான்ஸ் BOOKING என்றால் என்னவென்று
கேட்பார்கள். தயவு செய்து பேப்பர் பார்த்து விட்டு யாரும்
முன் பதிவுக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.


இங்கே முதல் நாள் முதல் படம் பார்ப்பது போருக்கு சென்று
திரும்புவது போல. ஒரு சின்ன கேட் வழியாக 400 பேரை
உள்ளே தள்ளுவார்கள்.நான் கடைசியாக அஜித்தின் பில்லா படம்
முதல் நாள் பார்க்க சென்றேன்.உள்ளே போகுபவர் போலீஸ் லத்தி அடியுடன் தான் படம் பார்க்க வேண்டும், ஏன் என்றால் அவளோ
தள்ளு முள்ளு.நான் படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து சென்றதால் லத்தி அடியில் இருந்து தப்பி விட்டேன். இல்லன பழுத்து இருக்கும்.பார்க்கிங் வசதி கொஞ்சம் கம்மிதான்.

ஜெட்லியின் பரிந்துரை:

குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் உஷாராக தான்
போக வேண்டும்.ஏன் என்றால் பக்கத்திலயே டாஸ்மாக்
கடை உள்ளது.

**********************
ஜெயந்தி தியேட்டர்:

இதுவும் பழமையான தியேட்டர் தான். இன்னும் பழமையாகவே
இருப்பது தான் கொடுமையான விஷயம்.ஏதோ தர்மத்துக்கு
நடத்துவது போல் இயங்கி கொண்டிரிக்கிறது. இந்த தியேட்டரில்
A/C,AIR,QUBE,DTS போன்று எதுவுமே இல்லை. பால்கனி டிக்கெட்
விலை 25 ரூபாய் தான், கிழே இருபது ரூபாய் தான்.

நான் இந்த தியேட்டரில் கடைசியாக ஜெயம்கொண்டான் படம்
பார்த்தேன்.பொதுவாக நான் ஜெயந்தி பக்கம் தலை வைத்து படுப்பது கூட இல்லை சூழ்நிலை காரணமாக சென்றோம், பால்கனி
மாட்டு கொட்டாய் போன்று இருந்தது.மின் விசிறி ஓடியும் காத்து
வரவில்லை, இருக்கை அருகே முழுவதும் பாக்கு தூப்பி கொடுமையாக இருந்தது.


படத்தின் போது சவுண்ட் ஸ்க்ரீன் அருகே இருந்து வருவதால்
ஒன்றும் தெளிவாக விழவில்லை,முக்கியமா ஸ்க்ரீன்
மஞ்சள் கலரில் தெரிந்தது. இங்கே படம் பார்த்தால் கண்
கெட்டுவிடும் அது மட்டும் தான் புரிந்தது. தியேட்டர் என்று
சொல்லமுடியாத ஒரு புரியாத புதிர் தான் ஜெயந்தி தியேட்டர்.


ஜெட்லியின் பரிந்துரை:

இங்கே படம் பார்த்தால் நல்ல படம் கூட உங்களுக்கு
பிடிக்கமால் போய் விடும்.நீங்கள் குளித்து விட்டு வர
வேண்டிய அவசியம் இல்லை தியேட்டரில் உள்ள
புழுக்கமே உங்களை வியர்வையால் குளிப்பாட்டி விடும்.

**********************


கணபதிராம்:

இந்த தியேட்டர் இப்போதைக்கு ஒரு அளவு பரவாயில்லை.
நல்ல விசாலமான பார்க்கிங், முன் பதிவு வசதி உண்டு.
நான் தற்போது பார்த்த சில படங்கள் இந்த தியேட்டரில்
இருந்து தான் பார்த்தேன்.பால்கனி டிக்கெட் அம்பது ரூபாய்
கிழே சரியாக தெரியவில்லை.

சீட் வசதி நன்றாக இருக்கிறது, ஆனால் பல சீட்கள் உடைக்க
பட்டிரிக்கின்றன. மொக்கை படம் பார்த்த ரசிகர்கள் வெறியில்
உடைத்திருக்கலாம் என தெரிகிறது.மிச்ச படி சவுண்ட்,A/C
எல்லாம் அருமையாக இருக்கும்.

ஜெட்லியின் பரிந்துரை:

கணபதிராம் காதலியுடன் படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டர்.
ஏன் என்றால் நிறையே மொக்கை படங்கள் ரிலீஸ்
செய்கிறார்கள்.

போனஸ் செய்தி:

சில காலங்களுக்கு முன் ஷகீலா படங்களை மக்களுக்கு
அளித்த பெருமை கணபதிராம் தியேட்டர்க்கு இருக்கிறது.


உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டையும் போட்டு போங்க.
வேற ஏதாவது தியேட்டர் பத்தி தெரியும்னா கமெண்ட் பண்ணுங்க......

உங்கள்
ஜெட்லி

11 comments:

லோகு said...

எந்த தியேட்டர்ல கார்னர் சீட்டுக்கு ஏசி நல்லா வரும்??

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தியாகராஜா திரையரங்கம் எம்,கே,டி கட்டினதா தல,,

கடைக்குட்டி said...

//கணபதிராம் காதலியுடன் படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டர்.
//

மாட்னாயா மாட்னாயா..... இனிமே ஜெட்லிய காலைல பாக்க கணபதிராமுக்கு வாங்க... :-)

கடைக்குட்டி said...

ப்ரார்தனா .. மாயஜால் பத்தி எழுதுங்க...

உங்க ஏரியால எந்த ஹோட்டல்ல சாப்டலாம்னு எழுதுங்க... நெறயா இருக்கு.. எங்குன போனாலும் பர்ஸ் பழத்துதான் வர வேண்டியதா இருக்கு

கடைக்குட்டி said...

இவ்வாரத் தமிழனுக்கு வாழ்த்துக்கள் :-)

ஜெட்லி... said...

@லோகு

நல்ல கேக்குரங்கய டிடைல்.....
ஏ.சி. தியேட்டர் எங்கே உக்காந்தாலும் காத்து வரும்
லோகு.....
(பாவம் நண்பர் ஏ.சி.தியேட்டரக்கு போனதில்லை போல)

ஜெட்லி... said...

//தியாகராஜா திரையரங்கம் எம்,கே,டி கட்டினதா தல,,
//

@சுரேஷ் பழனி

ச்சே ச்சே... கொத்தனார் தான் கட்டிரிப்பார் தலைவரே....

ஜெட்லி... said...

//கணபதிராம் காதலியுடன் படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டர்.
//

மாட்னாயா மாட்னாயா..... இனிமே ஜெட்லிய காலைல பாக்க கணபதிராமுக்கு வாங்க... :-) //

என்னை பாக்க அங்க வருவது வேஸ்ட் கடைக்குட்டி
நான் தனி ஆள் தான்.

ஜெட்லி... said...

@கடைக்குட்டி

அடுத்தது மாயஜால் தான், பிளஸ் நல்ல ஹோட்டல்களும்
பத்தி எழுதுவோம்.
உன் வாழ்த்துக்கு என் நன்றி.

வால்பையன் said...

என்னைக்கு இதெல்லாம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகப்போவுதோ!

Unknown said...

கணபதிராம்-ல படம் ஆரம்பிச்சி 10 நிமிஷத்துல A.C ஆப் பண்ணிருவாங்க ... ஜெயந்தி டோட்டல் வேஸ்ட் ...