Tuesday, June 23, 2009

பொடிமாஸ்.....

பொடிமாஸ்....


நல்ல ஜோக்

பெண் உதவியாளர்: "சார், உங்கள் மனைவி போன் செய்து இருக்கிறார்,உங்களை போனில் முத்தமிட வேண்டுமாம்."

மேனேஜர்:"வாங்கி வெச்சுக்க, அப்புறம் எனக்கு குடு".!!!!!

***************************
பொன்மொழிகள்:

படித்தது:

# மோசமானவர்கள்தான், மிகச்சிறந்த அறிவுரைகளை
அளிக்க முடியும்.

-பிலிப் பெய்லி.


# பெண்கள் நமக்கு சோதனையான காலத்தில் ஆறுதல்
அளிக்கிறார்கள்.பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு
ஆறுதலே தேவைப்படாது.

-டான் ஹெரால்ட்.

************************
அழகான காதல் படம்


(இதுக்கு பேர் தான் நண்பனின் காதலுக்கு உதவி செய்வதோ )

*************************

நான் எழுதியது:

நான் அவளை பார்த்தேன்
அவள் என்னை பார்த்தாள்
பூ போல் சிரித்தாள்
செல்லமாய் வெட்கப்பட்டாள்
என் உடம்பு சிலிர்த்தது
அவள் அருகில் சென்றேன்
பின்பு தான் புரிந்தது
அவள் ஹெட் போனில் யாருடுனோ பேசி கொண்டிரிக்கிறாள் என்று...........

***************************
டாஸ்மாக் பக்கங்கள்:

அவன் என்னை பாரில் பார்த்தான்
அவன் என்னை காரில் அழைத்து வந்தான்
அவன் என் மேலாடையை திறந்தான்
அவன் என்னை உதட்டில் வைத்தான்
கோபம் கொள்ளாதீர் , நான் ஒரு மது பாட்டில்.






*********************************

மாயாண்டி குடும்பத்தார் நமக்கு உணர்த்தும் பாடம்.

நண்பர் சுகுமார் இந்த படத்தை முதல் நாளே பார்த்து
விட்டார்.நான் அவருக்கு ரொம்ப பெரிய மனசு என்று
கிண்டல் அடித்தேன்,கடந்த வாரம் தான் இந்த படத்தை
நான் பார்க்க நேர்ந்தது.ச்சே, எப்படி இந்த படத்தை மிஸ்
பண்ணோம் என்று எனக்கு தோன்றியது. உண்மையில்
படம் மிக அருமையாக இருந்தது.பொன்வண்ணன்,சீமான்
மிகவும் இயல்பாக நடித்து இருந்தனர்,அவர்களை போல்
நமக்கு அண்ணன்கள் இல்லையே என்று தோன்றுமளவுக்கு
தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படித்தி இருந்தனர்.
படத்தில் ஒரு குறை என்றால் அது தருண் கோபி
காதல் காட்சிகள் தான் மிக கேவலமாக இருந்தன.படத்தின்
போது சில காட்சிகளில் என்னை அறியமால் என் கண்ணில் கண்ணீர் தூளிகள் எட்டி பார்த்தன. ஆனா, இந்த படத்தில்
இருப்பது போல் அண்ணன்மார்கள் இப்போது யாருமில்லை
சிலரை தவற.ஒரு ஆபாசமில்லாத குடும்ப படம்,அன்பு
மட்டுமே நிலையானது என்பதை கூற வந்துள்ள படம்
மாயாண்டி குடும்பத்தார்.


பிடித்தது:

படத்தில் சீமான் பேசும் வசனம்:

"இந்த காலத்துல கள்ள காதல் கூட நாலு பேருக்கு
தெரிஞ்சு செஞ்சுராயிங்க ..ஆனா கூட பிறந்த பிறப்புக்கு
ஒருத்தர்க்கும் தெரியாம தானே உதவ வேண்டி இருக்கு."
**********************************************

நன்றி: தினத்தந்தி

ஹென்றி வில்லியம் ஆலிங்கம்.(Henry William Allingham )


மேல உள்ள ஹென்றி தாத்தாவுக்கு போன ஜூன் ஆறாம்
தேதி தன் 113 வயதை அடைந்தார் . உலகத்தில் வாழும்
அதிக வயதானவரில் இவரும் ஒருவர், இந்த தாத்தா.
இவர் இரண்டு உலக போரிலும் பங்கெடுத்து கொண்டவர்.
சரி என்னடா மேட்டர் அப்படின்னு கேக்குறிங்களா?....

இவரின் வாழ்வின் ரகசியம் குறித்து கேட்டதற்கு:

மது, புகை பிடிப்பது, பெண் இந்த மூன்று பழக்கங்களும்
தான் இந்த வயது வரை தன்னை வாழ வைப்பதாக
அவர் கூறியுள்ளார்.


டிஸ்கி:குடி குடியை கெடுக்கும்,புகை பழக்கும் உடலுக்கு
கேடு, ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது.

****************************

உங்கள்

ஜெட்லி

9 comments:

கடைக்குட்டி said...

**அந்த தாத்தா போட்டோவ போட்டு எங்க மனச கலக்கிறீங்களே???

********************************

** எலிப்படம் ஜூப்பரு

*******************************

உங்க கவிதயும் (கவித தானே??) நல்லா இருக்கு :-)

********************************

//பெண்கள் நமக்கு சோதனையான காலத்தில் ஆறுதல்
அளிக்கிறார்கள்.பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு
ஆறுதலே தேவைப்படாது.

-டான் ஹெரால்ட்.//

இது அலைபாயுதே படத்துல வருமே.. பயபுள்ள திருடிட்டானோ ???

********************************

பொடிமாஸ் காரம் கம்மியா இருக்கு.. அடுத்த இடுகையில் மேலும் கலக்கவும் :-)

ஜெட்லி... said...

அது கவிதையா இல்லையானு நீ தான் சொல்லணும்.....
உன் கருத்துக்கு நன்றி...........
மேலும் மிளகாய் பொடி தூவ முயற்சி செய்கிறேன்.

வால்பையன் said...

//அவன் என்னை பாரில் பார்த்தான்
அவன் என்னை காரில் அழைத்து வந்தான்
அவன் என் மேலாடையை திறந்தான்
அவன் என்னை உதட்டில் வைத்தான்
கோபம் கொள்ளாதீர் , நான் ஒரு மது பாட்டில். //

மது பாட்டிலை காதல் செய்து எனை மிஞ்சி விட்டீகள்!

ஜெட்லி... said...

@வால்பையன்

உங்கள மிஞ்சுரதுக்கு இன்னும் யாரும்
பிறக்கவில்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தாத்தா ரொம்ப நல்லவரா இருக்காரே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ்மணத்தில் போட முடியும்போது ஓட்டுப் போட்டுவிடுகீறேன். மற்ற ஓட்டுக்கள் போட்டாச்சு

துபாய் ராஜா said...

பொடிமாஸ் சரக்குக்கேத்த சைடு டிஷ்.

லோகு said...

மொக்கை படம் ஏதாவது வந்தால் ரெண்டு பெரும் தனித்தனியா விமர்சனம்... நல்ல படத்துக்கு பொடிமாஸ்ல சின்னதா விமர்சனம்..


என்ன கொடுமை சீமான் சார்...

நையாண்டி நைனா said...

nalla irukku.