முத்திரை படம் பார்ப்பது சொந்த செலவில் சூனியம் வைத்து
கொள்வதற்கு சமம், நான் தெரிந்தே வைத்து கொண்டேன்.
கார்த்திகை பாண்டியன் அவ்வளவு தூரம் சொல்லியும் நான்
முத்திரை போக வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
யுவனா இசை என்று கேட்கும் அளவுக்கு பாடல்கள் மிக
கேவலமாக இருக்கின்றன.மொத்தத்தில் படம் மொக்கையோ
மொக்கை. படத்தை பத்தி பேசி அதிக டைம் வேஸ்ட் பண்ண
வேண்டாம்.
முத்திரை படம் பார்த்த தியேட்டர்ல நடந்த சில சுவையான
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
# படத்தில் ஒரு காட்சியில் மஞ்சுரியின் அப்பா பேசும் வசனம்
"நான் இதுவரைக்கும் எதுக்காகவும் தலை குனிஞ்சது இல்ல,
இப்ப உன்னால......"
தியேட்டர்ல ஒரு ரசிகரின் குரல்:
"டேய் நாயே சாணி மிதிச்ச கிழே குனிய மாட்டியாட...."
# டேனியல் பாலாஜியை க்ளோஸ்-அப் ஷாட் காட்டும் போதெல்லாம்
ஒரு ராசிகர்
"ஐயோ , க்ளோஸ்-அப் ஷாட் வேணாங்க. முடியுல"...
# எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து இருந்த நபர் ராக்கி சாவந்த்
மற்றும் லக்ஷ்மி ராய் பாட்டின் நடன காட்சியின் போது எட்டி
எட்டி பார்த்து ரசித்தார். கொஞ்ச விட்ட ஸ்க்ரீன் உள்ளையே
போய்டுவார் போல.(எனக்கு என்ன வருத்தம்னா எனக்கு பாதி
ஸ்க்ரீன் தெரியவில்லை).
நான் என் முன் இருக்கையில் உள்ள நபரின் முகத்தை காண
ஆசைப்பட்டேன்.இடைவெளி வந்தது சரி முன்னால் சென்று
பார்ப்போம் என்று நினைத்தால் அந்த நபர் நன்றாக தூங்கி
குறட்டை விட்டு கொண்டிரிந்தார்.
போனஸ் செய்தி:
இடைவெளி முடிந்து படம் ஆரம்பித்தவுடன் வெளிய சென்ற
அந்த முன் இருக்கை நபர், திரும்பி உள்ளே வர வில்லை.
(தப்பிச்சிட்டார் , ரொம்ப விவரமானவர்)
# இந்த படத்துல்ல ஏதாவது புதுசா செய்யனும்னு,லக்ஷ்மி ராய்
இடுப்பில் தாலியோடு அலைகிறார்.(கேக்கவே கேவலமா இல்லை)
# லக்ஷ்மி ராய் திரையில் தோன்றி அழும் காட்சி வந்தால்
இங்கு படம் பார்த்து கொண்டு இருக்கும் ரசிகர்கள்
"கவலைப்படாதே டோனி அடுத்த தொடர்ல பின்னிடுவார்"
என்று கத்துகிறார்கள்.
# நிதின் சத்யாவின் நடிப்பு திறமையை கண்டு ஒரு ரசிகர்
வெறி வந்து
"சத்யா உன்னை மட்டும் ரோட்ல பார்த்தேன் பின்னிடுவேன்"
என்று வெறியோடு கத்தினார்.
# டேனியல் பாலாஜி பாடல் காட்சிகளில் ஏதோ லக்ஷ்மி ராயை
கற்பழிப்பது போல் பார்த்து கொண்டே கையையும் காலையும்
ஆட்டுகிறார்.
# லாஜிக் இல்லாத படம் முத்திரை ஒரு சின்ன உதாரணம்
" ஒரு பிக் பாக்கெட் திருடன் திடிர்னு முதலமைச்சர்
கைபேசிக்கு கால் பண்ணுவாராம்...."
முத்திரை பார்த்ததில் நேத்து நித்திரையை தொலைத்த
அப்பாவி நான். நீங்கள் உஷாரா இருங்க மக்களே.......
ஜெட்லி பஞ்ச்:
மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன்
தப்பு.
மக்கள் அனைவரையும் காப்பாற்ற ஒட்டு போடுங்கள்.
நன்றி: indiaglitz
உங்கள்
ஜெட்லி
24 comments:
முன்னாடி சீட்ல உக்காந்துட்டு இருந்தது சித்து தானே..
வர வர நீயும் கானா பானா சார் மாதிரியே ஆயிட்டு வர்ற.. எல்லா மொக்கை படத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதற.. உன்ன மாதிரி ஆளுங்களுக்குத்தான் வர போகுது வேட்டைக்காரன்..
ஓட்டு போட்டாச்சு..
150 ரூபாய் காப்பாத்தி கொடுத்த என் குல சாமி நீங்க
:)
முத்திரை பார்த்து நித்திரையை தொலைக்க நான தயாரில்லை. காப்பாற்றிய உங்களுக்கு நன்றி.
////எனக்கு என்ன வருத்தம்னா எனக்கு பாதி
ஸ்க்ரீன் தெரியவில்லை///
ரொம்ப மனசு நொந்து போய் இருக்கீங்கன்னு தெரியுது. கவலைப் படாதீங்க அண்ணாச்சி, நான் கொஞ்சம் படம் எடுத்து அனுப்பறேன்!!
நல்லவேளை நான் தப்பித்தேன். நன்றி நண்பா.
//அந்த முன் இருக்கை நபர், திரும்பி உள்ளே வர வில்லை.//
இதுக்கு அப்புறமும் படம் பாத்தீங்கள்ள...
கண்டிப்பாக உங்களுக்கு தேவை தான்.
ஹா ஹா ஹா.... வெகு நாள் கழித்து என் கல்லூரி நண்பர்களுடன் படம் பார்த்த உணர்வு. நீங்கள் இது போன்று இன்னும் பல முத்திரை படங்கள் பார்க்க கடவதாக
@லோகு
ஏன்பா லோகு சித்துவ டேமேஜ்
பண்ணாம தூங்க மாட்டியா...
ஓட்டுக்கு நன்றி
@சேகர்
என்ன அண்ணே இதுக்கெல்லாம் போய்
ரொம்ப பீல் பண்றீங்க....
@யுர்கன்
தங்கள் வருகைக்கு நன்றி.
@முருகானந்தம்
தங்களை காப்பாற்றியதற்கு என்னக்கு மிக்க
மகிழ்ச்சி.
@பால்ஸ் மச்சான்
தாங்கள் இந்த உதவியை செய்தால்
மிகவும் எனக்கு நன்மையாக இருக்கும்.
@ரமேஷ்
நன்றி..அது என் கடமை
@என் பக்கம்
அதான் தெளிவா சொன்னேனே
அவர் விவரமானவர் தப்பிச்சிட்டார் என்று
ம்ம்ம் :-)
யோவ்.. அப்டி படம் எடுத்தாதான்யா.. நாம இப்டி காமெடியா பதிவெழுத முடியும். இது தெரியாம... வென்று வெலக்குது, ஹிட்ஸ்சு எகிருது!!
என்ன கடைக்குட்டி ரொம்ப நாளா ஆளை காணோம்....
@கலையரசன்
கரெக்ட்ஆ சொன்னிங்க ஜி..........
Machi ...I watched this last week....romba romba mokkai padam....nondhu noodles aagittaen..Ajithoda Raja padatha vida idhu mokkai...
விரைவில் உங்கள் வீட்டு சின்னத்திரைகளில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன சூப்பர் ஹிட் திரைப்படம் என அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியமில்லை. யுவனும் மொக்கைப் படத்துக்கு ஏன் கஸ்டப்படவேண்டும் என நினைத்து சும்மா பாட்டுகொடுத்துவிட்டார்போல இருக்கு. மாசிலாமணியை விட அறுவையோ? கந்தசாமியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
:)
:) :)
Post a Comment