Wednesday, June 17, 2009

நடிகர்களை கலாய்க்களாம் வாங்க......

காலாய்க்களாம் வாங்க......

வணக்கம்ங்க நானும் நடிகர்களை கலாய்க்காமா இருக்கலாம்னு
நினைச்சா, என்னால இருக்க முடியலங்க.அதனால நீங்களும்
சும்மா படிங்க ரசிங்க டென்ஷன் ஆகாதிங்க.

நீங்க எல்லாம் அந்த ரின் சோப்பு தூள் விளம்பரம் பார்த்து
இருப்பிங்கனு நினைக்கிறேன், ஆமாங்க அதேதான் ஒரு பையன்
கிரிக்கெட் விளையாடும் போது பந்து போய் ஒரு பெரியவர்
வீட்டில் விழும் உடனே அவர் அவனிடம்,

இனிமே நீ கிரிக்கெட் விளையடுவியா....
நீ என்ன சச்சினா....
இனிமே சிக்ஸ் அடிப்பியா என்றப்படி பிரம்பால் ஒரு கையை
நீட்ட சொல்வார்.

உடனே அந்த பையன் இரண்டு கையையும் நீட்டி நான் இன்னொரு
சிக்ஸ் அடிப்பேன் என்பான்.

அவனது தன்னம்பிக்கையை பார்த்து பெரியவர் பந்தை திருப்பி
கொடுத்து தோளில் தட்டி கொடுப்பார்.

இங்க தாங்க எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துச்சு, அதாவது
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நம்ம நடிகர்கள் இருந்தா எப்படி
இருக்கும்னு நினைச்சு பார்த்தேன். நீங்களும் படிச்சு பாருங்க..........

************************

விஜய டி.ராஜேந்திரன்

பெரியவர்: ஏன்பா இனிமே உன்னை பேட்டி எடுத்த சும்மா டேபிள்ஐ
போட்டு தட்டுவியா? வாயிலேயே இனிமே மியூசிக் போடுவியா?
கையை நீட்டு......
டி.ஆர் அவர்கள் ரெண்டு கையையும் நீட்டி

டேய் உன்கிட்ட இருக்கு பிரம்பு
நீ அடிக்கற அடிலாம் தாங்கும்டா என் உடம்பு,
என் மனசு இரும்பு
அது எப்போதும் புடிக்காது துரும்பு,
பொங்கலுக்கு சாப்பிடலாம் கரும்பு
என் கூட நடிச்ச மும்தாஜ் கொஞ்சம் குறும்பு,
அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு
அதை நீ நம்பு......

u r suppressing appressing deppressing a tamilian ......
யோ நான் தமிழன்யா நான் தமிழன்யா......

பெரியவர்: ஆள விடு சாமி.............

****************************

அஜித்

பெரியவர்: இனிமே நீ பேஷன் ஷோல நடக்கற மாதிரி நடிப்பியா?
அப்புறம் என் பின்னாடி ஆறு கோடி பேர் இருக்காங்க அப்படின்னு
சொல்லுவியா?

அஜித்: அது ஒரு கருப்பு சரித்தரம். நான் நடக்கறதா வேணாமானு
முடிவு பண்றது நான் இல்ல THOSE DIRECTORS. அப்புறம் அநேகமா
இப்போ என் பின்னாடி ஏழு கோடி பேர் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

பெரியவர்: ஹ்ம்ம் நாய் வால நிமித்த முடியாது.........

********************

டாக்டர் விஜய்

பெரியவர்: இனிமே குருவி, வில்லு மாதிரி படத்துல்ல நடிப்பியா?
சும்மா theatre வெளிய நின்னுட்டு இருக்கிறவனை
புடிச்சி உன் படத்துக்கு உள்ள தள்ளி விடுவியா?
கையை நீட்டு...............

உடனே விஜய் பின்னாடி இருந்து பத்து கைகள் மேல இருக்கும் படத்தில் போல் வருகிறது......

விஜய்: இன்னும் அடுத்த பத்து படதில்ல அந்த மாதிரி தான் நடிப்பேன்.

பெரியவர் மயக்கமாகிறார்......
********************************
உங்களுக்கும் யாரைவது கலாய்க்கனும் அப்படின்னு ஐடியா இருந்தா கமெண்ட் பகுதியில் தட்டி விடுங்க......

நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

8 comments:

வந்தியத்தேவன் said...

இதையும் பாருங்கள் ஒரு இணையத்தில் கிடைத்தது.

விஜய்யின் படம், அவரது நடவடிக்கைகளை கிண்டலடித்து அவ்வப்போது இணையதளங்களில் காமெடி சாம் ராஜ்யம் நடத்திவருகின்றனர் ரசிகர்கள். லேட்டஸ்ட்டாக ஹமாம் சோப் விளம்பரத்தை உல்டா செய்து விஜய் ரசிகர்களை கொதிப்படையச்செய்துள்ளனர். விஜய் படம் பார்த்தால் உபாதை ஏற்படுவதாகவும், அஜித் படம் கண்ணுக்கு விருந்துவைக்கிறது என்பதான கான்செப்டில் வெளியாகியிருக்கும் அந்த விளம்பரம் கீழே

அம்மா : பவித்ரா.... டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?
பவித்ரா : OKம்மா....
அம்மா : அய்யோ.... என்ன படம்னு சொல்லலையே, ஒருவேளை விஜய் படம் வாங்கிட்டு வந்துட்டா.... வாந்தி வருமே.... தலை சுத்துமே.... சூசைட் பன்னிக்கலாம்-னு தோனுமே.... என் பொன்னுக்கு பைத்தியமே பிடிச்சுடுமே.... அய்யோ.... பவித்ரா... பவித்ரா... !!!!
பவித்ரா : அம்மா.... டிவிடி வாங்கிட்டேன்.... (கையில் “வரலாறு” பட டிவிடி)
அம்மா : அஜித் இருக்க.....
பவித்ரா : பயம் ஏன்....

Subankan said...

விஜய் மேட்டர் சூப்பர். இதயும் பாருங்க

நடிகர் விஜய்க்குக் கதை சொன்ன இயக்குனரின் நிலை??!!!

செந்தில்குமார் said...

ஜெட்லி,

நல்ல கற்பனை, அசத்தலான கலாய்ப்பு !!

எங்கள் அண்ணன், ரைசிங் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷை சீண்டாமல் இருந்தமைக்கு நன்றிகள்.. :)) இன்னும் நெரிய்ய எதிர் பாக்கறேன் !!

செந்தில் [ கிறுக்கல்கள் - http://www.aadhis.blogspot.com ]

ஜெட்லி... said...

@ வந்தியதேவன்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
உங்கள் காமெடி சூப்பர் ....

ஜெட்லி... said...

@ சுபங்கான்

எப்பவுமே டாக்டர் விஜய் தான் நம்ம டார்கெட்.

ஜெட்லி... said...

@செந்தில் குமார்.

ஐயோ அவர் எம்.பி ஆகிட்டாருங்க அவரை விட்டுருங்க.
உங்கள் பதிவும் சூப்பர்.

ஆபிரகாம் said...

காலாயுங்க! நல்ல இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜயை பார்த்தால் யாருக்கு பயம்
குமுதம்: ரசிகர்களை எல்லாம் அழைத்து என்ன பேசினீர்கள்?
SA Chandrasekar: தமிழகம் முழுக்க உள்ள விஜயின் ரசிகர்கலியா அழைத்து அவர்களின் விருபத்தை கேட்டிருக்கிறோம். எல்லோரும் அவர்களின் ஆதரவை தெரிவித்தார்கள். வரும் ஜனவரியில் சென்னையில் மாநாடு நடக்கும் பொது மீதியை அறிவிப்போம்.

குமுதம்: விஜயகாந்த் கூட கட்சி ஆரமித்து இப்போது கணிசமான ஓட்டுவங்கியை உருவாகியிருக்கிறார். உங்களுக்கும் ஓட்டு கிடைக்குமா?
SAC: ஏன் இல்லை. தமிழ் நாட்டில் யாரை கேட்டலும் பெண்களின் அதிக செல்வாக்கை பெற்றவர் விஜய். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன் விஜயகாந்தே விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி பயப்படுகிறாரே?

குமுதம்: அவர் பயப்படுகிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?
SAC: அவரது நண்பர்கள் வட்டாரத்தில் தனது அச்சத்தை வெளிபடுத்தினார் என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இது சும்மா இல்லைங்க. SAC கொடுத்த பெட்டிதான். வேணும்னா இன்னிக்கு குமுதம் வாங்கி இத படிங்க. இப்பவே கண்ணா கேட்டுதே.