Tuesday, June 16, 2009

கந்தசாமி ---இப்படியும் இருக்குமோ!

கந்தசாமி --- ஒரு கற்பனை.

நன்றி:indiaglitz

(பின் வருபவை உங்கள் மனதை புண்ப்படுத்தி இருந்தால், விக்ரம் மற்றும் திரையுலக ரசிகர்கள் மன்னித்து கொள்ளவும்)

(அப்புறம் இந்த திரைக்கதையை படிச்சிட்டு, பல 'C'கள் வச்சிக்கிட்டு
என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்குறவங்க என்கிட்டே வாங்க, சும்மா ஒரு படம் எடுப்போம்)


காட்சி 1:
இடம்: தமிழக ஆந்திரா எல்லை சூளுர்பேட்டையில் உள்ள ஒரு கோழி பண்ணை.


வானத்தில் பயங்கர இடி, சுறாவளி காற்றுஅப்போது வானத்தில் இருந்து ஒரு பெரிய கோழி குதிக்கிறது. பின்னாடி BGMல கோ கோ கோழி அப்படின்னு DSP மியூசிக் போடுகிறார். DSP னா போலீஸ் இல்லங்க Devi Sri Prasad.க்ளோஸ் அப் ஷாட், அந்த பெரிய கோழி யாருன்னு பார்த்த நம்ம விக்ரம்.கோழி மாதிரியே தரையெல்லாம் தீனி தேடிட்டு அப்படியே கோழி பண்ணை உள்ள பூந்து அங்குள்ள அம்பது ஆயிரம் கோழிகளை திருடுகிறார்.
அப்போது கோழி பண்ணை தொழிலதிபர் அதை பார்த்து விடுகிறார், அப்புறம் என்ன ஒரு பைட். சும்மா கோழி மாதிரி பறந்து பறந்து கொத்துகிறார் விக்ரம்.



அடுத்த நாள் சில பேப்பர்களை பார்த்தால் தலைப்பு செய்தியாக:

"இந்தியாவை கலக்கும் கோழி திருடன், இத்துடன் முப்பது லட்சம் கோழிகள் திருடப்பட்டுள்ளன"


"கோழி கறி கிலோ 500 ரூபாய், முட்டை விலை 25 ரூபாய்"


"இந்தியாவில் dinosaur போல உருவம் கொண்ட ராட்சஸ கோழியின்
அட்டகாசம்,சிறப்பு படங்கள் உள்ளே" வாங்கிவிட்டிர்களா! ......


காட்சி 2:

இடம் : வருமான வரி அலுவலகம்.
அங்கு மேல் நிலைய அதிகாரியாக விக்ரம் அவர் பெயர் தான்
கந்தசாமி. கந்தசாமி ஒரு நேர்மையான அதிகாரி. ஒரு பைசா கூட
லஞ்சம் வாங்க மாட்டார்.... ஆனா இப்போ அவருக்கு ஒரு
புது ப்ராஜெக்ட் அதாவது

"ஒரு வீட்டுல யாரும் ஒரு கால் கிலோ கோழிக்கு மேல் சாப்பிட கூடாது, மீறினார்கள் என்றால் அவர்கள் சிறையில் அடைக்கபடுவார்கள்".

சில நாட்கள் கழித்து, கோழி திருடனை பிடிக்க ஸ்பெஷல் ஆபிசர் ஆக கந்தசாமிக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அப்போதான் விக்ரம் கோழி திருடன பிடிக்க கையில சுத்தி எடுக்கிறார். ரோட்டில் யாராவது கோழியை சைக்கிளில் கட்டி கொண்டு போனால் கூட அவனை சுத்தியால் ஒரே போடு போடுகிறார் விக்ரம். ஏன்னா கந்தசாமி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட்.


இவர் தேடுன தேடுல்ல கடத்தின கோழிகள் எல்லாம் மெக்சிகோ
நாட்டில் ஏற்றுமதி ஆகுதுன்னு தகவல் கிடைக்குது. ஒடனே
கந்தசாமி மெக்சிகோ போறார்.

**************** இடைவேளை *********

காட்சி 3:
இடம் : மெக்சிகோ முட்டு சந்து

அங்கே அவர் தங்குற ஹோட்டல் பக்குதுல இருக்குற மாட்டு தொளுவுத்துல மாடு கழுவும் வேலை செய்து கொண்டிரிக்கிறார் நாயகி ஸ்ரேயா.

(உபரி தகவல்: மெக்சிகோ மாட்டை கழுவும் போது இந்த மாதிரி மேக் அப் போட்ட தான் மாடு மிரலாமா இருக்குமாம்.)

கந்தசாமி தினமும் ரெண்டு சோம்பு பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர், அதனால் பக்கத்திலே இருக்கும் மாட்டு தொழுவத்தில்
பால் வாங்க சொம்புடன் செல்கிறார். அங்கே ஸ்ரேயாவை பார்த்த
உடன் ****************** ஒரு பாட்டு.

excuse me mr.கந்தசாமி KFC போலாம் கம் வித் மீ.
leg இல்ல wing பீஸ் வாங்கி கொடு........
....................................
.....................

சரக்கு இல்லைன்னு சொல்றார் மொக்கைசாமி
சரக்கு பத்தலைன்னு சொல்றான் இந்த கந்தசாமி.
சைடுடிஷ் இல்லாம சரக்கு சாப்பிடமாட்டான் இந்த சாமி.


**************************

காட்சி 4:
இடம் : ஊட்டி


இங்கதான் படத்துல்ல பயங்கரமான TURNING பாயிண்ட். கந்தசாமி
அப்பா தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ஊட்டி கொண்டை ஊசி வளைவு
இடத்தில் கையில் ஒரு பெட்டியுடன் நிற்கிறார்.

(உ.த: பாவம் கிருஷ்ணா, வீட்ல சும்மா உட்கார்ந்து இருந்தவர
கூட்டிட்டு வந்து, நீங்க தான் படத்துக்கே TURNING பாயிண்ட்
அப்படின்னு சொல்லி ஊட்டில இருக்குற எல்லா கொண்டை
ஊசி வளைவிலும் நிக்க வச்சிடாங்க).


அப்போதான் ஒரு பொம்பளை வந்து கிருஷ்ணா கிட்ட அந்த பெட்டியை வாங்க வாரங்க. அந்த பொம்பளை யாருன்னு பார்த்த
அதுவும் விக்ரம் தான். கிருஷ்ணவோட ஒன்னு விட்ட கீப் தான்
அந்த பொம்பளை விக்ரம்
(ஜெட்லி நீ எங்கயோ போய்ட்ட).

கிளைமாக்ஸ்:

(படத்துல்ல நிறைய விக்ரம் நடிச்சு இருக்காங்க, அதாவது விக்ரம்
பல தோற்றத்தில் வாராரு,நான் கிளைமாக்ஸ் எழுதுன அதுக்கு ரெண்டு போஸ்ட் ஆகும் அதனால மக்கள் நலன் கருதி சிம்பிள் கிளைமாக்ஸ்).

சுபம்.

புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போட்டு போங்க.....

உங்கள்
ஜெட்லி

14 comments:

Suresh said...

ஹா ஹா நீங்க தான் காமெடி கந்தசாமி இயக்குனர் ;) சரி டமாஸ்

Raju said...

\\சரக்கு இல்லைன்னு சொல்றார் மொக்கைசாமி
சரக்கு பத்தலைன்னு சொல்றான் இந்த கந்தசாமி.
சைடுடிஷ் இல்லாம சரக்கு சாப்பிடமாட்டான் இந்த சாமி.\\

இதுதான் மாமேய் டாப்பு...!
ஆனா, கடைசி வரைக்கும் நீ என்ன சொல்ல வர்ரேனு புரியவே இல்லப்பா.

coolzkarthi said...

ஹைய்யோ ஹைய்யோ....சூப்பர்....

கடைக்குட்டி said...

நல்ல முயற்சி :-)

குத்தம் சொல்ல புடிக்கல...

இன்னும் நக்கலா கலக்குங்க ...:-)

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஜெட்லி... said...

@சுரேஷ்
நன்றி சுரேஷ்.......

ஜெட்லி... said...

@டக்லஸ்
அதாங்க எனக்கும் புரியல....

ஜெட்லி... said...

@கூல் கார்த்தி

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

ஜெட்லி... said...

@கடைக்குட்டி
உந்தன் கருத்துக்கு நன்றி கடைக்குட்டி..
நானும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன்
எதாவது ஒன்னு தான் கிளிக் ஆகுது.....
பாப்போம்.

ப்ரியமுடன் வசந்த் said...

கந்தசாமி பார்ட் 2

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நானும் யோசிச்சிக் கிட்டெ இருக்கேன், ஒன்னும் தோணல வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

உங்கள் வாழ்த்துக்கு
நன்றி சுரேஷ் தலைவரே...

தமிழ் காதலன் said...

arumai nanbare .,
padaippu arumai.,
thodarka.

Anonymous said...

superb

Ramprasath said...

"அழியாச் சுடர்கள்" ஆதரவுக்கும் சிபாரிசுக்கும் நன்றி.

“காமடி” நன்றாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துகள். Satire வகையை try பண்ணி பாருங்கள்,,(இருக்கவே இருக்கு அரசியல்)