Monday, June 15, 2009
வெந்தது வேகாதது, சிந்தியது சிதறியது........
வணக்கமுங்க இப்ப பாருங்க அல்லாரும் அவியல், குவியல், கதம்பம், பொடிமாஸ், ஆம்லெட், பிரியாணி, சுக்கா அப்படின்னு பல பெயரில ரொம்ப நல்லா எழுதுறாங்க. சரி இன்னும் எத்தனை நாளுக்கு தான் நாம சும்மா உப்புமா பதிவு போட்டு ஒப்பேத்துறது??? அதனால நாமளும் ஏதாவது ஒரு சூப்பர் ஐட்டம் போடலாம்னு (ஐயோ நீங்க நெனைக்கறது இல்ல) ஒரு முடிவுக்கு வந்தேன். முதல்ல ஒரு நல்ல பெயர் வைக்கனும்னு ரொம்ப யோசிச்சு பாத்தேன் ஒன்னும் சிக்கல சரி "உப்புமா" அப்படின்னு வச்சா பொருத்தமாவும் இருக்கும்னு நெனச்சேன் அப்புறம் பயந்து யாரும் வரலைனா??? அதான் இந்த தலைப்பு.
பொதுவா இந்த மாதிரி பதிவுகள்ல ஒரு A சோக்கு சொல்லனுமாம்ல, நாம ரொம்ப வெகுளி பய பாருங்க!!!!!!!!!!! இந்த கருமம் ஒன்னும் தெரியாது அதனால நம்ம கல்கண்டு புத்தகத்துல வந்த ஒரு சோக்க போடுறேன் ரசிங்க. அதாவது அரசப்பா அப்படின்னு ஒருத்தர் எழுதி இருக்காரு, "த்ரிஷா போட்ட புதிய பாதை!". அதாவது, 'சர்வம்' படத்தில் தொப்புள் தெரிய நடித்த த்ரிஷா, முத்தக்காட்சியிலும் நடித்துள்ளார். இங்க தான் சிரிப்பு வருது பாருங்க "தமிழில் நடிக்கும் கதாநாயகிகளுள் த்ரிஷா மட்டுமே தொப்புள் தெரியாமல் இதுவரை நடித்தார்........." இதுக்கு மேல எதோ அருக்குராறு வேண்டாம். ஒரு வேலை இவரு சில வருஷம் உள்ள இருந்துட்டு வந்தாரோ?? இல்லைனா த்ரிஷா பதிலா வேற யாரையோ சொல்றாரோ?? ஒன்னும் புரியலையே. இந்த கதாநாயகர்கள் வாயாலேயே சண்ட போடுற மாதிரி இந்த பொண்ண விட அதோடைய தொப்புள் தான அதிகமா நடிச்சது??
சர்வம்னு சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது, இந்த ஆங்கில அகராதியில் புது புது வார்த்தைகள் சேர்க்குற மாதிரி தமிழ்ல புதுசா வார்த்தைகள் வருதோ?? இந்த படத்துல வர்ற சிறகுகள் அப்படிங்கற பாட்டை நான் கேட்டேன் அதில் ஒரு நாலு வார்த்தை ஒன்னும் பிரியல உங்களுக்கு பிரிஞ்ச சொல்லுங்க இல்லேன்னா பாடுன அண்ணன் ஜாவேத் அலி கிட்ட கேட்டு சொல்லுங்க, அந்த வார்த்தைகள் "நிலுவே, அழுகே, உழுகம், கணுவும்"
அப்புறம் ஒரு கவிதை எழுதனுமாம்ள, என்னை ஒரு கவிதா எழுத சொன்னீங்கனா "ஒரு கவிதை" அப்படின்னு தான் எழுத தெரியும், எனக்கு கவிதை ஒழுங்கா படிக்க கூட தெரியாதுபா அதனால கல்கண்டு புத்தகத்துல வந்த ஒரு வரி ரொம்ப நல்லா இருந்தது அதை எழுதறேன் "சிந்தனைகள்" அப்படின்ற தலைப்புல வந்த "குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தாலோ கை வலிக்கிறது இறக்கி விட்டாலோ இதயம் வலிக்கிறது" ரொம்ப நல்லா இருந்தது.
நம்ப நண்பர் சுகுமர்னு ஒருத்தர் இருக்காருங்க அவருடைய உறவினர் ஒருவர் ஒரு சாதனை பண்ணதா அவரே சொல்றாரு, அதாவது சென்னையில் இருந்து மதுரை செல்கிற வைகை அதிவிரைவு ரயில் தான் ரொம்ப வேகமான ரயில்னு சொல்றாங்க, சுமார் 500km தூரத்தை 8 மணி நேரத்தில் கடந்துடுது ஆனா இந்த குறிபிட்ட ஆளு இங்க இருந்து மதுர தாண்டி இருக்குற விருதுநகர்க்கே 7 மணி நேரத்தில் போய் சேர்ந்துட்டாராம், இப்ப இருக்குற நெரிசலில் தாம்பரம் தாண்டவே ஒண்ணரை மணி நேரம் ஆகுது அப்புறம் எப்படி?? ஒரு வேலை இதைத் தான் சொல்லுவாங்களோ கேக்குறவன் கேனப்பயலா இருந்தா K.R.விஜயா.................... சரி வேண்டாம் விடுங்க.
நண்பர் ஜெட்லி அரசியல் ரொம்ப பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு அதனால ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்றேன், இந்த மார்க்சிஸ்ட் கட்சி காரங்கள புரிஞ்சிக்கவே முடியலையே, கேரளாவுல ஒரு ஊழல் விசாரனயாம் அதை எதிர்த்து இங்க ஆர்பாட்டம் பண்றாங்க, முல்லை பெரியார் பிரச்சனை பற்றி இவர்கள் ஏதாவது பேசவாவது.........???? மடியில் கணம் இல்லேன்னா பயம் எதுக்கு?? சரி அதை விடுங்க, இவர்கள் இந்தியர்களா அல்லது சீனாகாரனுங்களா? சும்மா சீனாவை ஆதரித்தே பேசுறாங்க?? இலங்கை விவகாரம் உட்பட.
இந்த வாரம் என்னை மிகவும் வருத்திய செய்தி இரண்டு, ஒன்று ஒரு சிறுமியை மூன்று காமுக நாய்கள் (இருவர் போலீஸ் மகன்களாம்) கற்பழித்தது, மறு நாள் அந்த நாய்களை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மிக்க மகிழ்ச்சி. அடுத்தது பணத்துக்காக மூன்று சிறுவர்கள் கடத்தி கொலை செய்யப் பட்டது, எப்படி இப்படி வெறி பிடித்து அலைகிறார்கள்?? இவர்கள் சாகடிப்பது ஒரு சிறுவனை அல்ல ஒரு குடும்பத்தை, எவ்வளவு வேதனை படுவர் அந்த பெற்றோர்?? ஏன் இந்த @#$%^&*()! இவர்கள் வலி புரிய மாட்டேங்குது?? "தண்டனைகள் கடுமையாக்கப் பட்டால் தான் குற்றங்கள் குறையும்".
கடந்த வாரம் ரயில் பயணத்தில் ஒரு சங்கடமான சம்பவம், அதாவது ரயில் வாசலில் நானும் இன்னொரு பயணியும் அமர்ந்து பயணம் செஞ்சோம் எங்களுக்கு பின்னாடி ஒரு அம்மாவும் அவுங்க சின்ன பையனும் நின்னுட்டுவந்தாங்க. அப்ப நான் வச்சிருந்த பிஸ்கட் எடுத்து சாப்பிட்டேன். எனக்கு அந்த சிறுவனுக்கும் என் அருகில் இருக்கும் நபருக்கும் குடுக்காம சாப்பிட விருப்பம் இல்ல ஆனால் தினம் தினம் பிஸ்கட் கொள்ளை என்று செய்திகள் வரும்பொழுது நான் கொடுத்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?? ஒரே பசி வேற.
உறவினர் கல்யாணத்துக்கு போனேனுங்க, சும்மா பந்தாவா டிரஸ் பண்ணிட்டு ஜம்முனு உள்ளே போனேன். போன உடனே ஒரு நண்பர் சொல்றாரு "Your Fly is open" அட ஆமா நிஜமா தான் சொல்றாரு, நானும் என்னனவோ பண்றேன் ஹ்ம்ம் சரி ஆகல. அப்புறம் சட்டைய எடுத்து வெளிய விட்டு ஒரு ஓரமா ஒக்காந்து ஒப்பேத்திட்டு வந்தேன். இந்த மாதிரி நீங்க எங்கயாவது சிக்கி (I mean உங்க Zip) இருக்கீங்களா??
சரி எப்படி இருந்தது இந்த பதிவு?? தலைப்பு மாதிரியே இருந்ததா இல்ல பரவா இல்லையா?? உங்க கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
நன்றி
சித்து
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கை வலிக்கிறது இதயம் வலிக்கிறது கவிதை சூப்பர்.
நல்ல இருக்கு மச்சி ....
இப்படி பல புது வார்த்தைகள் தமிழில் வருகிறது நண்பா. குறிப்பாக நம் உதித் நாராயன் பாடும்போது. இப்படிதான் "யாரடி நீ மோகினி" படத்தில் வரும் ஒரு அருமையான பாடல், "எங்கேயோ பார்த்த மயக்கம்...." பாடலில் பல புது வார்த்தைகள். "தேவுதை ( தேவதை ), கடுவுள் ( கடவுள் ), வருவுது ( வருவது ), இவுளை ( இவளை ), மறைந்து ( மறந்து ), மிருண்டு ( மிரண்டு ), வளைந்து ( வாழ்ந்து என்பதைத்தான் அப்படி சொல்கிறார் ). இவரைப் பாட விட்டால் தமிழில் பல புதிய வார்த்தைகள் வரும். தமிழை நன்றாக வளர்ப்பார்.
வாங்க!
வந்து உங்க பங்குக்கு மொக்கைய போடுங்க!
Post a Comment