Monday, June 8, 2009

குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்...............

குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்.

---------------------------------------------------

அன்றைக்கு செவ்வாய்கிழமை, வழக்கம் போல் நான் குளித்து முடித்து என் கைப்பேசி விற்கும் கடையை திறக்க போனேன். எங்கள் வளாகத்தில் மொத்தம் மூன்று கடைகள் உள்ளன. நான் தான் எங்கள் மூணு பேரில் முதலில் கடையை திறப்பேன், மீதி இரண்டு கடைகாரர்களும் என்னை விட ஒரு மணி நேரம் கழித்து தான் கடை திறக்க வருவார்கள். அதில் கடைசி கடைகாரர் ஊருக்கு போய்விட்டதால் அவர் அடுத்த வாரம் தான் கடை திறப்பார் என்று தெரிகிறது.


நான் கடைக்கு வந்த சமயம் அவரின் கடையின் முன்னாடி ஒரு நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர், கிழே ஒருவன் படுத்து கொண்டிருந்தான். காலையிலே போதை என்று நினைத்து நான் என் கடையை திறந்து, கண்ணாடிகளை துடைத்து கொண்டிருந்தேன். அப்போது வளாகத்தின் வாட்ச்மன் கடையின் வெளியே நின்று கொண்டிருந்தார்.அந்த கூட்டத்தை பார்த்த படி யாரோ ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார்.


நான் அவரிடம் சென்று "என்ன அண்ணே காலையிலே போதைல படுத்துட்டான் போல" என்றேன்.




உடனே அவர் புன்னகையுடன் "ஆள் காலி தம்பி".

"என்னணே சொல்றிங்க, என்ன ஆச்சு எதுவும் ஆக்சிடென்ட்ஆ?" பதட்டத்துடன் கேட்டேன்.

"யார்னே தெரியுல பா, குடிச்சி நாக்கு வறண்டு செத்து போய்ட்டான் அதிகமா குடிச்ச இப்படிதான் ஆவும்"என்று எனக்கு பாடம் எடுத்தார்.

எனக்கு அப்பதான் தெரியும் இப்படி கூட சாவங்களா என்று, ஒரு உயிரற்ற உடல் கடை முன் இருக்கு. கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விடலாமா என்று யோசித்தேன். எனக்கு என்னவோ போல் இருந்தது எல்லோரும் பொருள்காட்சியை பார்ப்பது போல் அந்த உடலை பார்த்து சென்றனர். எனக்கும் என்ன செய்ரதன்னு தெரியல. கொஞ்சம் நேரம் கழித்து போலீஸ் வந்தார்கள். வாட்ச்மனிடம் விசாரித்தார்கள் அப்புறம் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

அடுத்து போலீஸ் என்னை தேடி வந்தார்கள். என்னிடம் ஒரு பேப்பர் நீட்டி கையெழுத்து போட சொன்னார்கள்.

நான் முழித்துகொண்டே "ஏன் சார் நான் கையெழுத்து போடணும்?" என்று கேட்டேன் .

உடனே எஸ்.ஐ "அது ஒண்ணும் இல்ல தம்பி, சும்மா ஒரு சாட்சி கையெழுத்துதான்" என்றார்.

நான் திரும்பவும் யோசித்தேன்,

"உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை வராது தம்பி, சும்மா போர்மளிட்டி
தான்" என்று கூறினார்.

என் அடி மனசில் ஒரு பட்சி சொல்லிச்சி ஆஹா இன்னும் என்ன என்ன கேக்க போறாங்களோ என்று.



அடுத்து எஸ்.ஐ தொடந்தார் "தம்பி ஆம்புலன்ஸ் சொல்லிருக்கோம், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க"

நான் ஒன்றும் புரியாமல் தலையை அசைத்தேன்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த உடலை அரசு ஆம்புலன்ஸ் வாங்கி கொண்டு போனது.நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

திரும்பவும் அந்த எஸ்.ஐ வந்தார் "தம்பி எல்லாம் சரி பண்ணியாச்சு, ஆம்புலன்ஸ் காசு குடுப்பா" என்றார்.

நான் உடனே ஒரு அம்பது ரூபாய் எடுத்து கொடுத்தேன்.

அதற்கு அவர் "என்ன தம்பி இது அம்பது ரூபாய் தரிங்க, உங்க பக்கத்துக்கு கடைகாரர் ஐநூறு
ரூபாய் கொடுத்தாரு, பார்த்து கொடுங்க" என்றார்.

"சார் இப்போ என் நிலைமை சரி இல்லை சார் , இதான் சார் என்னால முடியும்" என்றேன்.

என் மனதில் உள்ளது என்ன என்றால், அவன் அடிபட்டு செத்து இருந்தால் காசு கொடுப்பதில் தவறில்லை, குடிச்சு செத்தவனுக்கு நான் ஏன் காசு தர வேண்டும்.

"சரி மூன்னுறு குடு" என்றார்

"அம்பதுக்கு மேல முடியாது சார்" என்றேன் காட்டமாக.

அதற்குள் ஒரு கஸ்டமர் ரிச்சார்ஜ் செய்ய வந்தார்.கொஞ்ச நேரம்
எஸ்.ஐ பார்த்தார், நான் பணம் தருவதாக அவருக்கு தெரியவில்லை,


உடனே அவர் "அப்போ நீ கோர்ட்ல வந்து சாட்சி சொல்ல வேண்டி வரும், சாட்சி கையெழுத்து போட்டிரிக்கிங்க இல்ல... கூப்பிடும் போது வாங்க" என்று கோபத்தில் சென்று விட்டார்.


இன்று:

நான் இப்போ இந்த கதையை எங்க இருந்து எழுதிட்டு இருக்கேன் தெரியுமா? புழல் ஜெயிலில் இருந்து. ஆமாங்க நான் மேல சொன்ன விஷயம் ஒரு மாசம் முன்னால நடந்தது.

முந்தா நேத்து அந்த எஸ்.ஐ கடைக்கு திரும்பி வந்தார். யாரோ போட்டியில் நான் விற்கும் கைப்பேசிகள் போலி என்று கூறி பொய் கம்ப்ளைன்ட் மூலம் என்னை வசமாக சதி செய்து மாட்டிவிட்டார்கள்.இதற்கு என் கடையில் இருக்கும்
ஊழியரும் துணை, அசைக்க முடியாத சாட்சியாக வைத்து என்னை களி தின்ன வைத்து விட்டனர். அதில் அந்த எஸ்.ஐக்கும் பெரிய பங்கு உண்டு. என்ன பண்றது எல்லாம் விதி, அன்னிக்கு மட்டும் அந்த குடிகாரன் குடிக்காம இருந்தா நான் இப்போ இங்க இருக்க மாட்டேன். அதாங்க சொன்னேன் குடி அடுத்தவன் குடியையும் கெடுக்கும்.

முற்றும்.



இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது



உங்கள்



ஜெட்லி

6 comments:

கடைக்குட்டி said...

நல்லா இருக்கு :-)

கடைக்குட்டி said...

அப்போ இனிமே குடிக்கிறது இல்லியா???

கடைக்குட்டி said...

கதையில மொதல்ல பக்குன்னு இருந்துச்சு.... அவன் செத்துட்டான்னு சொன்ன உடனே.. ஆனா அதே பக் உணர்ச்சி ஹீரோ ஜெயிலுக்கு போனப்ப கெடக்கல..

இன்னும் முயற்சி செய்ங்க.. நானும் பண்றேன் :-)

Suresh said...

@ சித்து

// நல்ல வேலை செஞ்சீங்க சுரேஷ். Full Template Download செய்தால் நாம் எழுதிய பதிவுகளும் சேர்ந்து Save ஆகிவிடுமா??//

ஆகாது Full Template Download செய்யக்கூடாது :-) அது Template க்கு தான்

ஜெட்லி... said...

என்ன கடைக்குட்டி ..
நம்மளைய போட்டு வாங்குற....

திருவாரூர் சரவணா said...

குடிக்கிறவங்களால எனக்கும் பிரச்சனைதான். ஆனா இன்னும் ஜெயில் அளவுக்கு நிலவரம் மோசமாகல....