Friday, June 5, 2009

குளிர்100 டிகிரி --- விமர்சனம்

குளிர்100 டிகிரி


குளிர்100 டிகிரி, அனிதா உதீப் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்.
குத்து பாட்டு,கவர்ச்சி, காட்டு கத்தல் இல்லாமல் வந்திருக்கும் இன்னொரு படம்.படத்தில் பெரிய ஸ்டார் வேல்யு என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை.இது போன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும். படத்தின் பெரிய பிளஸ் ஒளிப்பதிவு தான், விஜய் அவர்கள் அருமையாக ஒளிப்பதிவு செய்து ஏற்காடை நம் கண் முன்னால் கொண்டு வந்து காட்டி விட்டார். அடுத்த பிளஸ் bob சசி இசையில் ஏற்கனவே மனசெல்லாம் பாடல் சூப்பர் ஹிட். அந்த ஒரு பாட்டு தான் படத்துக்கு மிக பெரிய விளம்பரம்.



சஞ்சீவ் தான் படத்தின் நாயகன் ரொம்ப அலட்டிகொள்ளாமல், இயல்பாக நடித்து உள்ளார்.சஞ்சீவின் அப்பாவும் அம்மாவும் சண்டையால் பிரிந்து வாழ்பவர்கள், அப்பா தாதா ஆதித்யா மேனன். அப்பாவின் ரௌடிதனம் பிள்ளைக்கு வாராமல் இருக்க சஞ்சீவை ஏர்காடு பள்ளியில் சேர்த்து விடுகிறார் அம்மா. பிறகு அங்கு எப்போதும் போல் மூணு பசங்கள் பள்ளியை ஆட்டி படைக்கிறார்கள். அந்த பள்ளியில் நடக்கும் நட்பு, காதல்,மோதல் மற்றும் ரவுடிதனம் செய்யாமல் அவர்களோடு சண்டை போடாமல் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா?.........என்பதே கதை.



படத்தின் நாயகன் சஞ்சீவ் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்,அவரின் பார்வையே அவருக்கு மிக பெரிய பிளஸ். தன் அம்மாவிடம் அன்பிலும், நண்பனிடம் நட்பிலும் மிக ஆழகாய் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நண்பனாக வரும் பப்லு ஆளும் வெயிட் தான், நம்மை சிரிக்கவும் வைக்கிறார், நட்புக்காக உயிரையும் குடுக்கிறார். இவரை போல் நமக்கு ஒரு நண்பன் கிடைக்க மாட்டானா என்று நினைக்க வைக்கிறார்.அது என்ன வர வர எல்லா படத்தலையும் கதாநாயகியை மெண்டல் மாதிரி காற்றங்கனு தெரியுல. ஏதோ முள்ளங்கிக்கு டிரஸ் போட்ட மாதிரி கதாநாயகி வருது போகுது அவ்வளவுதான்.படத்தின் இரண்டாம் பாதியில் கதாநாயகி எங்கே போனார் என்று தெரியவில்லை.பணம் பாக்கி தரள போல, கதாநாயகி என்ன ஆனாங்குன்னு நீங்க கேக்க கூடாது.

நான் திரும்பவும் சொல்றேன் இது மசாலா படம் இல்லை இது வேற.லாஜிக் பாக்காம இருந்த படம் சூப்பர் அப்படின்னு சொல்லலாம்.என்னடா ஸ்கூல் காட்றாங்க ஒரு வாத்தியார் இல்ல, ஸ்கூல் பெல் அடிக்களா அப்படின்னு நீங்க கேள்வி கேட்டிங்க அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. படிச்சா அந்த மாதிரி ஸ்கூல்ல படிக்கணும் அப்படின்னு நமக்கே ஆசை வரும், ஏன் என்றால் படிகிறத தவிர வேற எல்லாம் பண்றாங்க. படத்தின் திரைக்கதையில் சில சொதப்பல்கள் இல்லாமல் இல்லை.

உங்களுக்கு ரொம்ப போர் அடிக்குதா, அப்படினா இந்த படத்துக்கு போங்க நல்ல பொழுதுபோக்கான படம். ரெண்டு மணி நேரம் தான் படம் ஓடும், நம்மை உள்ளே உட்கார வைத்து பிளேடு போட மாட்டார்கள். ஆனால் அந்த மூணு வில்லன்களாக வரும் பையன்களின் தமிழ்ஐ கேட்டால் ஐயோ வெரி சாரி. அதே போல் கதாநாயகி சில இடங்களில் ரசிக்க வைக்கிறார் பல இடங்களில் கொட்டாவி வர வைக்கிறார். படத்தின் பாடல்கள் அனைத்துமே மேற்கித்தியே இசை ஆதலால் C சென்டர் ரசிகர்களை கவரவில்லை. ஆனா இந்த படம் போன வாரம் நான் தோரணை படம் பார்த்ததற்கு எவ்வளவோ மேல் என்று நான் நினைக்கிறேன். நான் முதலில் கூறியது போல் ஏன் இந்த மாதிரி படங்களை வரவேற்க வேண்டும்? ஏன் என்றால் அப்பத்தான் சர்வம்,தோரணை போன்ற படங்கள் வருவது குறையும்,இல்லன இந்த வருஷம் இன்னும் பத்து படங்கள் தோரணை மாதிரி வந்தாலும் வரும்.

படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கியதோடு படம் முடிந்தது என்று நினைத்தால், தீடிர்னு ஒரு திருப்பம் அதை திரையில் பாருங்க..கடைசியாக சஞ்சீவ் பேசும் வசனம் சூப்பர்.குளிர்100 டிகிரி படத்தை மொக்கைன்னு சொல்ல முடியாது, சுமார் தாரளமாக சொல்லலாம்.ஏன்டா சுமாரான படத்துக்கே இந்த பில்ட் அப்ஆனு நீங்க கேக்கலாம், போன வாரம் தோரணை பார்த்து வெந்தவன்ங்க நான்.

இப்படிக்கு

ஜெட்லி.











16 comments:

கடைக்குட்டி said...

//உங்களுக்கு ரொம்ப போர் அடிக்குதா, அப்படினா இந்த படத்துக்கு போங்க//

கண்டிப்பா... நமக்கு வேறென்ன வேல...

கடைக்குட்டி said...

”சின்னக் கேபிளார்”ன்னு ஒரு பட்டம் தர்றேன்...

சும்மா.. பட்டாம் பூச்சி விருது மாதிரி சைடு பார்ல போட்டுக்கோங்க..

கடைக்குட்டி said...

மீ த ஃபர்ஸ்ட்-ஆ... சூப்பர்.. :-)

MSK / Saravana said...

அப்போ.. பார்க்கலாம்..

Jackiesekar said...

படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கியதோடு படம் முடிந்தது என்று நினைத்தால், தீடிர்னு ஒரு திருப்பம் அதை திரையில் பாருங்க..கடைசியாக சஞ்சீவ் பேசும் வசனம் சூப்பர்.குளிர்100 டிகிரி படத்தை மொக்கைன்னு சொல்ல முடியாது, சுமார் தாரளமாக சொல்லலாம்.ஏன்டா சுமாரான படத்துக்கே இந்த பில்ட் அப்ஆனு நீங்க கேக்கலாம், போன வாரம் தோரணை பார்த்து வெந்தவன்ங்க நான்.--//

நியாயமா விமர்சனம் பன்னது போல் இருக்கு நல்லா எழுதி இருக்கிங்க வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தீடிர்னு ஒரு திருப்பம் அதை திரையில் பாருங்க..//

இதையும் திரையாவே நினைச்சுப் பார்க்கிறோம். சொல்லுங்க

சென்ஷி said...

//போன வாரம் தோரணை பார்த்து வெந்தவன்ங்க நான்.//

:-))))

ஜெட்லி... said...

உன் பட்டத்துக்கு நன்றி கடைக்குட்டி....

ஜெட்லி... said...

கண்டிப்பா சரவண குமார் ......

அன்பேசிவம் said...

இதுவரை பார்த்த மொக்கையில இது கொஞ்சம் சுமார் அப்படிதானே ஜெட்லி :-)

அன்பேசிவம் said...

இதுவரை பார்த்த மொக்கையில இது கொஞ்சம் சுமார் அப்படிதானே ஜெட்லி :-)

ஜெட்லி... said...

உங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள் ஜாக்கிசேகர்.

ஜெட்லி... said...

எங்க சுரேஷ் தலைவரே இதெல்லாம் நியாயமா....
போய் குளிர் சாதன திரை அரங்கில் போய் பாருங்கள்....

ஜெட்லி... said...

உங்கள் வருகைக்கு நன்றி சென்ஷி......

ஜெட்லி... said...

பத்மநாபன் நீங்க கற்பூரம் மாதிரி சும்மா கப்புனு புடிசிட்டிங்கலே....

Sathya said...

i recently saw this film good review gr8 work jetli