Friday, July 30, 2010

சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும்....

சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும்....


மன்னிக்க வேண்டுகிறேன் :


ஒரு பதிவில் அவளின் உணர்ச்சிகள் என்ற படத்தில் மௌலி
இருக்கிறார் என்று தவறாக பதிந்து விட்டேன்... பார்ப்பதற்கு
அவர் போலவே இருந்ததால் தவறாக கூறிவிட்டேன்....
இதனால் நான் படம் பார்த்துட்டு தான் பதிவு போடுறேன்னு
நினைக்காதிங்க.... இன்னைக்கு பேப்பரில் அந்த மனிதரின்
படம் தெளிவாக தெரிகிறது.... அப்புறம் இது ஒரு ஹிந்தி
படம் டப்பிங் ஆக இருக்கும் என்பது என் கணிப்பு....
இந்த படம் பார்த்தவர்கள் அவர்களின் பொன்னான கருத்தை

இங்கே பகிர்ந்து கொள்ளலாம்...!!



சால்ட்:

சால்ட் படம் பார்த்து அஞ்சு நாள் மேல ஆச்சுனாலும்....நானும்
அந்த படத்தை பார்த்தேன் அப்படின்னு உங்களுக்கு தெரிவிக்கவே
இந்த டைட்டில். அதுசரி...சால்டில் என்ன ஸ்பெஷல் அப்படின்னு
கேட்டா, வேற யாரு நம்ம ஏஞ்சலின ஜோலி தான்.அது தவிர
படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்திலே வர்ற உதட்டு முத்தமும்
ஸ்பெஷல்னு சொல்லலாம்.


சால்ட் என்ன கதை அப்படின்னு பார்த்தா நமக்கு தெரிஞ்சு எல்லா
ஹாலிவுட் ஹீரோக்களும் நடித்த அதே சி.ஐ.ஏ கதை தான் சால்ட்டும்.
என்ன இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அவ்வளவுதான்.
ஏஞ்சலின ஜோலி பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.... ஆக்சன் காட்சியில் நல்லாவே பண்றாங்க.

\


ஒரு நண்பர் இன்னும் 80 ஆண்டுகள் கழித்து கூட நம் தமிழ்
சினிமாவில் ஏஞ்சலின ஜோலி மாதிரி ஆக்சன் காட்சியில்
நடிக்க எந்த நடிகையும் வர மாட்டார் என்று போட்டிருந்தார்.
இப்ப நான் சொல்றேங்க சால்ட் பட ஏஞ்சலின ஜோலியை
விட நம்ம அக்கா சிநேகா, பவானி ஐ.பி.எஸ் படத்தில்
ஆக்சன் காட்சியில் மீஞ்சுவார் என்று நம்புவோம்!!


********************

மர்யாத ராமண்ணா (தெலுங்கு)



இது வரைக்கும் தமிழ், ஆங்கில டப்பிங், ஆங்கில படங்களே
அப்புறம் அட்டு மலையாள படங்களை மட்டும் பார்த்து
கொண்டிருந்த நான், வேதம் படத்திற்கு பின் மீண்டும் அதே
காசினோ தியேட்டரில் போய் இந்த படத்தை பார்த்தேன்.
இந்த படம் நல்லா இருக்கு என்று பார்க்க சொல்லி
கதையும் சொல்லி...பார்த்தாச்சா...சீக்கரம் பாருங்க என்று
நண்பர் வெண்டைக்கா யுவராஜ் பரிந்துரை செய்தார்.


ஒரு காமெடியன் ஹீரோவாக நடித்து இருக்கிறார். காமெடியன்
தானே என்னத்த பெருசா கிழிக்க போறார் என்று போய் பார்த்தால்...
என்னாமா டான்ஸ் ஆடுறாரு, என்னாமா ரியாக்சன் கொடுக்கிறார்
சுனில். பல காட்சிகளில் வசனம் இல்லாமலே சிரிப்பையும்
பரிதாபத்தையும் வரவைக்கிறார் இந்த ஹீரோ. கதாநாயகி
சலோனி கூட சூப்பர்ஆ இருந்தாங்க. தமிழ்ல நடிச்சா நல்லா
இருக்கும்.


கதைனு பார்த்தீங்கனா கொஞ்சம் வித்தியாசம் ஆனது தான்.
அதாவது வில்லன் வந்து எதிரியே அவங்க வீட்டுக்கு வந்தாலும்
நல்லா உபசரிச்சு சாப்பாடு போட்டு கை துடைக்க துண்டு
கொடுத்து நல்ல மரியாதை கொடுப்பாங்க...ஆனா வீட்டு
வாசல் தாண்டினவுடன் அவங்களை காலி பண்ணீடுவாங்க...
இதை தெரியாம அப்போ தான் நம்ம சுனில் பூர்விக சொத்து
விக்க அந்த ஊருக்கு போறார்...வில்லன் கும்பல்க்கு சுனீலை
பழி பல வருஷமா காத்துகிட்டு இருக்காங்க...சுனில் அது
தெரியாம அவங்க வீட்டுக்குள் விருந்தாளியை போய்டுறார்...
அப்புறம் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.


இந்த படம் ஏற்கனவே ஆங்கிலத்தில் 1930 களில் வந்த ஒரு
படத்தின் காப்பி என்றும்,இல்ல... நம்ம கௌதம் வாசுதேவ்
மேனன் ஸ்டைலில் சொல்லனும்னா "INSPIRATION" னு
சொல்றாங்க.... ஆனா இந்த படத்தில் ஆந்திரா வாசனை
அப்படியே அடிக்கிறது கண்டிப்பாக ராஜாமௌலி சீன்
பை சீன் உள்ஜட்டி கூட மாற்றாமல் எடுத்திருக்க மாட்டார்
என்று நம்புவோம். நன்றாக உழைத்து இருக்கிறார் என்று
தெரிகிறது.


இப்ப நான் ஏன் பழைய இங்கிலீஷ் படங்களை தேடி போய்
டோர்ரென்ட் அல்லது பர்மா பஜாரில் போய் வாங்கி பார்ப்பதில்லை
என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். எப்படியும் நம்ம ஆளுங்க
அதை தமிழ் தெலுங்கு படத்தில் கொண்டு வந்து விடுவார்கள்
என்ற நம்பிக்கை தான் காரணம்.

பேக் டூ ராமண்ணா...!!

உங்களுக்கு ரெண்டு ஹவர் டைம் பாஸ் கியாரண்டி தருகிறார்
மர்யாத ராமண்ணா. மொழியே தெரியாமலே படம் சுவாரிசியமாக
போகிறது. படத்தில் டச்சிங் சீன்களும் இருக்கின்றன. நான்
கடைசி காட்சியில் எங்கே நாயகி வில்லன்களிடம் பேசியே
நல்லவங்கள் ஆக்கிடுவங்களோனு பயந்தேன்...நல்ல வேளை
அப்படி இல்லாம படம் நன்றாக முடிந்தது. சுனில் ட்ரெயின்இல்
அடிக்கும் கூத்து செம....!!ஆனால் சுனில்க்கு ஒபெநிங் சீன்
கொஞ்சம் ஓவர் தான்....! படத்தில் லாஜிக் கூட பார்க்க கூடாது...

கண்டிப்பா இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வார்கள் என்று
நம்புகிறேன்... தெலுங்ம்மாயி...தெலுங்ம்மாயி....சும்மா இந்த
படத்தில் வர்ற பாட்டை பாட ட்ரை பண்ணேன்ங்க...நீங்க
பயப்படாதீங்க....!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# காசினோ, சென்னையின் பழைய தியேட்டர். இன்னும் அப்படியே
தான் இருக்கு. பால்கனிக்கும் கிழேயும் ஒரே ரேட் தான். அம்பது
ரூபாய். நம்ம மெலோடி போல. பால்கனி மட்டும் புல் ஆச்சு.

# படம் ஆரம்பிக்கும் முன் டான் சீனு என்ற புது படத்தின் ட்ரைலர்
போட்டார்கள்... ரவி தேஜாவும், ஷ்ரியாவும் நடிக்கிறார்கள்...
நல்ல மசாலா படமா வரும்னு நினைக்கிறேன்...

# ஒரு ஜோடி படம் பார்க்க வந்து முதல் பாட்டிலே எந்திருச்சு
போய்ட்டாங்க....ஏன் அவங்களுக்கு படம் பிடிக்கலையா இல்ல
தியேட்டரில் இருந்த கூட்டம் பிடிக்கலையானு பார்க்கிங் டிக்கெட்
கொடுத்தவருக்கே வெளிச்சம்.


# இடைவெளியின் போது பவன் கல்யாண் நடித்த, ஏ.ஆர்.ஆர்.
இசை அமைத்த, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய கோமரம் புலி
ட்ரைலர் போட்டார்கள் தியேட்டரில் செம கத்து, விசில்...
இருந்த நூறு பெருக்கே இப்படி விசிலா என்று வியந்தேன்...!!


இந்த இடுகை பல பேரை சேர உங்கள் வாக்கினை செலுத்துங்கள்...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)

11 comments:

Menaga Sathia said...

தியேட்டர் நொறுக்ஸ் நல்லாயிருக்கு...

மேவி... said...

நான் கடசியா ஜூனியர் NTR நடிச்ச எமதுங்க படம் பார்த்தேன் ..அதுக்கு அப்பரும் எந்த தெலுகு படத்தையும் பார்க்கல .....இங்கிலீஷ் படத்தையாச்சு ஒன்னு இரண்டு வசனத்தை வைச்சு மேக் அப் பண்ணி பார்த்துறலாம் ...ஆனா தெலுகு ஹிந்தி எல்லாம் சப் டைட்டில் இல்லாம என்னால் பார்க்க முடியாதுங்க ....சோ சிடி வந்த பார்த்துக்கலாம் ...

என்ன நீங்க வழக்கமா போடுற தியேட்டர் நொறுக்க்ஸ் ஏன் எழுதல

இரும்புத்திரை said...

என்னது சலோனி தமிழ்ப்படமே நடிக்கிறது இல்லையா..இதுல இருந்தே தெரியுது நீங்க தமிழ் படம் பார்க்கும் அழகு.இந்த பதிவில் மன்னிப்பு கேட்டாகணும்.இல்லை எனக்காக சாறு சங்கர் தீக்குளிப்பார். அதுக்கு முன்னாடி தீக்குடிப்பார்.

இவன்
மதுரை வீரன் ஜித்தன் ரமேஷ் ரசிகர் மன்றம்.

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு ஜெட்லி.

ஜெட்லி... said...

//என்ன நீங்க வழக்கமா போடுற தியேட்டர் நொறுக்க்ஸ் ஏன் எழுதல
//

புல்லா படிக்கலன்னு தெரியுது....
இனிமே இவ்வளவு பெருசா எழுதறதை குறைக்கணும்...

ஜெட்லி... said...

//மதுரை வீரன் ஜித்தன் ரமேஷ் ரசிகர் மன்றம்//


ஹோ...அந்த படமா...
இதுக்கு ஏன் சாரு சங்கரை இழுக்குறீங்க.....

கடைக்குட்டி said...

செம கலக்கல்.. ஆபீஸ் போயிட்டு வந்து உங்க ப்ளாக் பாத்தா ரிலாக்ஸ்டா இருக்கு... (பதிவரசியல்ன்ற பேர்ல கண்ட மேட்டர் இல்ல.. நீங்க கண்ட மேட்டர தவிர.. :-)

கோமரம் புலின்னு சொன்னீங்களே.. அந்தப் பட பாட்டு ரிலீஸ் ஆயிடுச்சா???

arrன்றதால கேக்குறேன் :-)

ஜெட்லி... said...

//கோமரம் புலின்னு சொன்னீங்களே.. அந்தப் பட பாட்டு ரிலீஸ் ஆயிடுச்சா???
//


ஆயிடுச்சு....

Chitra said...

Jetli.............. Super!

மேவி... said...

@ ஜெட்லி : போட்டோவுக்கு மேல அந்த தலைப்பு இருந்ததால கவனிக்க முடியல பாஸ் ..மத்தபடி முக்குச படிச்சேனுங்க

Rajasurian said...

//அவங்களுக்கு படம் பிடிக்கலையா இல்ல
தியேட்டரில் இருந்த கூட்டம் பிடிக்கலையானு பார்க்கிங் டிக்கெட்
கொடுத்தவருக்கே வெளிச்சம்//

தியேட்டரில் வெளிச்சம் அதிகமா இருந்திருக்குமோ?