Friday, July 9, 2010

மதராசபட்டினம் - விமர்சனம்!!

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ......



நான் படத்துக்கு போறது முன்னாடி என்ன லவ் ஸ்டோரி தானே...
பெருசா என்ன இருக்க போது வெள்ளைக்காரியை ஆர்யா லவ்
பண்ணுவார் ரெண்டு டூயட் இருக்கும் வெள்ளைக்காரங்க கூட
சண்டை இருக்கும் என்று நினைத்து கொண்டு தான் போனேன்....
ஆனால் படத்தில் வரும் ஜீவன்( நான் அவனில்லை ஜீவன் இல்லை!!) ,உயிரோட்டம் படம் உண்மையிலே சூப்பர் தான்.
முக்கியமா டைமிங் காமெடிகள்,சில காட்சிகள் பார்த்தால்
தலையில் ஜிவ்வ்னு ஏறுமே, அந்த மாதிரி பல காட்சிகளில்
படத்தில் இருக்கிறது.


முதலில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தை பாராட்டனும்.
தொடர்ந்து நல்ல படங்கள் என்பதை விட வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள்...தொடரட்டும் அவர்களது பணி. அப்புறம் நம்ம இயக்குனர் விஜய்...சான்ஸ்ஏ இல்லை..... ஒரு பீரியட் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்வது சாதாரண விஷயம் இல்லை... அதில் விஜய் வெற்றி கொட்டி கட்டி இருக்கிறார்.

என்ன சொல்றது...?

படம் லண்டனில் தொடங்குகிறது...வயதான ஏமி அவர்களுக்கு
1947 இல் ஆர்யா கொடுத்த தாலி ஒன்றை அவரிடம் சேர்க்க 2010
இல் சென்னை வருகிறார்...அப்படியே படம் பின்னோக்கி போகிறது..
அப்புறம் அப்படியே கடந்த காலமும் நிகழ் காலமும் மாறி மாறி
கதை போகிறது.... இதுக்கு மேல நீங்க தியேட்டர்ல பார்த்துக்குங்க...


செல்வகுமார், இவர் தான் இந்த படத்தின் ஹீரோ..அதாங்க ஆர்ட்
டைரக்டர். பழைய சென்னையை நம் முன் காட்டி இருக்கிறார்.
சில இடங்களில் கிராபிக்ஸ் தெரிந்தாலும் ஒண்ணும் பெருசா
பிரச்சனை இல்லை. அடுத்து நிரவ் ஷா, அவரை பத்தி நான்
சொல்ல வேண்டியது இல்லை... பக்கா பக்கா...!! ஜி.வி இசையில்
மேகமே, வாம்மா துரையம்மா, ஆருயிரே, காற்றிலே பாடல்கள்
சூப்பர். பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கு இவரின் பின்னிணி இசை
நன்றாக இருக்கிறது.


மற்ற ஹீரோக்கள் எல்லாம் கத்தி, தூப்பாக்கினு தூக்கிட்டு அலையும் போது ஆர்யாவை இப்படி பார்ப்பதில் ஒரு பெரும் மகிழ்ச்சி. மல்யுத்த வீரனாக, ஏமியின் காதலனாக என்று அதிகம் பேசாமல் அசத்தி இருக்கிறார் மனுஷன். குறிப்பா ஏமி டெல்லி போய்ட்டாங்க என்றவுடன் அவர் கண்ணில் இருந்து வருமே கண்ணீர்..... செம...! ஆர்யா அண்ட் கோ இங்கிலீஷ் கற்று
கொள்ளும் காட்சியும் நல்ல காமெடி.

இங்கிலீஷ்காரி நாயகியா...ஏதோ வத்தல் தொத்தல்லை போடாமல்
கும்முன்னு ஒரு பெண்ணை போட்டு இருக்கிறார்கள். ஏமி, கொள்ளை
அழகு... பின்னாடி இருந்த ரோவில் ஏமியை திரையில் காட்டினாலே
பெருமூச்சு விட்டு கொண்டிருந்தனர். ஏமி நல்லாவும் நடிச்சு இருக்காங்க.... மறந்துட்டியா?? என்று ஆர்யா கற்று வந்த இங்கிலீஷை கேட்கும் போது செம பீலிங். அவங்க ஆர்யா கூட சேராம போனது எனக்கும் வருத்தமே...படத்தில்!!


நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், கிஷோர் இவர்கள் பிளாஷ்பேக்கில்
ஆர்யாவுடன் வருவார்கள்....சின்ன சின்ன காட்சிகள் என்றாலும்
வசனத்தில் நல்ல ஆழம் இருக்கிறது. பாஸ்கர் சுதந்திரம் கிடைச்சு என்ன ஆகபோகுது என்று பேசும் வசனம், பாலாசிங் நாசரிடம் மல்யுத்தம் வைத்து என்ன பண்ணுவது என்று நிறைய சொல்லி கொண்டே போகலாம் . லொள்ளு ஜீவா, பாலாஜி, குமாரவேல் என்று கிழவி ஏமியுடன் ஆர்யாவை தேடும் காட்சிகளில் வருவார்கள்.... ஜீவாவின் டைமிங் காமெடி வேலை செய்து இருக்கிறது.... பாலாஜி அந்த ஓவியர் காம்போ சூப்பர்...!! கொச்சின் ஹனீபா பத்தி சொல்ல மறந்துட்டேன்.....அவர் இடத்தை நிரப்ப யாரும் வர முடியாது...!!



அந்த வெள்ளைக்கார போலீஸ், பிளேன் பறந்தலே குண்டு போட
போறாங்க என்று சொல்லி கொண்டே ஓடும் நபர், வாத்தியார்,
நம்ம வெண்ணிலா அப்பு குட்டி, ஆர்யாவும் ஏமியும் படகில்
உட்கார்ந்து பேசும் போது அதை பார்த்து கொண்டே போகும்
கிழவர் என்று சின்ன சின்ன விஷயத்திலும் விஜயின் உழைப்பு
தெரிகிறது....!!


படம் முதல் பாதி ஒன்றரை மணி நேரம் ஓடியது...நேரம் போனதே
தெரியவில்லை...ரெண்டாவது பாதி ஒரு மணி நேரம் மேல் ஓடியது,
சில இடங்கள் மட்டுமே வேகதடையாக இருந்தது. ஆனால் அந்த
காற்றிலே பாட்டுக்கு தியேட்டரில் செம கைதட்டு... கிளைமாக்ஸ் தான் எல்லாரும் நினைத்தது போலவே தான் வரும்...ஆனா அது தான் நல்ல முடிவு. நீண்ட நாள் கழித்து உணர்வுபூர்வமான காதல் படம் பார்த்த திருப்தி. சிரிக்க ரசிக்க மலைக்க கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டிய படம் மதராசபட்டினம்.


மதராசபட்டினம் - ரவுண்ட் அடிக்க கிளம்புங்க......!!


தியேட்டர் நொறுக்ஸ்:



# ஒரு காட்சியில் படகோட்டி ஒருவனது கையை பிடித்து
ஏமி படகில் ஏறுவார்...இதை கண்ட அந்த போலீஸ்துரை
படகோட்டி கையை மிதித்து கொண்டு படகில் ஏறுவார்...
இதை கண்ட நம் இளைய சமுதாயம்...

" டேய் நாதாரி....பொறம்போக்கு..."

" பொறாமை பிடிச்சவனே..."

என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள்..இன்னும் அசிங்கமா திட்டினாங்க அதையெல்லாம் பதிவு பண்ணா ப்ளாக் நாறிடும்.


# போலீஸ் நிலையத்தில் ஆர்யாவிடம் அந்த போலீஸ்துரை
" இந்த தடவை நீ தப்பிச்சிட்ட அடுத்த தடவை உயிரோட போக மாட்டே..." என்று ஆர்யாவை மிரட்டுவார். அதற்கு ஆர்யா


" நானும் அதே தான் சொல்றேன்.." என்ற காட்சிக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.


# சென்ட்ரல் ஸ்டேஷன் காட்சியில் நம்மூர் போலீஸ் ஆர்யாவை
தூப்பாக்கி முனையில் பிடித்து வசனம் பேசி கொண்டிருப்பார்... அப்போது பின்னாடி இருந்த காலேஜ் பசங்க...

" நம்ம ஊரு போலீஸ் மச்சி...பத்து ரூபாய் கொடு விட்ட்ருவார் ..."

# பின்னாடி இருக்கையில் படம் பார்த்தவருக்கு இங்கிலீஷ் நாயகி
என்றதும் உதட்டு முத்தம் வரும் என்று நீண்ட நேரம் எதிர்ப்பார்த்தார்...ஆனா ஏமி ஒரு காட்சியில் சென்ட்ரல் மணி கூண்டில் படுத்து கொண்டிருக்கும் போது இங்கிலீஷ் பாடல் பாட ஆரம்பித்து விடுவார்...இதை கேட்ட நம்மாளு...

"என்ன இது சின்ன பிள்ள தனமா இருக்கு...கிளுகிளுப்பு வரும்னு
பார்த்தா பாடிக்கினு இருக்க..."

இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் ஓட்டினை
போட்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்....

நன்றி

ஜெட்லி...(சரவணா)

37 comments:

Unknown said...

பாத்துடறேன்..

தமிழ் அமுதன் said...

ரைட்டு ..! பார்த்துடுவோம்...!

கண்ணா.. said...

நல்லாயிருக்கா..ரைட்டு பாத்துடலாம்... ஆனா எந்த படமானாலும் முதோ நாளே போயி விமர்சனம் எழுதற உங்க கலைசேவையை எப்பிடி பாராட்டன்னே தெரியலை..

:)

ஜில்தண்ணி said...

நாளக்கே பாத்துடுவோம் :)

விமர்சனத்திற்க்கு நன்றி ஜெட்லி அண்ணே

பின்னோக்கி said...

நான் எதிர்பார்த்த படங்களில் ஒன்று இது. நன்றாக இருக்கிறது என்றது நன்று. அதே மாதிரி, ஆனந்தபுரத்து வீடு படமும் பார்த்துட்டு சீக்கிரம் பதிவு போடுங்க.

Menaga Sathia said...

பார்த்துடுவோம்....

Siva Ranjan said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்துடுவோம்

ஆர்வா said...

ட்ரெயிலரே பார்க்கக்கூடிய ஆவலை தூண்டி இருக்கு.. கண்டிப்பா பார்க்கணும்

vasu balaji said...

நல்லாருக்கு விமரிசனம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த தடவை நீ தப்பிச்சிட்ட அடுத்த தடவை உயிரோட போக மாட்டே..." என்று ஆர்யாவை மிரட்டுவார். அதற்கு ஆர்யா

" நானும் அதே தான் சொல்றேன்.." என்ற காட்சிக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.
//



இதே மாதிரி சத்தியராஜ் நடிச்ச ஜீவா படத்துல வில்லன் சத்தியராஜ பாத்து நீ சாகப்போறேன்னு சொல்லுவான். உடனே சத்தியராஜ் நான் சொல்லவேண்டிய டயலாக். நீ சொல்லிட்ட அப்டின்னு சொல்லுவார்.

சிநேகிதன் அக்பர் said...

மீண்டும் ஒரு முறை நிறுபித்து விட்டீர்கள்.

மிக பாஸிட்டிவான விமர்சனம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான படம்.. உங்கள் விமர்சனமே சொல்லுகிறது. நல்லாருக்கு சரவணா..

KUTTI said...

முதல் நாள் படம் பார்த்து முதல் ஆளாய் விமர்சனம் போடும் எங்கள் ஜெட்லி மென்மேலும் இது போல நல்ல படங்களையும் மொக்கை படங்களையும் பார்த்து முதல் நாளே விமர்சனம் செய்ய வாழ்த்துகிறோம்.

அனைத்துலக ஜெட்லி ரசிகர் மன்றம் சார்பாக,

மனோ

ILA (a) இளா said...

ஐயா சாமி, முழு ஓடையையும் தாங்கய்யா. Give us the Full feed Plz!

க ரா said...

பார்த்துடலாம் :-).

VISA said...

Whistle!!!

Harinarayanan said...

நல்ல பதிவுங்க! உங்க விமர்சனத்தைவிட தியேட்டர் நொறுக்ஸை ரொம்ப ரசிச்சேன். எமி முத்தம் குடுக்காம பாட்டு பாடினதுக்கு ஃபீல் பண்ண நம்மவரோட டயலாக் படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்! பகிர்வுக்கு நன்றி.
பத்மஹரி,
http://padmahari.wordpress.com

ப்ரியமுடன் வசந்த் said...

மச்சி நல்ல விமர்சனம் சூடா நொறுக்ஸின் சுவையோட நல்லா இருந்துச்சு...

பெசொவி said...

//" நம்ம ஊரு போலீஸ் மச்சி...பத்து ரூபாய் கொடு விட்ட்ருவார் ..."//

அது............!

Romeoboy said...

ரொம்ப பாசிடிவ் விமர்சனம் .. கண்டிப்பா பார்கிறேன்

Katz said...

ரவுண்டு அடிச்சிடலாம்

kk samy said...
This comment has been removed by the author.
kk samy said...

நான் எந்த படத்த தியேட்டரில் போய் பாத்ததில்ல. இந்த படத்தை போய் பாத்தா, இனி வரப்போற படம் எல்லாம் கோவிச்சுக்குமே.

Jackiesekar said...

இங்கிலீஷ்காரி நாயகியா...ஏதோ வத்தல் தொத்தல்லை போடாமல்
கும்முன்னு ஒரு பெண்ணை போட்டு இருக்கிறார்கள். //

அப்படி கும்னு போட்டதாலதான் நீ ஜம்ன்னு எழுதி இருக்கே...

தம்பி நல்லா எழுதி இருக்கிங்க...
காலையில 8,15 ஷோவுக்கே போயாச்சா?

மேவி... said...

anne ..super.

nangalum parthutom la ..eluthitom la

ஜெட்லி... said...

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்....


//காலையில 8,15 ஷோவுக்கே போயாச்சா?
//

இல்ல அண்ணே....நூன் ஷோ தான் போனேன்...
இன்னைக்கும் நாளைக்கும் ஸ்பெஷல் ஷோனு போட்டிருந்தாங்க..
ஆனா அது ஏதோ காரணத்தினால் கான்சல் ஆகி விட்டது..!!

அகல்விளக்கு said...

சூப்பர் மச்சி....

மகேஷ் : ரசிகன் said...

நல்ல படம்...

ஆக்சுவலி உங்க விமர்சனத்த விட தியேட்டர் நொறுக்ஸ் ஃபேன் நான்.

வெளுத்துக்கட்டுக்கு எழுதுனீங்களே... டாப்பு. அதெல்லாமா பார்க்குறீங்க ??

தேவன் மாயம் said...

பார்த்து விடுகிறேன் ஜெட்லி!!

வவ்வால் said...

Jetli,

nice review. Nambi paakkalama?

பிரபல பதிவர் said...

உங்ககிட்ட இன்னும் ரொம்ப எதிர்பாத்தேன்.
இந்த பட விமர்சனத்திற்கு

வெடிகுண்டு வெங்கட் said...

இந்த போஸ்டரை பார்த்தீங்களா?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

Sathya said...

SUPER REVIEW

Syam said...

விமர்சனத்துக்கு நன்றி!

Ramesh said...

செமயா எழுதிருக்கீங்க...நம்ம விமர்சனத்தையும் வந்து படிச்சுட்டு போங்க...
http://rameshspot.blogspot.com/2010/07/2010-madharasapattinam.html

sudhanthira said...

மதராசபட்டினம் நல்ல கதை ,அதை எடுத்த விதம் சூப்பர் .படம் நன்றாக எடுத்தற்கு டைரக்டர் ,கமேராமேன் , ஹீரோ ,ஹீரோயின், மற்ற நண்பர்களுக்கும் நன்றி .
மொத்தமாக படம் சூப்பர்!