Thursday, July 1, 2010

தமன் கல் உடைக்கிறார்(ராக்ஸ்) !!

அய்யனார் மற்றும் அரிது அரிது பாடல்கள் குறித்து ஒரு பார்வை.



முதல்ல தமன் பத்தி சொல்லணும்.... சிந்தனை செய் படத்தின் பாடல்களை நான் இன்னும் கேட்டு கொண்டு தான் இருக்குறேன்....
அதே போல் ஈரமும்.... முன்தினம் பார்த்தேனே நல்ல பாட்டு
தான் ஆனா படம் பார்த்த பிறகு பாடல்களை கேட்க தோன்றவில்லை.....!!

அய்யனார் : ஆதி, மீரா நந்தன்.



அய்யனார் கிராமத்து கதை. தமன் கிராமத்து கதைக்கு எப்படி
இசை அமைத்து இருப்பார் என்று ஒரு ஆர்வம் இருந்தது.
பாடல்கள் கேட்ட பின் தமன் அந்த ஆர்வத்தை எதிர்ப்பார்ப்பை
நிறைவாக பூர்த்தி செய்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.


குத்து குத்து - பாடல் : நா.முத்துக்குமார்.


உண்மையிலே பாட்டு செம குத்து.... முதல் தடவை கேட்கும் போதே
நம்மை அறியாமல் தாளம் போடும் வைக்கும் பாடல். அதே போல்
பாடல் வரிகளும் உண்மையிலே செம... ப்ருஸ் லீ மற்றும் வேல்முருகன் பாடியுள்ளனர்....

"குத்து குத்து கும்மாங்குத்து...சாம்பல் தானே மிச்ச சொத்து..."

என்ன ஒரு விஷயம்னா சில சமயம் கேட்கும் போது சிந்தனை
செய் படத்தில் வருமே அச்சமில்லை பாட்டு மாதிரி இருக்கும்....
இருந்துட்டு போட்டும் அது ஒண்ணும் பிரச்சனை இல்லை....


பனியே பனியே - தாமரை


இந்த பாட்டில் தொடர்ந்து ஒரு டியூன் வரும் அது நல்லா இருந்தது...
அப்புறம் பாட்டு வரி எனக்கு சரியா கேட்கலை.... ரஞ்சித் பாடி
இருக்காரு...எப்பவுமே தமன் ரஞ்சித் கூட்டணி களை கட்டும்...
ஆனா இந்த பாட்டு அப்படி இல்லன்னு தான் சொல்லணும்...


பச்சை கிளி - விவேகா

ராகுல் நம்பியார், உண்மையில் நல்ல வாய்ஸ்... தமன் இந்த பாட்டில்
எனக்கு கிராமத்து படத்துக்கும் பாட்டு போட தெரியும் என்று அடித்து
ஆடி இருக்கிறார். நல்ல பாட்டு நல்ல வரிகள்....கேட்க தூண்டும்
மற்றுமொரு பாடல்.


ஆத்தாடி ஆத்தாடி - நா.முத்துகுமார்.

அக்மார்க் தமன் பாட்டுனா இது தான். செம பீட். இந்த பீட் எங்கோ
கேட்டது போல் இருந்தாலும்...பாட்டின் வேகம் சூப்பர் பாஸ்ட்.
நவீன் பாடியுள்ளார். கண்டிப்பா இந்த வருடத்தின் சிறந்த பாடல்களில்
வர்ற வாய்ப்பு இருக்கு. அதே போல் வரிகளும் நோ சான்ஸ்.

" ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி...
உன்னைதேடி உன்னைதேடி திசை மாறி போனேன்டி...."


அய்யனார் - தீம் .


இதிலும் ஒரு பீட் வரும் தட தட தடனு நல்ல இருந்தது....


ஆக மொத்தத்தில் அய்யனார் பாட்டை கேட்டவுடன் படம் எப்படி
இருக்கும் என்ற ஆர்வமும் வந்து விட்டது.... நீங்களும் கேட்டு
பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்....!!


**********************

அரிது அரிது....


இந்த படம் முழுவதும் வெளிநாட்டில் எடுத்து இருப்பதாக
படித்த நினைவு. நாயகி நாயகன் இருவருமே புதுமுகங்கள்.
கண்டிப்பா பாடல்கள் மேற்க்கத்திய பாணியில்
தான் இருக்கும் என்று முதல் பாட்டை கேட்டேன்....

அழகாய் சிரித்தயாட... என்று வித்தியாசமா இருந்தது....
எப்படி சொல்றதுனு தெரியல... ஒரு ஹான்டிங்கா இருந்தது....

ஆனா அடுத்து அடுத்த பாடல்கள் ஒண்ணும் புரியலை...
ரசிக்கவும் முடியலை....சில பாடல்கள் என்ன பாடுருங்கானு
கூட தெரியலை.....படம் பார்க்கும் போது சப் டைட்டில்
போட்டால் நலம்......

இன்னொரு பாட்டு ஊ..லாலலி..னு...முதலில் சரக்கு அடிச்சுட்டு வாந்தி எடுத்த சவுண்ட் வருமே அந்த மாதிரி ஸ்டார்ட் ஆச்சு...சரி நல்லா இருக்கும்னு நினைச்சா சுத்தம்.....!!


எனக்கு மேற்க்கத்திய இசை பிடிக்காதுனு இல்ல...நான் குளிர்
நூறு டிகிரி படத்தின் பாடல்களுக்கு ரசிகன்....ஆனா அரிது அரிது
படத்தின் பாடல்கள் சுத்தமாக ஈர்க்கவில்லை....ஒரு வேளை
கதை வெளிநாட்டில் நடப்பதால் தமன் இந்த மாதிரி போட்டு
இருக்காரோ என்னவோ.....

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் அரிது அரிது பாடல்களை
நான் இனிமே கேட்பது மிகவும் அரிது....!! தமன் அரிது அரிதுஇல்
கல் உடைக்கவில்லை!!


இந்த இடுகை பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்குகளை செலுத்துங்கள்....

ஜெட்லி...(சரவணா...)




13 comments:

Unknown said...

படம் ஒன்னும் பாக்கலையா..?

ஜெட்லி... said...

இன்னைக்கு வெள்ளி இல்லையேணே.....
நாளைக்கு தான் போகணும்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல பதிவு

அருமை.....

Cable சங்கர் said...

நாளைக்கு அம்பானியில சந்திப்போம்.

vasu balaji said...

பாட்டு விமரிசனமும் ஆரம்பிச்சாச்சா. ரைட்டு:)

Chitra said...

////ஆனா அடுத்து அடுத்த பாடல்கள் ஒண்ணும் புரியலை...
ரசிக்கவும் முடியலை....சில பாடல்கள் என்ன பாடுருங்கானு
கூட தெரியலை.....படம் பார்க்கும் போது சப் டைட்டில்
போட்டால் நலம்......
இன்னொரு பாட்டு ஊ..லாலலி..னு...முதலில் சரக்கு அடிச்சுட்டு வாந்தி எடுத்த சவுண்ட் வருமே அந்த மாதிரி ஸ்டார்ட் ஆச்சு...சரி நல்லா இருக்கும்னு நினைச்சா சுத்தம்.....!!/////

.... ஜெட்லி கம்போட்ஸ்! You Rock! செமத்தியா உங்க ஸ்டைலில் "கல் உடைச்சிருக்கீங்க.....!"

ஜில்தண்ணி said...

உண்மைதான் ஜெட்லி அண்ணே
இப்போது தான் தமன் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறார்.

அரிது அரிது படத்தில் "சாட்டர்டே கேர்ளோடு" என்ற பாடலை கேட்டீங்களா,அருமையாக இருக்கிறது

அய்யனார்ல "பனித்துளி" மட்டும் தான் கேட்டேன்,நல்லா வந்துருக்கு

தமன் ஒரு கலக்கு கலக்க வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

பாடல்களை கேட்டுட வேண்டியதுதான். ஆமா புது விமர்சனம் ஒன்னையும் காணோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ayyanar padalkal ok

கார்க்கிபவா said...

aavvvv

ithu enna thozil potti??????

Katz said...

நம்மளுகெல்லாம் படம் பார்த்தாதான் பாட்டே புடிக்குது.

ஜான் கார்த்திக் ஜெ said...

அய்யனார் பாடல்களை கேட்டுற வேண்டியது தான்!

Anonymous said...

ஜி,
பனியே பனியே - 80களின் இசையை இமிட்டே செய்து மெட்டமைத்து, லைவ் ஆர்கஸ் ட்ரேசன்ல பண்ணி இருக்கார். சரணத்தில் பட்டையை கிளப்பும் மெட்டமைப்பும், ட்ரம்சும் அட்டகாசம். இரண்டாவது இண்டர்லுடில் "அண்ணன் என்ன தம்பி என்ன" வாசம் லைட்டா வரும் கவனிச்சீங்களா?
கடைசி பல்லவியில் எஸ்.பி.பி டச்சில் "பனியே ஹே ஹே பனியே" ன்னு ட்ரை பண்ணி இருப்பார்.
மொத்ததுல இந்த பாடல் இளையராஜாவுக்கு சமர்ப்பணம்ன்னுதான் சொல்லுவேன்.
வளர்க தமன்!