" டேய் ஒரு டாஸ்மாக்ல ஜில் பீர் இல்லனா அஞ்சு டாஸ்மாக்ல
தேடி பார்க்குறோம்,அங்கயும் இல்லனா பாருக்கு போய் குடிக்குறோம்
அது மாதிரி தான்டா வாழ்க்கையும் புதுசா புதுசா தேடனும் அப்பதான் வாழ்க்கை புதுசா இருக்கும்....."
இந்த மாதிரி தாங்க நம்ம சூர்யாவும் சிங்கம் படத்தில் கேப் விடாம வசனம் பேசுறார். சிங்கம் சூர்யாக்கும் வேல் சூர்யாக்கும் ரெண்டு வித்தியாசம் தான் ஒண்ணு மீசை இன்னொன்னு போலீஸ் டிரஸ். மற்றபடி வேலில் பார்த்த சூர்யாவை பார்த்த மாதிரி தான் இருந்தது...
(மேலே உள்ள படத்துக்கும் விமர்சனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...அது ரசிகர் மன்ற பேனர்....)
சென்னையில் பெரிய தாதாவாக பிரகாஷ்ராஜ் ஆள்கடத்தல்,
மற்றும் புதிதாய் பில்டிங் கட்டுபவர்களை மிரட்டி பணம் பறிப்பது
தான் வேலை. தூத்துக்குடி நல்லூரில் நம்ம சூர்யா எஸ்.ஐ.
அவரின் சொந்த ஊர் அது. பிரகாஷ்ராஜ் சென்னையில் நடக்கும்
ஒரு கேஸ் நிபந்தனை ஜாமீன் விஷயமாக நல்லூரில் வந்து
கையெழுத்து போட வேண்டுமாம். அங்கே சூர்யாவுக்கும்
பிரகாஸ்ராஜ்க்கும் மோதல் ஸ்டார்ட் ஆகிறது. உடனே பிரகாஷ்
தன் பவர் மூலம் சூர்யாவை தன் கோட்டையான சென்னைக்கு
மாற்றுகிறார்.....பின்பு என்ன என்பதே கதை திரைக்கதை அனைத்துமே..
சிங்கம் படம் ட்ரைலர் டி.வி.யில் பார்த்தவுடன் மற்றும் ரேடியோவில்
கேட்டவுடன் முடிவுபண்ணிவிட்டேன்....அது படத்துக்கு போகும் போது
மெடிக்கல் கடையில ரெண்டு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிட்டு போனும்
என்பது தான். டி.வி.யில் பார்க்கும் போதே காது ஜவ்வு கொஞ்சம்
லைட்டா கிழிஞ்ச மாதிரி தான் இருந்தது......
அனுஷ்கா பத்தி கண்டிப்பா சொல்லணும்ங்க...சும்மா பிச்சு உதறாங்க..
அதுவும் அவங்க வசனம் ஒண்ணும் ஒண்ணும் செம...அதே போல்
தந்தை நாசரிடம் லைசன்ஸ் காமெடி சூப்பர்.....
சாம்பிள்:
அனுஷ்கா தங்கச்சி : சிங்கம் உன்னை பார்த்து ஜொள்ளு விடுறாரா??
அனுஷ்கா : நாம jewel காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணோம்
அதனால ஜொள்ளு விடுறாரு...
அது மட்டும் இல்லாமல் சூர்யா சென்னை வந்தவுடன் தான்
ராஜினாமா செய்து ஊருக்கு போக போவதாக கூறும் போது
பள்ளமான பீச் மணலில் நின்று கொண்டு சூர்யா கிட்ட ஒரு
அஞ்சு நிமிஷம் மொக்கை போடுவாங்க பாருங்க...அதில் இருந்து
சூர்யா வில்லன்களை வேட்டையாட கிளம்பி விடுவார்....
காமெடிக்கு விவேக் இருந்தாலும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்... அதுக்கு அனுஷ்கா பண்ற காமெடியே நன்றாக இருந்தது. பிரகாஷ் ராஜ் வழக்கமா வர்ற வில்லன் தான் கில்லி படத்தில் பார்த்த மாதிரி இருந்தது... ஆனா எல்லோருக்கும் சரி சமமா வசனத்தை பிரிச்சு கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஹரி. குறிப்பா பிரகாஷ்ராஜ் பேசுற அந்த "கோழி முட்டை போடும் போது தான் எடுக்கணும்...அதுக்கு முன்னாடியே @$@$# நொண்டினா
கோழி செத்துடும்".
சூர்யா செம மாஸ் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் என் பயமெல்லாம் எங்கே இவரும் கூடிய விரைவில் விஜய்,விஷால் லிஸ்ட்இல் சேர்ந்து விடுவரோ என்பது தான். சூர்யா சிங்கம் தான் ஒத்துக்குறோம் அதுக்காக பறந்து அடிக்கும் போது சிங்கத்தை காட்டுவது, சிங்கம் போல் பிராண்டுவது எல்லாம் கொஞ்சம் ஓவர்.அதே போல் கோபம் வந்தால் கையில் நெருப்பு ஏறுவது( நெருப்பு தானே அது இல்லைனா சிங்கம் கலரா ???)
ப்ரியன் ஒளிப்பதிவு பற்றி சொல்லவே வேண்டாம், பக்கா.
ஒண்ணு ரெண்டு பாட்டு தான் கொஞ்சம் நல்லா இருந்தது.
படம் முதல் பாதி கொஞ்சம் கலகலப்பா போச்சு,ரெண்டாவது
பாதியும் வேகமா தான் போச்சு ஆனா எனக்கு கிளைமாக்ஸ்ல
கண்ணு சொருக ஆரம்பிச்சுருச்சு....அப்புறம் பல யூகிக்க முடிந்த
திருப்பங்கள் என்றாலும் ஓகே.சராசரி மசாலா படம் கொஞ்சம்
கண் எரிச்சல்.ஆனா நான் ஹரி கிட்ட இருந்து இன்னும் எதிர்ப்பார்த்தேன்..
சிங்கம் - ஜொலிக்கும் கவரிங் தங்கம்!!
தியேட்டர் நொறுக்ஸ் :
# நான் பார்த்த தியேட்டரில் சூர்யாவை விட அனுஷ்காக்கு அதிக
கைதட்டும் விசிலும்....
# படம் ஆரம்பிச்சுவுடன் முதல் பைட் எல்லாம் கொஞ்சம் ஓவர்ஆக
இருந்தது மற்றும் முதல் பாட்டு "நானே இந்திரன்" பத்தி சொல்லவே
வேணாம்.... பாட்டு பாதியில் ஓடி கொண்டிருக்கும் போதே கரண்ட்
கட் ஆகி போச்சு.... உடனே தியேட்டரில் நம்ம ஆளுங்க ஆள்
ஆளுக்கு கமெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க....
* "அஞ்சு நிமிஷம் லைட் ஆப் பண்ணுவோம் வெளியே போறவங்க
போலாம்...."
* விஜய் ரசிகர்: "சுறா இன்ட்ரோ பாட்டே நல்லா இருக்கும்டா..
சுறா படத்தை போடுங்க..." என்று கத்தினார்..
கூட வந்த அவர் நண்பர்கள் "அய்யோயோ...சுறாவா"...
# jewel காணாம போச்சுன்னு சூர்யா வீட்டுக்கு அனுஷ்கா கம்ப்ளைன்ட்
பண்ண வருவாங்க....அப்போ அனுஷ்கா உயரத்துக்கு சூர்யா சரிசமமா நின்னுட்டு இருப்பார்....இதை பார்த்த முன்இருக்கை நண்பர்
" எங்கே சூர்யா உன் காலை காட்டு.." என்று கத்தினார்.
# "காதல் வந்தாலே பாட்டு ஆரம்பிக்கும் போது பின்இருக்கை
நபர் டைமிங்காக "வாடா மாப்பிள்ள..." என்று பாடியது தியேட்டரில்
அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
# அனுஷ்காவும் சூர்யாவும் கொஞ்ச நேரம் பேசினாலே இங்கே நம்ம
ஆளுங்க "சரி சரி டிரஸ் மாத்திக்கிட்டு பாட்டு போட்டு ஆடுங்க..." என்று நக்கல் பண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள்.......
இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
ஓட்டை குத்தவும்....
34 comments:
எப்பயும் போல முதல் விமர்சனம் .. நல்லா இருக்கு . அதும் தியேட்டர் நொறுக்ஸ் சூப்பர்
hi ஜெட்லி ,
after a long time i saw a good commercial movie because this is original tamil movie but your review hurts me...i like that theatre scene...!
[[[[[[ "காதல் வந்தாலே பாட்டு ஆரம்பிக்கும் போது பின்இருக்கை
நபர் டைமிங்காக "வாடா மாப்பிள்ள..." என்று பாடியது தியேட்டரில்
அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
நான் பார்த்த தியேட்டரில் சூர்யாவை விட அனுஷ்காக்கு அதிக
கைதட்டும் விசிலும்....]]]]]]]
these above incident happen here too..
இது ஹரியினால் விஜயின் ஐம்பதாவது திரைப்படத்துக்காக தயார் செய்யப்பட்ட கதை என்பதும் பினர் விஜய் இதில் நடிக்காமல் சுறா வில் நடித்ததும் தெரிந்த விடயம்.
மசாலால காரம் அதிகமா மச்சி...
விமர்சனம் தூள்....
:-)
:))
//" டேய் ஒரு டாஸ்மாக்ல ஜில் பீர் இல்லனா அஞ்சு டாஸ்மாக்ல
தேடி பார்க்குறோம்,அங்கயும் இல்லனா பாருக்கு போய் குடிக்குறோம்//
//ஆனா எனக்கு கிளைமாக்ஸ்ல
கண்ணு சொருக ஆரம்பிச்சுருச்சு.//
தெளிவான விமர்சனம்தாண்ணே உங்க பலமே!
(ராவணன் படத்துக்காவது கூட்டிட்டு போவீங்களா? )
:-)
படத்தை விட உங்க விமர்சனம் சூப்பர்.
மனோ
வாழ்க வளமுடன்.
//அனுஷ்காவும் சூர்யாவும் கொஞ்ச நேரம் பேசினாலே இங்கே நம்ம
ஆளுங்க "சரி சரி டிரஸ் மாத்திக்கிட்டு பாட்டு போட்டு ஆடுங்க..." என்று நக்கல் பண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள்....// ஹாஹா.. எப்டி இப்டி எல்லாம்? உஸ்ஸ்ஸ்... முடியல.. உங்கள் சேவை, நாட்டுக்கு தேவை..
சிங்கம் - ஜொலிக்கும் கவரிங் தங்கம்!!
....Jetli's power punch!
பின்னுறீங்க ஜெட்லி.
இனிமே உங்க விமர்சனம் படிச்சுட்டு தான் படமே பார்ப்பேன்.
பை தி வே, ஏன் இன்னிக்கு மார்னிங் ஷோ போகல?
வழக்கம்போல ஜெட்லி பஞ்ச் :)
எவன் சொன்னாலும், எவ்ளோதான் அடிச்சாலும் தமன்னா, அனுஷ்கா நடிச்சா எத்தன தடவ வேணும்னாலும் பார்க்கலாம்.
@~~Romeo~~
நன்றி நண்பரே...
@hasan
ஹசன்...sorry for hurting.
என்னமோ தெரியில நண்பா இப்படிதான்
எழுத தோணிச்சு.....
மற்றபடி போர் அடிச்சா போலாம்....
விஜய் நடிச்சு இருந்தா கிழிஞ்சு இருக்கும்....
@அகல்விளக்கு
அப்படி தான்..இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி பார்க்கலாம்...
@வானம்பாடிகள்
வெறும் சிரிப்பு மட்டும் தானா??
:(
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
நல்லா முடிச்சு போடுறீங்க....
ராவணன்னுக்கு நான் ரெடி...
நீங்க நம்ம பக்கம் வாங்க அண்ணே...
@MANO
@VISA
@அநன்யா மஹாதேவன்
@Chitra
நன்றி
@King Viswa
மார்னிங் ஷோ தான் போனேன்...
வீட்ல பவர் இல்ல அதனால தான் லேட்ஆ போட்டேன். :))
@D.R.Ashok
நன்றி அண்ணே...
@Phantom Paruppu
அப்படி சொல்லுங்க தல...பார்ப்போம்.
மொக்கை படத்தை எல்லாம் முதல் நாள் முதல் ஷோவே பார்த்து நல்ல விமர்சனம் எழுதி எங்களை எல்லாம் படம் பார்க்க விடாமல் பண்னும் ஜெட்லிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
Good...
நண்பரே,
இன்று நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா நடித்த "சிங்கம்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை சிங்கத்தை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.
சிங்கம் - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்
பாஸ். அப்போ சிங்கங்களே போற்றும் சிங்கம் இல்லையா?
//நான் பார்த்த தியேட்டரில் சூர்யாவை விட அனுஷ்காக்கு அதிக
கைதட்டும் விசிலும்....//
ஏம்ப்பு ....இது தெரிஞ்ச விஷயம் தான.இத எல்லாமா போய் politics பண்ணுவ... ஹிஹிஹி....
//இதை பார்த்த முன்இருக்கை நண்பர்
" எங்கே சூர்யா உன் காலை காட்டு.." என்று கத்தினார்.//
:)
//அனுஷ்காவும் சூர்யாவும் கொஞ்ச நேரம் பேசினாலே இங்கே நம்ம
ஆளுங்க "சரி சரி டிரஸ் மாத்திக்கிட்டு பாட்டு போட்டு ஆடுங்க..." என்று நக்கல் பண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள்.......
//
ஏன் தல,அவ்வளோ மொன்னயாவா இருக்கு?
எப்படியோ,படம் ஓகே தான?போகலாம்ல?
//எப்படியோ,படம் ஓகே தான?போகலாம்ல?
//
டைம்பாஸ் ஆகலைனா கண்டிப்பா நண்பர்களுடன் போலாம்.....
@ அக்பர்
போக போகத்தான் தெரியும்...
ஆனா எனக்கு அப்படி தெரியில..
படம் நல்லா இருக்குன்னு சொன்னாலும் ஓபணிங்க் இருக்க மாதிரி தெரியலையே...
www.narumugai.com
அன்பின் ஜெட்லி
நல்லதொரு விமர்சனம்
படம் பார்த்துடுவோம்
நல்வாழ்த்துகள் ஜெட்லி
நட்புடன் சீனா
ரொம்ப நாள் கழிச்சு ஒரு படத்தை பார்க்கலாம்னு பரிந்துரைக்கறீங்க, அதுக்காகவே பார்த்துடுவோம்
அப்போ இதுவும் பார்க்க வேண்டாமா... :(
I saw movie yesterday. People in our theatre enjoying movie a lot. தங்கள் விமர்சனம் படித்தேன் எனக்கு மிகவும் ஏமாற்றம்.
Superhit,sema racy,enna oru ஸ்க்ரீன்ப்ளே இப்படியெல்லாம் சொல்லும் எல்லோரும் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் கடைசி இருபது நிமிடங்களுக்கு முன்னால் வரை எத்தனை பேர் படம் superb சொன்னிங்க.அப்படி சொன்னிகன்ன either two of these possibilities one you have watched several mokkai'ssss before and according to you it is ok...எத்தனையோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா or நீங்கள் ஒரு சூர்யா fan or director hari படங்களுக்கு நீங்கள் fan.கடைசி இருபது நிமிடம் தான் சன் pictures போட்டு காட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறன்.படம் முழுவதும் யாராவது யாரையாவது அடித்து கொண்டே இருக்கிறார்கள்.சன் டிவி ஒரு வாரம் கழித்து(ஒரு வாரம் வரை அவங்க usual strategy இருக்கே பாட்டு release, விமர்சனம் ,theatre visit etc)அவங்க படத்த market பண்ண சில ideas இதோ 1) vivek comedy பார்த்து யாராவது ஒரு சீன் சிரித்தால் அவங்களுக்கு ஒரு குடம் பரிசு announce பண்ணலாம்
2) In world cinema history no hero has asked before a fight sequence whether the goods are insured...wow
3) nightiesla எத்தனை வகை என்று ஒரு போலீஸ் அதிகாரியின் விளக்கம்
4) 4) சூர்யாவிற்கு அயன் படத்தில் climaxil தான் அந்த wonderful promotion கிடைக்கும் ஆனால் இதில் இரண்டு முறை கிடைகிறது
Super!
Theatre norukkks: Excellent!!
Post a Comment