நம்ம நாட்டுல குண்டு வெடிக்குது,காலேஜ்ல பசங்க
சண்டை போடுறாங்க,பெட்ரோல்,காஸ் விலை ஏத்த
போறாங்க,விலைவாசி உயர்வு,பல கோடி ஊழல்,
தனி மாநில பிரச்சனைகள்னு பல சாதாரண விஷயங்கள்
இருந்தாலும்.இப்போது நான் கையில் எடுத்திருக்கும்
இந்த சப்ஜெக்ட்ஐ யாருமே தொட தயங்குவார்கள்.
ஆம் அது தான் நம் நாட்டு மக்களுக்கு தேவையான
அதிமுக்கிய விஷயமான "ராஜலீலை-வெற்றியின்
ரகசியம்"(இன்னைக்கு 50 வது நாள்!!)
நாலைந்து நாட்களாக என்ன பதிவு போடுவது என்று
யோசித்து திணறி போய் விட்டேன்,காரணம் நாம
போடுற பதிவு நாலு பேருக்காவது நல்லதாக அமைய
வேண்டும் என்று வழக்கம் போல் நினைத்தேன்.அது
போல் இந்த பதிவு மக்களின் சிந்தனையை தூண்டி
விடுவதாக அமைந்ததில் எனக்கு பேரின்பம்.
ராஜலீலை, சத்தியமா நான் இந்த படத்தை பார்க்கலாங்க....
படத்தில் பெருசா ஒன்னும் இல்லைன்னு பார்த்தவங்க
சில பேரு சொன்னாங்க அதான் போல!! நான் எப்பவுமே
பாக்காத படத்தை பற்றி தப்பாக பேசுவதில்லை.ஆனால்
ராஜலீலை பற்றி பேச காரணம் அவர்களின் விளம்பரம்.
ஒரு பேய் படத்தை ஏதோ தபு நடித்த அட்டு படம்
போல் விளம்பரம் செய்து காசு பண்றாங்க.இதை
நம்பி போறவன் காசு வேஸ்ட்தான்.இந்த விஷயம்
பல பேருக்கு தெரிஞ்சாலும் சில பேர் சபலப்பட்டு
இந்த மாதிரி படத்துக்கு போய்டுறாங்க.
ராஜலீலை-இளசுகளின் இன்ப எல்லை....
இந்த மாதிரி விளம்பரம் போட்டு என்னை மாதிரி
சிறுவர்களின் மனதை சலனப்படுத்துகிறார்கள்.
அடுத்த மாசம் வேற பரீட்சை வருது இந்த மாதிரி
நேரத்தில் இப்படியான விளம்பரத்தை போட்டு
எங்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.
எங்கே போகும் இந்த பாதை??
ஒரு அட்டு படத்துக்கு இது போல் விளம்பரம் அளித்து
ஓட வைப்பதால் வரலாறு கொஞ்சம் தப்பா ஆயிடும்.
இது குறித்து நான் ஏற்கனவே யார் விதைத்த விதை?
என்ற இடுகையில் விலாவரியாக எழுதியுள்ளேன்.
"இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முதல்
வெற்றி" என்று ஹிந்தி டப்பிங் படத்துக்கு விளம்பரம்
செய்வதை யார் கேட்பார்கள்.....
கூடிய விரைவில் இது குறித்து ச.ம.கட்சியுடன்
பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த எங்கள் தெருமுனையில் கூட்டம்
போடலாம் என்று இருக்கிறோம்.இதுல ஒரு
பிரச்சனை என்னனா, எங்கள் தெருமுனையில்
வடை சுடும் ஆயா எங்களுக்கு இடம் கொடுக்க
மறுக்கிறார்.இந்த ஆயாவிடம் ஒரு அரைமணி
நேரம் அனுமதி வாங்கி தர அரசுக்கு கூடிய
விரைவில் மனு அளிக்க உள்ளோம்.
இந்த படத்தை பார்த்து அடுத்ததாக "தேவலீலை"னு
பேர் போட்டு அடுத்த படத்தை ஆரம்பிச்சாச்சு.....
ஸ்டில் எல்லாம் படுபயங்கரமா?? இருக்கு.சாம்பிள்
கிழே.....
ஒரு நிமிஷம்.. போன் கால் வருது....
ஜெட்லி: சொல்லு மாமே...
ராஜேஷ்: எப்படிடா இருக்கே...இன்னைக்கு என்ன படம்
பார்த்தே??
ஜெட்லி : இன்னைக்கு எதுவும் படம் வரலடா...
ராஜேஷ் : ரசிக்கும் சீமானே விமர்சனம் போடலையா??
ஜெட்லி : டேய்...என்ன கலாய்க்கிரியா??
ராஜேஷ் :என்னமோ மொக்கை படமே பார்க்காத மாதிரி
கேக்குற!!!
ஜெட்லி : சரி உடு...என்ன படம் புதுசா டவுன்லோட் பண்ணே??
ராஜேஷ் : புது படம் பிரிண்ட் சரியில்லைடா அதனால
பண்ணலா...ஏதோ ராஜலீலைனு ஒரு படம்
டவுன்லோட் பண்ணிருக்கேன்.
ஜெட்லி : சூப்பர்டா...ரைட் பண்ணி வை.அந்த பக்கம்
வரும் போது வாங்கிகிறேன்...bye டா...!!
ரைட்...எங்கே விட்டேன்...ஹ்ம்.இந்த மாதிரி படங்களை
முதலில் தடை செய்யனும்ங்க...நம்ம தமிழ் படத்தில்
A சான்றிதழ் வாங்கி இருந்ததுனா விளம்பரத்தில் ரொம்ப
சின்னதா போடுவாங்க...ஆனா ராஜலீலை மாதிரி
படத்தில் A தான் ரொம்ப பெருசா போடுவாங்க...
சரிங்க...நாம சொல்லி அவங்க இந்த மாதிரி
விளம்பரம் போடுறதை நிறுத்த போறதில்லை.
என்ன கொடுமைன்னு பார்த்திங்கனா இந்த
அம்பது நாள் விளம்பரத்தில் மூணே மூணு
தபு ஸ்டில் மட்டும் தான் வந்திருக்கு....
அட்லீஸ்ட் அதையாவது டெய்லியும் வேற
வேற ஸ்டில் போட்டால் நல்லா இருக்கும்!!
எந்த வித கொள்கையும் இல்லாமல் நாட்டு மக்கள்
நலனுக்காக சிந்தித்து கொண்டிருக்கும்....
ஜெட்லி.....
இந்த இடுகை பற்றி உங்கள் கமெண்ட்(பின்னூட்டம்)
மற்றும் ஓட்டை போடுமாறு கேட்டுகொள்கிறோம்.
24 comments:
ஜெட்லி ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு .. என்ன ஒரு நக்கல்
எங்க ஏரியால இந்த படம் போடல. போஸ்டரையாவது கண்ணுல காட்னிங்களே. தேங்க்ஸ் ஜெட்லி.
75 வது நாள், 100 வது நாள் போஸ்டர் எல்லாம் வந்ததும் போடுவீங்கன்னு நம்பித்தான் வோட் போட்டுருக்கேன்..
பாஸ், போட்டோலாம் இப்படியா கில்மாவா போடறது, ஆஃபிஸ்ல பயந்து பயந்து படிக்கவேண்டியதாயிடுச்சு...ஹி...ஹி..:)))
என்னை போன்ற இளசுகளுக்கு ஏற்றார்போல டாப்பான விமர்சனம்... என்னது மூனு போட்டோக்கு மேல போடலையேன்னு ஆழந்த வருத்ததுடன் பார்த்தா கடைசியில தான் விடை தெரிந்தது.. படம் பார்த்து கண்டிப்பா விமர்சனம் போடவும்
வேற எந்த எந்த த்யேட்டர்ல ஓடுது ?
@மீன்துள்ளியான்
நன்றி நண்பா....
நாட்டுல நடக்கறத பத்தி சொன்னேன்...
@Vels
ரைட்.....
@ ஸ்ரீராம்
100 ஓடிச்சுன்ன கண்டிப்பா பதிவு இருக்குண்ணே!!
@ ரகு
சாரி நண்பா....படம் போட்ட தான் ஒரு involvement
இருக்கும்....அதான்.....!!
@D.R.Ashok
ஹலோ....நீங்க இளசா...சரி அதை உடுங்க..!
படம் வேஸ்ட்னு தலைவர் உண்மை தமிழன்
சொல்லிட்டாரு...அதனால பார்க்க மாட்டேன்...
டவுன்லோட் மேட்டர் சும்மா போட்டது....
@செந்தழல் ரவி
எல்லாமே சென்னை வெளியே தான் ஓடுது
அண்ணே..... :((
சார் தபு சார்..
நிக்குது சார்...
ஜெட்லி லீலை - 300 இடுகை நோக்கி. கொண்டாட்டம் - படிக்க தவறாதீர்.
//இந்த மாதிரி விளம்பரம் போட்டு என்னை மாதிரி
சிறுவர்களின் மனதை சலனப்படுத்துகிறார்கள்.//
அய்யய்யோ கேபிளாவது யூத்துன்னாரு..இவரு சிறுவன்னு சொல்றாரே..இதைக் கேக்க யாருமே இல்லையா????
//அம்பது நாள் விளம்பரத்தில் மூணே மூணு
தபு ஸ்டில் மட்டும் தான் வந்திருக்கு....
அட்லீஸ்ட் அதையாவது டெய்லியும் வேற
வேற ஸ்டில் போட்டால் நல்லா இருக்கும்!!//
இதுதான் பிரச்சினையா..இதுக்கா கோவப்பட்டு இப்புடி ஒரு பதிவு?
எடுத்த சூன்யத்த வெச்சிட வேண்டியதுதான்..:))
@டக்கால்டி
கண்ணுல நிக்குது தானே சொன்னே??
நான் தப்பா நினைச்சிட்டேன்...
@Chitra
ஏன் இப்படி உசுபெத்துரிங்க......
இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு
பிடிச்சுருக்கு....
@புலவன் புலிகேசி
புலவா...அவங்க யூத்னா நாம சிறுவர்கள் தானே....
//இதுதான் பிரச்சினையா..இதுக்கா கோவப்பட்டு இப்புடி ஒரு பதிவு?//
உங்களுக்கு ஆவது என் ஆதங்கம் புரிஞ்சுதே....
@ ஷங்கர்
//எடுத்த சூன்யத்த வெச்சிட வேண்டியதுதான்..:))//
ஹலோ பாஸ்..நீங்க தான் ஆள் செட் பண்ணி
இந்த வேலையை பண்றிங்களா??
//எங்கள் தெருமுனையில்
வடை சுடும் ஆயா எங்களுக்கு இடம் கொடுக்க மறுக்கிறார்.இந்த ஆயாவிடம் ஒரு அரைமணி நேரம் அனுமதி வாங்கி தர அரசுக்கு கூடிய
விரைவில் மனு அளிக்க உள்ளோம்.//
அட ஆயா... வட போச்சா... :))
:-))
ம்ம்ம் - இப்படியும் படங்கள் - இப்படியும் விளம்பரங்கள் - நம் மனதைக் கெடுத்து - பார்க்கத் தூண்டி - காசப் பிடிங்கி - ம்ம்ம்ம்ம்
sir, thalaivar padam "pokkiri" parunga sir, athula kadaisi padl adi onnu solran kelunka sir, ""india-vil aankalum englandil pengalum aasaikal adangatha aatkal""ippa enna sir solringa....by aasaiyai adakki vaazhum sandru.s
Post a Comment