Tuesday, November 3, 2009

கண்டேன்....கண்டேன் காதலை + சுனாமி!!

கண்டேன்....கண்டேன் காதலை + சுனாமி!!

என்னடா முதல் நாளே விமர்சனம் போடுவே ஏன் போடலன்னு
நிறைய பேர் போன் பண்ணி கேட்டாங்க(பில்ட் அப்)......எனக்கு
வெள்ளிக்கிழமை கொஞ்சம் வேலை இருந்ததால்(நம்புங்க!!)

கண்டேன் காதலை போக முடியவில்லை.கண்டேன் காதலை
படம் வேறு ஜெயந்தி தியேட்டரில் போட்டு இருப்பதால் அங்கே
படம் பார்த்து என் கண்ணை கெடுத்து கொள்ள விரும்பாமல்
அடுத்த நாள் சனிக்கிழமை அண்ணா தியேட்டரை நோக்கி
வண்டி சென்றது.

அங்கே போனால் கவுன்டரில் ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டு

இருந்தது.தீடிர்னு ஒருத்தன் வந்து "அம்பது ரூபாய் டிக்கெட் நூறு ரூபாய்" என்றான்,கூட வந்த என் நண்பன் இவன் படத்தை நூறு ரூபாய் கொடுத்து பார்க்க முடியாது என்று சொன்ன காரணத்தால் வண்டி அந்த இடத்தை விட்டு கிளம்பி பைலட் தியேட்டர் வாசலில் நின்றது.2022 என்ற அந்த மகத்தான காவியத்தை காண பெருங்கூட்டம் அலைமோதியது காரணம் பல பேர் அதை 2012 படம் என்று நினைத்துவிட்டனர்.



நான் 2022 தாய்லாந்து படம் என்று தெரிந்தே தான் போனேன்.
சும்மா சொல்ல கூடாது 2004 இல் சுனாமி வந்த போது வந்த நியூஸ் வீடியோ காட்சிகளை படத்தில் கச்சிதமாக(கேவலமாக) பொருத்தி இருந்தனர்.இது போன்ற மொழி மாற்ற படத்தை வைத்து தமிழனின் காசை பிடிங்கி விடுகிறார்கள்.இதுல வேற அடுத்து ஆவேச அலைகள் ப்படின்னு அடுத்த வாரம் ஒரு சுனாமி படம் வருது."டேய் நீ ஆவேச அலைகள் படம் பார்த்துட்டு கூட விமர்சனம் போடுவேடா" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.அதுதான் ஆண்டவன் கட்டளைனா நான் ஒன்னும் பண்ண முடியாது!!.சும்மா இருக்கிற கடல்ல நம்ம ஆளுங்க சுனாமி படம் போட்டு பொங்க வச்சிருவாங்க போல என்று கேட்க தோணும் அளவுக்கு வரிசையாக சுனாமி படங்கள்.

அதுக்கு அடுத்த வாரம் 2012 என்ற அக்மார்க் ஹாலிவுட் படம்
வருகிறது, அதை எல்லோரும் பார்க்க வேண்டும்.சரி கண்டேன்
காதலை படத்தை பத்தி எல்லோரும் சொல்லிட்டாங்க நான்
வேற என்ன புதுசா சொல்ல போறேன்.ஆனா எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும் பரத்துக்கு சின்ன தளபதினு பட்டம் யாரு கொடுத்தாங்க?? நாராயண இந்த கொசு தொல்ல தாங்க முடியலைப்பா.நான் ஏற்கனவே

ஹிந்தியில் ஜப் வி மேட் படத்தை பார்த்து விட்டதால் தமிழில் அந்த அளவுக்கு படம் வரவில்லை என்றே கூற வேண்டும்.

சந்தானம், ஹிந்தியில் இவர் கேரக்டர் இல்லை தமிழில் மாற்றம்
செய்து உருப்படியான வேலை செய்து இருக்கிறார்கள்.இவர் இல்லை
என்றால் அலுப்பு தான் ஏற்பட்டு இருக்கும்.தமன்னா, கரீனா கபூரை
நன்றாக இமிடேட் செய்து உள்ளார் அதற்காக அவர் போட்டிருக்கும்
டிரெஸ்ஸை கூட காப்பி அடிப்பது கொஞ்சம் ஓவர்.பல பேர் தமன்னாவை தேனிகார பொண்ணு என்றால் நம்ப மறுப்பார்கள்.

ஜெட்லி சரண்.

பரத்,.. சாகித் கபூரை காப்பியடிக்க முயற்சி செய்து இருக்கிறார் ஆனால் பாவம் பாஸ் ஆகவில்லை, பாட்டுகளில் ஆமிர்கானை காப்பி அடித்து இருக்கிறார்... ஏன் பாஸ் உங்களக்கு சொந்த சரக்கு இல்லையா என்று கேட்க தோன்றுகிறது.இடைவெளி பின்புதான் ஹிந்தி படத்தில் ஒரு ஜீவன் இருக்கும் ஆனால் கண்டேன் காதலில் அப்படி ஒன்னும் தெரியலை.பாட்டு, ஏதோ ரெண்டு பாட்டு நல்லாயிருக்கு.படத்தின் ப்ளஸ் கதை,திரைக்கதை அதனால் மேல உள்ள விஷயங்கள் பெரிதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் கண்டேன் காதலை டைம் பாஸுக்கு கியாரண்டி!!!.

அது சரி கண்டேன் காதலை எங்கே பார்த்தேன் என்று
சொல்லலியே?? அதே அண்ணா தியேட்டரில் தான்.அதே
ஹவுஸ்புல் போர்டு அதே நூறு மட்டும் இல்லை எண்பது
ரூபாய்.சில போலீஸ்காரர்களின் பலத்த பாதுகாப்புடன்
டிக்கெட் விக்கும்போது தட்டி கேட்க நான் என்ன ஷங்கர்
பட ஹீரோவா?? இல்லை நம்ம உண்மை தமிழன் அண்ணனா??
நான் ஒரு சாதரண இந்திய நாட்டின் குடிமகன்!!.

பல மக்கள்கிட்ட சேர ஒட்டு போடுங்க, கமெண்ட் கூட பண்ணலாம்.

உங்கள்

13 comments:

உங்கள் தோழி கிருத்திகா said...

தமன்னா, கரீனா கபூரை
நன்றாக இமிடேட் செய்து உள்ளார் அதற்காக அவர் போட்டிருக்கும்
டிரெஸ்ஸை கூட காப்பி அடிப்பது கொஞ்சம் ஓவர்.பல பேர் தமன்னாவை தேனிகார பொண்ணு என்றால் நம்ப மறுப்பார்கள்.//////////////////
கரீனா செஞ்சதுல பாதி கூட இவங்க செய்யலைனு என்னோட கருத்து....அவங்க காஷ்வலா செஞ்சுருப்பாங்க...பாட்டு தான் ஜப் வி மெட் படதின் உயிர் நாடி...இங்க ஒரு பாடு குட சொல்லிக்கர மாதிரி இல்ல...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கரீனா செஞ்சதுல பாதி கூட இவங்க செய்யலைனு என்னோட கருத்து...//

அவங்க வயசு, இவங்க வயசு நிறைய வித்தியாசம் இருக்கில்ல..,

பிரபாகர் said...

உண்மைத் தமிழன் மாதிரி இல்லன்னு உண்மைய ஒத்துக்கறீங்க்களே! உங்க நேர்மை பிடிச்சிருக்கு.

பிரபாகர்.

கலையரசன் said...

நீங்க ஏன் மலையாள படத்துக்கு விமர்சனம் எழுதமாட்றீங்க?
அதுகெல்லாம் விமர்சனம் தேவையான்னு எல்லாம் கேட்ககூடாது..

RAM said...

Good Very realistic vimarsanam

யோ வொய்ஸ் (யோகா) said...

அப்ப படம் பார்க்க தேவையில்லையா தல..

Menaga Sathia said...

//ஹிந்தியில் ஜப் வி மேட் படத்தை பார்த்து விட்டதால் தமிழில் அந்த அளவுக்கு படம் வரவில்லை என்றே கூற வேண்டும்.// உண்மைதான்.பர்த் படம் பிடிக்காது அதனால நான் இந்த படத்தை பார்க்கவில்லை பார்க்கவில்லை...............

அகல்விளக்கு said...

//போலீஸ்காரர்களின் பலத்த பாதுகாப்புடன்
டிக்கெட் விக்கும்போது தட்டி கேட்க நான் என்ன ஷங்கர்
பட ஹீரோவா?? இல்லை நம்ம உண்மை தமிழன் அண்ணனா??
நான் ஒரு சாதரண இந்திய நாட்டின் குடிமகன்!!.//

ஆமாம் தல. நான் கூட 2012ஆ இல்ல 2022ன்னு யோசிச்சேன்.

ஜெட்லி... said...

@ கிருத்திக்கா

உங்க கருத்து கரெக்ட்தான் அம்மணி....


@ சுரேஷ்

அப்படியா தல....


@பிரபாகர்

நன்றி நண்பரே


@கலையரசன்

நான் எழுதமாட்டேன்னு சொல்லலியே....
ஏற்கனவே காதல் கதை விமர்சனம் எழுதினேன்
படிக்கவில்லையா???


@ராம்

நன்றி நண்பரே...


@யோ

சந்தானம்காக பார்க்கலாம் யோ...


@மேனகா

நல்ல முடிவு அக்கா....


@அகல் விளக்கு

நிறைய பேர் அப்படிதான் நினைக்கிறாங்க ஜி...

கடைக்குட்டி said...

உங்க பதிவுகள நான் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன்.. எல்லா விமர்சனமும் ..

நெறயா தடவ என் கைக்காச மிச்சப்படுதியதற்காக நன்றி..

அப்புறம் 2022 பத்தி சொல்லி இருந்தீக..
எனக்கு சிப்பு சிப்பா வந்துருச்சு.. பாவம் நீங்க..

பொது சேவைக்காக நெறயா கஷ்டப் படுறீங்க.. :-)

தொடர வாழ்த்துக்கள்.. எந்திரன தவிர எந்த சன் பிக்சர்ஸ் படமும் பாக்குறதில்லைன்ற வைராக்யத்துல இருக்கேன்.. ஸோ.. க.கா லாம் ஜுஜுபி...

250WcurrentIsay said...

All the reviews say pretty much the same.... btb u r gonna see 2012... ungala paaththa enakku paavama irukku.... padam mokkaiyaaam... hollywood critics kadhara kadhara kalaaaichirukkango

விக்னேஷ்வரி said...

ஷாஹித் கபூர் இடத்தில் பரத்தை வைத்துப் பார்க்க முடியாததால், நான் படம் பார்க்கவில்லை. பலரின் விமர்சனத்திற்குப் பின் பார்க்க விரும்பவுமில்லை.

ஜெட்லி... said...

@ கடைக்குட்டி

என்ன நண்பா, வேலையெல்லாம்
எப்படி போகுது??


@250WcurrentIsay

அட விடுங்க பாஸ் இதெல்லாம் எனக்கு சாதாரணம்.....

@விக்னேஸ்வரி


நல்ல முடிவு....