- 'Lane Discipline' என்பதை தவறாக புரிந்து கொண்டு (இந்த வார்த்தைகளையே இப்போதான் கேள்விப்படுறேன் என்பவர்கள், பின்னூட்டத்தில் கேட்டு தெளிவு பெறலாம்) , எங்கெல்லாம் Lane (சந்து) கிடைக்கிறதோ அங்கெல்லாம் புகுந்து புறப்படும் இருசக்கர வாகன ஓட்டிகள் (நானும் அந்த கும்பல்ல ஒருத்தன் தான்)
- மாமனார் வீட்டு சீதனமாய் வந்த காரை, கல்யாண ஊர்வல ஞாபகத்திலேயே ஓட்டி (உருட்டி) செல்லும் புது மாப்பிள்ளைகள்
- நூறடி தூரத்தில் நிறுத்தம் இருப்பதும், முன்னால் செல்லும் பேருந்து அங்கு நிற்கும் என்பதும் தெரிந்தும், விலகி செல்லாமல், நின்ற பேருந்தின் பின் நின்று ஹார்ன் அடிக்கும் அதிபுத்திசாலிகள்
- லோன் போட்டு காரை வாங்கி, நேற்று வரை ஓட்டி வந்த பைக் ஞாபகத்திலேயே, குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் நரேன் கார்த்திகேயன்கள்
- எதிராளியின் மஞ்சள் = எனக்கு பச்சை, என சிக்னல் மாற சில நொடிகள் இருக்கும் போதே சீறும் சிங்கங்கள்
- சிக்னலில் தனக்கு முன் நூறு வண்டிகள் இருந்தாலும், அங்கே பச்சை விழுந்தவுடன் இங்கே ஹார்ன் அலறவிடும் அவசரக்குடுக்கைகள்
- நாளை வரப்போகும் தலைவருக்காக நடவேண்டிய கொடிகளை ஏற்றிக் கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு நூறடிக்கும் நின்று செல்லும் டெம்போக்கள்
- மாச கடைசி ஆகிவிட்டாலே, கொரில்லா படையாய் மாறி, சிக்னலுக்கு சிக்னல் மறைந்திருந்து பிடிக்கும் போக்குவரத்து காவலர்கள்
- 'தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல்' என கவுண்டமணி சொல்வது போல், தானும் செல்லாமல் பின்னால் வருபவருக்கும் வழிவிடாமல் நடுச்சாலையில் ஊரும் எருமைகள்
- பத்து வருடத்திற்கு முன் ஒட்டிய BAJAJ Scooter ஞாபகத்திலேயே, இன்று Pulsar ஓட்டும் போதும், இருபுறமும் காலை தேய்த்து செல்லும் இம்சை அரசர்கள்
- பின்னால் காதலி இருந்தவரை எண்பதை விட்டு இறங்காத வேகத்தில் ஓட்டிய, இன்று மனைவி அமர்ந்திருக்க (அதே பெண்ணோ, வேறோ, அது பற்றி தெரியாது) நாற்பதை தாண்டாத வீராதி வீரர்கள்
- நிறுத்தத்திலிருந்து கிளம்பும் பேருந்தை முந்திச்சென்று குறுக்கே நிறுத்தும் அரசு பஸ் டிரைவர்கள்
- குறுக்கே நின்ற பேருந்து கிளம்ப சில நொடிகள் காத்திராமல் 90o யில் நடுச்சாலைக்கு வரும் (வேறு யாரு) அரசு பஸ் டிரைவர்கள்
- எங்கே திரும்புவோம், எப்படி திரும்புவோம் என யாருக்கும் தெரியாது ஆனா நீங்க எதிர்பார்க்காத நேரத்தில் கரெக்ட்டா திரும்புவோம் என ஓட்டும் மாணிக் பாட்ஷாக்கள்
- நூறு மீட்டர் தள்ளி இருக்கும் சுரங்கப்பாதையில் இறங்கி ஏற சோம்பல் பட்டு சாலையின் நடுவே சடுகுடு ஆடும் பாதசாரிகள்
- பெட்ரோல் போடுறானோ இல்லியோ, சைலன்சர்ல ஒரு ஓட்டைய போட்டு அடுத்தவன் காதை செவிடாகும் அரைவேக்காடுகள்,
- ஆம்புலன்ஸ் ஒன்று போனால், அதன் வாலை பற்றிக்கொண்டு செல்லும் அற்பங்கள்
- தெரிந்தோ/தெரியாமலோ இடித்து விட்ட சக வாகன ஓட்டியிடம் (பின்னால் சேரும் நெரிசலை பற்றி கவலையே படாமல்) நடுச்சாலையில் சண்டை போடும் ******** (எனக்கு தோன்றிய வார்த்தையை பதிவு செய்ய இயலாது, உங்க விருப்பப்படி வைத்துக் கொள்ளலாம்)
- பாதுகாப்புக்கு ஹெல்மெட் அணியச் சொன்னால் அதையே ஸ்டாண்டாக பயன்படுத்தி உள்ளே மொபைலை சொருகி (அந்த அழைப்பை ஏற்காவிட்டால் இருபது கோடி நஷ்டம் ஆகிவிடும் எனும் ரீதியில்) பேசிச் செல்லும் சிலர் (அந்த ஹெல்மெட்டையே கழற்றி அந்த மொபைலையும் அவர்கள் மண்டையையும் உடைக்க தோன்றும் எனக்கு)
"நீங்க சாலை விதிகள் பற்றிய அறிவோட (Road sense) செல்லாவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் பொது அறிவோட (Common sense) நடங்க "
இது பற்றிய உங்கள் கருத்துக்களையும், வேறு ஏதேனும் காட்சிகள் நீங்கள் பார்த்திருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லலாம், அப்படியே ஓட்டும் போட்டீர்கள் என்றால்மேலும் பலரை சென்றடையும்
இதையெல்லாம் படித்தபின் சாலை விதிகள் பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டிருந்தால் இங்கே பார்க்கலாம்,
9 comments:
Exellcent Points.. i hope atleast some people will change their attitude after reading this.
மிக நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
வண்டியும், ரோடும் அவங்க பாட்டம் வீட்டுச் சொத்து மாதிரி ஓட்டிகிட்டு போறவங்களைப் பார்த்தா எரிச்சலா வரும்.
ஹைவேஸில், காருக்கு இணையாக, அந்த வேகத்தில் ஒட்ட முற்படுபவர்களைப் பார்க்க இன்னும் டென்ஷன் அதிகமாகின்றது.
தமிழ் மணத்தில் இந்த இடுகையை இணைத்துவிட்டேன்.
நாற அடிச்சாலும்,நல்லாத்தான் எழுதி இருக்கீங்க.இந்த பொறம்போக்கு கம்மனாட்டிங்களுக்கு சிங்கப்பூரோட ட்ராபிக் டிசிப்ளின வீடியோ போட்டு காட்டுனா திருந்த ஏதும் வாய்ப்பு இருக்கா பாஸ்.
//vavjeeva said...
October 12, 2009 9:41 AM
Exellcent Points.. i hope atleast some people will change their attitude after reading this.//
If that happens, I would be more than happy
//இராகவன் நைஜிரியா said...
October 12, 2009 9:43 AM
மிக நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
தமிழ் மணத்தில் இந்த இடுகையை இணைத்துவிட்டேன். //
மிக்க நன்றி ராகவன்
// வண்டியும், ரோடும் அவங்க பாட்டம் வீட்டுச் சொத்து மாதிரி ஓட்டிகிட்டு போறவங்களைப் பார்த்தா எரிச்சலா வரும்.//
ஓட்டிசெல்வது போதாதென்று சிலர் வண்டியிலேயே இப்படி எழுதியும் வைத்து உள்ளனர்
"Yes, It's my dads' road"
//basheer said...
October 12, 2009 10:00 AM
நாற அடிச்சாலும்,நல்லாத்தான் எழுதி இருக்கீங்க.இந்த பொறம்போக்கு கம்மனாட்டிங்களுக்கு சிங்கப்பூரோட ட்ராபிக் டிசிப்ளின வீடியோ போட்டு காட்டுனா திருந்த ஏதும் வாய்ப்பு இருக்கா பாஸ்.//
இது என்றும் திருந்தாத கூட்டம், நல்லது நடக்கும் என நம்புவோம்
You are creating the awarness by casual way with humours.....nice post
//மாமனார் வீட்டு சீதனமாய் வந்த காரை, //கல்யாண ஊர்வல ஞாபகத்திலேயே
ஏங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறீங்க...3 வது கியர்க்கு மேல சிட்டிக்குள்ள எங்கயும் போக முடியலை. இதுல ஸ்லோவா போறாங்கன்னு திட்டுறீங்க.
//நாற்பதை தாண்டாத வீராதி வீரர்கள்
கல்யாணமாகி புள்ளைக்குட்டி வந்தவுடனே..40 க்கு மேல வண்டி போகாதுங்க. உங்களுக்கு கல்யாணம் ஆன உடனே இத மீள் பதிவா போடுங்க.
//குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் நரேன் //கார்த்திகேயன்கள்
சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. சென்னை போலீஸ் ரிப்போர்ட்படி கார் ஓட்டுறவங்கதான் ஒழுங்க சாலை விதிகளை மதிச்சு ஓட்டுறாங்கன்னு சொல்றாங்க. (இதுல மஞ்சள் போர்டு கார் எல்லாம் சேத்தியில்லை).
//அடுத்தவன் காதை செவிடாகும்
இவனுங்களை தூக்கி உள்ள போடனும்க. நாய்ஸ் பொல்யூசன் பேட் பார் ஹெல்த்.
//தெரிந்தோ/தெரியாமலோ இடித்து விட்ட சக வாகன
நடு ரோட்டுல ஸ்டேண்ட் போட்டுட்டு, அவனுங்க அடிக்குற அலப்பறை தாங்க முடியாது. ஏதோ பாகிஸ்தான் காரன பார்க்குற மாதிரி கத்துவானுங்க. ஒருத்தன் என் கார் மேல மோதிட்டு என்னைய திட்டிட்டு போனான். டேய்..நான் தாண்டா உன்ன திட்டனும்னு சொன்னேன் அவன் கிட்ட. அவன் முந்திக்கிறானாமாம்..
எல்லாம் ஓரளவு சரியாகத்தான் இருக்கு ஆனா இந்த ரோட்டில் இருக்கும் குழி மற்றும் சாலை தடங்களை குறிக்கும் அறிவிப்பு பலகைகள்,வேகக்கட்டுப்பாட்டு மேடுகள்(அளவுகள் அவரவர் இஷ்டத்துக்கு),சாலையே குழியும் குண்டுமாக ஒரு மாநகர தலை நகரில் பார்க்கும் போது ஒரே பெரு மூச்சு தான் விடமுடிகிறது.
1980 களில் ”இங்கு ஏர் ஹார்ன் ஒலிக்கக்கூடாது” என்ற அறிவுப்புகளை பார்த்திருக்கலாம்,அந்த சட்டத்தை இப்போ தூக்கிட்டாங்களா?சீக்கிரம் காது செவிடாகனும் என்றால் சேலம்/மேட்டூர் பகுதிகளில் வசித்து அங்குள்ள பேருந்துகளில் போனால் சீக்கிரமே செவிபறையை இழக்கலாம்.
Post a Comment