Tuesday, October 13, 2009

தாடி வைத்திருந்தவனின் டைரியிலிருந்து

தாடி வைத்திருந்தவனின் டைரியிலிருந்துநான் கடந்த மூணு வாரங்களாய் ஷேவ் செய்யாமல் சுற்றி வந்தேன், கொஞ்சம் தாடி அதிகமாவே வளந்துவிட்டது.ஷேவ் செய்யாததற்கு
காரணம் என் அம்மாவின் வேண்டுதல்.திருப்பதி போய் முடி
எடுக்க வேண்டுமாம் அப்புறம் திருப்பதி போனால் வாழ்க்கையில்
திருப்பம் வருமாம், ரைட்,அப்படின்னு போய்ட்டு முடி எடுத்துட்டு வந்துட்டேன்.

தாடி வைத்திருப்பதில் என்ன பிரச்சனை என்று கேக்குறிங்களா??
என் நண்பர்(கொஞ்சம் வயதானவர்) ஒருவர் என்னை பார்த்து
"என்னப்பா ஒரு தலை ராகம் மாதிரி சுத்திட்டு திரியிற?"
என்று கேட்டார்.ஆமாம்,நம்மில் தாடி என்றவுடன் நினைவுக்கு
வரும் முதல் ஆள் டி.ஆர் மட்டுமே.

ஆமாம் அது ஏன்ங்க காதல் தோல்வி அடைஞ்சா மட்டும் தான்
தாடி வளக்குனுமா?.மேலும் சில பேர் என்னை பார்த்து "என்ன டல்லா இருக்கீங்க" என்று கேட்டனர். தாடி ஏன் நமக்கு சோகத்தை
மட்டுமே நினைவுப்படுத்துகிறது???.

*************************
டைரியின் அடுத்த பக்கம்

ஆஸ்திரேலியா நாட்டு பிரஜை பாலா கடந்த வாரம் சென்னை
வந்திருந்தார்.பின்பு நான்,பாலா,ஜெய்சன் ஹோட்டலில் சாப்பிட வெளியே சென்றோம்.நண்பர் கேசவன் அவர்கள் சிறிது நேரம்
கழித்து வந்தார் அப்போது கேசவன் நான் தாடி வைத்திருப்பதை பார்த்து

"என்னடா பருத்தி வீரன் மாதிரி தாடி வளத்துட்டு இருக்கிற"
என்றார்.

"ஆஹா நம்மளை கார்த்தி ரேஞ்க்கு பீல் பண்ணி பேசுறானே"
என்று என் மனம் நன்னாரி சர்பத் சாப்பிட்டது போல் குளிர்ந்து.

இதை பொறுக்க முடியாமல் பாலா அவர்கள் உள்ளே பூந்து கேசவனை பார்த்து "நான் கூட ரொம்ப நேரமா இந்த மூஞ்சியை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துது யோசிச்சேன் மச்சி, பருத்திவீரன்னு நீ சொன்ன உடனே தான் ஞாபகம் வந்துச்சு"

என்னை பார்த்து பாலா "அப்படியே பருத்திவீரன்ல வர
செவ்வாழை மாதிரி இருக்குற மச்சி" என்றார்.

ரைட் உண்மைய தானே சொல்றான் அப்படின்னு நானும் ப்ரீயா
விட்டுடேன்.செவ்வாழையாக இருந்தால் என்ன பருத்தி வீரனாக
இருந்தால் என்ன தாடி எல்லாம் ஒன்னுதானே.

***************************
பழைய டைரி பக்கத்திலிருந்து

நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது அப்போது வந்த புது
ஆசிரியர் எங்கள் கவனத்தை ஈர்த்தார்.எங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது அவரின் ட்ரிம் தாடி.அவர் தான் எங்கள்
பள்ளியின் முதல் தாடி வைத்த ஆசிரியர் ஆளும் செம ஸ்மார்ட்
ஆக இருப்பார்.அவர் தாடி வைத்திருக்கம் ரகசியம் அறிய நானும் என் நண்பன் அஜிதனும் அவரிடம் ஒரு டவுட் என்று கேள்வி கேட்டோம் "என்ன சார் எதுவும் லவ் பெயிலியரா?"

"என்னப்பா கேள்வி இது லவ் பெயிலியர் ஆனா தான் தாடி
வைக்கணுமா? எனக்கு பிடிச்சிருக்கு வச்சிரிக்கேன்" என்றார்.

பன்னிரெண்டாவது வரை அவருடனே பயணித்தோம், அவர் பாடம்
நடத்தும் விதம் எங்களை ஈர்த்தது.சில நாட்கள் தாடியை எடுத்து
விடுவார்.அவர் தாடியை எடுத்து விட்டு பள்ளிக்கு வரும் நாட்களில்
"எங்கே சார் உங்க அண்ணனை காணோம்" என்று கிண்டல் செய்வோம்.

பள்ளி முடித்து கல்லூரி சென்றவுடன் அவரை பார்ப்பது இல்லை.
ஆனால் அப்போ அப்போ நண்பர்களிடம் அவர் இன்னும் அந்த
பள்ளியில் தான் இருக்கிறாரா என்று தெரிந்து வைத்துகொள்வேன்.
ஒரு ரெண்டு மூணு தடவை வங்கிக்கு வரும் போது நான் அவரை
பார்த்தால் சிறிது நேரம் பேசுவோம்.

அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று நண்பர்கள் மூலம்
அறிந்து கொண்டேன்.கல்யாணம் ஆன பின் அவர் தாடி வளர்ப்பதில்லை என்று அவர் ஒரு நாள் என் கடைக்கு வரும் பொழுது புரிந்து கொண்டேன்.

(நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா???எங்க சார் கல்யாணம் ஆன பின் தாடி வைத்து கொள்ளவில்லை அப்போ கல்யாணம் சோகமா? இல்லை சந்தோசமா?) (பி.கு: நான் என்ன சொல்ல வரேன்னு எனக்கே
புரியல!!!!)
*******************************
போனஸ் செய்தி:

தாடி வைத்திருந்த சில சாதனை மனிதர்கள்:

லியோ டோல்ஸ்டாய்

அலெக்சாண்டர் கிரகாம்பெல்

சே

மற்றும்

ஜெட்லி சரண்(வருங்காலம் சொல்லும்)

இதை போல் நீங்கள் தாடி வளர்த்த சம்பவங்கள் இருந்தால் பின்னூட்டம் போடவும் முடிஞ்ச அப்படியே ஓட்டும் போடுங்க.

மொட்டை தலையுடன்
ஜெட்லி சரண்.

12 comments:

சங்கர் said...

நண்பா, தாடி பற்றி பதிவு எழுதிய நீ, தாடி ஒரே சீராக வளர டிப்ஸ் கொடுத்தா இன்னும் நல்லாருக்கும்

பிரபாகர் said...

தல...

தாடி நம்மோட முகத்துல ஒளிரற பிரகாசத்த மறைச்சிடுதுள்ள அதான் சோகமா தெரியிறோம்.

பிரபாகர்.

யோ வாய்ஸ் (யோகா) said...

//ஜெட்லி சரண்(வருங்காலம் சொல்லும்)//

நம்பிட்டோம் தல. தாடி வச்ச கேடி என சொல்லாம இருந்தா சரி..

//பின்னூட்டம் போடவும் முடிஞ்ச அப்படியே ஓட்டும் போடுங்க.//

ஐந்தாவது ஓட்டு என்னுடயது

பின்னோக்கி said...

போனஸ் செய்தி கொஞ்சம் ஓவருங்கோ !!
அப்புறம் வழுக்கை தலை, 6 விரல் இருக்குறவங்கன்னு பதிவு போட்டுகிட்டே போகலாம்

ஜெட்லி said...

@ சங்கர்

சொல்லிவிடலாம் நண்பா...

@ பிரபாகர்

தாங்கள் கூறவது உண்மைதான் தோழரே

@ யோ

ஏன் இப்படி???

@ பின்னோக்கி

ஓவர் தான் என்ன பண்றது நண்பா??
ப்ரீயா இருக்கும் போது போடுவோம்.

சித்து said...

ஆஹா மச்சி இது தான் நீ திருப்பதி போன ரகசியமா?? அப்ப ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணு மச்சி, உன் கெட்டப்ப பார்க்கணும்.

Mrs.Menagasathia said...

தாடி பற்றிய பதிவ்ய் நல்லாயிருக்கு ஜெட்லி!!

ஜெட்லி said...

@சித்து

தீபாவளிக்கு மீட் பண்ணுவோம்

@மேனகா

நன்றி அக்கா

jackiesekar said...

ஜெட்லி சரண்(வருங்காலம் சொல்லும்)///

நான் இப்பவே வாழ்த்து சொல்லறேன்

ஜெட்லி said...

@ ஜாக்கிசேகர்

ரொம்ப நன்றி அண்ணே...

சென்ஷி said...

நானும் அப்பப்ப சரியா முளைககாத அளவுல இருக்கற தாடி வச்சிருப்பேன்.. ஷேவிங்க் செய்ய சோம்பேறித்தனம் அம்புட்டுத்தேன் :)

நல்லா எழுதியிருக்கீங்க ஜெட்லி!

ஜெட்லி said...

மிக்க நன்றி சென்ஷி