Wednesday, October 28, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.


நானே வருவேன் என்ற பேய் படத்தில் புதியதாக ஒரு விஷயத்தை
செய்ய இருக்கிறார்கள் அதாவது படத்தில் பேய் வரும் காட்சிகளில்
மட்டும் தியேட்டரில் மல்லிகை வாசனை வருமாம்.இந்த படத்தின்
இயக்குனர்,நடிகர்,இசை அமைப்பாளர் மற்றும் பல அமைப்பாளர் திரு.பாபுகணேஷ் ஒரு அற்புதமான படைப்பாளி.இவரின் ஒரு படத்தை "இரவு பாடகன்" என்று நினைக்கிறேன் அந்த படத்தை பார்த்தால் மலையாள அட்டு படம் பார்த்த திருப்தி கண்டிப்பாக கிடைக்கும்.இந்த படத்தை அடிக்கடி ராஜ் டிஜிட்டலில் அடிக்கடி போடுவார்கள் பார்த்து ரசியுங்கள்.



நானே வருவேன் என்ற இந்த படத்திலும் நான்கு நாயகிகளாம்,
அப்போ குஜாலுக்கு குறைவு இருக்காது என்று தெரிகிறது.
அவன் அவன் தியேட்டரில் ஏற்கனவே படம் பார்த்த
கிளுகிளுப்பில் இருப்பான், இதுல மல்லி வாசனை வேற???
ஆண்டவா காப்பாத்து... !!

******************************

பேப்பரில் கந்தசாமி படம் விளம்பரத்தை பார்த்தாலே கடுப்பாக
வருகிறது. படம் மெகா ஹிட் நூறாவது நாளை நோக்கி என்று
தினம்தோறும் டார்ச்சர் பண்றாங்க.இதில் வேறு யாரவது தத்து
எடுத்தா அதுக்கு இவங்க தான் காரணம்னு வேற விளம்பரம்.
தயவு செய்து நாளைக்கே நூறாவது நாள் அப்படின்னு போட்டு
விளம்பரத்தை நிறுத்தினா மிக்க சந்தோசம் அடைவேன்.

********************************
முக்கியமான பொது அறிவு
அடுத்த மாநிலத்தில் என்ன நடக்குது:

கிரண் நடிக்கும்?? தெலுங்கு படம் "ஹை-ஸ்கூல்".படத்தை பார்த்தால் பல பேர்க்கு மோனிக்கா பெல்லுசி நடித்த "malena" படம் நினைவுக்கு வரும். இதே போல் சில வருடங்களுக்கு முன் மனிஷா நடித்த "ஏக் சொட்டி சி லவ் ஸ்டோரி" படம் ஒன்று வந்தது அதை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் பார்த்தவனில் நானும் ஒருத்தன் கூட சில நண்பர்களும் வந்து
வெறுத்து போனார்கள்.





ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியுல. ச்சே
காசு தான் தண்டம் ஆகுது(என் காசு தான்).மார்க்கெட் போச்சுனா
கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே ஏன்
இப்படி ஒரு படம் என்று தோன்றினாலும் கிரணின் சேவை
நாட்டுக்கு தேவை.

மச்சி நெல்லூர்க்கு ஒரு டிக்கெட் போடு.....

*****************************************

ஜெட்லி டவுட்:

நயன்தாரா நடிக்கிற படம் எல்லாம் மொக்கை ஆகுதா?

இல்ல

மொக்கை படத்தில் மட்டும் நயன்தாரா அக்கா நடிக்கிறாங்களா???.

*************************************

இந்த வாரம் குமுதத்தில் படித்தது:

"பொட்டு தூணி இல்லாம..ஆயிரம் பேர் இருப்பாங்க...பொம்பளையும்
ஆம்பளையுமா சேர்ந்து நியுடா நடு ரோட்டுல நடந்து போறாங்க சார்.
கேட்டா சுதந்திரம்னு சொல்றாங்க.கிளாமர் நடிகை என்னாலயே அந்த
காட்சியை அஞ்சு நிமிஷம் நின்னு பார்க்க முடியல,உடம்பே கூச
ஆரம்பிச்சுடுது, என்ன தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரதோட
ரத்தம் தானே என் உடம்புலேயும் ஓடுது" என்று தன் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று வந்த சோனா அவர்கள் கூறியுள்ளார்.

உடம்பே கூசுதாம் .. ஐயோ ஐயோ... நம்ம ஊர்ல பத்திரிக்கையாளர்
சந்திப்பில் அம்மணி போட்டு வந்த டிரஸ்ஸை பார்த்தாலே நம்ம
கலாச்சாரம் பிச்சிக்கிட்டு வெளிய வருது என்று தெளிவாக தெரிகிறது.
அம்மணியின் கலாச்சார ரத்தம் ரொம்ப பித்தம்.!!


இது போன்ற பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று
அடைய ஒட்டு போடுவிங்க அப்படின்னு நம்புறேன்....முக்கியமா
கமெண்ட் போடுங்க...


நன்றி:
சுலேகா
பாரத்வேவ்ஸ்

அன்புடன்
ஜெட்லி சரண்

6 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

அருமையான பொது அறிவு தகவல்களை அள்ளி அள்ளி வழங்கும் ஜெட்லி வாழ்க.

யோகா
தலைவன்
ஜெட்லி ரசிகர் மன்றம்
இலங்கை கிளை

பிரபாகர் said...

நொந்த சாமி... நயன் அக்கா, கிரண், பாபு கணேஷ், கலாச்சாரப்பேட்டி என எல்லாம் நல்லாருக்கு நண்பா...

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//நயன்தாரா நடிக்கிற படம் எல்லாம் மொக்கை ஆகுதா?

இல்ல

மொக்கை படத்தில் மட்டும் நயன்தாரா அக்கா நடிக்கிறாங்களா???.
//

நயன்தாராவே இப்ப மொக்கை ஆயிட்டாங்க தல...

லோகு said...

அட்டகாசமான தகவல்கள் மாப்ள.. அதைவிட படங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

லோகு,
தலைவர் & செயலாளர்,
பொது அறிவு சிங்கம் 'ஜெட்லி' ரசிகர் மன்றம்,
திருப்பூர் கிளை..

ஜெட்லி... said...

@ யோ

என்ன இதெல்லாம்....
கொஞ்சம் ஓவர் பில்ட் அப் ஆக இருக்கே!!



@பிரபா

நன்றி நண்பரே....



@ புலிகேசி

நீங்க சொல்றது கரெக்ட்தான் புலி.



@ லோகு

பாராட்டுக்கு நன்றி...
ரசிகர் மன்றம்?? ஒன்னும் சொல்றதுக்கு இல்ல மச்சி...

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ஹூம் நாடு போற போக்கு சரியில்ல மச்சி..