Wednesday, October 7, 2009

காமம் - ஒரு பரிசோதனை - சில பார்வைகள் - 1

ரயில் பயணங்களிலும், ரயில் நிலைய காத்திருப்புகளிலும் ஒவ்வொரு நாளும் செலவிடும் மூன்று மணிநேரங்களில் என்னுடைய வாசிப்புகளின் பெரும்பகுதி நிகழ்கிறது. இந்த ரயில் பயணங்களில் நான் ஒரு பரிசோதனை செய்து பார்ப்பது வழக்கம். பையிலிருந்து புத்தகத்தை எடுத்தவுடன் சிறிது நேரம் சுற்றி இருப்பவர்கள் அதன் தலைப்பை பார்க்கும் படியாக சில நிமிடம் கையில் வைத்திருப்பேன், யாருமே கவனிப்பதுபோல் தெரியாவிட்டால் சற்று நகர்ந்து மற்றொரு கும்பல் அருகே செல்வேன். பெரும்பாலான நாட்களில் படுதோல்வியையே சந்தித்தாலும் சிறிதும் மனந்தளராது முயற்சியை தொடர்ந்து வருகிறேன். சில நாட்கள் ஓரிருவர் கவனத்தை கவர்ந்து விட்டேன் என்றால், சில நிமிடங்கள் வாசித்தபின், படித்து முடித்து விட்ட பாவனையில் புத்தகத்தை மூடி கையில் வைத்திருப்பேன், ஆனால் இதுவரை யாரும் என் கையிலிருக்கும் புத்தகத்தை பற்றி விசாரித்ததோ, கருத்துகள் கூறியதோ, வாங்கி பார்த்ததோ இல்லை, தமிழர்களின் தேசிய குணங்களில் ஒன்றான தோளுக்கு மேல் எட்டி பார்க்கும் சிலரும் நான் நிமிர்ந்து பார்த்தால் வேறு புறம் திரும்பிகொள்வார்கள்.

இவை அனைத்தையும் மீறி தலைப்பினாலேயே, பலரின் கவனத்தை ஈர்த்த புத்தகம் மகுடேஸ்வரனின் "காமக் கடும்புனல்".
'காதல் என்பது காமம் அணிந்திருக்கும் சமூக முகமூடி' எனக்கூறும் மகுடேஸ்வரன், காமத்தை மட்டுமே பாடுபொருளாக கொண்டு எழுதியுள்ள நானூறு கவிதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்

இந்த புத்தகத்தை என் பரிசோதனைக்காக கிட்டதட்ட மூன்று மாத காலம் பையில் வைத்து பயணித்திருக்கிறேன், இந்த நாட்களில் தலைப்பினால் கவரப்பட்டு அருகில் வந்தவர்களில் பள்ளி செல்லும் விடலை பருவதினரிலிருந்து, அறுபதை தாண்டிய வயோதிகர் வரை சகலரும் அடக்கம், அருகில் நிற்பவரின் வயதை பொருத்து நான் வாசிக்கும் (அல்லது வாசிப்பதாய் பாவனை செய்யும்) கவிதைகள் மாறுபடும், அவற்றில் சில

விடலை பருவத்தில் இருக்கும் மாணவராய் இருந்தால்

சூட்சுமத்தை
புணர்ந்து மகிழ்கிறது ஸ்தூலம்
சுயமைதுனம்


இருபதுகளில் இருக்கும் இளைஞர் எனில்

'உன்னை புணர விரும்புகிறேன்' என்று
நேரடியாகக் கூற இயலவில்லை
நூதனமாக ஆரம்பிக்கிறேன்
'உன்னை விரும்புகிறேன்'


நாற்பது வரை உள்ள நடுவயதினரானால்

ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது


அந்த மூன்று நாட்களில்
இந்தக் கணவன்மார்களின்
முகத்திலிருக்கும்
'உர்'ரைப் பார்க்கவேண்டுமே


நாற்பதை தாண்டியவராய் இருந்தால்

எத்தனை வருடங்கள்
ஆனாலும்
உடலை
அறிந்த அளவு
அறியமுடியாது போல
மனதை


உன்னுடலை
தீண்டித் தீண்டிக்
களைத்து விட்டேன்
இதுகாறும்
கண்மூடி முகந்திருந்த நீ
நாணபோதம் நீங்கி
என்னுடலை தீண்டி
வருடிக் கொண்டிருக்கிறாய்
நாம்
தாம்பத்தியத்தின் இரண்டாம் பாகத்திற்கு
வந்துவிட்டோம்


இது தவிர பொது ரசனைக்காக இக்கவிதை

நடிகையின்
ஆள் மாற்றுச் செய்திகளை
முந்தி வாசிக்கிறேன்
என் ஆர்வத்தின் அடியில்
வண்டலாய் படிந்துள்ளது
எனக்குக் கிடைக்காத ஏக்கம்


பெரும்பாலும் மேற்கூறிய வரிகளையே தாண்டுவோர் மிகக்குறைவு, இந்த கவிதைகளில் ஒன்றிரண்டை அவர் வாசித்து விட்டால், வேறு சில தீவிரமான கவிதை வரிகளை பார்வைக்கு இலக்காக்குவேன். படித்து முடித்த பின் சொல்லி வைத்தது போல் அனைவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று அசட்டு சிரிப்பு மற்றது பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்துவிட்ட அருவெறுப்பு, என்னை ஒரு புழுவை போல் பார்க்கும் பார்வை.

என் முயற்சியில் வெற்றியாக அமைந்த மற்றொரு புத்தகம் 'மோகமுள்', இதுவும் தலைப்பின் காரணமாகவே கவனமீர்த்தது, எனினும் உள்ளடக்கத்தை வாசிக்க தொடங்கிய அனைவரும் இரண்டாவது வாக்கியத்திலேயே அவர்கள் எதிர்பார்த்த 'விஷயம்' இல்லாதது கண்டு விலகிவிடுவார்கள்

இந்த இரு புத்தகங்களின் சோதனைகளும் எனக்கு தெரிவித்த முடிவு, மக்கள் தங்கள் மனதிற்குள் காமத்தை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள், மற்றவர் யாரும் அதனை கண்டுபிடித்திடாதவரை. வேறொருவர் தெரிந்துகொண்டார் என அறிகிற கணத்தில் அதை மூடிமறைத்து மேலே ஒரு முகமூடியை போட்டுக்கொள்கின்றனர்.

ஏன் இந்த மனோபாவம் என யோசித்தபோது, தோன்றிய எண்ணங்கள் அடுத்த பாகத்தில் ,


சங்கர்

நன்றி :
மகுடேஸ்வரனின் 'காமக்கடும்புனல்'
யுனைடட் ரைட்டர்ஸ்
சென்னை 86
விலை - ரூ 100 (கடந்த புத்தக கண்காட்சியில் வாங்கிய போது)

9 comments:

பிரபாகர் said...

நல்ல நல்ல புக்கா தான் ரெஃபெர் பண்றீங்க... வாழ்க உம் தொண்டு...

பிரபாகர்.

ப்ரியமுடன் வசந்த் said...

//மக்கள் தங்கள் மனதிற்குள் காமத்தை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள், மற்றவர் யாரும் அதனை கண்டுபிடித்திடாதவரை. வேறொருவர் தெரிந்துகொண்டார் என அறிகிற கணத்தில் அதை மூடிமறைத்து மேலே ஒரு முகமூடியை போட்டுக்கொள்கின்றனர்.//

100% உண்மை....

யோ வொய்ஸ் (யோகா) said...

இது பெரியவங்க சமாச்சாரம் நானெல்லாம் ரொம்ப சின்ன பிள்ஙை்க...

வெண்ணிற இரவுகள்....! said...

நானும் படித்து இருக்கிறேன் அன்பரே

சங்கர் said...

//நல்ல நல்ல புக்கா தான் ரெஃபெர் பண்றீங்க... வாழ்க உம் தொண்டு...

பிரபாகர். //

ஏதோ, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

சங்கர்

சங்கர் said...

//இது பெரியவங்க சமாச்சாரம் நானெல்லாம் ரொம்ப சின்ன பிள்ஙை்க... //

சொல்லவே இல்ல

சங்கர் said...

//வெண்ணிற இரவுகள்....!

நானும் படித்து இருக்கிறேன் அன்பரே //

தங்கள் கருத்து என்னவோ?

பித்தனின் வாக்கு said...

தங்களின் கட்டுரைகளில் பல உண்மைகள் உள்ளன. இது மறுக்க முடியாது. ஆனால் இதில் காமத்தை மட்டும் நேக்குடையதாக இருக்கின்றது. வாழ்க்கை என்னும் சாப்பாட்டிற்கு உப்பாய் இருந்த காமம் இன்று சாப்பாடாய் மாறிற்று. ஆனாலும் இந்த காமத்தை தாண்டிய ஒரு விசயம் உள்ளது நண்பரே. அதை எல்லாரும் அவரகள் இரத்தம் சுண்டும் போது மட்டும் அறிவார்கள். காமம் ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஒரு காரணம் என்ற கோணத்தில் எழுதுங்கள். வரவேற்க்கின்றேன். ஆனால் காமம்தான் அடிப்படை என்ற கோணத்தில் எழுதாதீர்கள். பின்னால் இது தவறு என்று உணரும் போது வருந்த வேண்டிவரும். நன்றி.

Sabarinathan Arthanari said...

arumai