Showing posts with label படித்தது. Show all posts
Showing posts with label படித்தது. Show all posts

Wednesday, August 4, 2010

கனகதுர்காவுடன் நான்....!!

கனகதுர்காவுடன் நான்....!!


கனகதுர்கா... இப்போ என் கூட தான் இருக்கா .ரெண்டு மாசம் முன்னாடி அவளை கே.கே.நகரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்தவுடனேயே புறட்டனும் போல இருந்தது, ரேட் கேட்டேன், 250 ரூபாய் என்றார்கள்... வாங்கி வந்துவிட்டேன்.ஹலோ ஒரு நிமிஷம்,நான் பேசிட்டு இருக்கிறது நம்ம பாஸ்கர் சக்தி அண்ணன் எழுதின கனதுர்கா என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்தை பத்தி மட்டும்னு சொல்லிக்க விரும்புறேன்....!! வம்சி புக்ஸ்வெளியீட்டு உள்ளார்கள்.

கனதுர்கா என்று ஒரு சிறுகதை தொகுப்பு இருக்கிறது என்று அண்ணன் தண்டோரா மணிஜி அவர்கள் ஒரு தடவை எழுதி இருந்தார். மேலும் அதில் வர்ற அழகர்சாமியின் குதிரைசிறுகதையை தான் 'வெண்ணிலா கபடி குழு' சுசீந்திரன் அடுத்த படமாக எடுக்க போகிறார் என்றும் கூறியிருந்தார். இதுக்கு அப்புறமும் புக்கை வாங்காம விட்ட எப்படினு...நேரா நம்மடிஸ்கவரி புக் பேலஸ் சென்று கனகதுர்கா மற்றும் மேலும் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.பதிவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் உண்டு.

சத்தியமா இந்த பதிவு புத்தக விமர்சனம் இல்லங்க....இந்த புத்தகத்தில் மொத்தம் 31 சிறுகதைகள் இருக்கு. இதில் நான் படிச்சு ரசிச்ச சில சிறுகதைகள்னு சொன்னா எல்லாத்தையும்சொல்லணும்...அதனால ரொம்ப பிடிச்ச....பாதித்த கதைகள்பத்தி மட்டும் சொல்றேன்...பாஸ்கர் சக்தி அவர்கள் தேனிபக்கம் என்பதால் இந்த தொகுப்பில் பல கதைகள் அங்கே நடப்பது போல் இருக்கும்... சில கதைகளில் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தான் தொகுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
*******************
அழகர்சாமியின் குதிரை:
எனக்கு எப்பவுமே ஒரு ஆர்வம் உண்டு அது ஒரு நாவல் அல்லது சிறுகதையை எப்படி படமாக எடுப்பார்கள் என்று பார்க்க ஆசை. அதனால இந்த கதையை தான் முதலில் வாசித்தேன். இந்த கதையில் பல கேரக்டர் வரும், நையாண்டி நக்கல் என்று குறைவில்லாமல் சுவாரசியமாக சென்றது.
நாமும் இந்த கதைக்குள் சென்றது போன்ற உணர்வு கண்டிப்பாக
ஏற்படும்.
ஊரில் இருக்கும் அழகர்சாமியின் வாகனமான உயிரில்லா குதிரை
காணாமல் போனதால் நடக்கும் சம்பவங்களே கதை. இந்த கதையில்
நாயகனாக நடிக்க போறவர் அப்புக்குட்டி என்று படித்தேன். நல்ல
தேர்வு தான். கண்டிப்பா படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது..
கதையை படித்தாலே பல இடங்களில் சிரிப்பு வரும்...அதுவும்
அந்த டைமிங் காமெடிகள் செம...!!
மகன் :
இந்த கதையில் வரும் பையன் தன் அப்பாவை பற்றி பேசுவதே
கரு. ஆனால் அப்பாவை பாராட்டி பேச மாட்டான்..மட்டம் தட்டுவது
போல் கதை செல்லும்... தன் அப்பாவை விட தன்னை உயர்வாக
நினைப்பான். தன் அப்பாவின் நினைவற்றால் நினைத்து கடைசியில்
அவன் கண்ணீர் சிந்தும் போது...உண்மையிலே எனக்கு தலையில்
சூர்னு ஏறிச்சு...பீலிங்க்ஸ்.... இந்த கதையை படிக்கும் போது மறைந்த என் அப்பாவின் நினைவும் வந்தது...!!சுஜாதாவோட பீட்டர் கதைக்கு அப்புறம் இந்த கதையை நிறைய பேர் கிட்ட இப்போ சொல்லிக்கிட்டு இருக்கேன்......
ஏழுநாள் சூரியன் ஏழுநாள் சந்திரன் :
இந்த கதை ஒரு சிறு பையனுக்கும் அவனது சித்தப்பாவுக்கும்
இடையே உள்ள உறவை மிக இயல்பாக காட்டுகிறது. இந்த
கதையை படிச்சு முடிச்சவுடன்...ச்சே.. நமக்கு இப்படி ஒரு
சித்தப்பா இல்லாமா போயிட்டாரே என்று வருத்த படவைக்கும்.
தன் அண்ணனுக்கு நேர்மாறான ஒரு கேரக்டர், எதிலும்
கோபப்படாமல் மனிதநேயத்துடன் இருப்பவராக அந்த
பையனுக்கும் காட்பாதர் ஆக வரும் சித்தப்பா கேரக்டர் சூப்பர்....!!


வேலப்பர் மலை :

தனது மாமாவுக்கும் தனக்கும் சிறு வயதில் நடந்த நிகழ்ச்சிகள்
மற்றும் தான் வலம் வந்த தென்ன மரதோப்பை ஏன் மாமா
தீடிர் என் விற்க போகிறார் என்று கதை ஒரு டச்சிங்காவே
சென்றது. நானும் அந்த பச்சை பசேல் கிராமத்துக்கு போன
உணர்வு கிடைத்தது.



நட்சத்திர கடை நொண்டன்:

செம நக்கல் நையாண்டி இந்த கதையில் உண்டு. அதே போல்
பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத கதை. நொண்டன் பேர் காரணம்
'நொண்டப்பய' என்பதே. ஜோசியகாரரை நொண்டன் நோண்டுவது
அதனால் அவர் சாபம் விடுவது.... கடைசியில் என்ன நடக்கும்
என்ற ஒரு ஆர்வம் கண்டிப்பாக படித்து கொண்டிருக்கும் போதே
வரும்..... அப்படியே மனகண்ணில் குறும்படம் பார்த்த திருப்தி..


வாட்டர் லூ :

இப்போதைக்கு நம்ம ஊரில் பல பேர் செய்து கொண்டிருக்கும்
வேலை தான் இது. அதான்ங்க ஏமாத்து வேலை, பிராடு பண்றது...
இதில் வரும் நாயகன் நெகடிவ் கேரக்டர்..அவர் செய்த பிராடு
வேலைகளை பட்டியிலிட்டு தன் மருமகனிடம் சொல்வார்,..
அவனையும் அப்படியே இருக்க சொல்வார்..கடைசியில் அவரே
ஏமாந்தும் போய்டுவார்....


உதயாவுக்கு திலகா சொன்ன கதை :

கண்டிப்பா இந்த கதையோட கிளைமாக்ஸ் இப்படி இருக்கும்னு
யூகிக்கவே முடியலை. காதல் தோல்வி பற்றி திலகா சொல்லும்
காரணங்கள் நன்றாக இருந்தது.


நாகம் :

நாகையா என்பவரை பற்றி கதை பேசுகிறது. பாம்பு விஷம்
முறிப்பவராக அந்த கிராமத்தில் இருக்கிறார். அனைவரும்
மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கின்றனர். தீடிர் என்று
ஊரில் ஒருவரது குடிசையை காலி செய்து அதை நாக கோவிலாக
மாற்றி விடுகிறார் இந்த நாகையா. கடைசியில் பாம்பு கடித்தே
நாகையா இறந்து போவது...கண்டிப்பா நமக்குள் பல கேள்வி
எழுப்பும்....

வீராசாமி பி.காம்.

இந்த கதையின் நாயகன் போல் நம்மூரில் இன்னும் சில பேர்
சுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.கண்டிப்பாக நாம்
அனைவரும் இந்த கேரக்டரை நம் வாழ்நாளில் சந்தித்து
இருப்போம். தான் தான் இந்த ஊரில் அதிகம் படித்தவன்
அடுத்தவன் பேச்சை கேட்ககூடாது என்று நினைத்து நினைத்து
மனம் முற்றியவன் பற்றி கதை...


விரியன் பாம்பு குட்டிகள் :

ஊர் ஒதுக்கு புரத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்த கருப்பு
நாயின் சோக வடுவே இந்த கதை. அந்த நாயை நினைத்தால்
ரொம்ப பாவமாக இருக்கிறது. ஆனா இங்கே மேல அந்த
நாயை காப்பாற்றுகிறேன் என்று அதை சாக அடிக்க முயற்சி
செய்வார்கள். கடைசி ஐடியாவில் அந்த நாய் செத்தும் விடும்...
இந்த கதையை படித்து முடித்ததும்...இது தான் நாய் படும்
பாடா...என்று யோசிக்க வைத்தது....!!



இன்னும் நிறைய பிடித்த கதைகள் இருக்கு...பதிவு ரொம்ப
பெருசா போற மாதிரி இருக்கு...அதனால் இப்போதைக்கு அப்பீட்டு...
உங்களுக்கு பதிவு பிடிச்சு இருந்தா ஓட்டு போடுங்கள்....



நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Tuesday, June 9, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....

************


படித்தது

சைவ ஜோக்:

ஒருவன்:"கல்யாணமே பண்ணிக்காம இருக்கறதுல என்ன
சௌகரியம்?"

இன்னொருவன்:"படுக்குற கட்டில்ல இருந்து ரெண்டு

பக்கமும் கிழே இறங்கலாம்".

************************
பார்த்தது:

இப்போலாம் புது விதமான பேஷன் நம்மூர் நடிகர் நடிகைகளிடம் தொற்றி கொண்டுள்ளது. அதாவது இப்போது நடிகர் நடிகைகள் அவர்கள் பிறந்த நாளை எதாவது ஒரு அநாதை இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


சரி அவுங்க கொண்டாடருது நல்ல விஷயம் தான். ஆனா அதை அடுத்த நாள் காலையில் பேப்பரில் படம் பிடித்து போடுவது கண்டிப்பா விளம்பரம்ன்னு தான் நினைக்க தோணுது. ஆனா நம்ம தல அஜித் தான் ரியல் ஹீரோ விளம்பரமே இல்லாம செய்வார். அவரை பார்த்தாவது இவர்கள் திருந்தட்டும்.

**********************************
பொன்மொழிகள்:

# 'தாராள மனசு' என்பது வாரி கொடுப்பதில் இல்லை.
தேவையை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் கொடுப்பதில்
தான் இருக்கிறது.


-பருஎர்.

# கால் இல்லாத ஒருவன், மற்றவர்களுக்கு ஓட கற்று

கொடுப்பது போலத்தான் - விமர்சகரின் பணியும்.

- கேனிங் பெல்லோக்.

******************************
பிடித்தது:


இந்த வாரம் நமது வலைப்பதிவு நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அனுபவமும், தலைவர் சுரேஷ்(பழனி) அவர்களின் சிறுகதையும், ப்ரியமுடன் வசந்தின் TOP 10 கனவுகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தன.... நீங்களும்
அவர்களது பேரை கிளிக் செய்து படித்து ரசிக்கவும்......

**************************



கடந்த சனிகிழமை பௌர்ணமி அன்று நான்,சித்து, நட்டு, யுவராஜ்,சுகுமார் அனைவரும் திருவண்ணாமலை கிரிவலம்
சென்று வந்தோம்.நான் அன்று தான் முதல் முறை
கிரிவலம் சென்றேன், அருமையாக இருந்தது.

சித்துவின் கார் ஓட்டும் திறமையை கண்டு நாங்கள்
அனைவரும் வி(ப)யந்தோம்(என்ன நட்டு, யுவராஜ் கரெக்ட் தானே!).அதுவும் அவர் ஷார்ப் கட் பண்ணும் போது எங்களுக்கு ஒரு கலக்கு கலக்கும் பாருங்க சான்சே இல்லை.சித்து அவர்கள் F-1 பந்தய ரேஸில் ஓட்டினால் நம் நாட்டுக்கு கோப்பை நிச்சயம், அடுத்த மைக்கல் ஷுமேக்கேர் ஆக வாழ்த்துக்கள் சித்து.

நண்பர் சுகுமாரை அன்று தான் முதன் முதலில் சந்தித்தேன்,
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், நல்ல எண்ணங்களை உடையவர். முன்பெல்லாம் பத்து ரவுண்டு அடித்தாலும் சும்மா கில்லி மாதிரி நிப்பாராம்(பி.கு: ராயபுரம் மைதானத்தில் அவர் ரன்னிங் ரவுண்டு போவதை சொன்னேங்க).

நான் ஒரு பத்து நிமிஷம் சித்துவிற்கு ஓய்வு கொடுப்பதற்கு சிறிது நேரம் காரை டிரைவ் செய்தேன், அப்போது நண்பர் நட்டு அவர்கள் தன் தாத்தா கண்ணுக்கு தெரிவதாக கூறியதால் அதோடு நான் கார் ஓட்டுவதை நிறுத்தி கொண்டேன்.

**********************************
பார்த்தது :


சமீபத்தில் டி.வி.யில் நான் மிகவும் ரசித்து பார்த்த விளம்பரம் ஹிந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் அவர்கள் நடித்த ரிலையன்ஸ்
நெட்வொர்க் விளம்பரம். அந்த விளம்பரம் என் மனதை மிகவும்
கவர்ந்தது. அதில் ஷூட்டிங் இடைவெளி நேரத்தில் தன் பழைய
நண்பர்களுக்கு போன் செய்து மகிழ்வார். எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்த உடன், ஒரு படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. அந்த விளம்பரத்தை இயக்கிய இயக்குனருக்கு மனம் கனிந்த பாராட்டுகள்.

***************************

பிறந்த நாள் வாழ்த்துக்கள் JOHNNY DEPP.

இன்று ஜூன் 9 ஆம் தேதி ஜானி டேப் (johnny depp) அவர்கள் 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜாக் ஸ்பரொவ் (jack sparrow) கதாபாத்திரம் மூலம் pirates of carribean படத்தில் நம் அனைவரது உள்ளதையும் கவர்ந்தவர்.இவர் மூன்று முறை ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார் ஆனால் இதுவரை அவருக்கு
கிடைக்கவில்லை.

இவர் ஆரம்ப காலத்தில் telemarketing வேலை செய்து கொண்டிரிந்தார்.பின் நடிகர் நிக்கோலஸ் கேஜ் மூலம் படங்களில் அறிமுகம் ஆனார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இவர் பல முறை போதை பொருள் வழக்கில் கைது ஆகிரிக்கிறார். ஒரு முறை பத்திரிகையாளரை தாக்கியதற்கும் கைதானார். ஆனா இதெல்லாம் அங்க சகஜம்,மேலும் இவர் நல்ல படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவருக்கு 46 வயது என்று என்னால் நம்ப முடியவில்லை......

*******************


மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 4 , பொடிமாஸ் 3 , பொடிமாஸ் 2 , பொடிமாஸ் 1 .

************

உங்கள்

ஜெட்லி


Saturday, May 30, 2009

பொடிமாஸ் .....

பொடிமாஸ் .....

********************************


ஜோக்:

(நண்பர்களின் வேண்டுகோள் படி இந்த வார சைவம் ஜோக்)


ஒருவன்: சார் " மனைவியை அடக்கி ஆள்வது எப்படி" ங்கற
புத்தகம் எங்கே இருக்கு?


லைப்ரேரியன்: கற்பனை நாவல் எல்லாம் கடைசி ஸெல்ப்பில்(shelf) இருக்கும்.


ஒருவன்: ? ? ? ? ?.


*********************************

சமீபத்தில் வலைப்பதிவு நண்பர் லோகுவுடன் நானும் சாட் செய்யும் போது என்னால் லோகுவின் நகைச்சுவை உணர்வை மேலும் உணர முடிந்தது, அந்த சாட்டில் இருந்து சில வரிகள் உங்களுக்காக

நான் : எந்த படத்தில் இருந்து உனக்கு அஜித்தை பிடிக்கும்?


லோகு : நெஞ்சினிலே.

(நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், விஜயை இதை விட மொக்கை பண்ண முடியுமா? )

*************************************

எனக்கு பிடித்த பொன்மொழிகள்:

# பறக்கும் முத்தத்தை கொடுப்பவர்கள் - படுசோம்பேறிகள்.


- பாப் ஹோப்.


# ஏமாற்றத்தை தள்ளி போடுவதற்கு பெயர்தான் - நம்பிக்கை.

-பரிட்டன் பால்.


**********************************************

(பாட்டி சும்மா போஸ் தான் குடுக்குது, யாரும் நம்பாதிங்க)



நாளைக்கு(31.5.09) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாட படுகிறுது. நேத்து ரேடியோல என்ன சொன்னாங்கனா நாளைக்கு எந்த கடையிலும் சிகரட் விக்க மாட்டங்களாம், அதையும் பாக்க தானே போறேம்.நம்ம நாட்டுல இந்த போதை பாக்குக்கு தடை பண்ணி பல வருஷம் ஆச்சு, ஆனா கடையுல சரம் சரமாக தொங்கத்தான் செய்யுது. முதல்ல சிகரட் தயாரிப்பதை நிறுத்தினாலே அனைவரும் புகை பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். அதை விட்டுட்டு ஒரு நாள் சிகரட் விக்காம இருந்தா யாரும் திருந்த மாட்டாங்க, அதான் உண்மை.



எதுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வலையுலக நண்பர்களே தயவு செய்து முன்னாடியே ஒரு பாக்கெட் சிகரட் வாங்கி வச்சுக்குங்க. நம்ம ஆளுங்க தமிழ் படம் வில்லனுங்க மாதிரி தீடிர்னு திருந்திற போறாங்க.


*************************************

படித்தது:


ஹிட்லர் யூதர்களை அடியோடு வெறுத்தவர். ஒரு தடவை ஒரு ஜோதிடரை அழைத்து அவரிடம் ஹிட்லர் "நான் எப்போது சாவேன்?" என்று கேட்டார்.



அதற்கு ஜோதிடர் "நீங்கள் யூதர்களின் விடுமுறை நாளன்று மரணம் அடைவீர்கள்" என்றார்.


"யூதர்களின் விடுமுறை நாள் என்றைக்கு?" என ஹிட்லர்
மறுபடியும் வினாவினார்.


"நீங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் விடுமுறை நாள்!"
என்று ஜோதிடர் பதிலளித்தார்.


****************************************

கேட்டது:

யுவனின் இசையில் சமீபத்தில் ஜெய் நடித்த வாமணன் படத்தில் ஒரு பாடல் வித்யாசமான மெலடியாக இருந்தது "ஒரு தேவதை" என்று தொடங்கும் பாடல் ரூப்குமார் ரதோட் என்பவர் பாடியுள்ளார் . டைம் கிடைச்சா கேட்டு பாருங்க.


************************************

பிடித்தது:

இந்த வாரம் இராகவன் , நைஜிரியா , கடைக்குட்டி ,சக்கரை சுரேஷ் இவர்களின் பதிவு அருமையாக இருந்தது, அதுவும் இராகவன் சார் பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது. நீங்களும் அவர்களின் பெயரை கிளிக் செய்து படிக்கவும்.


********************************************


நடந்தது:

டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்கள் சுதி ஏத்தி
கொண்டிருந்தனர். நான்கு ரவுண்டுக்கு அப்புறம் அதில் ஒருத்தன் தீடிர் என்று மது பாட்டில் லேபுளை பார்த்து தன் எதிரில் இருக்கும் நண்பனிடம்....


"மச்சான் நீ லவ் பண்றத பத்தி இந்த பாட்டில் லேபுளில்
போட்டிருகாங்க, தயவு செய்து லவ் பண்றதா விட்ரு மச்சி".


"டேய் குடிச்சிட்டு போலம்பாதாட, நான் லவ் பண்றதை பத்தி அந்த பாட்டில்ல என்னடா போட்ருக்கு"


"இங்க பாரு மச்சி மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடுன்னு, உன் லவ்வர் பேர் மது தானே..."


*********************

மேலும் என் பழைய பொடிமாஸ் படிக்க இங்கே அமுக்கவும் பொடிமாஸ் 3 ,
பொடிமாஸ் 2 ,
பொடிமாஸ் 1 .


********************

உங்கள்

ஜெட்லி.

Sunday, May 10, 2009

சந்திரபாபு, இவரை மாதிரி வாழ்ந்தவனும் இல்லை வீழ்ந்தவனும் இல்லை.


சந்திரபாபு என்ற பேரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது முக்கியமா அவரது பாடல்கள் தான் நான் ஒரு முட்டாளுங்க,... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...... குங்கும பூவே கொஞ்சு புறாவே.......
எனக்கு அவர் பாடிய அனைத்து பாடல்களுமே பிடிக்கும், அவரின் வாய்ஸ் என்னை சிறு வயதிலிருந்து ஈர்த்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. நான் சிறு வயதில் இருந்து படுக்கைக்கு போகும் போது அவரின் பாடல்களை கேட்டு கொண்டே தூங்குவேன்,அவரின் பாட்டு எனக்கு தாலாட்டு. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத பாடல்கள் அவை.

நான் சந்திரபாபுவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள திரு.முகில் எழுதியுள்ள கண்ணிரும் புன்னகையும் என்ற புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்தேன். அப்போது தான் சந்திரபாபு மாதிரி ஒருத்தன் வாழ்ந்ததும் இல்ல வீழ்ந்ததும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

சந்திரபாபு பொதுவாகவே மேல்நாட்டு பாணியில் இருக்க விரும்புவார், ஸ்டைல்ஆக இங்கிலீஷ் பேசுவார் அவர் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆயினும் மிஸ்டர் என்று சொல்லியே அழைப்பார் (எம்.ஜி.ஆரை கூட அவ்வாறே அழைப்பார்) யாருக்கும் பயப்பட மாட்டார். காக்க பிடிக்க மாட்டார். மனதில் பட்டதை பேசும் குணம் கொண்ட அவருக்கு இதனால் எதிரிகள் அதிகம் ஆயினர். அவருக்கு அவரின் திருமண வாழ்வு சந்தோசத்தை தரவில்லை அதனால் குடி பழக்கத்துக்கு ஆளானர்.
***********************************************************
(எனக்கு எப்படி வீடியோவை பதிவு ஏற்றுவது என்று தெரியவில்லை.
அதனால் கொஞ்சம் சிரமம் பாராமல் லிங்கை கிளிக் செய்து சந்திரபாபு வீடியோவை கண்டு ரசிக்கவும்.)




**********************************************************
சிவாஜியிடம் சபாஷ் மீனா கதை சொன்னார் தயாரிப்பளார், அந்த காமெடியன் வேடத்தில் சந்திரபாபு தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று கூறி சந்திரபாபுவை புக் பண்ண சொன்னார் சிவாஜி,

சந்திரபாபுவிடம் கதை சொன்னார் தயாரிப்பளார்.
உடனே சந்திரபாபு "யார் ஹீரோ ?"...

"சிவாஜி கணேசன்" என்று பதில் வந்தது.
"கணேசன், he is a good actor, எனக்கு என்ன சம்பளம்"? என்று கேட்டார் சந்திரபாபு.
"நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிரிங்க?" அப்படினார் தயாரிப்பளார் .
சந்திரபாபு "சிவாஜிக்கு என்ன சம்பளம்?"
"ஒரு லட்சம்"

"அப்போ எனக்கு லட்சத்தை விட ஒரு ரூபாய் அதிகம் தாங்க, ஒரு லட்சத்தி ஒரு ரூபாய்."
தயாரிப்பளார் டர்ராகி சிவாஜியிடம் வந்து விவரத்தை கூறினார்.உடனே சிவாஜி "அவன் கேக்குறத கொடுத்துடுங்க இதுல அவனுக்கு நல்ல scope இருக்கு, அவன் நடிச்சாதான் நல்ல வரும்" தயாரிப்பளாரும் அந்த சம்பளத்தை கொடுக்க ஒத்து கொண்டார். படமும் சூப்பர் ஹிட். .. அந்த படத்தை பார்த்துதான் நம்ம சுந்தர்.சி அவர்கள் உள்ளதை அள்ளித்தா
என்ற படத்தை எடுத்து வெற்றியும் அடைந்தார். இரண்டு படங்களிலும் வெற்றிக்கு காரணம் காமெடி ஜாம்பவான்கள் சந்திரபாபுவும், கவுண்டமணியும் என்றால் அது மறுப்பதற்கு இல்லை.
***********
நான் கண்ணதாசனின் புத்தகங்களை படித்ததில் கண்ணதாசன் சந்திரபாபுவால் பாதிக்க பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். கண்ணதாசன் அவர்கள் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்துக்கு சந்திரபாபு சரியாக படபிடிப்புக்கு வருவதில்லை, வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று வேலைகாரர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிடுவார் என்றும், எம்.ஜி.ஆர் அவர்கள் தலையிட்டு பின்பு தான் சந்திரபாபு ஒழுங்காக நடித்து கொடுத்தார் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார். கடைசியில் கவலை இல்லாத மனிதன் படத்தை தான் எடுத்து உலகத்தில் தன்னை கவலை உள்ள மனிதனாக ஆக்கி விட்டது என்பார் கண்ணதாசன்.
**************
திரையுலகில் யாரும் கட்டாத அளவுக்கு வீடு கட்டினார் சந்திரபாபு மாடி வழியே வீட்டுக்குள்ளையே காரை நிறுத்தும் அளவுக்கு பெரிதாக கட்டினார். பிறகு மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்து இயக்க விரும்பினார் இதற்காக எம்.ஜி.ஆர் அவர்களை புக் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு படத்துக்கு ஒத்துழைப்பு தராததால் சந்திரபாபு தன் சொத்துக்கள் அத்தனையும் இழந்தார். குடியால் அவருக்கு படங்களும் குறைந்தன கடைசியில் அவர் 1974
ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். சந்திரபாபு மறைந்தாலும் தன் பாடல்களால் அவரின் நடனத்தால் அவரின் காமெடியினால் அவர் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.........

Monday, April 27, 2009

பொன்னர் சங்கர் (அண்ணன்மார் வரலாறு)

வணக்கம் நண்பர்களே கலைஞரின் பொன்னர் சங்கர் புத்தகம் படித்தேன், சேரர் சோழர் பாண்டியர் வரலாற்றையே கேள்விப் பட்ட நமக்கு அவர்களன்றி இன்னும் சில வீரத் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு சான்றாக விளங்கியது இந்த வரலாற்றுக் காவியம்.

கலைஞர் எழுதியதில் நான் படித்த முதல் புத்தகம் இது தான், ஒரு எழுத்தாளராக அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம். முதலில் நிறைய கவிதை நடையாக தான் இருக்கும் என்று எண்ணி படிக்க தயங்கினேன் (நமக்கு அதெல்லாம் புரியாதே!!!!!!!!!!!) ஆனால் அவ்வாறு இல்லாமல் அனைவரும் படிக்கும் வகையில் மிக எளிய நடையில் தந்திருக்கிறார்.

கதை முழுவதும் கொங்குச் சீமையிலே நடைபெறுகிறது, கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் வேட்டுவ குலமக்களின் வாழ்கையை மிக அழகாக பிரதிபலிக்கிறது. அவர்கள் வாழ்கை முறை, உயர்ந்த பண்பு அவர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்பற்றும் மரபு கட்டிக் காத்த குல பெருமை எல்லாம் மிக சிறப்பாகவும் இயல்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கதையில் கலைஞர் என்னவோ அந்த காலத்துக்கே நம்மை அழைத்து போக முனையவில்லை, கல்கி கதைகளில் அவர் நம்மையே அங்கு கூட்டி செல்வார் ஆனால் அப்படி ஒரு உணர்வு எனக்கு இதை படிக்கும் பொழுது ஏனோ ஏற்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் பொழுது ஏதோ ஒரு திடுக்கிடும் திருப்பம் நமக்கு காத்திருக்கிறது அது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அதுவே கதையை வேகமாக படிக்க தூண்டும் ஒரு உந்து சக்தியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பதவி வெறி, பண வெறி, குரோதம், சூழ்ச்சி, ஆகியவற்றால் இரு குடும்பங்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டையால் ஏற்படும் இழப்புகள் ஏமாற்றங்கள் அழியும் சாம்ராஜியங்கள், இதை சுற்றி தான் கதை நகர்கிறது. பொன்னர் சங்கர் இருவரும் வீரத்திற்கும் தீரத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக் காடு.

நல்ல கதை அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி.

Thursday, April 23, 2009

சாரு நிவேதிதாவின் மூடுபனி சாலை புத்தக விமர்சனம்






மூடுபனி சாலை புத்தக விமர்சனம் :
எனக்கு பொதுவாக பயண கட்டுரைகள், அனுபவ கட்டுரைகள் படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் எழுதிய அனுபவங்களையாவது அறிந்து அதில் இருந்து நாம் எதாவது தெரிந்துகொள்வோம் என்ற ஒரு நாப்பாசை. ஒரு அனுபவ கட்டுரை என்பது படிக்கும் தன் வாசகர்களுக்கு எதாவது ஒரு வகையில் உருப்படியாக இருக்க வேண்டும்.நான் இந்த புத்தகத்தை வாங்கியதாக நண்பன் இலக்கியமிடம் கூறினேன் அவன் அதற்க்கு "அதுல என்ன இருக்க பொது எங்கே குடிச்சேன் யாரை *******ன்னு எழுத போறார் அதான் இருக்க போதுன்னு சொன்னான்". நான் இந்த புத்தகத்தில் படித்ததில் எதோ சில விஷயங்கள் மட்டுமே உருப்படியாக இருக்கிறது.மிச்சபடி சாரு அவர்கள் எங்கு குடித்தார் யார்குட குடித்தார் போன்ற விஷயங்கள் இருக்கிறது.
சாரு அவர்கள் கட்டுரையில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே தன் குடும்ப கதையையும் கொண்டு வந்து விடுகிறார்.நான் பொதுவாக சாரு அவர்களின் புத்தகத்தை அவ்வளவாக விரும்புவது இல்லை அவரின் zero degree என்ற நாவலை தான் நான் முதல் முதல் வாங்கிய சாரு சாரின் புத்தகம். அந்த புத்தகத்தை முதல் அத்தியாயத்தை படித்த உடன் வித்யாசமா எழுதிரிக்கிறார் என்று அடுத்த அடுத்த அத்தியாயத்தை படித்தேன் ஒரு சில அத்தியாயத்தை படித்த பிறகு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, ஆனால் அந்த நாவல் ஒரு மெகா ஹிட் ஆனா நாவல் ஏன் எனக்கு புரியவில்லை என்று யோசித்து சில தடவை படிக்க முயற்சி செய்தேன் ஆனால் திரும்பவும் எனக்கு போர் அடித்தது அந்த நாவலை தூக்கி அப்படியே ஓரம் வைத்துவிட்டேன்.
ஆனால் இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள சில விஷயங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, மேலும் அவர் இந்த புத்தகத்தில் சமூக சிந்தனைக்காக சில பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் இந்த புத்தகத்தில் தொடாத விசயமே இல்லை. பெரியார் பற்றி ஒரு அருமையான தகவலை கூறிருந்தார் அதாவது அவர் படித்த பெரியாரின் பயண கட்டுரையில் வெளியான பெரியாரின் அனுபவங்களை நமக்கு அளித்துள்ளார் பெரியார் அவர்கள் ரஷ்யாவில் உள்ள நிர்வாண சங்கத்தில் சென்று அங்கு நிர்வாண புகைப்படங்கள் எடுத்து கொண்டதையும், பெரியார் கூறிய சில நல்ல கருத்துகளை தொகுத்து நமக்கு ஒரு அத்தியாயத்தில் கொடுத்துள்ளார்.
அப்புறம் நம் சாமியார்களை பற்றி காரசாரமாக கருத்துக்களை அள்ளி தெளித்துள்ளார். உதரணமாக சங்கரசாரியாரை பற்றி அவர் கூறுகின்ற கருத்துகள் நெற்றியில் அடித்தது போல் உள்ளது.
ஆனா இவர் இந்த மாதிரி தேவை இல்லாத கணக்கெல்லாம் பண்ணிட்டு இருக்கார்ன்னு புரியுல. ஒரு அரசியல்வாதி தன் வாழ்நாளில் எத்தனை பெண்களை சந்திக்கிறார்கள் என்று ஒரு maths கிளாஸ் நடத்துறார் நீங்களே படிங்க " ஒரு அரசியல்வாதி ,தொழிலதிபர்கள், சினிமாகாரர்கள் தன் வாழ்நாளில் எத்தனை பெண்களை 'சந்திக்கிறார்கள்' என்று ஒரு கணக்கு கூறுகிறார் "வாரம் நான்கு என்று கொண்டால் மாதத்தில் 16 . வருடத்தில் 16x12=192......ஆகா இவர்கள் 40 வருடங்கள் 200x40=8000
பெண்களை 'சந்திக்கிறார்கள்'".
இந்த மாதிரி மொக்கை கணக்கெல்லாம் போட்டு பார்த்து நம்ம நேரத்தை வீணடிக்கிறார். மொத்தத்தில் நான் இந்த புத்தகத்தை படித்ததில் நல்ல கருத்துகளை கற்றதை விட பலான விஷயங்கள் தான் அதிகம். உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.


Sunday, April 19, 2009

கள்வனின் காதலி - ஒரு பார்வை

தலைப்பை பார்த்துவிட்டு நான் என்னமோ அந்த வெளங்காத படத்தை பற்றி தான் எழுதபோகிறேன் என்று தவறாக எண்ணி விட வேண்டாம், நேற்று அமரர் கல்கியின் படைப்பான கள்வனின் காதலி நூலை படித்தேன் அதை பற்றி விமர்சனமோ கருத்தோ கூறும் அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஞானி இல்லை, ஞான சூனியம் தான், இந்த பதிவில் கூட கண்டிப்பாக எவ்வளவோ எழுத்துப்பிழைகள் இருக்கும் அதை மன்னிப்பீர்களாக. 

நான் எப்பொழுதுமே கல்கி அவர்களின் காவியங்களுக்கு அடிமை, படிக்க ஆரம்பித்தால் வெறித்தனமாக வேறு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து படித்து முடித்த பின்பு தான் ஒரு திருப்தி ஏற்படும். அவர் எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் ஆகிய படைப்புகளை படித்து சொல்ல முடியாத ஒரு பரவசத்தில் மிதந்துள்ளேன். இந்த மூன்று காவியங்களையும் படித்து ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வரும் வாரங்களில் மறுபடியும் தொடங்கப் போகிறேன். அதை நினைத்தாலே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

நாள்:16-04-2009 
இடம்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோவை விரைவு வண்டி C1 பெட்டி இருக்கை எண் 60. 

வழக்கமாக என் வியாபார விஷயமாக நான் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வியாழன் தோறும் இந்த ரயிலில் ஏறி ஜோலார்பேட்டைக்கு செல்வது வழக்கம், அன்றும் அதுபோல் தான் புறப்பட்டேன். ஆனால் அன்று நான் செல்ல போகும் இடம் எதுவென்று அறியாமல். சிறிது நேரம் காலைப்பனி போர்த்திய புற நகர் பகுதியின் அழகை ரசித்தவாரே அன்றைய நாளேடுகளை புரட்டிக்கொண்டு நடைமனிதன் அதாங்க walkman பாடல் கேட்டுக்கொண்டு ஒருவாரு நல்ல moodil இருந்தேன். அப்பொழுது தான் அருமை நண்பர் திரு.நட்டு என்ற நடராஜன் அவர்கள் வழங்கிய இந்த புத்தகம் நினைவுக்கு வந்தது. நண்பர் அவர்கள் இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், புராண கதைகள் இன்னும் தமிழ் மொழியில் என்ன பிற உண்டோ அதில் மிகுந்த ஆர்வம் மற்றும் ஆளுமை உள்ளவராதளால் அவர் பரிந்துரைக்கும் புத்தகங்களை நான் படிக்க தவறுவதில்லை அதுவும் அமரர் கல்கி அவர்கள் புத்தகம் என்றால் கேட்கவா வேண்டும்?? சரி என்று படிக்க ஆரம்பித்தேன், அவ்வளவு தான் ரயிலின் சத்தமோ சாய் சாய், இட்லிவடை போன்ற ரயிலில் வரும் அணைத்து சத்தங்களும் இல்லாமல் ஒரு புதிய உலகத்துக்கே என்னை அழைத்து சென்று விட்டார் கல்கி அவர்கள்.

கதையின் தொடக்கத்தில் அந்த சிறிய கிராமத்தையும் அதன் இயற்கை வளங்களையும் வர்ணிக்கும் பொழுது அவை அனைத்தையுமே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார். கல்கி அவர்களின் தனிச்சிறப்பு இது தான், அவர் நம்மை அந்த காலத்துக்கே அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றுவிடுவார். அவ்வளவு எழில் கொஞ்சும் கொள்ளிடக்கரையில் (இன்றோ மணல் கொள்ளையால் பாழ் பட்டு கிடக்கிறது) முத்தையன்  நுழையும் காட்சி அவனின் குணாதிசயத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. அவனுடைய வாழ்கையை பார்க்கும் பொழுது பணம் இல்லையேல் உனக்கு ஒன்றும் இல்லை என்பது அந்த காலத்திலும் இருந்ததை உணர முடிந்தது. அவன் கல்யாணியின் மேல் உரிமையுடன் கோபம் கொள்வதும் அவள் அழுவதும் பிறகு அவன் தங்கையை சீண்டுவதும் அவ்வளவு இயல்பாக இருந்தது. 

கதைக்குள் புகாமல் மேலோட்டமாகவே கதாபாத்திரங்களையும் கதை சொன்ன விதத்தையும் மட்டும் நாம் பார்போம், இல்லையேல் இன்னும் இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு சுவாரசியம் போய்விடும். என் மனதை கவர்ந்த இரு நபர் அபிராமியும் சப் இன்ஸ்பெக்டர் சாஸ்த்ரிகளும் தான். அந்த காலத்தில் நம் மங்கையர்கள் எப்படி இருந்தனர் என்பதற்கு அபிராமி ஒரு சிறந்த எடுத்துகாட்டு. இசை ஞானம், குழந்தைத்தனம், பாசம், பெண்களுக்கே உரித்தான அணைத்து குணங்களையும் உள்ளடக்கிய அந்த பெண்ணை பார்க்கும் பொழுது ஆஹா இப்படி ஒரு தங்கை நமக்கு இல்லையே என்று ஒரு சின்ன வருத்தம் ஏற்படுகிறது. அடுத்ததாக சாஸ்த்ரிகள், அந்த காலத்தில் காவலர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினர் என்று நாம் தெரிந்து கொள்ள இவர் ஒருவரே போதும். முதலில் முத்தையன் ஒரு தவறும் செய்யவில்லை என்று தெரிந்த போது அவனுக்காக இறக்க படுவதும் பிறகு அவன் தவறு செய்யும் பொழுது அவனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று அவர் படும் பாடு, பிறகு அவன் தவிக்கும் பொழுது அவன் மேல் இறக்கம் கொள்வதும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.. 

அன்பினால் ஒருவன் வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் படுவான் என்பதை ஆசிரியர் மிக ஆழமாக கூறியுள்ளார் ஒரு சில காட்சிகள் நமக்கு கண்களில் நீர் வருகிறது முத்தய்யனை பார்த்து. ஆனால் எதற்கும் அஞ்சாமல் பாசத்துக்காக அவன் செய்யும் தியாகங்கள் தான் எத்தனை படும் வேதனைகள் தான் எத்தனை. தங்கைக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இருதலை கொல்லி எறும்பாக அவதியுறுகிறான்.

புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நமக்குள் என்னவோ போல் ஒரு துக்கம் சூழ்ந்து கொள்கிறது, முதலில் ஆசிரியர் மீது எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது, ஆனால் யதார்த்தம் சற்று வலிக்கத் தான் செய்யும் என்பதை புரிந்து கொண்டேன். இறுதியில் ஆசிரியர் கூறும் விஷயங்கள் அணைத்து காலத்துக்கும் பொருந்துவதாக அமைவது அவரின் சிறப்பு. நான் புத்தகத்தை முடிப்பதற்கும் திரும்பி இன்னொரு ரயிலில் சென்னை திரும்புவதற்கும் சரியாக இருந்தது, இந்த பயணம் என்றும் போல் இல்லாமல் ஒரு புது இடத்துக்கு சென்று வந்ததைபோல் உணர்தேன் என்று நான் சொன்னால் அது மிகை ஆகாது. ஏனோ அன்று முழுவதும் அந்த யதார்த்தம் என்னை குத்திக் கொண்டே இருந்தது. 

சரி நண்பர்களே எனது இந்த அனுபவம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த முறை சந்திப்போம். நன்றி வணக்கம்.