Showing posts with label யோகி. Show all posts
Showing posts with label யோகி. Show all posts

Friday, November 27, 2009

யோகி?? - விமர்சனம்

யோகி ??



இயக்குனர் அமீரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யோகி.
சுப்ரமணியன் சிவா கதையிலும் இயக்கத்திலும் அமீரின்
வசனத்திலும் திரைக்கதையிலும் இன்று உலகம் முழுவதும்
ரிலீஸ்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதாலும்
அமீரின் தயாரிப்பு என்பதாலும் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு
இருந்தது உண்மை.ஆனால் யோகி எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா??

பாசம் கிடைக்காமல் கொலை மற்றும் கொள்ளை
செய்யும் மனிதனாக அமீர் அவன் வாழ்வில் தீடிர்னு
ஒரு குழந்தை வந்தா என்ன ஆகும் இது தான் கதை.
அமீர் திரையில் தோன்றி முதல் பாடலில் குத்து மற்றும்
பரத நாட்டிய டான்ஸ் எல்லாம் ஆடுகிறார்.அமீரின்
கூட்டாளியாக பாடலாசிரியர் சிநேகன் ஒன்னும் பெருசா
வேலை இல்லை.மதுமிதா தன் பங்கை சிரிப்பாக செய்து
இருக்கிறார்.வின்சென்ட் அசோகன்,சுவாதிக்கா எல்லாம் வந்து
போகிறார்கள்.


ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.அமீரின் வசனம் படத்துக்கு பெரிய
ப்ளஸ்.முதல் பாதி முழுவதும் அமீரின் கேரக்டர் என்னவென்று
புரியவில்லை ஒரு வேளை சினிமா ரவுடி எல்லாமே இப்படிதான்
இருப்பாங்களா என்று டவுட் வருகிறது.ஒபெநிங் சீன் கொஞ்சம்
வித்தியாசமா இருந்தது.

காரில் குழந்தை கிடைத்தவுடன் அமீரின் தீடிர் மாற்றம் நமக்கு
விளங்க வில்லை.குழந்தையின் அழுகையை நிறுத்த அவர்
செய்யும் குறும்புகளை மற்றும் ரஜினி பாட்டுக்கு டான்ஸ்
ஆடுவது எல்லாம் ஒரு பத்து வருஷம் முன்னாடியே பார்த்த
காரணத்தால் சலிப்பு ஒன்றே ஏற்படுகிறது.அது ஏங்க புள்ளை
ரவுடி ஆனா அப்பாவை மட்டும் காரணம் சொல்றாங்க??
பிளாஷ்பேக் காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை அமீரின்
மேல் பரிதாபத்தையும் வரவழைக்கவில்லை என்பது மட்டும்
உண்மை.

படம் திருவான்மியூர் ஏரியாவில் நடப்பதாக காட்டுகின்றனர் அதுவும் நான் படம் பார்த்த ஜெயந்தி தியேட்டர் பெயரை கூட ஒரு சீனில் சொல்வார்கள்.ஆனால் திருவான்மியூரில் இருக்கும் அமீர் குழந்தையுடன் சிட்டி சென்டர் சென்று பர்ச்சேஸ் செய்து விட்டு சத்யம் சினிமாஸ் பாத்ரூம்க்கு போறது கொஞ்சம் ஓவர்.

கஞ்சாகருப்பு செம மொக்கை ,ஈ படத்தில் வருகிற ஜீவாக்கும்
அமீர்க்கும் ரெண்டு வித்தியாசம் தான் ஜீவா ஈ படத்தில் யாரையும்
கொன்று விட்டு கொள்ளை அடிக்க மாட்டார் யோகியில் அமீர்
கொலை செய்ய தயங்காதவர். ஜீவா ஈயில் பாசத்துக்கு எல்லாம்
ஏங்க மாட்டார் ஆனால் இதில் அமீர் குழந்தை வந்தபின் எதற்கெடுத்தாலும் கண்கலங்கி விடுகிறார் பின்னணி வேற அந்த வயோலின் இசை(முடியல!).

குழந்தையை ஊரே தேடுமாம் ஆனா நம்ம அமீர் அண்ணன்
மட்டும் குழந்தையை பையில் அல்லது கூடையில் வைத்து அடிக்கடி மதுமிதா வீட்டுக்கு போய் குழந்தைக்கு பால் ஊட்ட சொல்வாராம்,இதை வேற கடைசியில் போலீஸ் விசாரணையில் தான் கண்டு பிடிப்பார்கலாம்.காதுல ஒரு முழம் சுத்தலாம் ஒரு பூக்கூடையை சுற்றினால் எப்படி.அமீரின் இயக்கி நடிக்காத அடுத்த படைப்பான கண்ணபிரானை காண துடிக்கும் அமீரின் ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஜெட்லி டவுட்:

# அது ஏன் கிளைமாக்ஸ் சீன் மட்டும் கட்டி முடிக்கப்படாத
பில்டிங்ல வைக்கிறாங்க?? அதுவும் மொட்டை மாடியில்
போய் ஏன் நிக்கிறாங்க??. பதில் தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.

தியேட்டர் ரசிகர்கள் கமெண்ட்ஸ்:

# நல்லதானே படம் எடுத்துட்டு இருந்தார்..ஏன் இப்படி??

# கடைசியில் HULK மாதிரி கத்தி பைட்லாம் ஓவர் மச்சி.

இந்த விமர்சனம் பல பேரை சேர ஒட்டு போடவும் முக்கியமா
கமெண்ட் போடுங்க.

உங்கள்
ஜெட்லி சரண்.