
SPY NEXT DOOR :
நான் ஜாக்கிசானின் தீவிர ரசிகன் என்பது நீங்கள் அறிந்ததே.இந்த படத்தின் டி.வி.டி பல மாதங்கள் முன்னே வந்தாலும் தியேட்டரில் தான் பார்ப்பது என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன்.இந்த படம் ரகசிய போலீஸ் என்று தமிழில் வெளிவந்துள்ளது.ஆனா தியேட்டரில் தான் கூட்டம் இல்ல ஒரு வேளை சரத்குமார்,நக்மா நடிச்ச ரகசிய போலீஸ் படம்னு நினைச்சிட்டாங்க போல என்று நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது. உண்மையான காரணம் படத்தின் ரீலீஸ் பல தடவை அறிவிக்கப்பட்டு தள்ளி போனதே!!
சரி படத்துக்கு வருவோம், அருமையான கதைங்க...
அதாவது ஜாக்கி ஒரு உளவாளி ஆனால் பக்கத்துக்கு
வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு தெரியாது.ரெண்டு பேரும்
உயிருக்கு உயிராக லவ்வுகிறார்கள்.ஆனா பாருங்க அந்த
பொண்ணு கல்யாணம் பண்ண ஒரு கண்டிஷன் போடுது.
அது என்னனா ஜாக்கியை அந்த பொண்ணோட மூணு
பசங்களுக்கும் புடிக்குனும்னு அப்பதான் நம்ம கல்யாணம்
நடக்கும்னு சொல்லுது....மீதி வெள்ளித்திரையில் காணவும்!!
ஜாக்கி வழக்கம் போல் இல்லைனாலும் ஸ்டன்ட்இல் கலக்குகிறார்.
ஜாக்கி கிட்ட வேற என்ன எதிர்ப்பார்க்க போறோம் அவர் ஸ்மைல்
தான்,நன்றாக ரசிக்கலாம்.ஜாக்கியை சின்ன பசங்க படுத்தும் பாடு
செம!! அந்த சின்ன பொண்ணு ரொம்ப க்யுட்.ஜாக்கி ரசிகர்களுக்கு
இந்த படம் தலைவாழை விருந்து இல்லைனாலும் கையேந்தி
பவனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்!!
கூடிய விரைவில் ஜாக்கி ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது
karate kid !!
PHOONK 2: (பொம்மை 2 )
நான் PHOONK படத்தின் முதல் பார்ட் பார்க்கவில்லை ஒரு வேளை பார்த்து இருந்தால் இந்த பார்ட்டை பார்த்து இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். சுதீப்,இவரு கன்னட ஹீரோவாச்சே டான்ஸ் எல்லாம் நல்லா ஆடுவாரு U2 வில் பார்த்து இருக்கேன்.மற்றபடி இது ஒரு திகில் படம் என்று தான் பார்க்கசென்றேன்.பார்த்த பின் தான் தெரிந்தது ஒதுங்குவதற்கு ஏற்ற படம் என்று அதாவது வெயிலில் இருந்து ஒதுங்குவதற்கு என்று எடுத்து கொள்ளவேண்டும்.யுவர் ஆனர்!!
படத்தை பார்த்தால் முதல் பாதி முழுவதும் கொட்டாவியை தவிர வேறு ஆவி எதுவும் வர்ற மாதிரி தெரியலை.அதே ஆதிக்காலத்து தமிழ் படத்தில் வருவது போல் ஒற்றை பங்களா,புதுசா குடி வராங்க,கூட ஒரு வேலைக்காரி,அங்கே புதுசா வரும் வாட்ச்மேன்,அந்த பங்களா பக்கத்தில் வேறு வீடு எதுவும் இருக்காது காடு தான் இருக்கும்,அப்புறம் அந்த பங்களாவை மேலிருந்து கீழும் ஒரு சைடுஇல் இருந்து இன்னொரு சைட்லயும் அப்போ அப்போ மாத்தி மாத்தி காட்டறாங்க......முடியலல....
அப்போ படத்தில் பயமே இல்லையானு கேட்டா இருக்குனு தான் சொல்லணும் ரெண்டாவது பாதி ஓரளவுக்கு பயம் இருக்கு.ஆனா என்ன அதுவும் ஒரு template பேய் படம் காட்சிகள் தான்.எனக்கு நிறைய விஷயம் படத்தில் புரியல அந்த பொம்மைக்கு எப்படி உயிர் வருது?? அந்த அந்நியன் ரெமோ மாதிரி வர்ற பேய் பொம்பளை யாரு??
பயமே என்னை கண்டா பயப்படும்னு சொல்ல நான் மிர்ச்சி சிவா இல்லங்க. ஆனா என் பயமெல்லாம் phoonk 3 னு ஒரு படம் வந்துட கூடாதுனு தான். இதை பார்த்ததுக்கு 13 ஆம் நம்பர் வீடு படத்தை இன்னொரு தடவை பார்த்து இருக்கலாம்.கிளைமாக்ஸ் படத்தில் செம காமெடிங்க அந்த பேய் அங்கே அங்கே அப்போ அப்போ கண்ட கண்ட இடத்தில் அட் ஏ டைம் வந்து நிக்குமாம்.ஆனா மாடியில் இருந்து கிழே விழுந்து உடனே செத்துடுமாம். அப்புறம் இயக்குனர் பேர் போடுவாங்களாம் நாம வீட்டுக்கு போய்டுனுமாம்!!(பேய் படத்தில் லாஜிக் பார்த்த ஜெட்லி வாழ்க!!)
தயவு செய்து யாராவது இந்த படத்தின் இயக்குனர் மிலிந்த் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா அவர்களுக்கும் யாவரும் நலம் படத்தின் டி.வி.டி.யை அனுப்பி வைங்கப்பா...அதை பார்த்தாவது கொஞ்சம் வித்தியாசமா பேய் படம் எடுக்கறாங்கலான்னு பார்ப்போம். இன்னும் மூஞ்சியில் வெள்ளை பௌடரை அடித்து கொண்டு பேய் படம் பண்ணிருக்கோம் என்று எத்தனை காலம் தான் ஏமாத்துவாங்கனு தெரியலைங்க!!
இந்த படத்தை பார்த்து வந்த நம்ம நாட்டமை விஜயகுமார்
என்ன தீர்ப்பு சொல்றார்னு பார்ப்போம்:
"என்றா கண்ணு ஏதோ பேய் படம்னு சொன்னாங்க,ஆனா நான் பள்ளிக்கூடம் போகும் போது பார்த்த படம் மாதிரியில்ல இருக்குது.படத்தில் மியூசிக் போட்டவனை இந்த ஊரை விட்டே தள்ளி வைக்கிறேன்.அந்த பய பயம் காட்டுறேன்னு சொல்லி என் தூக்கத்தை கெடுத்துட்டான்.இனிமே யாரும் இவன்கூட இனிமே டாஸ்மாக் கடையில கட்டிங் போடகூடாது,வாட்டர் பாக்கெட் கொடுக்க கூடாது...இது தான் என்ற தீர்ப்பு... பசுபதி உட்றா வண்டியை!!"
தியேட்டர் நொறுக்ஸ்:
# வூட்லண்ட்ஸ் தியேட்டரில் தான்ங்க படத்தை பார்த்தேன்...
இன்டெர்வெல்லில் வாடா படத்தின் ஸ்டில்லை மறுபடியும்
பார்க்க நேர்ந்தது.அதில் சுந்தர்.சி அவர்களின் ஸ்டில் என்னை
பார்த்து கண்டிப்பா முதல் நாள் படம் பார்க்க வாடா என்று
அழைப்பது போல் இருந்தது.
# வாடா படம் எப்போ ரீலீஸ் ஆகும் என்று கேட்டதுக்கு டிக்கெட்
கிழிப்பவரிடம் சரியான பதில் இல்லை.சரி வாடா படத்தை நீங்க
பார்ப்பீங்களா?? என்று கேட்டதுக்கு வீட்டில் தன்னை நம்பி தான்
தன் குடும்பம் இருக்கிறது என்று சொன்னார்.சரி அப்போ ஆபரேட்டர் பார்ப்பாரா??னு கேட்டேன்.அவரு படம் போட்டுட்டு தூங்க போய்டுவாரு என்றார்.அப்போ யார்தான் படம் பார்ப்பாங்கனு கேட்டேன்.அங்கே வேலை செய்யும் நாலு ஆயாக்கு மட்டுமே அந்த தைரியம் இருக்கு என்றார்.
மறுபடியும் சொல்றேன் வாடா போறோம்.அது எந்த வருஷம்
ஸாரி வாரம் ரீலீஸ் ஆனாலும் சரி.ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
வாடா படம் ரீலீஸ் தாமதமாவதால் யாரும் தீக்குளிக்கவோ
அல்லது எண்ணெய் தேய்த்து குளிக்கவோ வேண்டாம் என்று
கம்பெனி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் ஓட்டும் பின்னூட்டமும்
தாறுமாறாக போடவும்!!
ஜெட்லி....