Friday, October 2, 2009
நாட்டு நடப்பு நல்லாத்தானே இருக்கு
செய்யுங்கடா, செய்ங்க
நன்றி
சங்கர்
Thursday, October 1, 2009
நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு(01.10.09)
என்னிடம் கேள்வி கேட்ட ட்ராபிக் சார்ஜன்ட்.
நான் சிவனேன்னு கடைல இருந்தேன், நம் நண்பர் ஒருவர்
வேலை முடித்து களைத்து வந்து என்னிடம் கொஞ்சம் கதை
பேசுவார்(அவர் யூத் இல்லை).அவர் உன்னை போல் ஒருவன்
படத்தை பத்தி ரொம்ப சிலாகித்து பேசினார்.அப்போ தான் அந்த
சம்பவம் நடந்தது......
ஒரு ட்ராபிக் சார்ஜன்ட் வந்து என்னிடம் காலண்டர் இருக்கா??
என்று கேட்டார்.
நான் ஓசியில் ஒரு காலண்டர் கேக்குறாரு போல நினைத்து
"அடிச்ச காலண்டர் தீர்ந்து போய் ஏழு மாசம் ஆச்சுங்க" என்றேன்
அப்பாவியாய்...
ரொம்ப டென்ஷன் ஆகி போனார் ட்ராபிக் சார்ஜன்ட்.
ஒரு வேளை நாளைக்கு அவர் ராசிக்கு என்ன போட்டு இருக்கு என்று பார்ப்பதற்கு கேக்குறாரு என்று நினைத்து
"நான் யூஸ் பண்ற காலண்டர் இருக்கு" என்றேன் நான்.
உடனே சார்ஜன்ட் "நாளைக்கு என்னப்பா??" என்றார்.
"நாளைக்கு காந்தி ஜெயந்தி" என்றேன்.
"ஹோ அப்படியா" என்று விறுவிறு என்று ரோட்டை நோக்கி
நடந்தார்.
என்னிடம் பேசிகொண்டிரிந்த நண்பர்" நாளைக்கு காந்தி பொறந்த
நாள், வைன் ஷாப் எல்லாம் லீவ்" என்று அவர் காதில் விழும்
படி கூறினார்.
ஆனா ட்ராபிக் சார்ஜன்ட் திரும்பி பார்க்கவே இல்லை,,
நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தியின்
பிறந்த நாளை கூட நினைவில் இல்லாமல் ஒரு அரசு அதிகாரி
முதல் நாள் இரவு எட்டு மணிக்கு வந்து நாளைக்கு என்ன
நாள் என்று கேக்கும் அளவுக்கு நாம் நாடு இருக்கிறது......
என்னத்த சொல்றது.... நாட்டு நடப்பு ரொம்ப கேவலமா இருக்கு!!
**********************************************
என்று தீரும் இந்த மந்தைவெளி பிரச்சனை:
மயிலாப்பூர் மற்றும் அடையார் நடுவில் இருக்கும் இடம் தான்
மந்தைவெளி.நான் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில்
இளநிலை படிக்கும் காலத்தில் இருந்தே ரோட்டை நொண்டி
நொங்கு எடுத்து விடுவார்கள். அந்த ரோட் சைடு போனாலே
புழுதி பறக்கும்.நான் முடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு ஆனா
இன்னும் அந்த சாலைகள் சரியாகவில்லை.

இப்போ திரும்பவும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.மயிலாப்பூர்
போனும்னா சுத்து சுத்துக்கிட்டு தான் போகணும்.இதை ஒரு
டைம் பாஸாக நம்ம குடிநீர் அல்லது கழிவு நீர் வாரியம்
பண்ணுதா என்று எனக்கு தெரியவில்லை.
பாவம் மந்தைவெளி மக்கள் வாகனம் போகும் தூசியே
அவர்களுக்கு பாதி நோயை கொண்டு வந்துவிடும்.எனக்கு
தெரிஞ்சு ஒரு ஆறு வருஷமா இந்த மாதிரி தொடர்ந்து நடந்துட்டு
வருது.இதற்கு எப்போது விடிவுகாலம் என்று தெரியவில்லை??
**************************************************
உங்கள்
ஜெட்லி சரண்.
Friday, September 25, 2009
நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு
வாழ்த்துக்கள்:
அழகர் மலை இன்னைக்கு தான் அம்பதாவது நாளை நிறைவு
செய்தது, அந்தோணி யார், சிவகிரி போன்ற படங்கள் நூறாவது
நாளை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது........

***********************************************
கடந்த வாரம் பேப்பரில் படித்த விஷயம்:
ஒரு குறிப்பிட்ட கட்சியினர் தங்கள் தலைவரை பற்றி
மலை மலை என்ற படத்தில் தவறான வசனம் வருவதாக
கூறி தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் செய்ய சென்றனர்.
இதிலே என்ன கொடுமைனு பாருங்க அந்த படம் அந்த
தியேட்டரில் ஓடவில்லை.ரைட், அப்புறம் கொஞ்ச நேரம்
கோஷம் போட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்களாம்.....
இதில் இருந்து எனக்கு ரெண்டு விஷயம் தெரியுது :
# அந்த குறிப்பிட்ட கட்சியினர் லேட்ஆக தான் படத்தை
பார்த்து இருக்கின்றனர், போன வாரம் தான் படம்
அம்பதாவது நாளை கடந்து நூறாவது நாளை நோக்கி
வெற்றி நடை போடுகிறது.(காமெடி இல்ல சீரியஸ், ஆனா
எந்த தியேட்டர்ல அப்படின்னு என்கிட்டே கேக்காதிங்க!!!)
# பேப்பரில் படம் விளம்பரத்தில் போடும் தியேட்டர்களில்
படம் ஓடுவது இல்லை. ஏன்? அப்புறம் எதுக்கு இந்த வெட்டி
விளம்பரம்?..... அதை சரியா போட்டாதான் என்ன....
எனக்கு தெரிஞ்சு மலைமலை படத்தை சத்யம் தியேட்டரில்
மூணு வாரம் ஒடிச்சு...ஆனா இவங்க அம்பது நாளை கடந்த பின்னும் சத்யம் தியேட்ட்டரில் ஓடுவதாக பீலா உட்டனர். ...
இப்ப பாருங்க இவங்க பப்பு தானா வெளியே வந்து ஒழுங்கா
ரெண்டு தியேட்டரில் தலா ஒரு ஷோ ஓடுவதாக விளம்பரம்
செய்கின்றனர். யாருக்கு தெரியும் அங்க படம் ஓடுதான்னு....
**************************************************
சில்லரை பையன்னு யாரையும் கூப்பிடாதிங்க:
இனிமே நீங்க யாரையும் சில்லரை பையன் அப்படின்னு
கூப்பிடமுடியாது.ஏன் என்றால் நாட்டுல எவ்ளோ
சில்லரை தட்டுப்பாடு அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சு
இருக்கும்னு நினைக்கிறேன்.இல்லனா நான் சில சாம்பிள்
சொல்றேன்.......
# ஒரு ஹோட்டல்லில் பார்த்த வாசகம்
"ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கொடுத்தால் டிபன் இலவசம்"
நாம சில்லரை கொடுத்தால் அவுங்க ஐநூறு ரூபாய் நோட்
கொடுத்து ஒரு வேளை டிபன் தருவார்கள். அதுகூட அவுங்க
சொல்றத தான் சாப்பிடணும்... இதோ அந்த லிஸ்ட்
* தோசை மற்றும் காபி
(அல்லது)
*பொங்கல் மற்றும் வடை
(அல்லது)
*நான்கு இட்லி மற்றும் காபி.

நாட்டுல சில்லரை கிடைக்க ரொம்ப கஷ்டம்ங்க....
இனிமே பக்கி பசங்கள திட்டனும்னா வேறு ஏதாவது
பேர் வச்சிதான் திட்டனும் போல......
இப்போ சில்லறைக்கு தான் மதிப்பு அதிகம்.......
சரி உடுங்க....யாரவது சில்லரை அதிகம் இருந்தா எனக்கு
போன் பண்ணுங்க......கடைசியா ஒன்னு சொல்றேன்
நான் ரொம்ப நாணயமானவன்.
***********************************
இந்தியாவிலேயே நம்ம ராயப்பேட்டை மெலடி தியேட்டரில்
மட்டும் தான் பால்கனி டிக்கெட் விலையும், கிழே டிக்கெட்
விலையும் ஒன்று,ஆமாம் அம்பது ரூபாய் மட்டும் தான்....
சரி நல்ல விஷயம்தானே அதுக்கு என்ன என்று கேக்குறிங்களா??
டிக்கெட் கவுன்டரில் அவன் மேல கிழே என்று கூறுவதில்லை.
நான் படத்துக்கு சென்றபோது ஒரு பேமிலி மேல வந்தார்கள்
பேர் தெரியாமல் வந்து திரும்பவும் திட்டி கொண்டே கிழே
சென்றார்கள்.
ஒன்னு மேல பத்து ஏத்துங்க,இல்ல கிழே பத்தை எறுக்குங்க.
******************************
இது போன்று அதி முக்கிய நாட்டு நடப்பு செய்திகள் அனைவரையும்
அடைய ஒட்டு போடுங்கள்.
உங்கள்
ஜெட்லி சரண்.
Thursday, August 27, 2009
நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு
நேற்று தினகரன் பேப்பரில் படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ....
சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் தமிழில் முன்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பெண் ஒருவரை நான்கு ஊழியர்கள்
அசிங்கமாக பேசி தாக்க முயன்றனர்.அந்த நான்கு ஊழியர்களும்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.என்ன கொடுமை சார் இது...?
தமிழ் நாட்டுல தமிழ்ல எழுதுன அடிக்க வராங்க,
அதுவும் வேறு ஊரில் இருந்து பிழைக்க வந்தவர்கள்.
சரி அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது, அதுக்கு ஏன் திட்டனும்,
தாக்க முயற்சி பண்ணனும்??..
தமிழ் நாட்டுல தமிழில் எழுதினால் தப்பா?
இப்படி தான் கொஞ்சம் காலம் முன்னாடி மணியார்டர்
விண்ணப்பத்தில் மலையாளம் மற்றும் ஹிந்தி
மட்டுமே உள்ள விண்ணப்பத்தை விற்றார்கள்...
வர வர தமிழன் கிள்ளு கிரையாக போய் கொண்டு
இருக்கிறான். தமிழ் நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லை.
வேற என்னத்த சொல்ல......
*******************************************
இனிமே என்னை மொக்கை படத்துக்கு கூப்பிட்ட
ஒதை உழும்... ஜாக்கிரதை!!!

******************************************************
வாமனன் படத்துக்கு மலேசியா கூட்டு போறாங்கோ,
ஆறுமனமே படத்துக்கு துபாய் கூட்டு போறாங்கோ,
கந்தசாமி படத்துக்கு பாரிஸ் கூட்டு போறோங்கோ......
இப்படியே போன படம் பார்க்கும் நபர்களுக்கு நெறைய
பரிசு தருவாங்க போல......இந்த மாதிரி படத்தை
பார்ப்பவர்களுக்கு தியாக செம்மல் விருது வழங்க வேண்டும்.
என் நண்பன் ஒருத்தன் இருக்கான் அந்த டாக் படம்
பிடித்திருந்தால் மட்டுமே டிக்கெட் காசு தருவான்....
அது போல் மேல உள்ள பரிசுக்கு பதில் படம் திருப்தி
தரவில்லை என்றால் காசை திருப்பி கொடுக்குற மாதிரி
திட்டம் வகுத்தால் நல்லா இருக்கும்.....
நீங்க என்ன நினைக்கிறிங்க???
*************************புடிச்சா ஒட்டு போடுங்க
உங்கள்
ஜெட்லி
Monday, July 20, 2009
நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு!
நேத்து காலையில பேப்பர் வாங்க போகும் போது ஒரு போஸ்டர் என் கண்ல பட்டுச்சு.வேற ஒன்னும் இல்லைங்க
நம்ம புரட்சி தளபதி(என்ன புரட்சி செய்தாரோ???) விஷால்
அவர்களின் தோரணை படம் 50வது நாள் வெற்றி போஸ்டர்
தான் அது.

அந்த போஸ்டர்ஆ பாக்குனுமே என்னமோ பெருசா சாதிச்ச
மாதிரி ஒரு ஸ்டில் குடுத்திரிக்கிறார்.ஒரு நிமிஷம், என்ன
சொன்னேன் பெருசா சாதிச்சிடாரான்னு கேட்டேன்ல.
கண்டிப்பா இது பெரிய சாதனை தான். தோரணை என்ன
மாதிரி படம்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
இந்த உலகத்துக்கே தெரியும்.அந்த மாதிரி படமெல்லாம்
50 நாள் ஓடுன கண்டிப்பா பெரிய சாதனை தான்.
அது சரி என் கேள்வியெல்லாம் இது ஒன்னு தான் மொக்கை
படம்னு உலகத்துக்கே தெரியும் அதை இரண்டு வாரம்
ஓட்டிட்டு விட வேண்டியது தானே. ஏன் அதை காசு
கொடுத்து ஒட்டி அப்புறம் ஒரு போஸ்டர் வேற அடிச்சு?.
இந்த இடத்தில் அஜித் பத்தி சொல்லி ஆகணும் அவர்
தன் படங்கள் மொக்கை ஆனால் காசு கொடுத்து ஓட
வைப்பதில்லை.அது போல் எல்லோரும் இருந்தால்
என்ன? இவங்கெல்லாம் எப்போ திருந்துவாங்க? என்று
ஏக்கத்துடன் இருக்கும் ரசிகனில் நானும் ஒருவன்...!!!!
***********************************
இரண்டு மாதங்களுக்கு முன்:
நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் "ஏன்டா நீ ப்ளாக்ல
சீரியஸ் ஆன விஷயமே எழுதமாட்டியா, சமுதாயத்தை
பத்தி இல்லன நம்மள சுத்தி நடக்குறத பத்தி" என்று
கேட்டார்.

"அதெல்லாம் எதுக்கு மச்சி, சும்மா ஜாலியா எழுதுனமோ
அவ்ளோதான்... ஆனா எனக்கும் ஒரு விஷயத்தை பத்தி
எழுதுனும்னு தோணுது..."என்றேன் நான்.
"என்ன"?
"நம்ம ஊர்ல இளைஞர்கள் நிறைய பேர் வேலைக்கு போகாம கொலை,கொள்ளை,வழிப்பறி....." நான் முடிக்கும்
முன்பே
"ப்ளாக் எழுதுறது!.." அப்படின்னு தீடிர்னு சொன்னான்,
அந்த சமயம் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியுல.
அப்போது நான் அதை சீரியஸ் ஆக எடுத்து கொண்டாலும்,
இப்போது அதையெல்லாம் ஒரு மேட்டர்ஆக எடுத்து
கொள்வதில்லை.(கேட்டு கேட்டு புளித்து விட்டது).
************************
புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க.....
உங்கள்
ஜெட்லி