(இந்த மாதிரி தெருவில உட்கார்ந்து ப்ளாக் எழுத கூடாதுனுசொல்லவந்தேன்.......)
அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமார் அண்ணன் தொடர்
பதிவுக்கு அழைத்து இருந்தார்... பொதுவா தொடர் பதிவுனா
ஏதாவது அனுபவம்,இல்லை பொதுவான கேள்வி கேட்பாங்க...
ஆனா இதிலே நம்ம ஜாதகத்தை தவிர எல்லாத்தையும்
கேட்குறாங்க... நாம பண்ண உட்டாலக்கடி வேலையெல்லாம்
வேற சொல்ல வேண்டி இருக்குது.... சரி ஏதோ என்னால்
முடிஞ்சது....
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஜெட்லி...
2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லைங்க...என் பேரு சரவணன். ஜெட்லினு பேர் வைக்க ஒரே
காரணம் அன்னைக்கு முதல் முறையா ப்ளாக் எழுதும்
போது இட்லி சாப்பிட்டேன்ங்க....மற்றொரு காரணம்...
ஜாக்கி தான் நம்ம பேவ்ரைட் ஆனா ஏற்கனவே ஜாக்கி சேகர்
அண்ணன் இருக்கார்னு...எல்லோருக்கும் தெரிஞ்சா பேரா
வைப்போம்னு ஜெட்லினு வச்சிக்கிட்டேன்...!!
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
ஏன்டா காலடி வச்சேனு மூணு நாலு பேரு அசிங்க அசிங்கமா
தீட்னாங்க...என்னது அதை கேட்கலையா...சரி... நான் காலடி
எடுத்த வச்ச அன்னைக்கு மழை,புயல் எல்லாமே வந்தது...
ஆனா படிக்க ஆளுங்க தான் வரல என்பது வேறு விஷயம்...!!
அந்த கொடுமையை வேற சொல்லனுமா... எனக்கு ரொம்ப
தெரிஞ்ச நாலு பேருக்கு போன் பண்ணி படிக்க சொல்வேன்...
அதிலிருந்து அவர்கள் என் போன் வந்தாலே அட்டன்ட் செய்வதில்லை....இதை விட உச்சபட்ச கொடுமை என்னன்னா
என் பால்ய நண்பன் ஒருத்தன் அடிக்கடி வீட்டுக்கு வருவான்..
அவன் வரும் போது சிஸ்டத்தில் என் ப்ளாக் ஓபன் பண்ணிட்டு..
படிடா என்று கொடுமை படுத்துவேன்... அவனும் ஒரு
மாசம் பார்த்தான்..அப்புறம் வீட்டுக்கே வரது இல்லனா
பார்த்துக்குங்க... இந்த மாதிரி பல டெர்ரர் வேலை பார்க்கணும்...!!
உங்கள் ப்ளாக் பிரபலம் அடைய....
(பி.கு)
உங்க வீட்ல சொந்தகாரங்க ரொம்ப நாள் டேரா போட்டங்கனா..
நம்ம ப்ளாக் ஓபன் பண்ணி உடுங்க...ஓடி போயிருவாங்க....!!
அவ்வளவா எதுவும் சொல்றது இல்ல...சும்மா டூர் போன அதை
பத்தி பதிவு போடுவேன்...வேற ஒண்ணும் ஷேர் பண்ணிக்கிறது
இல்ல... சினிமா எனக்கு புடிக்கும் அதனால் அதை பத்தி
மட்டும் அதிகம் ஷேர் பண்ணிப்பேன்..... இல்லைனா காரணம்
சிம்பிள்... நம்மை பத்தி எழுதி எதுக்கு இன்னும் அதிகமா
மொக்கை போடணும்னு தான்...
6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பொழுது போவமா தான் முதல்ல வாரத்துக்கு அஞ்சு பதிவெல்லாம்
போட்டுட்டு இருந்தேன்...இப்ப வர வர வேலை அதிகமா போச்சு...
படம் பார்க்க போறதே திண்டாட்டம் ஆகி போச்சினா பாருங்க..
சாம்பாதிக்கிற ஆசையெல்லாம் இல்லைங்க...நாலு பேருக்கு
நல்லது பண்ணனும், அவ்வளவுதான்...!!
7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
நண்பர்களுக்கு இந்த ஒரு கொடுமை பத்தாதா??
பல வலைப்பக்கங்கள் ஆரம்பிக்க நான் ரெடி...படிக்க நீங்க
ரெடியா.... கவிதைக்கு ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சுரவா??
சாம்பிள் :
அண்டங் காக்க கருப்பு...
பக்கத்துக்கு உட்டு சொவரு வெளுப்பு...
பழயதுல போடு உப்பு...
நாலு நாள் குளிக்கலைனா நீ கப்பு...!!
மேல உள்ள கவிதை குறித்து அனைத்து வித உரிமைகளும் @ஜெட்லி..!!
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
இந்த தொடர்ப்பதிவை ஆரம்பிச்சவர் மேல தான் எனக்கு ரொம்ப
கோபம்...எப்படி கோத்து விடுறார் பாருங்க...யார் அவர்னு தெரிஞ்சா
சொல்லுங்க.....
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
என் முதல் பதிவே அருந்ததி படம் விமர்சனம் தான்...தியேட்டர்ல
பத்து பேர் இருந்தாலும்..படம் நன்றாக இருந்தது... யார் படிக்க
போறா என்று நினைத்து கொண்டிருந்தால்..சுரேஷ் பழனியிலிருந்து
அண்ணன் தான் முதல் பின்னூட்டம்...மறக்க முடியாதது...
அப்புறம் நண்பர் சித்து உறுதுணையாக இருந்தார்...
10 . கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்
ஏன் விட்டா பத்திரத்தில் கையெழுத்து கேட்டு வாங்குவீங்க போல...
ரைட் நான் கிளம்புறேன்... என்னை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லங்க....
இதனை தொடர அழைக்க விரும்புவது...
எழுதாத நண்பர்கள் அனைவரையும்....
ஆனா இந்த தொடர் பதிவில் ஏதோ உள்குத்து இருக்குனு நினைக்கிறேன்...தொடர போறவங்க பார்த்து ஹன்டல் பண்ணுங்க....

இன்னுமாட நீ ப்ளாக் எழுதுற...அப்படின்னு எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா கத்தி எடுத்துட்டு வருது...இப்போதைக்கு எஸ்கேப்...
புடிச்சவங்க ஓட்டு போடுங்க....
நன்றி
ஜெட்லி...(சரவணா...)
