Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Wednesday, May 13, 2009

முடிந்தது தேர்தல்


அப்பாடா ஒரு வழியா தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்தது, தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட வண்முறை வெறியாட்டம் குறைவாகவே இருந்தது. எங்கள் பகுதியில் அமைதியாகவே தேர்தல் நடந்தது, நான் மதியமே சென்று ஓட்டு போட்டு விட்டேன் பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. அடிக்கடி கருப்பு வெள்ளை சீருடையில் இரு கழகங்களின் குண்டர் படை வந்து தேர்தல் நடப்பதை பார்வையிட்டு சென்றுக் கொண்டிருந்தது. நான் ஓட்டு போட்ட சாவடியில் மூன்று பாகங்களின் வாக்காளர்கள் போடலாம் ஆனால் காவலுக்கு இருந்ததோ வெறும் இரண்டு சிரிப்பு போலீஸ் தான், இத்தனை கம்பெனி அத்தனை கம்பெனி துணை ராணுவம் வந்தது என்று செய்தியில் சொன்னார்களே அவர்கள் எங்கே? புல்லு புடுங்க போய்ட்டாங்களா?? நான் எதிர்பார்த்து போலவே மதியம் மேல் குத்துங்கம்மா ஓட்டு நம்ம நாக்க மூக்க சின்னத்துக்கு என்று ஆரம்பித்து விட்டனர், என் நண்பன் நான்கு மணிக்கு சென்றவன் இதைக் கண்டவுடன் ஓட்டு போடாமலே வந்து விட்டான்.

ஐஸ் ஹவுஸ் தொகுதியில் குப்பை தொட்டி தேர்தலில் நடப்பது போல வண்முறை வெறியாட்டம் அவிழ்த்து விடப் பட்டது, தொகுதியே போர்கோலம் பூண்டது. காவல் நிலையத்திலே வேட்பாளர் தாக்கப் படுகிறார் என்றால் கழக ஆட்சி எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டால் அது உதய சூரியனில் சிகப்பு விளக்கு எரிகிறது என்று அம்மையார் கூறுகிறார், எனக்கு என்னவோ நேற்றைய மின் வெட்டுக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக தான் தெரிகிறது. பொதுவாக மின் வெட்டு ஏற்பட்டாலும் ரயில் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கும் ஆனால் நேற்று அப்படி இல்லை அனைத்துமே இருளில் மூழ்கின. என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.


வட சென்னையில் சில இடங்களில் வோட்டுக்கு நூறு முதல் இருநூறு வரை வழங்கப்பட்டதாக கேள்வி, என்னை பொறுத்த வரையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தவறில்லை. அவர்கள் வாரி வழங்கும் பணத்தை தாராளமாக பெற்றுக் கொள்ளுங்கள் ஆனால் யாருக்கு நீங்கள் ஓட்டு போடுவது என்று முடிவு செய்தீர்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள். என்ன இருந்தாலும் நம் பணம் தானே, அவர்கள் நம் ஓட்டை பெற்றுக் கொண்டு நமக்கு துரோகம் செய்கிறார்கள் நாம் அவர்கள் குடுக்கும் பணத்தை பெற்று துரோகம் செய்வோம், எந்த தவறும் இல்லை.


மக்களின் மனநிலையை பார்க்கும் பொழுது ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை அதனால் இரு நாட்களுக்கு எந்த வேட்பாளருக்கும் தூக்கம் வரப் போவதில்லை (குறிப்பாக கை சின்னத்தவர்கள் நம்பிக்கை இல்லாமல் தான் இருப்பார்). திருமங்கலம் தொகுதியில் அஞ்சா நெஞ்சன் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மார்தட்டினார் அதே போல் நடந்தது (எப்படி என்று அனைவரும் அறிவர்) அதே போல் தி.மு.க முக்கிய வேட்பாளர்கள் சரி வர பிரச்சாரம் கூட செய்யாமல் மிகவும் தைரியமாக பேட்டி அளிக்கின்றனர் அதை நினைக்கும் பொழுது இங்கேயும் பல உள்ளடி வேலைகள் நடந்திருக்குமோ???

ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த நம்ம Gaptain அவர்களை பேட்டி கண்டால் அனைவரையும் போல் நாற்பதும் நமதே என்றார், சரி எப்படி இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர் என்றால் "மற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்களோ அதே போல் தான் நானும் சொல்கிறேன் அஹ்ங்க்க்!!!!!!!!" என்று கூறுகிறார். என்ன கொடுமை இது??? நான் அவர்கள் போல் இல்லை எனக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்து பாருங்கள், உணவகத்துக்குள் சென்று பார்த்தல் தான் தெரியும் அதன் சுவை சும்மா வெளியில் பார்த்துவிட்டு சென்றால் தெரியாது என்று மொக்கையாக பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது தான் அதே குட்டையில் ஊறிய மட்டை என்பதை நிரூபிக்கிறார். பார்ப்போம் இவர் பெரும் வாக்குகளை.

அடுத்ததாக நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல என்ற ரேஞ்சுக்கு ஒருவர் பலரை இம்சை செய்து வருகிறார், அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார் தான் "சும்மா ஆ ஊ நா ஆண்டவன் சொன்னா நிச்சயம் அரசியலுக்கு வருவேன் வெங்காயம் நறுக்குவேன் புல்லு புடுங்குவேன்" என்று பாவம் அவரது அதி தீவிர ரசிகர்களை இம்சிக்கிறார், சரி அவரும் தான் என்ன பண்ணுவாரு குசெலனிலேயே அவர் தெளிவா சொல்லிட்டாரு ஆனாலும் சும்மா தொந்தரவு தந்தா ஏதாவது ஒரு bitta போடவேண்டியது தான் என்று அடிச்சு விடறாரு.

சரி இவ்வளவு நேரம் மொக்க போட்டுட்டு ஏதாவது கிச்சு கிச்சு மூட்டலனா உங்ககிட்ட யாரு தர்ம அடி வாங்கறது? சங்கதி இதுதாங்க இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் டாக்டர் நடிகர் கட்சி ஆரம்பிக்க போறதா கோடம்பாக்கத்து பட்சி ஒன்னு சொல்லுச்சு, நிறைய பதிவர்கள் இத பத்தி ஏற்கனவே எழுதி இருக்காங்க அதனால அந்த செய்து உண்மையாவே நடக்கனும்னு நாம பிரார்த்திப்போம். இவரோட இம்சை தாங்க முடியல.

சரிபா நான் கெளம்புறேன் காத்து வரட்டும், யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்க அப்புறம் அழுதுடுவேன்.

Monday, April 27, 2009

தமிழ்நாட்டின் ஒ(சா)பாமா J.K.ரித்தீஸ்

இந்தியாவின் ஒ(சா)பாமா எங்கள் அண்ணன் J.K.ரித்தீஸ்


வாக்குறுதி:

எங்கள் அண்ணன் வீரத்தளபதி எம்.பி ஆனால் வீட்டுக்கு ஒரு 2 wheeler மற்றும் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் வழங்கப்படும்.

பொதுஜனம்: ஹ்ம்ம் இல்ல பத்தாது...வீட்டுக்கு ஒரு டிராக்டர் வேணும்.
____________________________________________________________
வாக்குறுதி:

எங்கள் அண்ணன் அள்ளித்தரும் கண்ணன் ரித்தீஸ் அவர்களை டெல்லிக்கு அனுப்பினால் ஒரு ஆளுக்கு 2500 வழங்கப்படும்.

பொதுஜனம்: அய்ய் அஸ்கு மதுரையுல ஒருத்தர்க்கு 5000 தராங்களாம்.

____________________________________________________________

வாக்குறுதி:

வாழும் வள்ளல் பாரியின் வழி வந்த J.K.ரித்தீஸ் அவர்கள் வெற்றி பெற்றால் அனைவருக்கும் தினமும் பிரியாணியும் சரக்கும் தரப்படும்.

பொதுஜனம்: அவ்ளோதான இது பத்தாது..இன்னும் வேணும்.
_____________________________________________________________



வாக்குறுதி:


எங்கள் அண்ணனை நீங்கள் வெற்றி பெற செய்யா விட்டால் நம் ஊரில் உள்ள கேபிள் டி.வியில் தமிழ்நாட்டின் அர்னோல்ட் ரித்தீஸ் அவர்களின் படம் தொடர்ந்து ஒளிபரப்ப படும்.

பொதுஜனம்: அய்யோஅய்யோ...நாங்கெல்லாம் அவருக்கே ஒட்டு போட்டுர்ரோம்...எங்களுக்கு ஒண்ணும் வேணாம், அவரு படத்தல மட்டும் நடிக்காம இருக்க சொல்லுங்க.!

இந்த இடுகை வெறும் கற்பனை மட்டுமே... சிரியிங்கள் முடிந்தால் சிந்தியிங்கள்
மறக்காம TAMILISHil வாக்கு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

Friday, April 24, 2009

இவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்!

வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு
போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."


ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"


கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."


ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."


ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."

விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."


வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"


தங்கபாலு : "வேணா... வலிக்குது...அழுதுருவேன்..!"


சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"


அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"


மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"


மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"


லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."


பிரணாப் முகர்ஜி : "முடியல..."


திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."


சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"


கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."


ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"


விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"


மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"

Tuesday, April 14, 2009

தேர்தல் களத்தில் இளம் தொழிலதிபர்

சரத்பாபு அவர்கள் இளம் தொழிலதிபர் ஆவார் இவர் பிட்ஸ் பிலானியில் பட்டம் பெற்றவர். இவர் புகழ் பெற்ற கல்லூரி மற்றும் ஆபீஸ்களில் கான்டீன் நடத்துகிறார் இவரிடம் பல பேர் பணிபுரிகிறார்கள். திரு.சரத்பாபு அவர்கள் நம் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர். இவரின் அம்மா இட்லி கடை நடத்தி தன் பிள்ளைகளை படிக்க வைத்தார். தற்போது வரும் தேர்தலில் சரத்பாபு அவர்கள் சுயட்சையாக தென்சென்னை பகுதியில் நிற்கிறார்.

தற்போதுள்ள இளைஞர்கள் அரசியலை சாக்கடை என்று ஒதுங்கும் நேரத்தில் சரத்பாபு ஒரு நம்பிக்கையான முடிவு எடுத்துள்ளார். சரத்பாபு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது அவரின் தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியை தருமா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். சரத்பாபு வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.

Wednesday, April 8, 2009

மன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி



தமிழ்ப் பேரரசு'
என்ற கட்சியை ஆரம்பிக்கிறார் நடிகர் மன்சூர் அலி கான்.


இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடகமாடுகின்றன. இலங்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

ஈழதமிழர் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கொள்ளிடத்தில் இருந்து கும்பகோணம் வரை நடை பயணம் நடத்தப்பட்டது. நானும் அதில் பங்கேற்றேன். இப்போது காங்கிரஸ் வாழ்க என்று விடுதலை சிறுத்தைகள் கூறிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்கிறார்கள். மக்களை ஏமாற்றி பார்க்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இலங்கை  தமிழர்கள் படுகொலைக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், பாமகவுக்கும் முழு பொறுப்பு உண்டு.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நான் சில தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தி மக்களின் எண்ணங்களை தெரிந்து கொண்டேன். ஒரு காலத்தில் அரசியல் பிரமுகர்கள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தார்கள். அவர்கள் ஊழல் காண்டாமிருகமாக மாறி வருவதை மக்கள் விரும்பவில்லை.

எவ்வித ஆதாயத்தை எதிர்ப் பாக்காமல் மக்கள் எண்ணங்களை பூர்த்தி செய்ய 'தமிழ்ப் பேரரசு' என்ற அரசியல் கட்சியை இன்னும் 6 மாதத்துக்குள் தொடங்குவேன்.

வரும் தேர்தலில் தனி ஆளாக நின்று போட்டியிடுவேன். திமுக, பாமக, தேமுதிக போட்டியிடும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் 


நம் கமெண்ட்.: இவரே ஒரு பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சிறை சென்று வந்த தியாகி இவர் இலங்கையில் நடக்கும் கற்பழிப்பு கொடுமையை பற்றி பேசுகிறார். உண்மையான தமிழன் ஏமாற மாட்டன் அப்புறமா உங்களுக்கு இவ்வளவு தைரியம்?? இதில் கருத்து கணிப்பு நடத்தி மக்கள் எண்ணங்களை புரிந்து கொண்டாராம்!!! இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது....... தனி ஆளாக போட்டி இடுவதெல்லாம் சரி தான் உங்கள் சொந்த தொகுதியில் போட்டி இடுங்கள் அப்படியே உங்கள் ஓட்டை உங்களுக்கே போடுங்கள் இல்லையேல் ஒரு ஒட்டு கூட வாங்காமல் வரலாறு படைத்தது விடுவீர்கள். எனக்கு அந்த ஊழல் காண்டாமிருகம் மேட்டர் தான் நெம்ப பிடிச்சிருக்கு.

அழகிரி உயிருக்கு ஆபத்து..........














சென்னை: அழகிரியை என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ தெரியாது. அவர் எந்தத் தியாகத்துக்கும் தயாராக உள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட், பார்வர்டு பிளாக், பாமக, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், தேசிய லீக், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (எங்கே
ஆ.இ.ச.ம.கமற்றும் ஆ.இ.ந.ம.க.??)

இந் நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரை:
நமது அழகிரி அங்கே போட்டியிட விரும்பித் தலைமையிடம் விண்ணப்பித்திருக்கிறார் என்றதும்; ஏ யப்பா; என்ன குதி குதிக்கிறார்கள். அழகிரி; பாவம் (????) அந்தப் பிள்ளையைக் (பிள்ளையா???) கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?.அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா, பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!.அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும்."இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' (இங்கே நல்ல காரியம் என்று எதை குறிப்பிகிறார் இவர் போன பிறகு மதுரை மக்களுக்கு ஏற்படும் நன்மையையா??) என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திருமங்கலத்தில் நடந்ததை நமது தலைவர் மறந்து விட்டார் போலும், மக்கள் மரப்பார்களோ?

மேலே உள்ள படத்தில் கலைஞர் மக்களை பார்த்து சிரிப்பதாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

நன்றி : தட்ஸ்தமிழ்.

Saturday, March 28, 2009

நம்ம ஊரு காமெடி- பார்ட் இரண்டு


யாருடன் கூட்டணி?

லட்சிய தி மு க தலைவர் விஜய த.ராஜேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நாடாளுமன்ற தேர்தலில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறித்தி வருகிறேன். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் குடுக்க என் சிறு சேமிப்பு துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றி லட்சிய தி மு க பொது கூட்டம் இருபத்தி ஒன்போதில் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
நம்ம கமெண்ட்: " என்ன இருந்தாலும் உங்களக்கு ரொம்ப பெரிய மனசுங்க... யாரும் செய்யாத ராஜினாமா வ நீங்க செஞ்சுடிங்க".

நம்ம ஊரு காமெடி - ஒன்று


சரத்குமார் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கிட்டுக்காக நடத்திய பேச்சுவார்த்தை (கற்பனை).......


இல.கணேசன்: வாங்க வாங்க.. சரத் என்ன தனியா வந்துஇருகிங்க? கட்சி நிர்வாகிகள் வரலையா?

சரத்: ராதிகா தாநே ..? 'அரசி' ஷூட்டிங் போய் இருக்காங்க.

இல.கணேசன்: இருக்கறது நாப்பது தொகுதி. இதை எப்படி பிரிச்சிகிறது?

சரத்: எனக்கு இரண்டு தொகுதி கொடுத்துருங்க. மீதி நுப்பதி எட்டும் உங்க கட்சிக்கு !

இல.கணேசன்: அய்ய்..... எங்களுக்கு இரண்டு போதும் . நுப்பதி எட்டு இல் நீங்கதான் நிக்கணும்!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க , நீங்க பாட்டுக்கு சீட் கொடுத்துட்டு போய்டுவிங்க ... அங்கே நிறுத்தறதுக்கு நாங்க எங்க போய் ஆளை தேடுறது!

இல.கணேசன்:(மெதுவாக) கரெக்டா, நாம் பேச வேண்டியத இவரு பேசறாரு....

(உரக்க) அதெல்லாம் முடியாது. எங்களுக்கு இரண்டு. மீதியெல்லாம் உங்கள்ளுக்குதான்.

சரத்(கடுப்பாகி):'கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்க்கிட்டினால் முறிந்தது' நு பத்திகைக்காரங்களுக்கு சொல்லிடிங்க. எங்கல்லுகும் சுயமரியாதை இருக்குல்ல.... யார் நாங்க எதிர்பார்க்கிற சீட் தரங்கோல அவன்கோலடதான் கூட்டணி! நான் வாரேங்க!.

நன்றி: ஜூனியர் விகடன்.
நம்ம கமெண்ட்: "ஐயோ ஐயோ இது உண்மையா கூட இருக்கலாம்."