Wednesday, May 16, 2012

உலகப்பட வரிசையில்


mike testing....1...2...2...2..2..3....



Tuesday, May 11, 2010

உலகப்பட வரிசையில் குருசிஷ்யன் !!

குருசிஷ்யன் - சைட் பார்வை


"வாழ்க்கையே ஒரு விளையாட்டு...
நம்ம உடம்பு தான் மைதானம்...
அந்த உடம்பில் யார் வந்து விளையாடிட்டு போனா என்ன...."

இந்த வாழ்க்கை தத்துவத்தை படத்தில் உதிர்த்தவர் நமது
ஷகீலா என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில்
எங்கள் வாழ்த்துக்களை இயக்குனருக்கு தெரிவித்து கொள்கிறோம்.


இது ஒரு சிறந்த படம்ங்க....ஹலோ ஒரு நிமிஷம் முழுசா படிச்சுட்டு அப்புறம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணுங்க. உண்மையிலே இது ஒரு சிறந்த படம் எதுக்குன்னு கேட்டிங்கனா தள்ளிட்டு போறதுக்கு இது ஒரு சிறந்த படம்னு சொல்ல வந்தேன்.நான் பார்த்த தியேட்டரில் என்னையும் சேர்த்து நூப்பது பேர் தான் இருந்தோம்.அப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஏன்டா, தயாரிப்பாளர் கோடி கோடியா பணம் போட்டு படம் எடுத்தா அதை இப்படியா சொல்லுவே என்று நீங்கள் யாராவது கேட்கலாம். ஆனா இந்த குரு சிஷ்யன் படத்தை பார்த்தா நீங்க இப்படி கேட்க மாட்டிங்கனு இருநூறு சதவீதம் நான் நம்புறேன்.


அகில கெரகம் சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பாக இந்த விமர்சனத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தோட கதை பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் அதன் திரைக்கதையை எங்க பக்கத்துக்கு வீட்டு அஞ்சு வயசு பையன் கூட சொல்லிவிடுவான் என்பது படத்தின் ஹைலைட். சுந்தர்.சி வழக்கம் போல் சூப்பர் பாக்கு தலையுடன் வருகிறார் . படம் முழுவதும் கழுத்தில் ஒரு துண்டை சுற்றி கொண்டு வருகிறார். தீடிர்னு ஒரு சீனில் முதுகு பின்னாடி இருந்தெல்லாம் துண்டு எடுக்கிறார்....(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)



சத்யராஜ் சார் உங்களுக்கும் விஜயகாந்த்க்கும் ஏதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்க வேண்டியது தானே...அதுக்குன்னு அவரோட ஈத்து போனா பழைய அரசியல் டயலாக் பேசி ஏன் கடுப்பு ஏத்துரிங்க??அதுவும் இல்லாம எங்க தல அஜித்தை வேறு கிண்டல் பண்றீங்க...படத்தில் சத்யராஜ் பேரு காலுங்க....
அதுக்கு அவர் சொல்ற காரணம் தலைன்னு ஒருத்தர் இருக்கும் போது கால்னு ஒண்ணு இருக்க கூடாதா என்பார்.....சத்யராஜ்,கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷமா இதே மாதிரி இதே விக் வச்சி நடிச்சிட்டு வர்றார்....முடியல...



இந்த கதாநாயகி நடிச்ச மூணு படத்தையும் இந்த பிரபஞ்சத்தில் பார்த்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன் என்று நம்புகிறேன். படத்துக்கு படம் பேர் மாத்துறாங்க ஆனா முகத்தில் மட்டும் எந்த படத்திலும் ரியாக்சன் மாத்த மாட்டறாங்க.....வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெருசா இல்லைன்னு சொல்லமுடியாதுனு ஸ்டில்லை பார்த்தால் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அநேகமா இது தான் அந்த அம்மணிக்கு கடைசி படமாக இருக்கும் என்று நம்புகிறேன், காரணம் இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்ஒ ஹிட்ங்க.(இந்திரவிழா, நான் அவனில்லை 2 ). பேசாம கிரணையாவது நாயகியாக போட்டிருக்கலாம்...!!


சந்தானம் இவர் மட்டும் இல்ல..இன்டெர்வல் முன்னாடியே வெளியே வந்திருப்பேன். சந்தானம் காமெடி உண்மையிலே நல்லா இருந்தது.ஆனா அதுக்காக முழு படமெல்லாம் பார்க்கமுடியாது.நான் கிளைமாக்ஸ்க்கு முன்னாடியே வெளிநடப்பு செய்ஞ்சிட்டேன் என்பதை இங்கே சொல்லி கொள்கிறேன் யுவர் ஆனர்!!

சக்தி சிதம்பரம், ஐயா நீங்க ஒரு படமெடுக்க அந்த டைம்மில்
வந்த பத்து படங்களில் இருந்து சீனை எடுத்து நீங்கள் ஒரு
படம் எடுத்துடுறீங்க....மசாலா படம் நாங்க பார்ப்போம் அதுக்காக
ஓவர் மசாலா படமெல்லாம் பார்க்க முடியாது.....அப்புறம் ஒரு
சின்ன request தயவு செய்து நீங்க இனிமே ரஜினி பட டைட்டில்
யூஸ் பண்ணாதீங்க....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

#படத்தில் இன்டெர்வல்க்கு பிறகு ஒரு காட்சி...எப்பா எப்படி
இப்படி யோசிக்கிறாங்கனு தெரியல அதுவும் இல்லாம ஒரு
பாட்டு வரும் பாருங்க "தம்பி இல்லடா,இவன் தாயை போலடா"னு
அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது...
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!

# படத்திலே மிகவும் பிடித்த இடம் ராஜ்கபூரும் நாயகியும் நடிச்ச ரேப் சீன்தான். ஆனா கொஞ்ச நேரத்தில் அந்த காட்சி முடிந்து விட்டது என்பது கொடுமையான விஷயம்.இந்த சீனுக்கு ஒருத்தர் தியேட்டரில் கைதட்டினார்....சத்தியமா நான் அவன் இல்லைங்க....


# ஈவ்னிங் ஷோ இன்டெர்வல் அப்பவே நாலைந்து பேர் இந்த
காவியத்தை பார்த்து மட்டையாகி விட்டார்கள்.


# இன்டெர்வல் ஆரம்பிச்சதில் இருந்து ஒரு முக்கா மணி நேரம்
சந்தானம் வரவே மாட்டார்(நடுவில் சும்மா ஒரு சீனில் வருவார்) அவ்ளோ தான் போல வீட்டுக்கு போய்விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே பெண் வேடத்தில் சந்தானம் வரும் காட்சி வந்தது......ஆனா பாருங்க அப்போ தான் ஒரு ஜோடி வேற வெளியே போறாங்க...அந்த பெண் கடைசி வரை ஸ்க்ரீனை பார்த்து கொண்டே போனாள்....இதிலிருந்து நாம் பெறும் நீதி :
இதுக்குதான் வேலை முடிஞ்சவுடன் அவசரமா போக கூடாது!!

படத்தை தலைவர் கவுண்டர் பார்த்து இருந்தா என்ன
சொல்லிருப்பார்.....


"படமாடா இது, என்னாமா டகால்டி காட்றானுங்க,...காவியம்டோய் !! இதுக்கு தான் நான் அந்த சூப்பர் பாக்கு மண்டையன் நடிச்ச படத்தை பார்க்குறது இல்லை.... சும்மா வீட்ல இருந்தவனை கூட்டிட்டு வந்து...தலைவலி கொடுத்துட்டாங்க....."


குரு சிஷ்யன் - போதும்டா சாமி!!

சுந்தர்.சி ரசிகர்கள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் கவலை
கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்...கூடிய விரைவிலே நம்மை மகிழ்விக்க வாடா படம் வரும் என்று நம்பிக்கை கொள்வோம்!!

No comments: