Showing posts with label ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி. Show all posts
Showing posts with label ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி. Show all posts

Monday, November 30, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

முக்கிய செய்திகள்:

# "கற்பழிப்பு காட்சியில் நடிக்க பயப்படமாட்டேன்,தொடர்ந்து
நடிப்பேன்"நடிகை கீர்த்திசாவ்லா பேட்டி.(இதுவல்லவோ வீரம்!)

சமீபத்தில் திரைக்கு வந்தவுடன் திரையை விட்டு வெளியேறிய
ஸ்வேதா என்ற படத்தில் கீர்த்திசாவ்லா அவர்கள் நன்றாக
திறமை காட்டியதாக ஊர் முழுக்க பரபரப்பான பேச்சு அடிபட்டது.
நான் கூட போனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள படத்தை
எடுத்து விட்டார்கள்(ச்சே...).



மேல உள்ளே பேட்டி படம் வெளிவந்த நான்கு நாள் கழித்து
கீர்த்திசாவ்லா கூறியதாம்.(எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம்
செய்றாங்க!!).ஏன் இது மாதிரி ஒரு விளம்பரம் ஏதோ நான்
நடித்து தேசிய விருது வாங்குவேன் என்றாள் பாராவயில்லை
ஆனால் கீர்த்தியோ கற்பழிப்பு காட்சியில் தொடர்ந்து நடிப்பேன்
என்கிறார்...என்னமோ போங்க.....

ஆனாலும் கீர்த்திசாவ்லாவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை.(ஹீ.. ஹீ..).

******************************************
விளம்பர இடைவேளை:

(பி.கு: தற்புகழ்ச்சிக்கு அல்ல)

போன வாரம் ஒரு அன்பர் கைபேசியில் அழைத்தார்.அவர்
கூறியதாவது தான் பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்தி
கொள்ள எனது பொது அறிவு செய்திகள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது என்று என்னை மிகவும்
பாராட்டினார்.அப்புறம் மப்புசாமி சாரி குப்புசாமி அப்படின்னு
ஒருத்தர் நெதர்லாந்தில் இருந்து மெயில் அனுப்பி தன்
பொது அறிவு வளர நானும் ஒரு காரணம் என்று எழுதி
இருந்தார், நேரம் வரும் போது அந்த மெயில் உங்கள்
பார்வைக்கு வரும்.ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

***********************************************

பயம் அறியான் அப்படின்னு ஒரு படம் வரபோகுது அதில்
தற்போது உதயதாரா அவர்கள் கதாநாயகி வேஷம் கட்டுகிறார்.
புதுமுக நடிகர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.நமது
பொல்லாதவன் புகழ் கிஷோரும் இருக்கிறார் சரி இது அல்ல
விஷயம்....

சில பட ஸ்டில்கள் என்னை ஈர்த்தன இதோ உங்கள்
பார்வைக்கும் எல்லோரும் வாலை நீட்டாதே என்பார்கள்
ஆனால் இந்த ஹீரோவுக்கு நாக்கை நீட்டாதே என்று சொல்ல வேண்டும் போல...(ஏன்டா ஜெட்லி அவர் நாக்கு அவர்
நீட்டுராறு உனக்கு என்னடா என்று நீங்கள் கேட்பது சரிதான்
).

மனதை ஒரு நிலைப்படுத்தும் கேள்வி:

இந்த ரெண்டு படத்துக்கும் என்ன வித்தியாசம்??




ஹீரோ ஒரு படத்தில் இடது புறம் இருக்கிறார் இன்னொரு
படத்தில் வலது புறம் இருக்கிறார் என்று தயவு செய்து
சொல்லாதிங்க...படத்தை நல்லா பாருங்க வேறு வேறு
பெண்கள்.இதில் இருந்து என்ன தெரியுது கதாநாயகியை
மாற்றி விட்டார்கள்.(கதாநாயகி மாறினாலும் அதே சீனை
திரும்பவும் படம் எடுத்த இயக்குனர் வாழ்க என்று ஹீரோ
மனதில் நினைத்திருப்பார்!!)

********************

புடவையில் முமைத்கான்:

திரையில் எப்போதும் கர்சீப்பை விட சிறியதாக ஆடையை
அணிந்து வரும் முமைத்கான் பவுர்ணமி நாகம் என்ற
டப்பிங் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவுக்கு முழு
நீள புடவையுடன் வந்து நம்மை கண்ணீர் கடலில்
ஆழ்த்தினார்.



அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசும் போது
முமைத்கானுடன் தான் நடித்தது தான் செய்த பெரும்
பாக்கியம் என்றும் அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி
கூறியதும் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

****************************************

இந்த வார பொது அறிவு கேள்விகள்:


# தற்போது கலைமாமணி விருது பெற்ற தளபதி யார்?

A. புரட்சி தளபதி விஷால்

B. இளைய தளபதி விஜய்

C. சின்ன தளபதி பரத்

(மினி தளபதினு யாராவது அடுத்து வர போறாங்க!!)

# அடுத்த சிம்ரன் என்று இயக்குனர் ஷங்கர் யாரை கூறினார்??

A.பறவை முனியம்மா

B.தமன்னா

C.சுனைனா

பதில் தெரிந்தால் 55540 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டாம்
மீறி அனுப்பினால் உங்கள் கைப்பேசியில் மூன்று ரூபாய்
போய் விடும்.பதில் தெரியாதவர்கள் கமெண்ட் செய்து கேட்டு
தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடவும்....

நன்றி:
indiaglitz.com

உங்கள்
ஜெட்லி சரண்.

Wednesday, October 28, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.


நானே வருவேன் என்ற பேய் படத்தில் புதியதாக ஒரு விஷயத்தை
செய்ய இருக்கிறார்கள் அதாவது படத்தில் பேய் வரும் காட்சிகளில்
மட்டும் தியேட்டரில் மல்லிகை வாசனை வருமாம்.இந்த படத்தின்
இயக்குனர்,நடிகர்,இசை அமைப்பாளர் மற்றும் பல அமைப்பாளர் திரு.பாபுகணேஷ் ஒரு அற்புதமான படைப்பாளி.இவரின் ஒரு படத்தை "இரவு பாடகன்" என்று நினைக்கிறேன் அந்த படத்தை பார்த்தால் மலையாள அட்டு படம் பார்த்த திருப்தி கண்டிப்பாக கிடைக்கும்.இந்த படத்தை அடிக்கடி ராஜ் டிஜிட்டலில் அடிக்கடி போடுவார்கள் பார்த்து ரசியுங்கள்.



நானே வருவேன் என்ற இந்த படத்திலும் நான்கு நாயகிகளாம்,
அப்போ குஜாலுக்கு குறைவு இருக்காது என்று தெரிகிறது.
அவன் அவன் தியேட்டரில் ஏற்கனவே படம் பார்த்த
கிளுகிளுப்பில் இருப்பான், இதுல மல்லி வாசனை வேற???
ஆண்டவா காப்பாத்து... !!

******************************

பேப்பரில் கந்தசாமி படம் விளம்பரத்தை பார்த்தாலே கடுப்பாக
வருகிறது. படம் மெகா ஹிட் நூறாவது நாளை நோக்கி என்று
தினம்தோறும் டார்ச்சர் பண்றாங்க.இதில் வேறு யாரவது தத்து
எடுத்தா அதுக்கு இவங்க தான் காரணம்னு வேற விளம்பரம்.
தயவு செய்து நாளைக்கே நூறாவது நாள் அப்படின்னு போட்டு
விளம்பரத்தை நிறுத்தினா மிக்க சந்தோசம் அடைவேன்.

********************************
முக்கியமான பொது அறிவு
அடுத்த மாநிலத்தில் என்ன நடக்குது:

கிரண் நடிக்கும்?? தெலுங்கு படம் "ஹை-ஸ்கூல்".படத்தை பார்த்தால் பல பேர்க்கு மோனிக்கா பெல்லுசி நடித்த "malena" படம் நினைவுக்கு வரும். இதே போல் சில வருடங்களுக்கு முன் மனிஷா நடித்த "ஏக் சொட்டி சி லவ் ஸ்டோரி" படம் ஒன்று வந்தது அதை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் பார்த்தவனில் நானும் ஒருத்தன் கூட சில நண்பர்களும் வந்து
வெறுத்து போனார்கள்.





ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியுல. ச்சே
காசு தான் தண்டம் ஆகுது(என் காசு தான்).மார்க்கெட் போச்சுனா
கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே ஏன்
இப்படி ஒரு படம் என்று தோன்றினாலும் கிரணின் சேவை
நாட்டுக்கு தேவை.

மச்சி நெல்லூர்க்கு ஒரு டிக்கெட் போடு.....

*****************************************

ஜெட்லி டவுட்:

நயன்தாரா நடிக்கிற படம் எல்லாம் மொக்கை ஆகுதா?

இல்ல

மொக்கை படத்தில் மட்டும் நயன்தாரா அக்கா நடிக்கிறாங்களா???.

*************************************

இந்த வாரம் குமுதத்தில் படித்தது:

"பொட்டு தூணி இல்லாம..ஆயிரம் பேர் இருப்பாங்க...பொம்பளையும்
ஆம்பளையுமா சேர்ந்து நியுடா நடு ரோட்டுல நடந்து போறாங்க சார்.
கேட்டா சுதந்திரம்னு சொல்றாங்க.கிளாமர் நடிகை என்னாலயே அந்த
காட்சியை அஞ்சு நிமிஷம் நின்னு பார்க்க முடியல,உடம்பே கூச
ஆரம்பிச்சுடுது, என்ன தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரதோட
ரத்தம் தானே என் உடம்புலேயும் ஓடுது" என்று தன் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று வந்த சோனா அவர்கள் கூறியுள்ளார்.

உடம்பே கூசுதாம் .. ஐயோ ஐயோ... நம்ம ஊர்ல பத்திரிக்கையாளர்
சந்திப்பில் அம்மணி போட்டு வந்த டிரஸ்ஸை பார்த்தாலே நம்ம
கலாச்சாரம் பிச்சிக்கிட்டு வெளிய வருது என்று தெளிவாக தெரிகிறது.
அம்மணியின் கலாச்சார ரத்தம் ரொம்ப பித்தம்.!!


இது போன்ற பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று
அடைய ஒட்டு போடுவிங்க அப்படின்னு நம்புறேன்....முக்கியமா
கமெண்ட் போடுங்க...


நன்றி:
சுலேகா
பாரத்வேவ்ஸ்

அன்புடன்
ஜெட்லி சரண்

Saturday, September 19, 2009

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்:

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி




மலை மலை வெற்றிப்படத்தின் அடுத்த படைப்பு மாஞ்சாவேலு.
இந்த படத்திற்கும் அருண் விஜயின் மாமா தான் தயாரிப்பாளர்.
அதே மலை மலை கூட்டணி ஒருவர் கூட மாறவில்லை.
என்ன மலை மலை படத்துல அருண் விஜய் மீசையை
முறுக்கி விட்டார் இதுல இறக்கி விட்டுருக்கார் நம்ம சிங்கம்
சூர்யா மாதிரி.ஒரு ஸ்டில்இல் அருண் விஜய் அவர்கள் காஸ்
சிலிண்டர் ஒன்றை தூக்கி அடிப்பதை போல் பார்த்து மிரண்டு
விட்டேன்.....

ஆமா... அது காலி காஸ் சிலிண்டர் தானே அருண்....??

***************************************
செய்தி:

ஜீவா ஒரே நாளில் சிங்கம் புலி படத்துக்காக ரெண்டு வேடத்தில்
நடித்தார்.

இது என்ன பிச்சாத்து மேட்டர் எங்க தளபதி டாக்டர் விஜய்
அவர்கள் மூன்று வேடத்தில் ஒரு மணி நேரத்தில் நடித்து
கொடுத்து இருப்பார்.

வழக்கம் போல் ஒரு விஜய், தலையை களைத்து வேறு கலர்
சொக்க போட்டா.. தம்பி விஜய், தலையில் லேசாக வெள்ளை
பெயிண்ட் தடவி வாய்க்குள் பஞ்சு வைத்தால்.. அப்பா விஜய்.

*********************************************************

ஒரு ஜூஸ்க்கடையில் டீ குடிப்பவனக்கு தர மரியாதை கூட
லெமன் ஜூஸ் குடிப்பவனக்கு கிடைப்பதில்லை. நீங்க நேரிய
வாட்டி பார்த்துருக்கலாம் நாம லெமன் ஜூஸ் முதலில்
ஆர்டர் செய்வோம் ஆனால் நமக்கு பின்னால் வந்தவன்
திராட்சை ஜூஸ் ஆர்டர் செய்வான் ஆனால் முதலில் ஜூஸ்
போடுபவன் திராட்சை ஜூஸ் தான் போடுவான்.

இப்போ வேற ஒரு லெமன் ஆறு ரூபாயாம் இனிமே லெமன்
ஜூஸ் இல்லன்னு அசால்ட்ட சொல்லிடுவாங்க.....

**********************************************
சந்தேகம்:

# சமீபத்தில் 9.9.09 அன்று இரவு ஒன்பது நிமிடங்கள் விளக்கை
அணைக்க சொன்னார்கள். நாம சில பேர் அணைத்து இருப்போம்.
ஏன் அந்த ஒரு நாள் மற்றும் இந்த நல்ல விஷயத்தை செய்ய
சொல்லி பயங்கர விளம்பரம்..... 9.9.09 என்ற நம்பர் பேன்சி
நம்பர் என்பதாலா????

*************************************************
சின்ன பசங்க கண்ணை மூடுங்க.....

சாரீயை இப்படி கூட கட்டலாமா? என்று என்னை யோசிக்க
வைத்தவர்கள்... உங்கள் பார்வைக்கும்.





அனைவருக்கும் பொது அறிவு வளர ஒட்டு போடுங்கள்...

உங்கள்
ஜெட்லி சரண்.

Saturday, August 8, 2009

பொது அறிவு செய்திகள்

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.


ரொம்ப முக்கியமான ஆராய்ச்சியில் கடந்த ரெண்டு நாட்களாக
ஈடுபட்டு இருந்தேன்(நம்புங்க ஜி!!!), அதாவது அணில் கடிச்ச
பழத்தை மன்னிக்கவும் கமல் கூட நடிச்ச நடிகையோடு
தலைவர் ரஜினி ஜோடி சேருவதில்லை, அதாவது தனக்கு
முன் கமல் உடன் ஜோடி போட்ட நடிகையை ரஜினி

ஜோடியாக போடுவதில்லை.


உதாரணங்கள்:

சிநேகா, சிம்ரன், ஜோதிகா... இவர்கள் அனைவரும் உச்சத்தில் இருந்தபோதும் ரஜினி பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சந்திரமுகியில் கூட ஜோதிகா பிரபுவுக்கு தான் ஜோடி.

பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை
மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.

இன்னும் இந்த ஆராய்ச்சி முழுவதுமாக முடியவில்லை, முடிந்தவுடன் விரிவான அறிக்கையுடன் உங்களிடம் சமர்பிக்கிறேன் .முடிந்தால் யாரவது எனக்கு டாக்டர் பட்டம்
வழங்க சிபாரிசு செய்யவும்... தருவாங்களா?

*********************************
அடுத்த ஆராய்ச்சி....

போன வாரம் பேப்பர்ல ஒரு செய்தி படிச்சேன்ங்க,...
உங்கள் பார்வைக்கு

பெண் கற்பழிப்பு.
கல்யாணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் கைது.

பெண்ணின் சம்மதம் இல்லமால் உறவு கொண்டால் அது
கற்பழிப்பு. மேல உள்ள செய்தியை படித்தால் எனக்கு ஒரே
குழப்பமா இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு
வைத்து கொண்டது அந்த இருவரின் தப்பு. என்னால் இந்த
செய்தியில் ஒத்து கொள்ள முடியாதது காரணம் கற்பழிப்பு
என்ற
ஒன்று மட்டுமே......

ஏன் இதை கற்பழிப்பு என்று கூறுகிறார்கள்.
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.....

*****************************************
முடிஞ்சா ஒட்டு போடுங்க பாஸ், அப்படியே பின்னூட்டமும் போடுங்க.

ஆராய்ச்சி தொடரும்
ஜெட்லி.