Showing posts with label உருப்படாத விஷயம். Show all posts
Showing posts with label உருப்படாத விஷயம். Show all posts

Friday, June 5, 2009

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)



இப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.

******************
முன்னுரை:
----------------

# "வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் கில்மானந்தா.

விளக்கம்:
-------------

அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.

**************

முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:

@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....

டி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.

ஐடியா நெ.1:
----------------

உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.

ஐடியா நெ.2:
----------------
# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.

(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).

******************

@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஐடியா நெ.3:
---------------

# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.


# "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.

# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.

எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.

*********************

@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.


ஐடியா நெ.4:
---------------

கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்
.

எச்சரிக்கை நெ.2:
---------------------

பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.

எச்சரிக்கை நெ.3:

---------------------

சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.

(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)

***********

ஜெட்லி பஞ்ச்:

# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க
கரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. "மச்சான் என்னிக்கு ட்ரீட்?" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.

உங்கள்

ஜெட்லி.

Monday, June 1, 2009

சுய'இன்பம்' காண்பது தவறா?

சுய 'இன்பம்' காண்பது தவறா?

இந்த கேள்வியை நான் சிவராஜ் சித்த வைத்தியர் கிட்ட கேட்டு இருந்தா அவர் அதை கண்டிப்பா தவறு என்று தான் சொல்வார். அவரின் டி.வி. நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அதை தவறு என்று தான் சொல்வார்கள்.ஆனா நீங்க நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கன்னு எனக்கு தெரியும்ங்க.இது வேற வகையான இன்பம்ங்க ,வாங்க நமக்கு எது இன்பம்னு தெரிஞ்சிக்கலாம்.


இன்பத்தை பல வகையாக பிரிக்கலாம்ங்க:

# சில பேருக்கு அலுவலக வேலை செய்வதே இன்பம்.

(உதாரணம்: கணிபொறியாளர், இவர் வேலை

செய்யலனாலும் செய்ய வச்சிருவாங்க)



# சில பேருக்கு அலுவலக வேலை செய்யாமல் இருப்பதே இன்பம்.


(இதுக்கெல்லாம் உதாரணம் தேவையா? கண்டிப்பா நம்ம வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்).



# சில பேருக்கு காதலி அல்லது காதலன் கூட இருக்கும் போது இன்பமா இருக்கும்.

(சும்மா இருக்கும் போது தாங்க!)



# சில பேருக்கு காதலியை அல்லது காதலனை மாற்றி கொண்டே இருப்பது இன்பமா இருக்கும்.

(இல்லன்னு மட்டும் சொல்லாதிங்க, ஈ.சி.ஆர் ரோட்ல வந்து ஒரு நாள் பாருங்க)


# சில பேருக்கு படம் பார்ப்பதில் இன்பம்.(என்னை மாதிரி).


# சில பேருக்கு ப்ளாக் படிப்பதில், எழுதவதில் இன்பம்.


# சில பேருக்கு பரபரப்பா ப்ளாக் டைட்டில் வைப்பதில் இன்பம்.

( ஹையோ! ஹையோ! என்ன பண்றது அப்பதானே வந்து பாக்குறாங்க)


# சில பேருக்கு சரக்கு அடித்து போதையில் பாதை மாறுவது இன்பம்.


# சில பேர் விதம் விதமா கைபேசியை மாற்றுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நண்பர் கௌரி மாசத்துக்கு இரண்டு கைபேசி மாற்றுவார்).

# பல பேருக்கு புகைப்பதில் , சில பேருக்கு இயலாதவர்களை பார்த்து நகைப்பதில் இன்பம்.

(நம்மால உதவி செய்ய முடியலன ஒதிங்கிரனும், அத உட்டுட்டு சிரிப்பாங்க).


# சில பேருக்கு புத்தகம் படிப்பதில் இன்பம், சில பேர் படித்த புத்தகத்தை பத்து தடவை படிப்பார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நம்ம ப்ளாக் குழு உறுப்பினர் சங்கர் தான் அந்த மனுஷன், உறுப்பினர்ன்னு தான் பேர் அய்யாவுக்கு ப்ளாக்க பாக்க கூட டைம் இல்ல)


# சில பேருக்கு அடுத்தவன் காலை வாரி விடுவதில் இன்பம்.

(பார்த்துங்க நீங்க வேலை செய்யுற இடத்திலேயே நிறைய பேர் இருப்பாங்க)


# சில பேர் பணத்தின் மூலம் நண்பர்களை பெருக்கி கொண்டு , உயிர் நட்பு என்று சொல்லி கொள்வதில் இன்பம்.



ச்சோ ச்சோ.... வந்த விஷயத்தை மறந்துட்டேன் பார்த்திங்களா!
எப்படி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் ஒ,
அது மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமான
இன்பம்ங்க.


சில பேர் இருக்காங்க எப்பவும் அடுத்தவனை குறை சொல்லிட்டே இருப்பாங்க,உதாரணத்துக்கு இப்போ ஒருத்தனுக்கு அலுவலக வேலை இன்பமாக இருக்கலாம் அதனால் அவன் அலுவலகமே கதி என்று இருப்பான், அவன் கிட்ட போய் நம்மாளு " டேய், ஏன்டா எப்பவும் வேலை வேலைன்னு ஆபீஸ்லயே இருக்க, உனக்கு என்ன தர போறாங்க" என்று மேதாவி தனமாக கேட்பதாய் எண்ணி கொள்வோரும் உண்டு.இது போல் பல உதாரணம் சொல்லலாம்.


அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு பிடிக்கலனா விட்டுருங்க அதை விட்டுட்டு இப்படி அடுத்தவன் இன்பத்தில் மூக்கை நுழைப்பது நியாயம் இல்லாத ஒரு ஈன செயல். உங்களால் அடுத்தவனுக்கு இன்பம் தான் கொடுக்க முடியலை தயவு செய்து துன்பத்தை கொடுக்காதிங்க.


உங்கள்
ஜெட்லி

Thursday, May 28, 2009

உங்களால் இதெல்லாம் முடியுமா?

உங்களால் இதெல்லாம் முடியுமா?

*************************

# நீங்கள் உங்கள் நண்பனின் மொக்கை பேச்சை அமைதியாக
காது
கொடுத்து கேப்பவரா?


#நீங்க நண்பர்களோடு எப்போ ஹோட்டல்லில் சாப்பிட்டாலும்,
நீங்க தான் பில் செட்டில் பண்ணுவிங்களா?


மேல கூறியுள்ள மாதிரி பழக்கங்கள் உள்ள நபரா நீங்கள்?

அப்போ வாங்க பழகுவோம். உங்களை மாதிரி ஒருத்தரை தான்
தேடிட்டு இருக்கேன். ஆமாம் உங்க வீடு எங்க இருக்கு?

*******************************************************

#விஜய் நடித்த ஆதி, குருவி , வில்லு போன்ற படங்களை தொடர்ந்து
ஒரே நாளில் பார்க்கும் தில்லு உடையவரா நீங்கள்?


#உங்களால் ஆறு பீரை ஒரே சமயத்தில் குடிக்க முடியுமா?
(என் நண்பன் ஐந்து பீர் குடிப்பான்)



மேல கூறியுள்ள விஷயம் உங்களக்கு ஜுஜுபி என்றால்......

உண்மையிலே நீங்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்.
உங்களை என் மைண்ட்ல வெச்சிரிகேன்.

***********************************


#தாசில்தார் அலுவலகத்தில் ஒரே நாளில் உங்கள் வேலையை முடிக்க முடியுமா?


#டிராபிக் போலீசிடம் சிக்கி பணமே தராமல் உங்களால் தப்பித்து வர முடியுமா?


#வங்கியுள் சென்று ஐந்து நிமிடத்தில் பணத்தை போட்டோ அல்லது எடுத்து கொண்டோ வர முடியுமா?



மேல கூறியுள்ள விஷயமெல்லாம் உங்களுக்கு அல்வா விஷயம் என்றால்,


எனக்கு உங்கள் கைபேசி நம்பரை தயவு செய்து தரவும், ஏன்னா கண்டிப்பா நீங்க பெரிய கையாக தான் இருக்க வேண்டும்.

**************************************************


#
சத்யம் திரை அரங்கில் உங்களால் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்க
முடியுமா?(சாதாரணமா நினைச்சிராதிங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்).


#டாஸ்மாக் கடையில் இரவு 9.30 மணிக்கு அவளோ கூட்டத்தில்
உங்களால் சீக்கரம் சரக்கு வாங்கி வர முடியுமா?


மேல கூறியுள்ள விஷயம் உங்களக்கு கை வந்த கலை என்றால்...

என்னையும் உங்கள் பார்ட்னர் ஆக சேர்த்து கொள்ளவும்.
(என்னடா இவன் சரக்கு வாங்குறதுக்கு பார்ட்னர் கேக்குறானே
அப்படின்னு நினைக்காதிங்க, சும்மா பஸ்ல போகும் போது
டாஸ்மாக் கடை பக்கம்
சும்மா திரும்பி பாருங்க.(பி.கு:நானும்
அப்படி பார்த்து தான் உங்களுக்கு சொல்றேன்).

************************************************


உங்கள் ,

ஜெட்லி



Tuesday, April 28, 2009

மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு மில்க் ஷேக்.



இந்தியா டுடே மே 6 இதழில் வந்த சுவாரசியமான செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஷீராஸ் ஹாசன் எனும் நபரால் நடத்தப் படும் "Millions of Milkshake (MoM)" என்னும் கடை உள்ளது. இந்த கடை அமெரிக்கா முழுவதும் மிகப் பிரபலமானது, இங்கு எண்ணற்ற வகையில் மில்க் ஷேக் (துபாய் ஷேக் அல்ல) வகைகள் விற்கப்படுகின்றன. இதன் விசேஷம் என்னவென்றால் ஹாலிவுட் மற்றும் மிக பிரபலமானவர்களின் பெயரில் மில்க் ஷேக் விற்கப் படுகிறது. இப்படி ஒபாமா, பாரிஸ் ஹில்டன், மைலீ சைரஸ், டேவிட் பெக்கம் ஆகியவர்களின் பெயரில் விற்கப்படுகிறது.

இந்த வகையில் நம் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி, குலுக்கல் நாயகி, ஜாக்கி சாண் புகழ் மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு புதிய மில்க் ஷேக் பானத்தை சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதாவது ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் பால் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி குலுக்கு குலுக்கி தருவர். இதன் அறிமுக விழாவில் கலந்துக் கொண்ட அம்மணி ஷேக் (Shake) என்றவுடன் எதோ குலுக்கல் நிகழ்ச்சி என்று அதற்குரிய பிரத்யேக ஆடையுடன் கலந்துக் கொண்டதை கீழே பாருங்கள். அந்த கடையில் இதற்கு முன்பு நடந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும் எந்தவொரு ஹாலிவுட் நடிகையும் இது போன்று இந்த அளவுக்கு தங்கள் அழகை வெளிப்படுத்தவில்லை (அவர்கள் இணையத்தளம் சென்று பார்த்தேன்) ஆனால் கலாசாரம் அபசாரம் என்று பேசும் நம் நாட்டில் இருந்து சென்ற இவரோ இப்படி, ஐயோ ஐயோ.