Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Tuesday, January 18, 2011

ஆடுகளம் , ஒகேனக்கல் , ராணி உலகம் , கன்னியாகுமரி.....

ஆடுகளம் , ஒகேனக்கல் , ராணி உலகம் , கன்னியாகுமரி.....

போன வருஷம் இந்நேரம் பொங்கல் பட ரீலீஸ்ல எந்த படம் டாப்னு
பதிவு போட்டிருந்தேன். ஆனா இந்த வருஷ பொங்கலுக்கு ஒரு படம்
தான் பார்த்தேன் ஆடுகளம் தான் அது. சிறுத்தை தான் மிஸ் ஆயிருச்சு.
ஆடுகளம் படம் சூப்பர் தான். என்ன ரெண்டாவது பாதி தான் கொஞ்சம்
போர் ஆச்சு... துரோகம், விசுவாசம்னு நல்லா இருந்தது. அந்த போலீஸ்
கேரக்டர் தான் வில்லன்னு நினைச்சேன் ஆனா இன்டெர்வல்க்கு அப்புறம்
மாறிடுச்சு. இந்த படத்திலும் கிஷோர் கேரக்டர் எனக்கு பிடிச்சு இருந்தது.
கிஷோர் குரலே நல்லா தானே இருக்கும் ஏன் சமுத்ரகனி குரல் கொடுத்தார்னு தெரியல....!!




பொங்கல்க்கு முன்னாடி ஒரு நாலு நாள் ஊருக்க போயிட்டு வந்தேன்...
உடன்குடி பக்கத்தில் இருக்கிற தண்டுபத்து தான் சொந்த ஊரு. அப்புறம்
அப்படியே உவரி தாண்டி சாமிதோப்பு அப்புறம் கன்னியாகுமரினு ஒரு
ரவுண்ட் அடிச்சுட்டு வந்தேன்...



மாட்டு பொங்கலுக்கு queensland போனோம். மொத்தம் இருபது பேர்க்கு
மேல இருந்தோம். செம கூட்டம். 350 கொடுத்து மூணு ரைட் தான் போனோம்.
ஒரு ஒரு ரைட்க்கும் ரெண்டு மணி நேரம் மேல காக்க வேண்டியது இருந்தது.பஞ்சு மிட்டாய் வாங்க கூட அரை மணி நேரம் ஆச்சுனா பாருங்க...
எங்க வீட்டம்மா centrox அப்படின்னு ஒரு ரைட் சூப்பர்ஆ இருக்கும்னு
சொன்னாங்க. பெரிய லைன்ல நின்னு அதை பார்த்தாலே தலை சுத்திச்சு..
இருந்தாலும் ஒரு கெத்தோட போனேன்... போய்ட்டு வந்த பிறகு ஒரு அரை
மணி நேரம் செம தலை சுத்தல்...




ஒகேனக்கல் ப்ளான் தீடிர்னு அன்னைக்கு தான் பிக்ஸ் பண்ணோம்...
காலையில் சாரி நைட் மூணு மணிக்கு எழுந்துரிச்சு நாலு மணிக்கு
கிளம்பினோம். நாங்க, அக்கா ,அண்ணா , மச்சான் , குட்டீஸ் மொத்தம்
மூணு கார்ல போனோம்.நான் என் காரை கிருஷ்ணகிரி வரைக்கும்
ஓட்டினேன் அப்புறம் எங்க அண்ணன் ஒகேனக்கல் வரைக்கும் ஓட்டினார்.
பத்து மணிக்கு சேர்ந்தோம்.


அங்கே போன பிறகு பரிசல்க்கு பேசி ரவுண்ட் அடித்தோம்..ஒரு இடத்தில்
குளிக்க நிறுத்தினார்கள். மணல் தீவு என்ற இடம் இப்போது தண்ணியில்
இருப்பதாக பரிசல்காரர் தெரிவித்தார். இந்த இடம் நான் ஒண்டிக்கட்டையா
இருக்கும் போது தெரியாம போச்சேனு பீல் பண்ணேன்...அப்புறம் காசு
கொடுத்து அடி வாங்கினோம் அட அதாங்க மசாஜ்னு சொல்வாங்களே
அது தான். என்னா அடி ஒரு ஒரு அடியும் இடி மாதிரி ல இருந்தது...
வீட்ல பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு அந்த கோவத்தை எங்க
மேல காட்டிடாரோனு பீல் பண்ணேன்.அப்புறம் அங்கே பரிசல்லயே கடைகள் இருக்கு...எல்லாமே அங்கையே கிடைக்கும் கொஞ்சம் விலை அதிகமா...



3.30 க்கு சென்னைக்கு கிளம்ப தயாரானோம். நாங்க ஒகேனக்கல்ல சாப்பிடல..
நேரா 6.30 ஆம்பூர் வந்து ஸ்டார் பிரியாணியில் சாப்பிட்டோம்...மசாலாலாம்
அரைச்சு போட்டிருந்தாங்க...நல்லாவே இருந்தது. குடும்பத்தோட சூப்பர்
ட்ரிப் போயிட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்....



ஜெட்லி... (சரவணா...)


Friday, December 10, 2010

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......

பேஸ்புக், விருதகிரி, க்ளிக்ஸ்.......


படத்துக்கு போறது கொஞ்சம் குறைஞ்சு போச்சு...முன்னெல்லாம் மொக்கை
படம்னாலும் தெரிஞ்சே போவேன்...ஆனா இப்ப அப்படி போக முடியறது இல்லை.போன வாரம் ரத்த சரித்தரம் , சிக்கு புக்குனு வந்தாலும் போக தோணல...விருதகிரி வேற ரீலீஸ் ஆகுது, பாருங்க கேப்டன் படத்தை கூட பார்க்க முடியல.... ஆனா ட்ரைலர் செம டரியல்....நாம கூடிய விரைவில் நாட்டுக்கு தேவை இல்லாத பல விசயங்களை பற்றி விவாதிப்போம்....



இப்போதைக்கு நான் பேஸ்புக்கில் அப்போ அப்போ அப்டேட் பண்றேன்...


பேஸ்புக் அப்டேட்ஸ்....


"நான் எதையும் தேடி போவதில்லை வருவதை ஏற்று கொள்கிறேன்..."
நடிகர் பிரபுதேவா பேட்டி!!

அட தினத்தந்தியில் ஹெட்லைன் படிச்சவுடன் நானும் நயன்தாரா, ஹன்சிகா
பத்தி தான் சொல்றாரோனு தப்பா நினைச்சிட்டேன்ப்பா....அவர் பட வாய்ப்பை
தான் சொல்றாருனு புல்லா படிச்ச அப்புறம் தான் தெரிஞ்சது...!!


*****************************************


டி.வி.நொறுக்ஸ்....

ட்ரைலரில் விஜயகாந்த் "பன்ச்" வசனம்...

"டேய் நான் விருதகிரிடா.... பஞ்சபூதத்தோட மொத்தம் உருவம்டா...."

"பார்த்தாலே தெரியுது..."

அருகில் ட்ரைலர் பார்த்து கொண்டிருந்த நண்பன் சொன்னது...

****************************************

செய்தி : டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டார் பீட் சாம்ப்ராஸ் வென்ற அனைத்து கோப்பைகளும் திருடு போயின.....தன் டென்னிஸ் வரலாறே திருடி போய் விட்டதாக சாம்ப்ராஸ் அதிருப்தி...!!

என் கருத்து :
இதுக்கு தான் நான் எந்த போட்டியிலும் கலந்துகிறது இல்ல....



**************************************

எத்தனை மொக்கை படத்தில் இருந்து பல பேரை காப்பாத்தி இருக்கேன்....

சமூக சேவர் பட்டம் எனக்கும் கிடைக்குமா???

அப்படியே திருவான்மியூர் பக்கம் 60 லட்சத்தில் வீடு ஒதுக்குவாங்களா??



*********************************



வளரும் நடிகர்களுக்கு இணையாக இவங்களும் போட்டி போடுராங்களேப்பா......
பை தி வே இந்த படத்தை நான் பார்க்கலைன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன்...




**************************************


யாத்தே யாத்தே யாத்தே என்னச்சோ....யாத்தே யாத்தே யாத்தே எதச்சோ....

செம பாட்டு....

ஆமா யாத்தே னா என்ன அர்த்தம்??



*************************

மழை செம காட்டு காட்டுது.....!!

வீட்டுக்குள்ள இல்லனா தெருக்குள்ள மழை தண்ணி வரலைனா கூட,,,,கண்டிப்பா இந்த வருஷம் நிவாரண தொகை கிடைக்கும்னுஎனக்கு நம்பிக்கை இருக்கு....

தேர்தல் வருதுடோய்....!!


*****************************

சமீபத்தில் மூணார் சென்று வந்தேன்....அங்கே க்ளிக் செய்த சில படங்கள்
உங்கள் பார்வைக்கு....

இதுவரை மலையாள அட்டு படங்களை மட்டும் பார்த்தவன்...

இப்போது மலையாள பேப்பர் படிக்கும் அரிய காட்சி....!!








********************************
மீண்டும் சந்திப்போம்.....
ஜெட்லி...(சரவணா...)

Monday, November 22, 2010

நகரம் என்பக்கம்.....

நகரம் என்பக்கம்.....


ஒரு மாசமா பதிவு எழுதல..கடைசியா எழுதினது நம்ம சூப்பர் பாக்கு தல சுந்தர் நடிச்ச அகில உலக அதிரடி மெகா ஹிட் ஆன படம் வாடா பத்தி தான். அப்புறம் கல்யாண பிஸி...கடைசி நேரத்தில் நிறைய பேருக்கு தெரிவிக்க முடியல...ஒரு வழியாக 18 ஆம் தேதி திருமணம் முடிந்தது...நேரில் வந்து வாழ்த்திய பதிவுலக அண்ணன்களுக்கு நன்றி..கல்லூரி நண்பர்களுக்கு நன்றி...ஆர்குட் தமிழ் குடும்பம் குழுமம் மற்றும் நேரில் வந்து வாழ்த்திய ஜெயந்தி மேடத்துக்கு நன்றி....போன் மற்றும் மெயில் மூலம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.


கல்யாணத்துக்கு அப்புறம் நாம பார்க்கிற மொத படம் எங்க தலைவர் சூப்பர்
பாக்கு தல சுந்தர்.சி படமா தான் இருக்கணும்னு..அவ கிட்ட சொன்னப்ப...
நீங்க மட்டும் போயிட்டு வாங்கனு சொல்லிட்டா...மொத தடவை படத்துக்கு போறோம்னு அப்புறம் நகரம் பாத்துட்டு என் வாழ்க்கை நரகம் ஆயிட கூடாதேனு சொல்லி நானே என்னை தேத்திக்கிட்டு மைனா போலாம்னு யோசிச்சேன்..ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்ததால் போகவில்லை....மந்திர புன்னகை ரெட்ஹில்ஸ் சைட் ஓடுற மாதிரி தெரியலை.அப்புறம் வடிவேல் ஜோக் இருக்கும், சுந்தர்.சி டைரக்ட் பண்ணி இருக்கிறார், தமன் மியூசிக் போட்டு இருக்கிறார்... என்று சொல்லி நகரம் படத்துக்கு கூட்டிட்டு போனேன்...(அனுயா பற்றி எதுவும் சொல்லவில்லை...!!)



ரெட்ஹில்ஸ் லட்சமி தியேட்டர்க்கு தான் போனோம்....செம கூட்டம்....
நான் சொல்றது தியேட்டர் வெளியே இருக்கிற கடைங்கள்ல என்பதை நோட் பண்ணிக்குங்க....70 ரூபாய் டிக்கெட்..கொஞ்சம் அதிகம் தான்...தியேட்டர்
வெளியே கேவலமா இருந்தது ஆனா உள்ளே சூப்பர்ஆ இருந்தது...என்ன
ஏ.சி மட்டும் தான் போடல....எங்களையும் சேர்த்து மொத்தம் ஒரு பத்து
பேர் பால்கனியில் இருந்து இருப்போம்...



நகரம்....நரகமா??


அதே திருந்தி வாழ நினைக்கிற ரவுடி தலைநகரம் கதை தான்னாலும்...
படம் போர் அடிக்காம தான் போச்சு...வடிவேல் சில இடங்களில் சிரிக்க
வைக்கிறார். குறிப்பா அந்த பம்ப் செட் காமெடி....ஆனா அவரு இன்னும்
வின்னர், தலைநகரம் ஸ்டைல் தான் பொல்லொவ் பண்றார்....மாத்துங்க
ஜி....இல்லனா விவேக் மாதிரி மரண பிளேடு ஆக வாய்ப்பு இருக்கு....



அனுயா...சரி வேணாம்...வேற டாபிக் பேசுவோம்..தமன் மியூசிக் ஓகே...
அந்த திக்கி திக்கி பாட்டை ரேடியோவில் கேட்டவுடன் கண்டுபிடித்து விட்டேன் அது தமன் மியூசிக் என்று....படம் மொக்கை இல்லாம டைம் பாஸ் ஆச்சு நாங்க தியேட்டர்குள்ள இருந்த வரைக்கும்....ஆமா வேலைகள் காரணமாக , மற்றும் படத்தின் நீளம் காரணமாக கிளம்பி விட்டோம்.நல்ல வேளை படத்தை பார்த்துட்டு வீட்டுக்காரம்மா எதுவும் பீல் பண்ணலை... அடுத்தது எந்திரனுக்கு பிறகு உலகம் முழுவதும் அதிக பரபரப்பை ஏற்ப்படுத்த போகும் ராமராஜனின் மேதை படத்துக்கும் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.... எதிர் ரியாக்சன் பற்றி சொல்ல விரும்பவில்லை....:))

இப்போதைக்கு நான் அப்பீட்டு ஆகிக்கிறேன்...தியேட்டர் நொறுக்ஸ்ஆ?? அட
நீங்க வேற பத்து பேரு தான் இருந்தாங்க அப்படி ஒரு சைலன்ட்....அப்பறம்
எங்கே இருந்து எழுதறது....இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுத்துக்கிறேன்...
படம் பார்த்தா கண்டிப்பா அதை பத்தி பதிவு போடுவேன். வேற பொது அறிவு
செய்திகள் எல்லாம் வேற அப்டேட் பண்ணனும்....பார்ப்போம்...மீண்டும்
சந்திப்போம்...


அதுவரைக்கும் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் படத்தோட ஸ்டில்லை
பார்த்து ரசிங்க...




உங்கள்

ஜெட்லி... (சரவணா...)

Tuesday, June 29, 2010

பயணக்குறிப்பு.... பார்த்ததும் படித்ததும்!!

கம்போட்ஸ்(கம்போடியா) - பயணகுறிப்பும் புனைப்பெயரும்....

ஸ்ரீபெரும்பத்தூர் - அதிகாலை பயணம்.






கடந்த மாதம் டிஸ்கவர் புக் பேலஸ் சென்ற போது என் கண்களில்
ப்பட்டது "கம்போடியா - இந்திய தொன்மங்களை நோக்கி" என்ற
பயணகுறிப்பு புத்தகம்.ஆசிரியர் கானா பிரபா. இவரும் ஒரு
வலைப்பதிவாளர் என்று எனக்கு புத்தகம் வாங்கி படித்தபின்
தான் தெரிந்தது. வலைப்பதிவில் எழுதிய பயண அனுபவங்கள்
தான் இந்த புத்தகம்.எனக்கு பயணகுறிப்பு புத்தகங்களை படிக்க மிகவும் பிடிக்கும் காரணம் நாம தான் போவல, போனவங்க அனுபவத்தையாவது படிப்போம் என்று தான். இந்த புத்தகத்தை வாங்க இன்னொரு காரணமும் இருக்கு...அது ஏன் ஏன் ஏன்....

**************************

நான் முதுகலை பட்டம் படித்து?? கொண்டிருந்த போது என் நண்பன் ஒருவன் முதல் வருடத்தில் எனக்கு ஏதாவது பட்ட பெயர் வைத்தே ஆக வேண்டும் என்று சேலத்தில் இருந்தே சபதம் செய்து வந்திருப்பான் போல... அவன் வைத்த அந்த பட்ட பெயர் தான் கம்போடியா...அது ரொம்ப நீளமா இருக்குனு கம்போட்ஸ் என்று சில நண்பர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

ஏன் மாமே இந்த பெயர் வச்ச... என்று கேட்டதற்கு நான் கம்போடியாவில் இருப்பவர்கள் போல் இருக்கிறேன் என்றான்.கம்போடியாகாரங்க எல்லாம் உன்னை மாதிரி தான் இருப்பாங்க,கம்போடியா எங்கோ ஆப்ரிக்காவில் இருக்கிறது என்று இன்னொரு நண்பனிடம் சொன்னதாய் நினைவு. நண்பன் அறிவாளி அவன் சொன்ன சரியாதான் இருக்கும் என்று அப்போது நினைத்தேன்.ஆனா இந்த பட்டபெயர்க்கு மட்டும் பெயர் சூட்டு விழாவே
எடுக்காம ஊரெல்லாம் பரவுது.

***********************

எனக்கும் இந்த புத்தகத்தை படிக்கும் வரை கம்போடியா எந்த
பக்கம் இருக்குனு கூட தெரியாது. புத்தகத்தை படிக்க ஆரம்பித்த
பின் தான் தெரிந்தது அது தாய்லாந்து மற்றும் வியட்நாம் அருகில்
இருக்கிறது என்று. கம்போடியா நாட்டுக்காரங்களும் தாய்லாந்து
மக்கள் போலேவே முக அமைப்பு உடையவர்கள் தான் என்பதை
என் நண்பர்களுக்கு இங்கு உரக்க சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு பெயர் வைத்த நண்பர் இப்போது தன் பெயரை பாதி தான் போட்டு கொல்கிறார் "னேஷ்" என்று..... !!நண்பர் பெயரின் முதல் ரெண்டு எழுத்தை தனியாக எழுதினால் வேறு அர்த்தம் வரும் என்பதால் ப்ரீயா விட்டுவிடுவோம்!!


இந்த புத்தகத்தை படித்த போது எனக்கும் கானா பிரபா அண்ணனுடன்
கம்போடியா சென்றது போன்று அனுபவம் கிடைத்தது. பல விஷயங்களை சுவாரிசியமாக சொல்லி இருந்தார். அங்கோர்வாட்
சிற்பங்கள், டுக் டுக் வண்டி, பன்டே கெடே ஆலயம், பாற்கடல் கடைந்த தேவர்கள் சிலை என்று புத்தகம் படித்த என்னால் மறக்க முடியாது. கம்போடியா சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற ஒரு புத்தகம் இந்த "கம்போடியா-இந்திய தொன்மங்களை தேடி".

>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ரீபெரும்பத்தூர் - அதிகாலை பயணம்.




மறுபடியும் ஒரு அதிகாலை பயணம் இந்த தடவை ஸ்ரீபெரும்பத்தூர்
போவோம் என்று நானும் நண்பனும் காலை 5.30 மணிக்கு கிளம்பினோம். இந்த தடவையும் கோவில் நோக்கி தான் பயணம். என்னடா இவன் ஆன்மிக பழமா இருப்பான் போல என்று நீங்கள் நினைச்சா அது உங்க தப்பு. நமக்கு தேவை பயணம் அது கோவில்னு சொன்ன வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்கும் அவ்வளவுதான். அப்படியே ஊர் சுத்தின மாதிரியும் ஆச்சி சாமியையும் பார்த்த மாதிரி ஆச்சி.இதை தான் ஒரு குவாட்டரில் ரெண்டு கட்டின்னு சாரி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்னு சொல்றோம்.





பூந்தமல்லி தாண்டியவுடன் அந்த காலையில் ரோட்டின் மீடியனில்
மாடுகள் கூட்டம். அது எப்போ கிழே இறங்கும் என்று யாருக்கும்
தெரியாது...விபத்து நடக்காமல் இருந்தால் சரி என்று வண்டியை
மாடுகளை கவனித்தே ஒட்டி சென்றான் நண்பன்.


ஒரு மூடிய கல்லூரியின் முன்னாடி பிரமாண்ட செட் ஒன்று
போடப்பட்டிருந்தது...அப்படியே ஒரு அரண்மனையை கவுத்தி
போட்ட மாதிரி இருந்தது...எந்த படத்துக்கு அப்படின்னு தெரியல...
பக்கத்தில் ஒரு நரகம் போன்ற போன்ற செட் போட்டிருந்தார்கள்...




ஸ்ரீபெரும்பத்தூர் அடைந்தவுடன் ராமானுஜர் கோவிலுக்கு சென்று
அப்படியே வணங்கி விட்டு கோவிலை ஒரு ரவுண்ட் அடித்தோம்.
மிக பழமையான கோவில்...எனக்கு ஒரே குறை தான் சாயங்காலம்
வந்தா இங்கே புளியோதரை சூடா கிடைக்கும்..காலையிலே வந்து
அந்த தாத்தா விக்க மாட்டாரு போல...!!




அடுத்தது என்ன பசிக்க ஆரம்பிச்சுடிச்சு அதனால அப்படியே
ஹோட்டல் தேடுனோம் எதுவும் கிடைக்கில...ஆனா என்
கண்ணுல இது தான் சிக்கிச்சி,,,, சிவ சிவா...





பாருங்க எப்படி வளந்து இருக்குனு,,..ஹலோ நான் விஞ்ஞானத்தை
சொன்னேன்ங்க... டிஜிட்டல்ல அட்டு பிட்டு படத்தை காமிக்கிற
அளவுக்கு நம்ம நாடு முன்னேற்றம் அடைஞ்சுருக்கு...எவ்ளோ
பெருமையான விஷயம் இது...!!(அடுத்த தடவை சாயங்காலம்
போகும் போது டிஜிட்டல்ல ட்ரை பண்ணி பார்க்கணும்)




இருங்காட்டுகோட்டையில் காலை உணவு முடித்தோம்...
கல்தோசை, ரெண்டு இட்லி தான்.. நன்றாக இருந்தது. சாப்பிட்டு முடித்த பின் அந்த கடையில் ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. அது அந்த சின்ன பையன் சுடும் நைஸ் தோசையை சேதம் செய்யாமல் திருப்ப வேண்டும் என்பதே. மாஸ்டர்க்கும் பையனுக்கும் பத்து ரூபாய் பந்தயம். பையன் நிறைய எண்ணெய் ஊற்றினான்...ஜெயித்து விடுவான் என்று நினைத்தேன்..ஆனால்
கோட்டை விட்டுவிட்டான்....!!



செம்பரபாக்கம் ஏரியை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்ற ஆசை, அது அன்று தான் நிறைவேறியது. ஆனா அதை அடையும் ரோட் தான் பயங்கரமா இருந்தது.ஏரியின் அழகை ரசித்தவாறு வண்டியில் சென்றோம். செம சீனாக இருந்தது.அங்கே சிலர் மீன் விற்று கொண்டும் சிலர் ஒரு சின்ன துடுப்பில் ஏரியில் மீன் பிடித்து கொண்டும் இருந்தனர். இயற்கை அழகை ரசித்தப்படியே வீடு வந்து சேர்ந்தோம்....





அடுத்ததா வல்லக்கோட்டை போற பிளான் போட்டிருக்கோம்...
போயிட்டு வந்து பதிவு போடுறேன்...!! இந்த பதிவுக்கு உங்கள்
ஆதரவை எதிர்ப்பார்க்கும்....


ஜெட்லி...(சரவணா...)

Thursday, June 25, 2009

இது எங்க ஏரியா.......

இது எங்க ஏரியா.......


நம்ம சென்னை குறித்து பல்வேறு தகவல்களை
உங்களுடுன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில்
எங்க ஏரியா திருவான்மியூர் அமைந்து உள்ள தியேட்டர்கள்
குறித்து கூறுகிறேன்.


(திருவான்மியூர் சிக்னல்)

தியாகராஜா தியேட்டர்:

திருவான்மியுரின் பெரிய அடையாளம் இந்த தியேட்டர், பல
வருடங்கள் முன்னாடி கட்டப்பட்டது. ஆனால் DTS, A/C,
QUBE போன்று அனைத்து வசதிகளும் கொண்டுள்ள ஒரு
நடுத்தர மக்களுக்கு ஏற்ற தியேட்டர்.கிழே கட்டணம் 28
ரூபாய் பால்கனி 50 ரூபாய்.

முன்னணி மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்களுக்கு
கண்டிப்பாக முதல் மூன்று நாட்கள் பால்கனி கவுண்டரில்
டிக்கெட் தர மாட்டர்கள்.தியேட்டர் ஊழியர்களே ப்ளாக் டிக்கெட்
விற்ப்பார்கள்.அட்வான்ஸ் BOOKING என்றால் என்னவென்று
கேட்பார்கள். தயவு செய்து பேப்பர் பார்த்து விட்டு யாரும்
முன் பதிவுக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.


இங்கே முதல் நாள் முதல் படம் பார்ப்பது போருக்கு சென்று
திரும்புவது போல. ஒரு சின்ன கேட் வழியாக 400 பேரை
உள்ளே தள்ளுவார்கள்.நான் கடைசியாக அஜித்தின் பில்லா படம்
முதல் நாள் பார்க்க சென்றேன்.உள்ளே போகுபவர் போலீஸ் லத்தி அடியுடன் தான் படம் பார்க்க வேண்டும், ஏன் என்றால் அவளோ
தள்ளு முள்ளு.நான் படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து சென்றதால் லத்தி அடியில் இருந்து தப்பி விட்டேன். இல்லன பழுத்து இருக்கும்.பார்க்கிங் வசதி கொஞ்சம் கம்மிதான்.

ஜெட்லியின் பரிந்துரை:

குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் உஷாராக தான்
போக வேண்டும்.ஏன் என்றால் பக்கத்திலயே டாஸ்மாக்
கடை உள்ளது.

**********************
ஜெயந்தி தியேட்டர்:

இதுவும் பழமையான தியேட்டர் தான். இன்னும் பழமையாகவே
இருப்பது தான் கொடுமையான விஷயம்.ஏதோ தர்மத்துக்கு
நடத்துவது போல் இயங்கி கொண்டிரிக்கிறது. இந்த தியேட்டரில்
A/C,AIR,QUBE,DTS போன்று எதுவுமே இல்லை. பால்கனி டிக்கெட்
விலை 25 ரூபாய் தான், கிழே இருபது ரூபாய் தான்.

நான் இந்த தியேட்டரில் கடைசியாக ஜெயம்கொண்டான் படம்
பார்த்தேன்.பொதுவாக நான் ஜெயந்தி பக்கம் தலை வைத்து படுப்பது கூட இல்லை சூழ்நிலை காரணமாக சென்றோம், பால்கனி
மாட்டு கொட்டாய் போன்று இருந்தது.மின் விசிறி ஓடியும் காத்து
வரவில்லை, இருக்கை அருகே முழுவதும் பாக்கு தூப்பி கொடுமையாக இருந்தது.


படத்தின் போது சவுண்ட் ஸ்க்ரீன் அருகே இருந்து வருவதால்
ஒன்றும் தெளிவாக விழவில்லை,முக்கியமா ஸ்க்ரீன்
மஞ்சள் கலரில் தெரிந்தது. இங்கே படம் பார்த்தால் கண்
கெட்டுவிடும் அது மட்டும் தான் புரிந்தது. தியேட்டர் என்று
சொல்லமுடியாத ஒரு புரியாத புதிர் தான் ஜெயந்தி தியேட்டர்.


ஜெட்லியின் பரிந்துரை:

இங்கே படம் பார்த்தால் நல்ல படம் கூட உங்களுக்கு
பிடிக்கமால் போய் விடும்.நீங்கள் குளித்து விட்டு வர
வேண்டிய அவசியம் இல்லை தியேட்டரில் உள்ள
புழுக்கமே உங்களை வியர்வையால் குளிப்பாட்டி விடும்.

**********************


கணபதிராம்:

இந்த தியேட்டர் இப்போதைக்கு ஒரு அளவு பரவாயில்லை.
நல்ல விசாலமான பார்க்கிங், முன் பதிவு வசதி உண்டு.
நான் தற்போது பார்த்த சில படங்கள் இந்த தியேட்டரில்
இருந்து தான் பார்த்தேன்.பால்கனி டிக்கெட் அம்பது ரூபாய்
கிழே சரியாக தெரியவில்லை.

சீட் வசதி நன்றாக இருக்கிறது, ஆனால் பல சீட்கள் உடைக்க
பட்டிரிக்கின்றன. மொக்கை படம் பார்த்த ரசிகர்கள் வெறியில்
உடைத்திருக்கலாம் என தெரிகிறது.மிச்ச படி சவுண்ட்,A/C
எல்லாம் அருமையாக இருக்கும்.

ஜெட்லியின் பரிந்துரை:

கணபதிராம் காதலியுடன் படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டர்.
ஏன் என்றால் நிறையே மொக்கை படங்கள் ரிலீஸ்
செய்கிறார்கள்.

போனஸ் செய்தி:

சில காலங்களுக்கு முன் ஷகீலா படங்களை மக்களுக்கு
அளித்த பெருமை கணபதிராம் தியேட்டர்க்கு இருக்கிறது.


உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டையும் போட்டு போங்க.
வேற ஏதாவது தியேட்டர் பத்தி தெரியும்னா கமெண்ட் பண்ணுங்க......

உங்கள்
ஜெட்லி

Thursday, June 18, 2009

சாமியோவ் நல்ல இருக்கியா சாமியோவ்!....

சாமியோவ் நல்ல இருக்கியா சாமியோவ்!....

நீங்கள் என்றைகாவது நரிகுறவர்கள் வாழும் இடங்களுக்கு
போய் இருக்கிங்களா?


எங்கள் வீட்டின் பக்கத்தில் சுமார் இருநூறு நரிகுறவர்கள்
வசிக்கும் நகர் உள்ளது. சிறுவயதில் அவர்கள் இருப்பிடம்
தேடி நானும் நண்பர்களும் ஒரு தடவை சென்றோம்,
அவர்களிடம் இல்லாத பொருளே இருக்காது என்று கேள்விப்பட்டு,

விலையும் குறைவாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் அவர்கள் இருப்பிடத்தை நோக்கி போய் கொண்டிருந்தோம்.அவர்களிடம்
பந்து, கோலி அல்லது சின்ன மோட்டார்(பேர் நினைவில் இல்லை)
எதுவும் அவர்களிடம் கிடைக்கும்.எல்லாமே பழைய பொருள்தான்
சிலவை மட்டும் புதிதாக இருக்கும்.


நானும் என் நண்பர்களும் பந்து வாங்க சென்றோம் ஏன்
என்றால் அவர்களிடம் மட்டும் டென்னிஸ் பந்து ஐந்து
ரூபாய்க்கு கிடைக்கும். முதன்முதலில் எங்களை வரவேற்றது
ஒரு பழைய பேப்பர் கடை அவர் நம்ம தமிழ் ஆளு தான்,

நரிகுறவர்கள் தாங்கள் சேகரித்த அனைத்து பழைய
பொருள்களும் இவரிடம் தான் கடைசியில் வந்து சேரும்
என்று அவர் கடையை பார்த்தாலே தெரிந்துவிடும். ஆமாம்
மலை போல் அவரிடம் பொருள்கள் குவிந்து இருந்தன.



என் இட கையின் பக்கம் ஒரு நரிக்குறவர் சமைத்து கொண்டு
இருந்தார், நான் சும்மா என்னடா செய்யறார் என்று பார்த்தேன்.
ஒரு பூனையின் தோலை உறித்து அதை அடுப்பில் போடுவதற்கு

மசாலா தடவி கொண்டு இருந்தார். பூனையை கூட சாப்பிடுவாங்களா?
என்று அன்று தான் எனக்கு தெரியும். எங்கள் பகுதியிலும் அடிக்கடி பூனை திருடு போகும் ரகசியம் எனக்கு பன்னிரண்டு வயதில் தான் புரிந்தது.


கொஞ்ச தூரம் போயிருப்போம் எனக்கு வேறு ஏதோ தேசத்தில்

இருப்பது போன்ற உணர்வு. அப்போ அப்போ வந்த வழியை திரும்பி
பார்த்து கொண்டே நடந்தேன், கூட வந்த நண்பர்கள் டென்னிஸ் பால்
இருக்கிறதா என்று விசாரித்து வந்தார்கள். இன்னொரு நரிக்குறவன்
தன் துப்பாக்கிக்கு ரவையை அடைத்து கொண்டு இருந்தான். ஒருவன் ஏதோ புரியாத மொழியில் கத்தி கொண்டே எங்களை கடந்து சென்றான்.


கண்டிப்பா அவர்கள் குளித்து பல நாள் ஆகிருக்கும், ஆண்கள்
பெண்கள் இருவருக்குமே தண்ணி என்றாலே அலர்ஜி போல,
ஆனால் சரக்கு தண்ணி ரெண்டு பேருக்குமே ஒத்துக்கும்.
எங்கள் ஏரியாகாரர்கள் குறவர்களை பற்றி கூறும் போது
அவர்கள் நம்மை விட பணக்காரர்கள், வங்கியில் லட்சம்
லட்சமா பணம் இருக்கும் ஆனா அவுங்க இப்படிதான்
இருப்பாங்க என்று கூறுவார்கள்.

நாங்க ஒரு குறவனிடம் டென்னிஸ் பால் இருக்கிறதா
என்று கேட்டோம் ஹ்ம் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.அடுத்து அடுத்து நகர்ந்து கொண்டே போனோம்.
சின்ன சின்ன பசங்க எல்லாம் குரங்கு கூட விளையாடி கிட்டு இருக்கிறத கொஞ்ச நேரம் பார்த்து ரசித்தோம்.

அதன் பின் ஒரு குறத்தியிடம் சென்று டென்னிஸ் பால்
இருக்கிறதா? என்று கேட்டோம்.அதற்கு அவள் என்கிட்டே
இந்த பால் தான் இருக்கு என்று தான் மாராப்பை காட்டினாள்.


என்ன கொடுமை சார் இது!இப்படியும் இருக்காங்களே என்று தலையில் அடித்து கொண்டு டென்னிஸ் பால் வாங்கமலயே
வீடு வந்து சேர்ந்தோம்.இன்று வரை அது ஒரு கசப்பான
அனுபவமாகவே என் வாழ்வில் இருந்து வருகிறது ....

உங்கள்

ஜெட்லி

Friday, May 29, 2009

சோலையார்பேட்டையும் சுட்டெரிக்கும் வெயிலும்.

இந்த பதிவு சென்னை, வேலூர் இன்னும் பிற வெயில் வாட்டி எடுக்கும் பகுதிகளில் வசிக்கும் பதிவர்களின் வெறுப்பையும் வயித்தெரிச்சலையும் பெறவே எழுதப் பட்டது.

நேற்று முழுவதும் நல்லா வெயிலில் ஊர் ஊராக (நாய் மாதிரி தான்) அலையற வேலை, தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து ஏறி இன்னொரு பேருந்து மாறி இப்படியாக ஒரு பயணம் மேற்கொண்டு இறுதியாக பிருந்தாவன் விரைவு வண்டி ஏற சோலையார்பேட்டை (அதாங்க ஜோலார்பேட்டை) வந்து சேர்ந்தேன் (நொந்து நூடுல்ஸாக). இந்த ஊரைப் பற்றியும் ரயில் நிலையத்தைப் பற்றியும் ஏற்கனவே நான் எழுதிய பயணக் குறிப்பை படிக்கவும் , அப்படி இருந்த இடம் இன்று பாலைவனமாக சுட்டது, கண்கள் அப்படியே சிவந்து அவிந்து போயின.

பிறகு ஒரு நிழல் பார்த்து ஒதுங்கி திரு.ஜே.எஸ்.ராகவன் அவர்களின் "தத்தக்கா புத்தக்கா" புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தில் மூழ்கி விட்டதால் சுற்றி நடப்பதை கவனிக்கவில்லை (கருப்பு கண்ணாடி வேறு) . சற்று நேரத்துக்கெல்லாம் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது,. கண்ணாடியை கழட்டிப் பார்த்தால் வெயில் சுத்தமாக மறைத்துக் கொண்டு கார் மேகங்கள் ஏலகிரி மலையை முட்டிக் கொண்டு இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்களில் அங்கே சூழ்ந்து இருந்த வெட்கை நாலு கால் பாய்ச்சலில் ஓடி விட்டது, "தென்றல் வந்து என்னை தொடும் ஆஹா ........." இப்படியாக நிலைமை மாறியது.

சிறிது நேரத்துக்கெல்லாம் லேசாக மழை தூர ஆரம்பித்தது, நான் எழுவதாக இல்லை (பின்ன இதுக்காக தானே தவம் இருந்தேன்) ஆனால் மழை மிக வேகமாக அடிக்க ஆரம்பித்தது, ஒரு பக்கம் அதிரடி தாக்குதல் அதே நேரத்தில் குற்றால சாரல் வேறு. சும்மா ஒதுங்கி நின்றிருந்த அனைவரையும் இந்த சாரல் குளிப்பாட்டியது. அடுத்ததாக நான் கூறப்போகும் விஷயம் தான் உங்கள் Stomachburn-i (அதாங்க வயித்தெரிச்சல்) கிளப்பும்.

திடீரென தட தட, தம தம, சல் சல் இப்படி பல மெல்லிய சத்தங்கள் பிறகு அதுவே மிக பலமாக, ஒன்றுமே விளங்கவில்லை எனக்கு என்னவென்று பார்த்தால் ஆலங்கட்டி மழையாம். என்னுடைய இருபத்தைந்து வருட வாழ்க்கையில இதை முதல் முறையாக நான் அனுபவிக்கிறேன், ஹைய்யோ என்ன ஒரு அழகு என்ன ஒரு குளிர்ச்சி என்ன ஒரு சந்தோசம் அங்கு இருந்த அனைவரின் முகத்திலும். ஒவ்வொரு ஐஸ் கட்டியும் ஒரே மாதிரி அளவில், வடிவில், குளிரில், (ஒரு ஐஸ் கட்டியை எடுத்து சுவைத்து பார்த்தேன் "அட போங்கடா நீங்களும் உங்கள் Mineral water-um") சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நடை மேடை முழுவதும் வெள்ளியை உருக்கி முலாம் பூசியது போல் அழகாக காட்சியளித்தது. என்னதான் ரெண்டு கழுதை வயது ஆனாலும் (ஆமா இதென்ன கணக்கு??) ஒரு சின்ன குழந்தையை போல அதை அழகாக ரசித்துக் கொண்டே இருந்தேன்.


பிறகு ரயில் வந்து அதில் ஏற ஆனா சுமார் ஐந்து நொடிகளுக்குள் நன்றாக நனைந்து விட்டேன் என்றால் பாருங்களேன், உள்ளே எல்லோரும் என்ன ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆலங்கட்டி மழையின் இசைக் கச்சேரி ஒரு பத்து நிமிடம் தொடர்ந்தது பிறகு வாணியம்பாடி வரை மழை பெய்தது அதற்குப் பிறகு அதற்கான ஒரு சுவடு கூட தெரியல. நேற்றைய சென்னையின் வெப்பம் 41. சரி சரி நீங்க எல்லோரும் என்ன கொலை வெறியோட பார்ப்பது தெரியுது அதே வெறியோட ஒரு ஓட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.

நன்றி.
சித்து.

Thursday, May 21, 2009

நான் அவள் அது...............

நான் அவள் அது......

(குறிப்பு: இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக
கொண்டு எழுதப்பட்டுள்ளது)

________________________________

நானும் எனது நண்பர்கள் டேவிட் , ராம் , ராஜா, சதீஷ் ஆகியோர் ஒரு மாதம்
முன்பே கொடைக்கானல் போவதாக முடிவு செய்து இன்று கொடைக்கானல் காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம் . சீசன் டைம் என்பதால் எளிதில் எங்களுக்கு ஹோட்டல் கிடைக்கவில்லை, அங்கும் இங்கும் அலைந்து கொஞ்சம் ஒதுக்கு புறமாக ஒரு அறை கிடைத்தது. நாங்கள் தங்கிருந்த இடம் ரொம்ப அமைதியாக ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.



என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது , நான் எவ்வளவு தான் சரக்கு அடித்தாலும் சுய நினைவோடு தான் இருப்பேன் . என் நண்பன் டேவிட் மிகுந்த இறை பக்தி உடையவன் தினமும் தூங்கும் முன் பைபிள் படித்து விட்டுதான் தூங்குவான். மீதி மூன்று நண்பர்களும் அரட்டை அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.டேவிட் தவிர எங்கள் அனைவருக்கும் குடி பழக்கம் உண்டு, எல்லாம் அளவோடு தான். முதல் நாள் எங்கு போவது என்று ஒரே குழப்பம். ராம் ஒரு இடம் சொல்றான் சதீஷ் வேற இடம் சொல்றான். எங்களுக்குள் குழப்பம் அதனால் நான் ஒரு முடிவு எடுத்து, முதலில் நாம் டால்பின் நோஸ் செல்வோம் என்றேன்.


டால்பின் நோஸ் இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள், மரங்கள் சூழ்ந்துள்ள ஒரு இயற்கையான இடம். அங்கு நானும் நண்பர்களும் சென்று மரத்தின் மீது ஏறுவதும் குதிப்பதமாக சேட்டை செய்து எங்கள் பொழுதை கழித்தார்கள். ஒரு கட்டத்தில் ராஜா கொண்டு வந்த டிஜிட்டல் கேமெராவில் படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தோம் . நான் படம் எடுக்க மீதி நால்வரும் போஸ் கொடுத்தார்கள், நான் எடுத்த போட்டோவை preview பார்க்கவில்லை,
ஒரு வேளை பார்த்து இருந்தால் அந்த நொடியே நாங்கள் சென்னைக்கு கிளம்பி இருப்போம் . அந்த படத்தில் என் நண்பர்களுக்கு கீழ் ஒரு சிறுமி தலவெறி கோலத்தில் உட்கார்ந்து இருந்து எங்கோ பார்த்து கொண்டு இருந்தாள். ஆனால் அந்த சிறுமி நேரில் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.


பொழுது சாய்ந்ததும் நாங்கள் அறைக்கு சென்றோம் , ஊர் சுற்றிய களைப்பில் அனைவரும் சோர்ந்து படுத்து இருந்தோம் . ராஜா மது பாட்டில் எடுத்ததும் அனைவரும் உற்சாகமாக ரவுண்டு கட்டி சரக்கு ஏற்ற ஆரம்பித்தோம் . டேவிட் வழக்கம் போல் பைபிள் படித்து விட்டு படுக்கைக்கு சென்றான்.மது முடிந்த பின் சிறிது நேரம் டாபிக் போட்டு பேசி அப்படியே எங்களை அறியாமல் தூங்கிவிட்டோம்.

சிறிது நேரத்தில் டேவிட் என்னை எழுப்பினான் நான்

"ஏன்டா தூக்கத்தை கெடுக்குற" என்று அலுத்து கொண்டு கேட்டேன்.


அவன் முகம் வெளிறி போய் இருந்தது. என்னடா என்றேன், அதற்க்கு அவன்
" டேய் இங்க என்னமோ இருக்குடா, யாரோ கழுத்தை புடிச்சி நெரிக்கிற மாதிரி இருக்குடா, என் மார்ல யாரோ உட்கார்ந்து அமுக்குற மாதிரி இருக்குடா" என்று
புலம்பி தள்ளினான்.


"குடிச்சது நாங்க ஆனா நீ உளர்ற அதெல்லாம் ஒண்ணும் இல்ல போய் படுத்து தூங்கு" என்று அவனை சமாதான படுத்தி நான் என் தூக்கத்தை தொடர்ந்தேன்.


டேவிட் திரும்பவும் பைபிள் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.திரும்பவும் அவனுக்கு யாரோ ரூமில் நடப்பது போன்று தோன்றியது. எங்களை எழுப்பினான் நான் சலித்து கொண்டே "என்னடா" என்றேன் .

"டேய் மச்சான் இந்த ரூம்ல என்னவோ இருக்கு வாங்க சென்னைக்கு போய்டலாம்" என்றான்.

டேவிட் சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர். "டேய் தண்ணி அடிச்ச நாங்களே சும்மா இருக்கோம் உனகேன்னட ஆச்சு" என்று கேலி செய்தனர். அனைவரும் தூங்க சென்றனர்.டேவிட் அன்று இரவு தூங்கவில்லை.


மறுநாள் காலையில் டேவிட்க்கு பயங்கர ஜுரம் அடித்தது. என்னிடம் வந்து தான் திருச்சியில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு போவதாக கூறினான். நாங்களும் சரி அவனுக்கு உடம்பு சரியில்லை என்று அனுப்பிவைத்தோம்.




"சரி அவன் போன போரண்ட நாம என்ஜாய் பண்ணுவோம்" என்று சதீஷ் அனைவரையும் உற்சாக படுத்தினான்.


அன்று நாங்கள் suicide point மற்றும் சில இடங்களை பார்த்து எங்கள் அறைக்கு திரும்பினோம் . மீண்டும் மது உற்சாகம் களைகட்டியது, அறையில் இருந்த அந்த பெரிய டேபிள்லில் வட்டம் போட்டு அரட்டை அடித்து டைம் போனதே தெரியவில்லை.அப்போது ராஜா தூங்க டைம் ஆச்சுன்னு டி.வி யை ஆப் செய்தான் . அப்போது தான் அந்த வீபரிதம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது, ஆப் செய்த டி.வி யை உற்று நோக்கினான் அதில் ஒரு சிறுமி தலை விரி கோலத்துடன் hanger மாட்டும் இடத்தில் தொங்கி கொண்டு இருந்தாள்.திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை,டி.வி யை பார்த்தால், அந்த சைடு சிறுமி தொங்கி கொண்டு இருந்தவள் கிழே இறங்க ஆரம்பித்தாள். ராஜாவுக்கு பயம் வந்து என்னிடம் கூறினான்.



நாங்கள் ஆப் பண்ண டி.வி யை பார்த்த போது அந்த சிறுமி எங்கள் அருகில் வந்து விட்டதை பார்த்து திகில் அடைந்தோம் . அந்த சிறுமி தலைவிரித்து ஒரு சோக முக பாவனையில் இருந்தது.கண்டிப்பா அவள் மனுஷியில்லை என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.


அவள் அருகே வந்தாள் நண்பர்கள் அனைவருக்கும் போதை இறங்கி பயம் வந்து விட்டது,அவள் நேரே வந்து என் கழுத்தை பிடித்து

"நேத்து காலையில போட்டோ எடுத்த இல்ல அத அழி" என்றாள்.


எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த போட்டோ என்று தெரியவில்லை தைரியம் வந்து சதீஷ் "முதல்ல அவன விடு" என்றான்.

அந்த சிறுமி கேட்கவில்லை, நான் அந்த சமயம் என் கையில் கிடைத்த கம்பியால் டி.வி யை பார்த்து அந்த சிறுமி இருக்கும் பக்கம் கம்பியை வீசினேன் . அந்த கம்பி அவள் மேல் பட்டு அவள் அழ ஆரம்பித்தாள். அந்த சிறுமி எங்களிடம்

'இங்க இருக்காதிங்க மொதல்ல கிளம்புங்க' என்று எச்சரிக்கை விடுத்தாள்.


நண்பர்கள் அனைவரும் அழும் நிலைக்கு வந்து விட்டனர் . நான் அந்த போட்டோவை அழித்து விட்டதாக கூறினேன் .


அப்போதும் அந்த சிறுமி "இங்க இருந்து போய்டுங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்" என்றாள். நாங்கள் நால்வரும் டர்ராகி வெளியில் வந்து , யாரைவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் ஒரு ஆளையும் காணோம். அறையில் வேலைக்கு இருப்பவர்கள் இரவில் தங்கள் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கமாம் .நாங்கள் மேலும் பயம் கொண்டு ரோட்டில் ஓரத்தில் உக்காந்து இரவு பொழுதை கழித்தோம். என் வாழ்க்கையில் இந்த சம்பவம் ஓர் உண்மையை உறைத்தது அது ஆவி இருக்கிறது என்று.


மறுநாள் காலையில் வேலைக்கு வந்த நடுத்தர வயது உடைய நபரிடம் நாங்கள் இது மாதிரி ஒரு சிறுமியை கண்டதாக கூறினோம் . அதுக்கு "அவர் சும்மா தண்ணி போட்டு ஒலராதிங்க தம்பி" என்றார்.தான் அறையை போய் சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றார் நாங்கள் பயந்து போய் அறைக்கு செல்லவில்லை. அறைக்கு சென்ற நபர் உடனே வெளியில் வந்து

"நேத்து நைட் என்ன பண்ணிங்க" என்றார்.


"ஒண்ணும் இல்லன நாங்க பாட்டுக்கு சரக்கு சாப்பிட்டு தூங்க போனோம் அப்பதான் அந்த பொண்ணு வந்து ..." என்று இழுத்தேன் .



உடனே அந்த நபர் "போய் அந்த டேபிள்அ பாருங்க" என்றார்.



நாங்கள் அனைவரும் சென்று டேபிளில் என்ன என்று பார்த்தோம் . நாங்கள் அனைவரும் மூச்சடைத்து நின்றோம், அடுத்த நொடி பெட்டி பையை எடுத்து ஊருக்கு கிளம்பினோம்.

அந்த டேபிள் மீது ஒரு பெண்ணின் கூந்தல் முடி கொத்தாக இருந்தது.


முற்றும்.

(
இதை சிறுகதைன்னு சொல்லலாமா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.)

Tuesday, May 12, 2009

செல்லிடப் பேசியும் செல்லாத பேச்சுக்களும்.........

நண்பர்களே, வணக்கம் சும்மா இந்த செல் பேசியில் அவனவன் பண்ற அலம்பல் தாங்கல, இந்த விஷயமா எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அப்பா அதை நினைத்தால் இப்பவே கன்னை கட்டுதே.......



சென்ற செவ்வாய் KVB வங்கி சென்று ஒரு பத்து ருபாய் அதாங்க பத்தாயிரம் ஒரு கணக்கில் Deposit செய்வதற்கு சென்றேன். வெளியில் வெயில் மண்டைய பொலந்துடுக்சு உள்ள போனால் ஒரு ஐம்பது பேர் வரிசையில் நிற்கின்றனர், AC வேலை செய்தும் பயன் இல்லை, ஒரே வியர்வை வாடை வேறு. வரிசையோ ஆமை வேகத்தில் நகர்கிறது. அப்பொழுது ஒரு 40-45 மதிக்கத்தக்க பெண் உள்ளே நுழைந்தார், வரும் பொழுதே செல் போனில் சத்தமாக பேசியவாறே. பிறகு சலான் நிரப்பும் பொழுது கழுத்தை சாய்த்தவாறே பேசிக்கொண்டே இருந்தார்.

வந்து என் பின்னால் நின்று கொண்டார். முதலில் யாரோ ஒரு உறவினரை அக்கு வேறாக ஆணி வேறாக கிழித்து தொங்க விட்டார் "அதெப்படி அந்த ஆளு அப்படி பண்ணலாம்?? பெறகு எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வராரு??" இப்படியாக பேசினார். பிறகு "பேங்க் வந்திருக்கேன், அவரு போய் பத்தாயிரம் பணம் கட்ட சொன்னாரு" இப்படியே பேசிக் கொண்டிருந்தார், வரிசையில் நின்று கொண்டிருந்த பெரும்பாலானோர் இவரின் கச்சேரியை கேட்டவாறே நின்று கொண்டிருந்தனர்.

ஆனால் இதெல்லாம் விட அடுத்து சொன்னாரு பாருங்க "சீ நான் காலைலயே குளிச்சுட்டேன் பா, ஆமா நீல கலர் புடவை தான் கட்டிருக்கேன் அதான் பா அன்னிக்கு பாத்தியே அதே தான்!!!!!!!!" இதை பேசும் பொழுது அனேகமாக வங்கியில் இருந்த அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர், உற்சாகத்தில் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார், அனைவரும் தன்னையே பார்க்கின்றனர் என்பதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பொது இடங்களில் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியாமல் இப்படியா பேசுவது?? யாரவது சில்மிஷ ஆசாமி இவர் பேச்சை வைத்து ஏதாவது Comment அடித்தால் அனாவசிய மனக்கஷ்டங்களும் பிரச்சனைகளும் தான் ஏற்படும்.



இப்படி தான் திரை அரங்குகளில் சிலர் பண்ணும் அலம்பல்கள் தாங்க முடியாது, அவனவன் சோக காட்சியில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பான் ஆனால் சிலரோ அங்கேயே முழு மூச்சாக கடலை போட்டு கொண்டிருக்கின்றனர் "அப்படியா பப்பி குட்டி போட்ருக்கா?? வாவ்" இப்படி தொடங்கி இன்னும் என்னனமோ பேசுறானுங்க.

அன்று ஒரு நாள் ஒரு கலந்தாய்வின் பொழுது ஒருவரின் செல் போன் சிணுங்குது "கிட்ட நெறிங்கி வாடி கர்லா கட்ட உடம்பு காரி........" எந்த இடத்தில் செல் பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வெவஸ்தையே கிடையாதா?? இப்படி தான் சமீபத்தில் கூட நடந்த ஒரு கூட்டத்தில் இயக்குனர் இமயம் ஈழத் தமிழர்களுக்காக பேசுகையில் இதே போன்று தான் நடந்துள்ளது அதை இன்று (12/05/2009) தினமலர் பார்க்கவும்.



இந்த செல் போன் வந்தாலும் வந்தது அவனவன் பித்து பிடித்து போல் தனியே பேசுவதும், தலையாட்டுவதும் வாகனம் ஓட்டும் பொழுது கழுதை சாய்த்து கொண்டு பேசுவதும், தலைக் கவசத்துக்குள் சொருகிக் கொண்டு பேசுவதும் இன்னும் என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டுகின்றனர். முதலில் உங்கள் பாதுகாப்பை பார்க்கவும் அடுத்தது சுற்றம் பார்த்து பேசவும்.

சரி நண்பர்களே உங்களுடைய இது போன்ற அனுபவங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி.

Friday, May 8, 2009

நியூட்டனின் 3ஆம் சதி ஸாரி விதி

நியூட்டனின் 3ஆம் சதி

எனக்கு மொதல்ல இந்த படம் பாக்கனும்னே தோணல.....சில சதியால்
நான் நியூட்டனின் 3ஆம் விதியை வெள்ளிதிரையில் காண நேர்ந்தது. காலத்தின் கட்டாயம். கால கொடுமைன்னு கூட சொல்லலாம்.





சதிகள்:

1) மே 5 வழக்கம் போல் எனக்கு லீவ், சரி படத்துக்கு போலாம்னு யோசிச்சப்ப நான் இன்னும் பாக்காத படம் GAP10'S மரியாதை படம் மட்டும் தான் . மரியாதை படம் பாக்கறதுக்கு வீட்ல DVDல எதாவது இங்கிலீஷ் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த நேரம் பாத்து
திடிர்னு திடிர்னு hang ஆயி என் கம்ப்யூட்டர் சதி பண்ணிடிச்சு.

2) அப்புறம் எப்படியோ முயற்சி பண்ணி பெரிய தலை al pacino நடிச்ச 88 MINUTES படத்தை ஒரு 45 MINUTES படம் ஓடிட்டு இருக்கும் போதே நம்ம கரண்ட் சதி பண்ணிடிச்சு. பொசுக்குன்னு போச்சு, நானும் வரும் வரும்னு பார்த்தேன் வரலே.

3) சரி நாம 1 மணி ஆட்டத்துக்கு எதாவது இங்கிலீஷ் படம் போவலாம்னு ஒரு முடிவு எடுத்தேன், அதுக்குள்ள பல் டாக்டர் போன் பண்ணி 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரி 12 மணிக்கு தானே போயிட்டு ஒரு பத்து நிமிஷ வேலை முடிச்சிட்டு அப்படியே படத்துக்கு போலாம்ன்னு நினைச்சி போன எனக்கு முன்னாடி கிளினிக்ல மூணு பேர் ஆஹா டாக்டரும் சதி பண்ணிட்டாரேன்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடிச்சி.

4) கிளினிக் விட்டு வீட்டுக்கு வரும் போது மணி 1 , இனிமே எங்கே படத்துக்கு போறதுன்னு ப்ளாக் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ சில ப்ளாக்ல நியூட்டனின் விதி நல்லா இருக்குன்னு சொன்னாங்க அத நம்பி 3.20 ஷோ சாந்தம்ல படம் பாக்க நானும் என் நண்பனும் போனோம்.

*********************************

சத்யம் திரைஅரங்கின் வெளிய நடந்த உரையாடல்:

நான்: டேய் இவன் படத்துக்கெல்லாம் 100 ரூபாய் டிக்கெட் அதிகம்டா.?

நண்பன்: வேற எங்க போறது, 10 ரூபாய் டிக்கெட் வாங்குவோமா?

(அங்கே போய் பார்த்தால் 10 ரூபாய் டிக்கெட் ஹவுஸ் புல்)

*************************************

வேற வழியில்லாமல் 100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே அமர்ந்து படத்தை ரசித்தோம். சும்மா சொல்ல கூடாது சாந்தம்ல அவ்ளோ காலிய நான் இது வரைக்கும் எந்த படத்தையும் பார்த்ததில்லை. எங்க ROWல நானும் என் நண்பனும் மட்டும் தான் உட்கார்ந்து இருந்தோம். வழக்கம் போல தள்ளிட்டு வரவங்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம்(அரை மணி நேரம் பின்னாடி வந்து அரை மணி நேரம் முன்னாடி போறவங்களுக்கு).





படத்தை பத்தி சொல்லனும்னா, அதான் எல்லோரும் சொல்லிட்டங்கலே நல்ல திரைக்கதை, வசனம்,பின்னணி இசை... இந்த மாதிரி படத்தை பாக்கும்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டுக்கள் கண்டிப்பா
தேவையான்னு ஒரு கேள்வி எனுக்குள் எழுந்து அமுங்கிடிச்சு . படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரைஅரங்கில் ஒரே சிரிப்பு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேவலமா கத்துறாங்க. திரைஅரங்கில் சில பேர் தங்கள் நண்பர்களை திட்டி கொண்டு இருந்தார்கள் ஏன்டா சும்மா இருந்தவனை
இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்திங்கன்னு. ஆனால் இயக்குனர் தாய் முத்துசெல்வனை பாராட்டியே ஆக வேண்டும், அவர் திரைகதையில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் பாட்டிலும், ஹீரோ தேர்விலும் செலுத்தி இருக்கலாம்.



Friday, May 1, 2009

பயணங்களும் மனிதர்களும்

சற்றே பெரிய பதிவு தான் கொஞ்சம் பொறுமையுடன் படித்து தான் பாருங்களேன்.

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய சித்தரஞ்சன் பேசுகிறேன், முதல் முறையாக என்னுடைய ஒரு நாள் பயண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பயணங்கள் என்றைக்குமே எனக்கு சுகமானது தான் ஏனென்றால் எப்பொழுதுமே ஒரு இனிய சூழலில் அதிகம் வருத்திக் கொள்ளாமல் சுகமாக பயணம் செய்பவன் நான். ஆனால் நேற்றைய பயணம் எனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை காட்டியது, உலகம் எவ்வளவு அழகானது என்பதை காட்டியது, இந்த அழகை இவ்வளவு வருடங்கள் காணாமல் குருடாய் இருந்ததை எண்ணி மிகவும் வேதனை கொள்கிறேன்.



நான் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட வழித் தடத்தில் பேருந்தில் பிரயாணம் செய்வேன், அந்த வழித்தடம் எப்பொழுதும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வந்து கொண்டே இருக்கும் அதனால் அனேகமாக நான் ஏறியவுடன் அமர இருக்கை கிடைக்கும். உடனே காதில் Earphones மாட்டிக் கொண்டு ஏதாவது புத்தகம் படித்தபடியே எனது 45 KM தூர பயணத்தை நிறைவு செய்வேன் அல்லது அவர்கள் ஒளிபரப்பும் ஏதாவது மொக்கை படத்தை (நான் பார்த்தவரையில் நூற்றுக்கு 95% டாக்டர் அவர்களின் படத்தை தான் போட்டு மக்களை கொல்வர், ஏன் இந்த கொலைவெறியோ?????) பார்த்துக் கொண்டே செல்வேன். அதாவது என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று சிறிதும் தெரிந்து கொள்ளாமல் பிரயாணம் செய்வேன்.

ஆனால் நேற்று நல்ல முகூர்த்தம் என்பதால் அந்த ஊரெங்கும் கல்யானமயம் அதனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் பேருந்துகளில் அதற்கு மேல் நெரிசல், நேரம் என்னை துரத்திக் கொண்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி தள்ளாடிக் கொண்டு வந்த அந்த அரசுப் பேருந்தில் ஏறினேன், படிக்கட்டில் ஒரு கால் மட்டும் வைக்க தான் இடம் இருந்தது அதாவது ஒரு கால் மேல் இன்னொரு கால் வைத்து நின்று கொண்டிருந்தேன் (கல்லூரி படிக்கும் பொழுது குரங்கு போல் தொத்திக் கொண்டு சென்றது, அதற்குப் பிறகு இப்பொழுது தான்) நல்ல வேலை கதவு இருந்ததால் சற்றே ஆறுதல். தொடர்ந்து ஐந்து ஊர்களில் பேருந்து நிற்கவே இல்லை அவ்வளவு கூட்டம், சரி என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தால் நம்ம குருவி, யப்பா முடியலடா சாமி காமெடி என்ற பெயரில் அவர்கள் பண்ணும் தொல்லை பிறகு ஒரு காட்சியில் அவர் லிஃப்ட் ஒன்றில் மாடிக் கொள்கிறார் கடைசி மாடியில் இருந்து அந்த லிஃப்ட் அறுந்து கீழே விழுகிறது என்னடாவென்று பார்த்தால் அப்படியும் குருவிக்கு ஒன்னும் ஆகவில்லை, அடப் போங்கடா அவனவன் தொங்கிட்டு இருக்கான் இது வேற............

சரியென்று இந்த கன்றாவியெல்லாம் பார்க்கவேண்டாம் என்று வெளியில் என்னுடைய பார்வையை செலுத்தினேன், பருவ மங்கையர் காதில் அணிந்திருக்கும் லோலாக்கு போல பச்சை, இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில், மஞ்சள் ஆகிய நிறங்களில் மாமரங்களில் உள்ள மாங்கனிகள் குலுங்குவது, புகைப் படம் எடுக்க உயர வரிசையில் நிற்பது போல் நான்கு பனை மரங்கள், நடு நடுவே சிறிய குன்றுகள், கத்தாளை செடிகள், ஒரு அடியில் தொடங்கி நடுவில் இரண்டாக பிரிந்து வளர்ந்த தென்னை மரம், சில மைல்களுக்கு ஒன்றாக ஒரு செல்போன் கோபுரம், இடையிடையே சிறு சிறு கிராமங்கள் இளநரையை போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டின. கீழே குனிந்து பார்த்தால் சாலை என்னவோ நீர் போல இருந்தது, இப்படிப்பட்ட ஒரு நிலப் பரப்பில் நான் சென்ற பேருந்து உறுமியவாறே அமைதியை கிழித்துக் கொண்டு சென்றது. நம்மைச் சுற்றி இருக்கும் இடம் எப்பொழுதுமே ஒரே மாதிரி தான் இருக்கிறது அதை பார்க்கும் நம் கண்கள் தான் வேறுபடுகின்றன, இந்த உன்னதமான உண்மையை நான் புரிந்து கொண்டேன். விவசாயம் செய்ய இயலாத செம்மண் நிலம் தான் வழி நெடுக இருந்தாலும் அந்த நிலப் பரப்பு ஏனோ என் கண்களுக்கு விருந்தாகத் தான் இருந்தது. அந்த பிரயாணத்தின் ஒரு கரும் புள்ளியாக ஒரு சம்பவம் நடந்துக் கொண்டே இருந்தது, நான்கு நண்பர்கள் அதில் ஒருவர் நல்ல போதையில் இருந்தார், அவர் தனது நண்பர்களுடன் பேசிய உரையாடல்களை இங்கு எழுத முடியாது அவ்வளவு தரம் தாழ்ந்தவை மற்ற மூன்று நபர்களும் தலையை தூக்க முடியாமல் வெட்கினர்.

பிறகு அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு ரயில் நிலையம் வந்தேன்,ஒரு சரக்கு ரயில் உள்ளே நுழைந்தது, அப்பப்பா எவ்வளவு விதமான ஒலிகளை தன்னுடன் இழுத்து வந்தது, கிரீச், தடக் தடக் போன்று ஒவ்வொரு பெட்டியும் என்னை கடந்து சென்ற பொழுது ஏதோ காணாததை கண்டவன் போலவும் கேட்காததை கேட்டவன் போலவும் நின்று கொண்டிருந்தேன், ஒரு வழியாக அது நின்றவுடன் அங்கு நிலவிய அமைதி?? அது தான் மயான அமைதியோ??. அங்கும் நான் கண்ட காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு அந்நிய நாட்டுக்கு சென்ற மாதிரி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன், இத்தனைக்கும் கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு மிகவும் பரிட்சயமான இடம் தான். ஒரு மழைத் தொடர் அதன் அடிவாரத்தில் இந்த ரயில் நிலையம், சூரியனின் கதிர்களை மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைக்க முற்பட்டதால் அந்த மலைப்பரப்பில் சில இடங்களில் பொன் நிறமாகவும் சில இடங்களில் இருளாகவும் காட்சி அளித்தது. குரங்குகளுக்கு அங்கு பஞ்சமே இல்லை, அப்பொழுது தான் வந்து சென்ற காகிநாடா எக்ஸ்பிரஸ் வண்டியில் இருந்த மக்கள் வீசிச் சென்ற ஆரஞ்சு பல தோல், ஆப்பில் ஜூஸ் டப்பாக்கள், உணவு பொட்டலங்கள் இன்னும் என்னன்ன குப்பை போட முடியுமோ அவ்வளவும் அந்த இடத்தில் கிடந்தது. இவற்றை அந்த குரங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன, காட்டில் நிஜ பழங்களை தின்று கொண்டிருந்த வானரப் படை இந்த ஜூஸ் டப்பாகளை பிய்த்து அந்த ஜூஸ் நக்குவதை பார்க்கும் பொழுது நாம் அவைகளுக்கு செய்யும் அநீதியை எண்ணி வெட்கினேன்.

இந்த இடத்தில் நான் ரயில் பயணிகள் மீது கோபம் கொள்கிறேன், இப்பொழுதெல்லாம் பகல் ரயில்களில் கண்டிப்பாக கதவருகே ஒரு குப்பை கூடை வைத்திருக்கின்றனர் அதே போல் ரயில் நிலையங்களிலும் நிறைய இடங்களில் குப்பை கூடைகள் இருக்கிறது உங்களுக்கு அதில் போடுவதில் அவ்வளவு சிரமமாக இருக்கிறதா?? ஒவ்வொரு ரயில் வந்து செல்லும் பொழுதும் அங்கே அந்த துப்புரவு தொழிலாளர்கள் அந்த குப்பையை சுத்தம் செய்ய படும் பாடு தான் எத்தனை?? பிறகு என் அருகில் ஒரு ஐந்து நபர் குழு வந்தது, அதில் இருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர் சரி ஏதோ நண்பர்களுக்குள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று பார்த்தால் தங்களின் சில்மிஷங்களை துவங்கினார். ஒரு பெண் வந்து கொண்டிருந்தார் இவர்கள் இருவரும் அந்த பெண் வரும் வழியில நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிறிய இடம் விட்டு நின்று அந்த பெண்ணையே வெறித்து பார்த்து இவர்களுக்குள் ஏதோ பேசினார் பாவம் அவர் மிகவும் பயந்து போனார், ஏன்டா நாய்களா உங்கள் வீட்டு பெண்களை யாராவ்து இவ்வாறு செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?? மனிதர்கள் பல நேரங்களில் ஆறாவது அறிவை பயன்படுத்துவதே இல்லை.

பிறகு அரை மணி நேரம் தாமதமாக வந்த ரயிலில் ஏறி அமர்ந்தேன், எப்பொழுதுமே இந்த பிரயாணங்களில் நான் காணும் இந்த Vendor's எனப்படும் உணவு வகை விற்கும் நபர்கள் ஒரு நாளைக்கு விடியற் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு அந்த ரயில் கோயம்புத்தூர் அல்லது பெங்களூரு சென்று இரவு சென்னை திரும்பும் வரை அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக எத்தனை முறை தான் செல்வரோ அது ஆண்டவனுக்கே வெளிச்சம். இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ரயிலில் நடை பயணம் தான்.




பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய கதாவிலாசம் புத்தகம் படிக்க எடுத்தேன், அதில் சரியாக "நிலா பார்த்தல்" கதை வந்தது, நான் காலையில் என்ன ஒரு அனுபவத்தை பெற்றேனோ அதே போல் ஆசிரியர் இரவில் நிலவை வைத்து பெற்றுள்ளார். மிக அருமையாக இருந்தது, அதுவும் உற்சாகமாக இருந்தது. அப்பொழுது நான் சிறுவனாக இருக்கையில் ரிக்ஷாவில் செல்கையில் வானத்தில் அந்த நிலவை பார்த்து எத்தனையோ நாட்கள் ஆனந்தம் அடைந்திருக்கிறேன் அதை எண்ணி மகிழ்ந்தேன். ஆனால் இன்றைய சிறுவர்கள் பொழுதுக்கும் TV கணினி என்று நேரத்தை வீனடிக்கிறனர். இப்படி நான் நினைவுகளில் மூழ்கியிருக்கும் பொழுது ஒரு சம்பவம் என் நிம்மதியை கெடுத்தது.

நான் அமர்ந்த இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு 38-40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார் அவரது இரு சிறுவயது (ஒருவர் 8 மற்றொருவர் 5) பெண் குழைந்தைகள் அதற்கு முன் இருக்கையில் அமர்திருந்தனர். அந்த பெண்ணின் நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் அவர் அணிந்திருந்த உடையை பார்க்கும் பொழுது அவர் ஒரு நவநாகரீக மங்கை என்று புரிந்து கொண்டேன். (ஆமாம் அதென்ன பாண்ட் சட்டை போட்டால் நவநாகரீகமா? அப்ப சேலைக் கட்டினா??? எவன்யா இந்த வார்த்தைய கண்டுபிடிச்சான்??) இப்படி ஒரு கோபம் எனக்கு அந்த பெண்ணின் நடவடிக்கையால் ஏற்பட்டது, தன் பௌர்ணமி நிலவு போன்ற முகமும் ஒளி பொருந்திய கண்களையும் ஓட்டை பல்லு சிரிப்புடன் விளங்கிய அந்த சிறு குழந்தையை அவர் படுத்திய கொடுமையில் எனக்கு மட்டுமல்ல அவரை சுற்றி அமர்ந்திருந்த அனைவருக்கும் பளார் என்று ஒரு அரை விடனும் போல் தான் இருந்தது. குழந்தை சிரிக்காதா அதை கானமாட்டோமா என்று அனைவரும் ஏங்குவர் ஆனால் இந்த அம்மணியோ அந்த குழந்தை சிரிக்கின்றது என்று சதா அதை போட்டு திட்டியும் அடித்தும் துன்புறுத்தினார், அந்த குழந்தை சிரிப்பது இவருக்கு மானம் போகிறதாம் அதனால் நல்வழிப் படுத்துகிறாராம், உன்னை தானம்மா நல்வழிப் படுத்த வேண்டும். வாழ்நாள் பூராவும் அந்த குழந்தை படப்போகும் இன்னல்களை நினைத்து என் உள்ளம் கனத்தது.

இதைக் காண முடியாதவனாக நான் இருக்கையை விட்டு வந்து கதவருகே நின்று கொண்டேன், Walkmanil பாட்டு கேட்போமென்று போட்டேன். முதலில் சூர்யா சமீராவுடன் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமலை......." பட்டை அவர்களுடன் சேர்ந்து பாடியவாறே தலையசைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை......" என்று சூர்யாவுடன் அழுதுகொண்டிருந்தேன். ஒரு நொடி இன்பம் மறு நொடி சோகம் என்னடா வாழ்கை இது என்று நொந்தவாறே அன்றைய நிகழ்வுகள் மனிதர்களை திரும்பிப் பார்த்தேன், வந்து சேர்ந்தது க்ரிஷ் குரலில் "நேற்று என்பது கையில் இல்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு......." எவ்வளவு சரியான வரிகள். இவ்வாறாக ஒரு கலவையான நினைவுகளுடன் இனிதே வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த பதிவை பற்றிய உங்கள் பொன்னான இடுக்கைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். இன்னொரு பயணத்தில் சந்திப்போம். நன்றி.

Wednesday, April 22, 2009

பள்ளிகளில் பரவி வரும் லஞ்சம்.

எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓட்டுனர் இன்று ஒரு ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டார், எதற்கு என்று நான் கேட்டதற்கு நாலாம் வகுப்பு படிக்கும் அவரது பெண் குழந்தைக்கு பள்ளிக்கூடத்தில் கட்ட வேண்டும் என்றார். என்னடா இது விடுமுறை நேரத்தில் என்ன அது என்று நான் கேட்கவே ஒரு அணு குண்டையே தூக்கி போட்டார், அந்த குழந்தை ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றும் அவளை அடுத்த வகுப்புக்கு அனுப்ப அந்த ஆசிரியை மூன்றாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டார் என்றும் கூறினார்!!!!!!!!!!!!!!!!!!! முதலில் இவரை கூப்பிட்டு உங்கள் பெண் ஒழுங்காக படிப்பதில்லை அதனால் அவள் பாஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் பள்ளியை விட்டே அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அவர் ஏதாவது பெரிய மனசு பண்ணுங்க பாவம் சின்ன பொண்ணு என்று கூறவே அவர் பெரிய மனசை காட்டிவிட்டார் போலும். இத்தனைக்கும் அந்த சிறுமி எனக்கு நன்றாக தெரியும், நல்ல சுட்டிப் பெண் நன்கு படிக்கவும் செய்வாள். ஆனால் அவளை அடிக்கடி நாடகம், விளையாட்டு என்று அனுப்பியுள்ளார் இதே ஆசிரியை, எனக்கென்னவோ அவர் அனைத்தையும் திட்டமிட்டே செய்துள்ளார் என்று தெரிகிறது. பிறகு அவர் தன் நிலைமையை எடுத்து கூறி தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார் பிறகு அரசியல் வாதிகள் குதிரை பேரம் பேசுவது போல் பேசி இறுதியாக ஆயிரத்துக்கு முடிவாகியுள்ளது. இதில் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய தகவல் என்னவென்றால் இதே ஆசிரியை டியூஷன் வந்து சேறு என்று அடிக்கடி கூறியுள்ளார் அந்த சிறுமியிடம், அவர்கள் அனுப்பாததால் தன் கைவரிசையை காடியுள்ளார்.

ஏற்கனவே இந்த பீஸ் அந்த பீஸ் என்று நம் பாகெட்டை காலி செய்து பிறகு பான்டையும் கலட்டி விடுகின்றனர் இதில் இப்படி நூதன முறையில் வேறு திருட்டு நடக்கிறது. இவர்களுக்கு வசதியாக நம் அரசாங்கம் இதில் நாங்கள் தலையிட இயலாது என்று கூறி விட்டது, பிறகு இவர்கள் ஆட்டத்தை பற்றி கேட்க வேண்டுமா என்ன?? அந்த பள்ளி ஒரு மந்திரியுடையது என்று கடைசியாக அவர் கூறினார், இப்பொழுது புரிகிறதா எங்கிருந்து இந்த பழக்கமும் தைரியமும் வந்தது என்று?? இந்த பொழப்புக்கு வேற ஏதாவது தொழில் செய்யலாமே. அரசாங்கத்தாலேயே செய்ய முடியாத ஒன்றை நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும்?? இப்படி வெட்டியாக ஒரு பதிவு எழுதலாம், பிறகு வாயையும் இன்ன பிற இடங்களையும் மூடிக் கொண்டு அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டியது தான். 

திருநங்கைகளா அல்லது முர(திரு)ட்டு நங்கைகளா ??????????????????????

  
இது யார் மனதையும் புண் படுத்த எழுதப்பட்டது அல்ல புண் பட்ட ஒருவனின் குமுறல்கள்.

இயற்கை என்னும் படைப்பாளி செய்யும் சில தவறுகளால் உலகில் எத்தனை பிரச்சனைகள் எத்தனை தொல்லைகள் எந்தனை துன்பங்கள். எத்தனை கண்ணீர்கள் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை அனுதாபங்கள் எத்தனை எகத்தாளங்கள்??? யார் செய்த பிழைக்கு யாருக்கு தண்டனை?? பிறவியிலேயே ஆணாக பிறந்து பருவ மாற்றங்களால், சுரபிகளின் மாற்றங்களால் ஒருவர் தன்னையே பெண்ணாக பாவித்து கொண்டு பிறகு பெண்ணாகவே மாறுவதும் பிறகு அவர்கள் இந்த சமூகத்தில் படும் அவலங்களும் எத்தனை?? ஆனால் இதெல்லாம் அந்த காலம், நான் கூட இவர்களை பார்த்து பரிதாபமும் அனுதாபமும் கொண்டதுண்டு,. தனக்கு வந்தால் தான் தெரியும் வாந்தியும் ............ என்று கூறக்கேட்டதுண்டு அதை நேற்று தான் அனுபவித்தேன். இவர்கள் மேல் நான் கொண்ட ஒரு வித அனுதாபம் இரு சம்பவங்களால் தொலைந்தது. இவர்களிடத்தில் அனுதாபம் கொள்ளத் தேவையில்லை, ஒன்று நம்மால் முடிந்தால் அவர்களுக்கு வேலை வழங்கலாம் அல்லது அவர்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் தலை தெறிக்க ஓட வேண்டும்.

காலம் இன்று எவ்வளவோ மாறி விட்டது, இன்று இவர்களைப் போன்றுள்ளவர்களுக்கு மருத்துவ வசதிகள், வேலை வாய்ப்பு வழங்க பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் முன் வருகின்றனர். ஆனால் இவ்வழியே நல்வழியே செல்ல விரும்பாத ஒரு பிரிவினர் செய்யும், செய்த அட்டூழியங்களை எனக்கு நேர்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கடந்த பொங்கல் விடுமுறையில் நண்பர்களுடன் மும்பை செல்லும் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தோம் அப்பொழுது இரண்டு பேர் வந்தனர், அதில் ஒருவர் நேராக எங்கள் நடுவில் வந்து இடித்து கொண்டு மேலும் சில அனாவசிய Censor பிரச்சனைக்குரிய வார்த்தைகளும் செயல்களும் அங்கே அவர்களால் அரங்கேற்றப்பட்டது. இத்தனைக்கும் அவர்கள் வந்து நின்றவுடனேயே இருபது ரூபாய் குடுத்து விட்டோம் பத்தவில்லையாம் எட்டு பேர் சென்றோம் ஆளுக்கு இருபது கொடுக்கணுமாம். இதைப் போல் அன்று மட்டும் சுமார் பத்துக் குழுக்கள் வந்தன (இரண்டு நபர் மட்டும் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வாழ்த்திச் சென்றனர்). இதில் எல்லை தகராறு வேறு. நாங்கள் அந்த பயணத்தின் பொழுது மட்டும் (சென்று வருவது சேர்த்து) செலவு செய்தது ஐநூறு ரூபாய்க்கு மேல். 

அடுத்தது நேற்று நடந்த மிகவும் கேவலமான சம்பவம். நாங்கள் எங்களது அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இரு நபர் நேரே உள்ளே வந்து விட்டனர், உற்சாக பானம் (அதாங்க சரக்கு) மிகுதியில் தட்டு தடுமாறி வார்த்தை குழறி அதிரடியாக நின்றனர். என்னவென்று கேட்டதற்கு ரூபா குடு என்றனர், பொதுவாக இவர்களுக்கு ஒரு ருபாய் தான் கொடுப்பார் அதுவும் கையில் கொடுக்க மாட்டார் மேஜையில் அந்த நாணயத்தை தட்டி விட்டு வைத்து விடுவர். ஆனால் நான் அவர்கள் கையில் ஐந்து ருபாய் கொடுத்தேன். அவ்வளவு தான் "என்ன இது?? ஒழுங்கா 101 ருபாய் குடு பாவப்பட்டவங்க நாங்க", நல்ல குடிக்க பணம் இருக்கு இவர்கள் பாவப் பட்டவர்களா?? பிறகு சேலை முந்தானைய வேற நீக்குகிறார்கள், பணம் கொடுத்த தான் போவேன் பாத்துக்கோன்னு மிரட்டல் வேறு. "பொட்டைங்க கிட்ட சாபம் வாங்காதடா ......" என்று வசைமாரி பொழிந்தார்கள். பிறகு எனக்கும் கோபம் வந்து நானும் எகிற ஆரம்பித்தேன் பிறகு சற்று அமைதி ஆகினர். பிறகு பத்து வாங்கிக் கொண்டு இன்னும் சில சாபங்களை பொழிந்து விட்டு சென்றனர். எங்கள் ஊழியர்கள் யாரும் அருகில் கூட வரவில்லை, கேட்டால் இவர்கள் சாபம் விட்டால் அவ்வளவு தானாம். இந்த ஒழுக்கம் கெட்ட மதுவில் மூழ்கிய இவர் கொடுக்கும் சாபம் என்ன செய்யப் போகிறது?? எதற்கு இவர்களுக்கு நாம் இந்த பத்து ருபாய் குடுக்க வேண்டும்?? எதற்கு இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்?? 

சென்ற மாதம் நாளேடுகளில் பரபரப்பாக ஒரு செய்தி அடி பட்டது, கிழக்கு கடற்கரைச் சாலையை சேர்ந்த ஒரு பையனை புனே நகருக்கு கடத்தி உறுப்பு மாற்று சிகிச்சை செய்து புனேயில் பிட்சை மற்றும் பாலியல் தொழிலில் விட்டனராம் இவர்களை போன்ற திருநங்கைகள், இதற்கு ஒரு பரதேசி மருத்துவன் உடந்தை. இரண்டையும் வைத்து பார்த்தால் நான் கடவுள் படத்தில் பிட்சைக்காரர்கள் எப்படி உருவாக்கப்பட்டு பிட்சை எடுக்கிறார்களோ அதே போல் இந்த திருட்டுநங்கைகள் அப்பாவிகளை வைத்து இது போன்ற தொழிலில் விட்டு பிழைக்கின்றனரோ????????  இதற்கும் அரசியல் பின்னணி இருந்தால் நாம் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

நண்பர்களே இதைப் போன்று அனுபவங்கள் உங்களுக்கு ஏதேனும் உண்டென்றால் அதை பகிர்ந்து கொள்க, மேலும் இது போன்ற நேரங்களில் எவ்வாறு நாம் நடந்து கொள்வது நமக்கு நல்லது என்று கூறுங்கள். நன்றி.

Sunday, April 19, 2009

கள்வனின் காதலி - ஒரு பார்வை

தலைப்பை பார்த்துவிட்டு நான் என்னமோ அந்த வெளங்காத படத்தை பற்றி தான் எழுதபோகிறேன் என்று தவறாக எண்ணி விட வேண்டாம், நேற்று அமரர் கல்கியின் படைப்பான கள்வனின் காதலி நூலை படித்தேன் அதை பற்றி விமர்சனமோ கருத்தோ கூறும் அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஞானி இல்லை, ஞான சூனியம் தான், இந்த பதிவில் கூட கண்டிப்பாக எவ்வளவோ எழுத்துப்பிழைகள் இருக்கும் அதை மன்னிப்பீர்களாக. 

நான் எப்பொழுதுமே கல்கி அவர்களின் காவியங்களுக்கு அடிமை, படிக்க ஆரம்பித்தால் வெறித்தனமாக வேறு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து படித்து முடித்த பின்பு தான் ஒரு திருப்தி ஏற்படும். அவர் எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் ஆகிய படைப்புகளை படித்து சொல்ல முடியாத ஒரு பரவசத்தில் மிதந்துள்ளேன். இந்த மூன்று காவியங்களையும் படித்து ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வரும் வாரங்களில் மறுபடியும் தொடங்கப் போகிறேன். அதை நினைத்தாலே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

நாள்:16-04-2009 
இடம்:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோவை விரைவு வண்டி C1 பெட்டி இருக்கை எண் 60. 

வழக்கமாக என் வியாபார விஷயமாக நான் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வியாழன் தோறும் இந்த ரயிலில் ஏறி ஜோலார்பேட்டைக்கு செல்வது வழக்கம், அன்றும் அதுபோல் தான் புறப்பட்டேன். ஆனால் அன்று நான் செல்ல போகும் இடம் எதுவென்று அறியாமல். சிறிது நேரம் காலைப்பனி போர்த்திய புற நகர் பகுதியின் அழகை ரசித்தவாரே அன்றைய நாளேடுகளை புரட்டிக்கொண்டு நடைமனிதன் அதாங்க walkman பாடல் கேட்டுக்கொண்டு ஒருவாரு நல்ல moodil இருந்தேன். அப்பொழுது தான் அருமை நண்பர் திரு.நட்டு என்ற நடராஜன் அவர்கள் வழங்கிய இந்த புத்தகம் நினைவுக்கு வந்தது. நண்பர் அவர்கள் இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், புராண கதைகள் இன்னும் தமிழ் மொழியில் என்ன பிற உண்டோ அதில் மிகுந்த ஆர்வம் மற்றும் ஆளுமை உள்ளவராதளால் அவர் பரிந்துரைக்கும் புத்தகங்களை நான் படிக்க தவறுவதில்லை அதுவும் அமரர் கல்கி அவர்கள் புத்தகம் என்றால் கேட்கவா வேண்டும்?? சரி என்று படிக்க ஆரம்பித்தேன், அவ்வளவு தான் ரயிலின் சத்தமோ சாய் சாய், இட்லிவடை போன்ற ரயிலில் வரும் அணைத்து சத்தங்களும் இல்லாமல் ஒரு புதிய உலகத்துக்கே என்னை அழைத்து சென்று விட்டார் கல்கி அவர்கள்.

கதையின் தொடக்கத்தில் அந்த சிறிய கிராமத்தையும் அதன் இயற்கை வளங்களையும் வர்ணிக்கும் பொழுது அவை அனைத்தையுமே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார். கல்கி அவர்களின் தனிச்சிறப்பு இது தான், அவர் நம்மை அந்த காலத்துக்கே அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றுவிடுவார். அவ்வளவு எழில் கொஞ்சும் கொள்ளிடக்கரையில் (இன்றோ மணல் கொள்ளையால் பாழ் பட்டு கிடக்கிறது) முத்தையன்  நுழையும் காட்சி அவனின் குணாதிசயத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. அவனுடைய வாழ்கையை பார்க்கும் பொழுது பணம் இல்லையேல் உனக்கு ஒன்றும் இல்லை என்பது அந்த காலத்திலும் இருந்ததை உணர முடிந்தது. அவன் கல்யாணியின் மேல் உரிமையுடன் கோபம் கொள்வதும் அவள் அழுவதும் பிறகு அவன் தங்கையை சீண்டுவதும் அவ்வளவு இயல்பாக இருந்தது. 

கதைக்குள் புகாமல் மேலோட்டமாகவே கதாபாத்திரங்களையும் கதை சொன்ன விதத்தையும் மட்டும் நாம் பார்போம், இல்லையேல் இன்னும் இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு சுவாரசியம் போய்விடும். என் மனதை கவர்ந்த இரு நபர் அபிராமியும் சப் இன்ஸ்பெக்டர் சாஸ்த்ரிகளும் தான். அந்த காலத்தில் நம் மங்கையர்கள் எப்படி இருந்தனர் என்பதற்கு அபிராமி ஒரு சிறந்த எடுத்துகாட்டு. இசை ஞானம், குழந்தைத்தனம், பாசம், பெண்களுக்கே உரித்தான அணைத்து குணங்களையும் உள்ளடக்கிய அந்த பெண்ணை பார்க்கும் பொழுது ஆஹா இப்படி ஒரு தங்கை நமக்கு இல்லையே என்று ஒரு சின்ன வருத்தம் ஏற்படுகிறது. அடுத்ததாக சாஸ்த்ரிகள், அந்த காலத்தில் காவலர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினர் என்று நாம் தெரிந்து கொள்ள இவர் ஒருவரே போதும். முதலில் முத்தையன் ஒரு தவறும் செய்யவில்லை என்று தெரிந்த போது அவனுக்காக இறக்க படுவதும் பிறகு அவன் தவறு செய்யும் பொழுது அவனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று அவர் படும் பாடு, பிறகு அவன் தவிக்கும் பொழுது அவன் மேல் இறக்கம் கொள்வதும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.. 

அன்பினால் ஒருவன் வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் படுவான் என்பதை ஆசிரியர் மிக ஆழமாக கூறியுள்ளார் ஒரு சில காட்சிகள் நமக்கு கண்களில் நீர் வருகிறது முத்தய்யனை பார்த்து. ஆனால் எதற்கும் அஞ்சாமல் பாசத்துக்காக அவன் செய்யும் தியாகங்கள் தான் எத்தனை படும் வேதனைகள் தான் எத்தனை. தங்கைக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு இருதலை கொல்லி எறும்பாக அவதியுறுகிறான்.

புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நமக்குள் என்னவோ போல் ஒரு துக்கம் சூழ்ந்து கொள்கிறது, முதலில் ஆசிரியர் மீது எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது, ஆனால் யதார்த்தம் சற்று வலிக்கத் தான் செய்யும் என்பதை புரிந்து கொண்டேன். இறுதியில் ஆசிரியர் கூறும் விஷயங்கள் அணைத்து காலத்துக்கும் பொருந்துவதாக அமைவது அவரின் சிறப்பு. நான் புத்தகத்தை முடிப்பதற்கும் திரும்பி இன்னொரு ரயிலில் சென்னை திரும்புவதற்கும் சரியாக இருந்தது, இந்த பயணம் என்றும் போல் இல்லாமல் ஒரு புது இடத்துக்கு சென்று வந்ததைபோல் உணர்தேன் என்று நான் சொன்னால் அது மிகை ஆகாது. ஏனோ அன்று முழுவதும் அந்த யதார்த்தம் என்னை குத்திக் கொண்டே இருந்தது. 

சரி நண்பர்களே எனது இந்த அனுபவம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த முறை சந்திப்போம். நன்றி வணக்கம்.

Friday, April 17, 2009

தொலைக்காட்சி பெட்டியும் குடும்ப உறவுகளும்.



நண்பர்களே வணக்கம், எல்லோரும் சௌக்யம் தானே? சமீபத்தில் என்னை பாதித்த ஒரு சம்பவம் இந்த பதிவை எழுத என்னை தூண்டியது. அது என்னவென்றால், அலுவல் காரணமாக ஒரு முன் இரவு பொழுதில் நான் சைதாபேட்டை சென்றிருந்தேன். அலைச்சல் காரணமா மிகவும் களைப்புற்றிருந்தமையல் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடலாம் என்று முடிவு செய்து ஒரு சின்ன ஆனால் சுகாதாரமான சூப் கடைக்கு சென்று ஒரு காளான் சூப் வாங்கி உட்கார்ந்து அருந்திக்கொண்டிருந்தேன். விலை பத்து ருபாய், பரவாயில்லை நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதில் அதிகபட்சம் அரை காளானுக்கு மேல் இருந்திருக்காது அதுவும் எவ்வளவு பொடியாக நறுக்கி போட்டிருந்தார்கள். சரி அதை விடுங்கள் இன்று காலம் அப்படி ஆகிவிட்டது. விஷயத்துக்கு வருவோம். எனக்கு எதிர் இருக்கையில் இரு சிறு பிள்ளைகள் அமர்திருந்தனர் 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் 3 வயது மதிக்கத்தக்க அவனது தங்கையும் அமர்திருந்தனர். அவர்கள் இருவரும் மிகவும் மும்முரமாக ஏன் தலைக்கு மேல் தங்கள் பார்வையை செலுத்திக்கொண்டிருந்தனர் என்னடா அதுவென்று பார்த்தல் வேறு ஒன்றுமில்லை நம் கலைஞர் வழங்கிய இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி தான். நான் நல்ல ஆறு அடிக்கு மேல் வளர்ந்தவன் ஆதலால் அந்த சிறுமிக்கு நான் அமர்திருந்தாலும் ஒன்றும் தெரியவில்லை பாவம் தவியாய் தவித்து போனால். ஆனால் பெருந்தன்மையான அந்த பாலகன் தங்கைக்கு இருக்கையை மாற்றி கொடுத்தான். ஆஹா நாம் அனைவரும் குழைந்தளாகவே இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. பிறகு அந்த குழந்தைகள் அந்த கடைக்காரரின் குழந்தைகள் என்று தெரிய வந்தது. 


அவர் தன் மகளை "வாமா செல்லம் சும்மா பைக்ல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்"னு கூப்பிடுகிறார் ஆனால் அந்த சிறுமியோ வைத்த கண் எடுக்காமல் இந்த பாழாய் போன தொலைக்காட்சியையே பார்க்கிறாள், அதுவும் எதோ குழந்தைகள் நிகழ்ச்சி என்று பார்த்தால் இசையருவி சானலில் தனுஷ் அவர்கள் தமன்னாவை அப்பம்மா வெளையாட்டு விளையாடுவோமா என்று கேட்கிறார்???? என்ன கொடும சார் இது?? குழந்தைகள் இயல்பாகவே பெற்றோருடன் வாகனத்தில் வெளியில் செல்ல பிரியப்படுவர் என்பதை பலமுறை முன்பு பார்த்திருக்கிறேன், சில காலங்களுக்கு முன்பெல்லாம் காலையில் அப்பாக்கள் வேளைக்கு செல்லும்முன் கண்டிப்பாக தங்கள் குழந்தையை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பிறகு கொஞ்சி விட்டு தான் செல்வர் ஆனால் இன்று?? இது ஒரு கொடுமை என்றால் இந்த அம்மாக்கள் நெடுந்தொடர் பார்த்துக்கொண்டு பன்னும் சலம்பல் இருக்கே அப்பப்பா பாவம் கணவர் வேலையில் இருந்து களைப்பாக வருவார் சரி மனைவியுடன் ஆசையாக நாலு வார்த்தை பேசிவிட்டு அவள் கைய்யால் ஏதாவது சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் வருவர். ஆனால் நடப்பது என்ன??  அரசியும் அபியும் நடுவீட்டில் தாண்டவமாடும்போது இவர்களுக்கு எங்கு கணவர் வருவதோ குழந்தை அழுவதோ தெரிய போகிறது??


இப்பொழுது சில வருடங்களாக ஒரு புது தொல்லை வேறு, "இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்கலேயான சூப்பர் ஹிட் திரைப்படம்" என்ன வென்று பார்த்தல் ஒரு வாரம் கூட திரையில் ஓடாத நமத்துப்போன ஏதாவது மொக்கை படம். சுதந்திர தினத்தன்று நமீதா பேட்டி வேறு, பாவம் சுதந்திரத்திற்காக ரொம்பதான் பாடு பட்டார்ல!!!!!!!! இந்த பாடலாசிரியர்கள் தொல்லை அதுக்கு மேல் இருக்கு, என்ன கருத்துள்ள பாட்டுக்கள், "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா........." "லோக் லோக் லோக்கலு நான் லோக்கலு............." அய்யா நீங்க லோக்கலுனு எல்லாருக்குமே தெரியுமே பெறவு ஏன் தம்பட்டம் அடிக்கறீங்க?? நமக்கு எது வருதோ அதோட நிறுத்திக்க வேண்டியது தானே?? 

அடுத்தது இந்த இயக்குனர்கள் தொல்லையை நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும், கதைக்கு தேவை பட்டதால் தான் அந்த முத்த காட்சியை வைத்தேன், அதனால் தான் இந்த நிர்வாண காட்சியை வைத்தேன், மக்கள் என்ன எதிர்பார்கிரார்களோ அதை தான் நாங்கள் குடுக்கிறோம் என்று ஒரு இயக்குனர் சொன்னார். இதை பற்றி திரு.சிவகுமார் அவர்கள் ஒரு பேட்டியில் "வருகிறவர்கள் எதிர்பார்பதால் தான் இந்த தொழில் செய்கிறேன்" என்று ஒரு விலைமாது சொன்னால் அதே போன்று நீங்கள் சொல்லிக்கொண்டு இப்படி படம் எடுக்கிறீர்களே பிறகு அவர்களுக்கும் உங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்??. மண்டையில் அடித்தார் போல் கேட்டாரே ஒரு கேள்வி?? உறைக்குமா இவர்களுக்கு?? 








நடிகைகளை பற்றி நாம் எதுவும் எழுதாமல் போனால் இந்த பதிவு முழுமை பெறாமல் போகும், இப்பொழுது அவர்களை பற்றி பார்போம். மேலே உள்ள படங்கள் எப்படி?? சும்மா ஆபாசதுல அதிருதுல இவர்களை கேட்டால் நாங்கள் ரொம்ப "Expose" பண்ணாம கிளாமரா நடிக்கிறதுல என்ன தப்புன்னு அப்பாவியா கேக்குதுங்க புள்ளைங்க. அதுல நீங்க இன்னும் என்ன எக்ஸ்போஸ் பண்ணலைனு நெனைக்கறீங்க??? ஏன் நீங்க இப்படி நடிச்சா தான் படம் பார்க்க வருவேன்னு எந்த மடையனாவது சொன்னானா??

அய்யா நல்லவங்களே சினிமா தொலைக்காட்சி எல்லாம் வியாபாரம் தான் ஆனா நமக்குன்னு ஒரு வாழ்கை முறை கலாசாரம் பண்பாடுன்னு இருக்குது (குத்துயிரும் குலையுயிருமா) அதை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விடாதீர். தரமான படங்களை மக்கள் என்றும் இருகரம் கூப்பி வரவேற்பர், இதற்க்கு சமீபத்தில் கூட எவ்வளவோ எடுத்துக்காட்டு இருக்க்கிறது.  இப்படிக்கு நல்ல படங்களை எதிர்பார்க்கும் ஒரு ரசிகன். நன்றி.