Showing posts with label லீலை. Show all posts
Showing posts with label லீலை. Show all posts

Wednesday, March 17, 2010

லீலைகள்....!!

லீலைகள்....!!


லீலைகள் என்ற தலைப்பில் உங்களிடம் ஒரு ரெகார்ட் அல்லது
ப்ராஜெக்ட் சமர்ப்பிக்கிறேன்......எக்ஸாம் டைம்ல அதான் இந்த
பிட்.......!!

INDEX

1.நித்ய லீலை

2.லீலை

3.ராஜலீலை

4.கிருஷ்ணலீலை


***************************************************************

நித்ய லீலை :

என்ன சொல்றதனு எனக்கு தெரியிலங்க...இவரு படம் டி.வி.யில் ஓடுன அடுத்த நாள் காலையில் சில நண்பர்கள் எப்போ விமர்சனம் போட போற என்று கேட்டார்கள். இப்படி கேட்ட நண்பர்கள் மேல் கூட எனக்கு வருத்தம் இல்லங்க, எனக்கு நித்யானந்தா மேலதான் ஏகப்பட்ட வருத்தம்ங்க....
அவரு இப்படி பண்ணியிருக்க கூடாதுங்க, முக்கியமான காட்சியில் லைட் ஆப் பண்ணினாரு பாருங்க அது தான் என் வருத்தத்துக்கு காரணம்ங்க...!! அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில் இதை லைட்டாக கண்டிக்கிறோம்ங்க.மற்றபடி அவரை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.திருவண்ணாமலை கிரிவலம் போகும் போது கூட அவரு ஆசிரமம் வந்தா ரெண்டு அடி தள்ளியே தான் நடப்பேன்ங்க...!

அப்புறம் நக்கீரன் புத்தகத்தின் விளம்பர போஸ்டர்களை பத்தி
சொல்லவே வேண்டாம்...கிழே சாம்பிள் தான்....இந்த போஸ்டரை
நாலஞ்சு பேரு சுத்தி நின்னு படிச்சிட்டு இருந்தாங்க...கஷ்டப்பட்டு
எடுத்தேன்......


இதே போல் ரெண்டு நாள் முன்னாடி "சாமியாருக்கு பேன் பார்க்கும் ரஞ்சிதா - இதுவரை வெளிவராத அதிர்ச்சி புகைப்படங்கள்"!! பேன் பார்ப்பதில் என்ன அதிர்ச்சி இருக்குதுன்னு சத்தியமா எனக்கு தெரியலைங்க..அப்புறம் சாமியார் பத்தி ரெண்டாவது நியூஸ் நக்கீரன்ல வரும்போது பேப்பர்கடைக்காரர் வேலை செய்யும் பையனிடம் "நக்கீரன் ஹாட் நியூஸ் தம்பி...மக்கள் டபுள் ரேட்னா கூட வாங்குவாங்க.." என்று கிண்டல் அடித்தார்.ஆனா அது கிண்டல் இல்லை அது தான் உண்மை.இன்னும் வரும் வாரங்களில் என்ன என்ன அதிர்ச்சி செய்தி வரபோகுதோ..!!


*******************************************************

லீலை

லீலை படத்தில் வரும் பாடல் ஜில்லென்ற ஒரு கலவரம் இசையமைத்தவர் சதீஷ் சக்கரவர்த்தி இப்போதைக்கு இது மட்டும் தான் நினைவில் இருக்கு....யாரு இயக்குனர்,நடிகர்கள் என்பதெல்லாம் மறந்து பல மாசம் ஆச்சு.தயவு செய்து அந்த பாட்டின் வீடியோ கிளிப்பிங்க்ஸை மட்டுமாவது டி.வி.யில் போட்டால் சந்தோஷப்படுவேன்....!படம் பார்க்கும் ஆர்வம்ல இல்ல,கேட்க நன்றாக இருக்கும் அந்த பாட்டை எப்படி
ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்று பார்க்கத்தான்......

**********************************************************
ராஜலீலை :

இந்த படத்தை அக்குவேறா ஆணிவேறா ஏற்கனவே பிரிச்சாச்சு.
இன்னைக்கு இந்த படத்தோட 76 வது நாள்...!தொடர்ச்சியா ஒரு
தியேட்டரில் ஒட்டாமல் ஊரில் இருக்கும் பல அட்டு தியேட்டர்களில்
இணைந்த வாரமாக ஒட்டி படத்தை கண்டிப்பா நூறு நாள் ஒட்டி
விடுவார்கள்.இந்த படத்தை நல்லா இல்லைன்னு பல பேர்
சொல்லிட்டாங்க...இருந்தாலும் இவங்க விளம்பரம் தான் தாங்க
முடியல....!


ஏற்கனவே ராஜலீலை குறித்து எழுதியதை படிக்க கிளிக் செய்யவும்
ராஜலீலையும் தேவலீலையும்!!



எது எப்படியோ நான் முன்னாடி ராஜலீலை லீலை பத்தி பதிவு போட்டதுக்கு அப்புறம் தான் விதம் விதமா தபு ஸ்டில் பேப்பரில் வந்தது என்று "ஜோதி"கிருஷ்ணா போனில் தெரிவித்தார்.வடை சூடும் ஆயா நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கி தராமலேயே நமக்கு கிடைத்த வெற்றி இது...!!வருங்காலத்தில் இது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு
நமது போராட்ட அறிவிப்பு தொடரும் என தெரிவித்து கொள்கிறோம்.


*************************************************

கிருஷ்ணலீலை:

நம் தமிழ் திரையுலகில் ஆஸ்கார் வாங்க தகுதியுள்ள ஒரே
நாயகன் நடித்த படம் தான் கிருஷ்ணலீலை.
பல முகபாவனைகளை அட் ஏ டைம் காட்டும் ஒரே ஹீரோ
ஜீவன் தான் அது.இவர் கடைசியா நடிச்ச ஸாரி விக் வச்சி
வந்த நான் அவனில்லை பார்ட் 2வை பார்த்து மெய்
மறந்தவர்களில் நானும் ஒருவன்....!!



யோவ்...என்னைய நீ இப்ப கிருஷ்ணலீலை பத்தி ஏன் இப்ப
எழுதுறனு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.காரணம்
லீலைகள்னு தலைப்பு வச்சாச்சு வேற என்ன பண்றது
மூணோட நாலா இருந்துட்டு போட்டுமே.....

கிருஷ்ணலீலையும் கந்தசாமியும் ஒரே கதையாம்....அதான்
படத்தை லேட் ரீலீஸ் பண்றாங்கனு கேள்விப்பட்டேன்..
கந்தசாமி படமே நாலைஞ்சு படத்தோட சேர்ந்த கதை அப்போ
கிருஷ்ணலீலை......??


********************************************************

இது போன்ற பொது அறிவு செய்திகள் அனைத்து மக்களிடமும்
சென்று அடைய ஒட்டு போடுமாறு கேட்டுகொள்கிறோம்.......

லீலைகள் தொடரும்........

ஜெட்லி