Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Wednesday, August 12, 2009

வேறென்ன.....??? பன்றி காய்ச்சல் தான்!!!!!!!.

இந்த பன்றி காய்ச்சல் வந்தாலும் வந்தது அவனவன் டாக்டர் மாதிரி வாயில் கவசம் மாட்டிகிட்டு சுத்துறதும் தாலிபன் தீவிரவாதி மாதிரி கண்ண மட்டும் காட்டிட்டு முகத்த பூரா மூடிட்டு பேட்டி குடுப்பதும் தெருவுல சுத்துறதும் பார்க்கவே வினோதமா இருக்கு. இந்த மாதிரி முன்னாடி Anthrax மற்றும் SARS பீதி அமெரிக்காவுல சுத்தீட்டு இருந்தானுங்க இப்ப இங்கயும் பயம் வந்துடுச்சு. இந்த பயம் ஏற்பட்டதுக்கு முக்கிய காரணம் மீடியா தான், நொடிக்கு ஒரு முறை அங்க வந்துடுச்சு இங்க வந்துடுச்சுன்னு நல்லா கிளப்புறாங்க பீதிய, இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி (CNN-IBN) மொத்தம் 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 536 பேர் இதுவரை குணமாகி Discharge செய்யப்பட்டுள்ளனர் அதாவது 55% மேலும் மொத்தம் 13 பேர் இறந்துவிட்டனர் அதாவது 1.35% (இதில் அதிகம் இறந்தது குழந்தைகள் என்பது மிகவும் வருத்தம்). இதைப் பற்றி ஏன் இவர்கள் கூறி மக்களை ஆறுதலும் அமைதியும் கொள்ள செய்யக் கூடாது??, எவ்வளவு பெரிய மாநகராட்சிகளிலும் இருப்பதோ அதிகபட்சம் 3 மருத்துவமனைகள் தான் (அதாவது நோயை கண்டறிய செய்யும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள்) நிலைமை இப்படி இருக்க சும்மா ஐஸ் சாப்பிட்டு வரும் தும்மல் தலைக்கு குளிததனால் வரும் தும்மல் அப்புறம் மூக்கு போடி போட்டதனால் வரும் தும்மல் இருமலுக்கு கூட நேரா அங்க போய் பரிசோதனை பண்ண சொன்ன எப்படி?? இப்படி செய்வதனால் உண்மையாக நோய் இருப்பவர்கள் கூட சரியான சிகிச்சை பெற முடியாமல் போகலாம் இல்லையா?? அல்லது அங்கு செல்வதனால் நோய் தொற்றிக் கொண்டால்?? கொஞ்சம் அமைதியாக பதட்டம் இல்லாமல் யோசிச்சி செயல்பட வேண்டும்.

இது போன்ற நோய்கள் காலம் காலமாக வருவது உண்டு, ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் தாக்கம் பெரிதாகிறது. இதற்கு காரணம் VIRUS கிரிமிகள் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் நாம் அவ்வளவு நோஞ்சானாக மாறிவருகிறோம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை. நம் உணவு முறை, வேலை செய்யும் முறை, உடல் உழைப்பின்மை, தூங்க நேரமின்மை. இப்படி பல காரணங்கள் உண்டு.

பொதுவாக எனக்கு தெரிந்த மருதுவர்களிடத்தில் பேசியதில் இது மிகவும் பயப்பட வேண்டிய நோய் இல்லை என்று கூறினர். வேகமாக பரவக் கூடியது தான் அதில் ஒரு சந்தேகமும் இல்லை, ஆனால் இது யாரை தொற்றிக் கொள்ளும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தான். அதனால் தான் சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கபடுகின்றனர், வேறு ஏதேனும் பெரிய நோய் உடையவர்களுக்கும் இது வேகமாக பரவுகிறது.



இந்த மாதிரி நேரத்தில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்வர், ஒருவர் துளசி சாபிட்டால் வராது என்று கூறினார் எனக்கு என்னமோ சரிதான் என்று படுகிறது ஏனென்றால் துளசியில் பல்வேறு பயன்கள் உண்டு. சாப்பிட்டு தான் பாருங்களேன், ஆனால் மக்கள் போகிற வேகத்தை பார்த்தல் ஊரில் ஒரு துளசி செடி மிஞ்சாது போல.

நண்பன் ஒருவன் அனுப்பிய மினஞ்சல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் படித்து பாருங்கள், நேரமின்மையால் மொழிபெயர்க்க இயலவில்லை
மன்னிக்கவும்.

Scientific Prevention of Swine Flue using Household Products

Inhale Clove Oil (Lavang) For 1 Second.
Chew 1 Clove In a Day
Eat Raw Garlic (Lasun), Onion, Ginger (Aale) (1 to 5gm)
Drink Hot Milk With 2gm of Turmeric
Consume Plenty Of Vit C Fruits-Lemon/Avala

Precautions for swine flu
1. Wash your hands frequently

Use the antibacterial soaps to cleanse your hands. Wash them often, at least 15 seconds and rinse with running water.

2. Get enough sleep

Try to get 8 hours of good sleep every night to keep your immune system in top flu-fighting shape.

3. Drink sufficient water

Drink 8 to10 glasses of water each day to flush toxins from your system and maintain good moisture and mucous production in your sinuses.

4. Boost your immune system

Keeping your body strong, nourished, and ready to fight infection is important in flu prevention. So stick with whole grains, colorful vegetables, and vitamin-rich fruits.

5. Keep informed

The government is taking necessary steps to prevent the pandemic and periodically release guidelines to keep the pandemic away. Please make sure to keep up to date on the information and act in a calm manner.

6. Avoid alcohol

Apart from being a mood depressant, alcohol is an immune suppressant that can actually decrease your resistance to viral infections like swine flu. So stay away from alcoholic drinks so that your immune system may be strong.

7. Be physically active

Moderate exercise can support the immune system by increasing circulation and oxygenating the body. For example brisk walking for 30-40 minutes 3-4 times a week will significantly perk up your immunity.

8. Keep away from sick people

Flu virus spreads when particles dispersed into the air through a cough or sneeze reach someone else’s nose. So if you have to be around someone who is sick, try to stay a few feet away from them and especially, avoid physical contact.

9. Know when to get help

Consult your doctor if you have a cough and fever and follow their instructions, including taking medicine as prescribed.

10. Avoid crowded areas

Try to avoid unnecessary trips outside.

நன்றி.
சித்து.

Tuesday, August 11, 2009

இரத்த தானம்.

இன்று எனது தூரத்து உறவினர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்த மருத்துவர் (முதல் நாள் தானே ஏற்பாடு செய்வதாக கூறினார் பிறகு காலையில் வந்து நீங்கள் தான் ஏற்பாடு பண்ண வேண்டும் அதுக்கு அப்புறம் தான் சிகிச்சை என்று கூறிவிட்டார்), ஏற்கனவே எடுக்கப்பட்ட இரத்தம் செலுத்த முடியாது (ஏதோ மருத்துவ காரணம் சொன்னார்கள்) எனவும் இங்கு வந்து தான் இரத்ததானம் தரவேண்டும் எனவும் கடைசி நேரத்தில் கூறிவிட்டனர். அதுவும் அவரின் இரத்தம் ரொம்ப அரிதான A1B+ve வகையை சேர்ந்தது, அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே தான் நான் WWW.INDIANBLOODDONORS.COM என்ற தளத்தில் சென்று இந்த வேண்டுகோள் வைத்தேன். நானும் இந்த தளத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு என்னுடைய B+ve இரத்தம் தந்துள்ளேன், அதை இன்று நினைத்தாலும் உள்ளூர ஒரு சந்தோஷம். அவர்கள் நமக்கு பல்வேறு தானம் தருபவர்களின் செல் என் தந்தனர், ஒருவர் மாறி ஒருவராக தொடர்பு கொண்டு இறுதியாக திரு.பத்ரி நாராயணன் என்ற அன்பர் உடனே வந்து தானம் தருவதாக சம்மதம் தெரிவித்து நேரில் கிளம்பி வந்து விட்டார். அவர் தென்சென்னையில் ஒரு முன்னணி பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தில் வேலை செய்கிறார், ஆனால் அவர் வந்தவுடன் இந்த மருத்துவர்கள் இன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் இரு தினங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர். இது என்ன நியாயம்??? ஒரு மனுஷன் வேலை வெட்டிய விட்டுபுட்டு மனிதாபிமானத்தோட வராரே இப்படி செஞ்சா அவரு மனசு எவ்வளவு சங்கடப்படும்?? இத்தனைக்கும் சரியா ஒரு மணி நேரம் முன்னாடி தான் இரத்த தானம் பண்ண ஒருத்தர் வராருன்னு சொல்லியாச்சு அப்ப சொல்லாம் இல்லையா?? மருத்துவர்களே கொஞ்சம் யோசிங்கப்பா................

இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் WWW.INDIANBLOODDONORS.COM அல்லது http://lionsbloodbank.net/new/ ஆகிய தளங்களில் மூலம் தேடி தொடர்பு கொண்டால் கை மேல் பயன் உடனே கிடைக்கும். அல்லது எழும்பூரில் உள்ள அரிமா சங்க இரத்த வங்கிக்கு நேரில் சென்று கூட கேட்கலாம். நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள்.

நன்றி.
சித்து.

Tuesday, April 14, 2009

Lasik Laser அறுவை சிகிச்சை



நண்பர்களே வணக்கம், இந்த பதிவு என்னை போன்று மூக்குகண்ணாடி (spectacles) மற்றும் காண்டாக்ட் லென்ஸ் (contact lens) அனிந்து சிரமப்படும் அன்பர்களுக்காக. நான் கடந்த 14 வருடங்களாக இந்த கண்ணாடிய போட்டுட்டு பட்ட பாடு சொல்லி மாளாது, அப்பப்பா நிம்மதியா ஒரு கூலர்ஸ் போட்டுட்டு சீன் போட முடியல நீச்சல் அடிக்க முடியல (நமக்கு தான் கண்ணாடிய போடலைனா கண்ணு ஒரு எளவும் தெரியாதே). இப்போ இரண்டு வாரம் தான் ஒரு சுதந்திர பறவையை போல் இருக்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருவோம், நான் இரண்டு வாரத்துக்கு முன்பு தான் இந்த அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சையை மேற்கொண்டேன். அப்பாடா இந்த மருத்துவ உலகம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று எண்ணி வாயடைந்து நிற்கிறேன். என்னோட இத்தனை வருட தொல்லையை வெறும் 8 நிமிடங்களுக்குள் மறைய செய்துவிட்டது. 

பதினெட்டு வயது பூர்த்தியாகிய பிறகு தான் ஒருவர் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும், ஏனென்றால் அதற்கு பிறகு தான் நம் கண்ணின் அமைப்பு மாறாது. நீங்கள் Contact Lens உபயோகிப்பவரானால் மருத்துவரை அணுகுவதற்கு குறைந்தது ஒரு 15 நாட்கள் முன்பே அதை தவிர்க்க வேண்டும். பின் பல்வேறு சோதனைகள் செய்து நீங்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள தகுதியானவரா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். இதற்கு நீங்கள் குறைந்தது ஒரு ஐந்து மணி நேரம் ஒதுக்க வேண்டும்.

பின் மருத்துவர் உங்களுக்கு எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதை மிக தெளிவாக விளக்குவார், கடுகளவேனும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். மேலும் இதில் பல வகைகள் உண்டு, பொதுவாக Lasik சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது, இதற்க்கு காரணம் அதற்கு ஆகும் செலவு தான் (சற்று அதிகம் தான்). இந்த சிகிச்சை மேற்கொள்ள நான் விசாரித்ததில் Agarwal 40,000/- Sankara Nethralaya 35,000/- Reya Laser Vision Centre 38,000/- மற்றும் Lasik Laser Associates 30,000/- இப்படியாக உள்ளது. இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும், பாதுகாப்பு துறையில் இந்த முறை சிகிச்சை செய்துகொள்பவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் இப்பொழுது புதிதாக வந்துள்ள Intralasik முறையில் (Microkeratome என்ற நுண்ணிய கத்தி உபயோகப்படுத்தாத முறை) நீங்கள் சிகிச்சை செய்து கொண்டால் முதன் முறையாக அமெரிக்க ராணுவம் அனுமதி அளித்துள்ளது.

நான் மேற்கொண்ட Lasik சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதை விளக்க கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


ஒரு மிக நவீன மிக சிறிய பிளேடு (Microkerotene) கொண்டு நம் கண்ணின் முன்பு உள்ள பகுதியில் (cornea)  ஒரு சிறிய பகுதியை (few microns) திறந்து (பயம் வேண்டாம்) அதை சற்று நீக்கிய பின்பு சிறிது விநாடிகள் லேசர் கற்றைகள் நம் கண்ணில் செலுத்தப்படுகிறது. பின் அந்த பகுதியை திறந்த மாதிரியே மூடி விடுகிறார்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். ஒரு கண்ணுக்கு இதை செய்ய ஆனா நேரம் நான்கு நிமிடங்களுக்கும் சற்று குறைவு தான். வலி என்பது ஒன்றும் இல்லை. சிகிச்சை மேற்கொண்ட சற்று நிமிடங்களிலே பார்வையில் நன்றாக வித்தியாசம் உள்ளது.
அன்று ஒரு நாள் மட்டும் கண்னை திறக்காமல் மூடி இருப்பது நல்லது. சிலருக்கு கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற தொல்லைகள் அன்று ஒரு நாள் மாட்டும் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனால் எனக்கு ஒன்றும் தொந்தரவு இல்லை. மருநாள் முதல் பலுவற்ற வேலைகள் செய்யலாம். சொட்டு மருந்து விட வேண்டும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் வெயிலில் செல்லும்பொழுது கருப்பு கண்ணாடி அணிவது நல்லது, அது கூட பரவாயில்லை ஆனால் மொத்தம் இரண்டு வாரங்களுக்கு இரவில் என்னால் வாகனம் ஓட்டிசெல்ல முடியவில்லை அவ்வளவு Glare. ஆனால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் இன்று ஒரு பிரச்னையும் இல்லை. கணினி உபயோகம் மற்றும் சற்று சிரமமாக உள்ளது, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் உபயோகப்படுத்த இயலவில்லை.
 
முடிவாக நான் சொல்லுவது என்னவென்றால் வருடம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பிறகு கண்ணாடி மாத்தி, இந்த வேலையெல்லாம் செய்து சிறிது சிறிதாக செலவு செய்வதைவிட மொத்தமாக ஒரே முறை இந்த சிகிச்சை மேற்கொண்டு நிம்மதியாக இருங்கள்.  நான் சென்ற இந்த நாலு இடத்திலும் நான் பார்த்த வரையில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது ஐந்து சிகிச்சை செய்கின்றனர் தினமும். எந்த ஒரு வலியும் இல்லாம நோகாத நொங்கு உரிக்கிற வேல.