12 Angry Men - (1957)
வெறும் 12 நபர் ஒரு அறையில் அமர்ந்து விவாதம் செய்வதை வைத்து ஒரு ஒன்னரை மணி நேர சுவாரசியமான, "அட" சொல்ல வைக்கும் படம் எடுக்க முடியுமா?? அப்படி ஒரு படம் தான் "12 Angry Men".
அமெரிக்காவில் ஒரு கோர்ட் அறையில் ஒரு கொலை விசாரணை நடக்கிறது, அங்கு 12 நடுவர்கள் (Jury) விசாரணையை மேர்ப்பார்வையிடுகின்றனர். விசாரணை முடிந்து நீதிதிபதி அவர்களை தனி அறைக்கு சென்று விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தி கருத்து தெரிவிக்க கேட்டுக்கொள்கிறார். இது நடப்பது வெறும் மூன்று நிமிடங்கள் தான், மீதி ஒரு மணி நேரம் முப்பத்திமூன்று நிமிடம் இந்த நடுவர்களிடையே நடக்கும் விவாதம் தான் படம். இதை என் தங்கை கூறும் பொழுது என்னடா இது மொக்கையா இருக்கும் போல என்று நினைத்தேன், ஆனா வாய்ப்பேஇல்ல சும்மா கலக்குறாங்க.
ஒரு 18 வயது பையன் தன் தந்தையை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு, அதை அவன் செய்தானா இல்லையா?? கோர்ட்டில் நடந்த விசாரணையை பார்த்த நடுவர்களில் பதினோரு பேர் ஆம் அவன் கொலை செய்தான் "Guilty" என்றும் ஒருவர் மட்டும் (Henry Fonda இவர் தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட) இல்லை "Not Guilty" என்றும் வோட்டு போடுகிறார். இந்த ஒருவரை மற்ற பதினோரு பேறும் சேர்ந்து மாற்ற முயல்கின்றனர், அதில் அவர்கள் வென்றார்களா அந்த பையன் உண்மையிலேயே கொலை செய்தானா இல்லையா என்பது தான் படம்.
இதற்குள் அந்த காலத்து அமெரிக்காவின் சமூக சிக்கல்கள், மக்களின் ஏற்ற தாழ்வுகள், மனிதர்களின் இன்னொரு முகம் என்று பல விஷயங்களை கூறுகின்றனர். படம் முழுவதும் இந்த நடுவர்களின் பெயர் என்னவென்று நமக்கு தெரியாது, படம் முடியும் பொழுது தான் இருவர் மட்டும் பெயர் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் இங்கு நம்மூரிலோ அடை மொழி வடை மொழி புண்ணாக்கு என்று பல இத்தியாதிகள், எனக்கு தெரிந்து நான் பார்த்த ஒரு ஆங்கில சினிமாவில் கூட பெயரிலோ அல்லது நடிகர் பெயரிலோ எந்த ஒரு பில்ட்அப் இல்லை என்று தான் நம்மவர்கள் மாறுவார்களோ.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் பின்னணி இசை, ஒரு காட்சியில் Fan போடுவார்கள் அப்பொழுது இவர்கள் உரையாடலுக்கு நடுவில் அந்த சத்தம் மிக தெளிவாக அதே சமயம் இதை கெடுக்காத வகையில் ரொம்ப இயல்பாக இருக்கும். உரையாடல் தான் மொத்த படமுமே என்றாலும் அது மிக சாதாரண நடையில் தெளிவாக புரியும் படி ஆழமான வசனங்கள்.
Sidney Lumet இயக்கத்தில் Reginald rose கதை திரைக்கதையில் Henry Fonda தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய படம். பாருங்க உங்க கருத்தை கூறுங்க.
இன்னொரு உலக சினிமாவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
சித்து.




