Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Monday, June 15, 2009

வெந்தது வேகாதது, சிந்தியது சிதறியது........



வணக்கமுங்க இப்ப பாருங்க அல்லாரும் அவியல், குவியல், கதம்பம், பொடிமாஸ், ஆம்லெட், பிரியாணி, சுக்கா அப்படின்னு பல பெயரில ரொம்ப நல்லா எழுதுறாங்க. சரி இன்னும் எத்தனை நாளுக்கு தான் நாம சும்மா உப்புமா பதிவு போட்டு ஒப்பேத்துறது??? அதனால நாமளும் ஏதாவது ஒரு சூப்பர் ஐட்டம் போடலாம்னு (ஐயோ நீங்க நெனைக்கறது இல்ல) ஒரு முடிவுக்கு வந்தேன். முதல்ல ஒரு நல்ல பெயர் வைக்கனும்னு ரொம்ப யோசிச்சு பாத்தேன் ஒன்னும் சிக்கல சரி "உப்புமா" அப்படின்னு வச்சா பொருத்தமாவும் இருக்கும்னு நெனச்சேன் அப்புறம் பயந்து யாரும் வரலைனா??? அதான் இந்த தலைப்பு.




பொதுவா இந்த மாதிரி பதிவுகள்ல ஒரு A சோக்கு சொல்லனுமாம்ல, நாம ரொம்ப வெகுளி பய பாருங்க!!!!!!!!!!! இந்த கருமம் ஒன்னும் தெரியாது அதனால நம்ம கல்கண்டு புத்தகத்துல வந்த ஒரு சோக்க போடுறேன் ரசிங்க. அதாவது அரசப்பா அப்படின்னு ஒருத்தர் எழுதி இருக்காரு, "த்ரிஷா போட்ட புதிய பாதை!". அதாவது, 'சர்வம்' படத்தில் தொப்புள் தெரிய நடித்த த்ரிஷா, முத்தக்காட்சியிலும் நடித்துள்ளார். இங்க தான் சிரிப்பு வருது பாருங்க "தமிழில் நடிக்கும் கதாநாயகிகளுள் த்ரிஷா மட்டுமே தொப்புள் தெரியாமல் இதுவரை நடித்தார்........." இதுக்கு மேல எதோ அருக்குராறு வேண்டாம். ஒரு வேலை இவரு சில வருஷம் உள்ள இருந்துட்டு வந்தாரோ?? இல்லைனா த்ரிஷா பதிலா வேற யாரையோ சொல்றாரோ?? ஒன்னும் புரியலையே. இந்த கதாநாயகர்கள் வாயாலேயே சண்ட போடுற மாதிரி இந்த பொண்ண விட அதோடைய தொப்புள் தான அதிகமா நடிச்சது??

சர்வம்னு சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது, இந்த ஆங்கில அகராதியில் புது புது வார்த்தைகள் சேர்க்குற மாதிரி தமிழ்ல புதுசா வார்த்தைகள் வருதோ?? இந்த படத்துல வர்ற சிறகுகள் அப்படிங்கற பாட்டை நான் கேட்டேன் அதில் ஒரு நாலு வார்த்தை ஒன்னும் பிரியல உங்களுக்கு பிரிஞ்ச சொல்லுங்க இல்லேன்னா பாடுன அண்ணன் ஜாவேத் அலி கிட்ட கேட்டு சொல்லுங்க, அந்த வார்த்தைகள் "நிலுவே, அழுகே, உழுகம், கணுவும்"

அப்புறம் ஒரு கவிதை எழுதனுமாம்ள, என்னை ஒரு கவிதா எழுத சொன்னீங்கனா "ஒரு கவிதை" அப்படின்னு தான் எழுத தெரியும், எனக்கு கவிதை ஒழுங்கா படிக்க கூட தெரியாதுபா அதனால கல்கண்டு புத்தகத்துல வந்த ஒரு வரி ரொம்ப நல்லா இருந்தது அதை எழுதறேன் "சிந்தனைகள்" அப்படின்ற தலைப்புல வந்த "குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தாலோ கை வலிக்கிறது இறக்கி விட்டாலோ இதயம் வலிக்கிறது" ரொம்ப நல்லா இருந்தது.

நம்ப நண்பர் சுகுமர்னு ஒருத்தர் இருக்காருங்க அவருடைய உறவினர் ஒருவர் ஒரு சாதனை பண்ணதா அவரே சொல்றாரு, அதாவது சென்னையில் இருந்து மதுரை செல்கிற வைகை அதிவிரைவு ரயில் தான் ரொம்ப வேகமான ரயில்னு சொல்றாங்க, சுமார் 500km தூரத்தை 8 மணி நேரத்தில் கடந்துடுது ஆனா இந்த குறிபிட்ட ஆளு இங்க இருந்து மதுர தாண்டி இருக்குற விருதுநகர்க்கே 7 மணி நேரத்தில் போய் சேர்ந்துட்டாராம், இப்ப இருக்குற நெரிசலில் தாம்பரம் தாண்டவே ஒண்ணரை மணி நேரம் ஆகுது அப்புறம் எப்படி?? ஒரு வேலை இதைத் தான் சொல்லுவாங்களோ கேக்குறவன் கேனப்பயலா இருந்தா K.R.விஜயா.................... சரி வேண்டாம் விடுங்க.

நண்பர் ஜெட்லி அரசியல் ரொம்ப பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு அதனால ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்றேன், இந்த மார்க்சிஸ்ட் கட்சி காரங்கள புரிஞ்சிக்கவே முடியலையே, கேரளாவுல ஒரு ஊழல் விசாரனயாம் அதை எதிர்த்து இங்க ஆர்பாட்டம் பண்றாங்க, முல்லை பெரியார் பிரச்சனை பற்றி இவர்கள் ஏதாவது பேசவாவது.........???? மடியில் கணம் இல்லேன்னா பயம் எதுக்கு?? சரி அதை விடுங்க, இவர்கள் இந்தியர்களா அல்லது சீனாகாரனுங்களா? சும்மா சீனாவை ஆதரித்தே பேசுறாங்க?? இலங்கை விவகாரம் உட்பட.

இந்த வாரம் என்னை மிகவும் வருத்திய செய்தி இரண்டு, ஒன்று ஒரு சிறுமியை மூன்று காமுக நாய்கள் (இருவர் போலீஸ் மகன்களாம்) கற்பழித்தது, மறு நாள் அந்த நாய்களை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மிக்க மகிழ்ச்சி. அடுத்தது பணத்துக்காக மூன்று சிறுவர்கள் கடத்தி கொலை செய்யப் பட்டது, எப்படி இப்படி வெறி பிடித்து அலைகிறார்கள்?? இவர்கள் சாகடிப்பது ஒரு சிறுவனை அல்ல ஒரு குடும்பத்தை, எவ்வளவு வேதனை படுவர் அந்த பெற்றோர்?? ஏன் இந்த @#$%^&*()! இவர்கள் வலி புரிய மாட்டேங்குது?? "தண்டனைகள் கடுமையாக்கப் பட்டால் தான் குற்றங்கள் குறையும்".

கடந்த வாரம் ரயில் பயணத்தில் ஒரு சங்கடமான சம்பவம், அதாவது ரயில் வாசலில் நானும் இன்னொரு பயணியும் அமர்ந்து பயணம் செஞ்சோம் எங்களுக்கு பின்னாடி ஒரு அம்மாவும் அவுங்க சின்ன பையனும் நின்னுட்டுவந்தாங்க. அப்ப நான் வச்சிருந்த பிஸ்கட் எடுத்து சாப்பிட்டேன். எனக்கு அந்த சிறுவனுக்கும் என் அருகில் இருக்கும் நபருக்கும் குடுக்காம சாப்பிட விருப்பம் இல்ல ஆனால் தினம் தினம் பிஸ்கட் கொள்ளை என்று செய்திகள் வரும்பொழுது நான் கொடுத்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?? ஒரே பசி வேற.

உறவினர் கல்யாணத்துக்கு போனேனுங்க, சும்மா பந்தாவா டிரஸ் பண்ணிட்டு ஜம்முனு உள்ளே போனேன். போன உடனே ஒரு நண்பர் சொல்றாரு "Your Fly is open" அட ஆமா நிஜமா தான் சொல்றாரு, நானும் என்னனவோ பண்றேன் ஹ்ம்ம் சரி ஆகல. அப்புறம் சட்டைய எடுத்து வெளிய விட்டு ஒரு ஓரமா ஒக்காந்து ஒப்பேத்திட்டு வந்தேன். இந்த மாதிரி நீங்க எங்கயாவது சிக்கி (I mean உங்க Zip) இருக்கீங்களா??



சரி எப்படி இருந்தது இந்த பதிவு?? தலைப்பு மாதிரியே இருந்ததா இல்ல பரவா இல்லையா?? உங்க கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

நன்றி
சித்து

Friday, June 5, 2009

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி?

(குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுபல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும்)



இப்போ இருக்குற recession டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.

******************
முன்னுரை:
----------------

# "வருஷம் முழுவதும் உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்" என்கிறார் கில்மானந்தா.

விளக்கம்:
-------------

அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.

**************

முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:

@ பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு.....

டி கடைக்கு போறதெல்லாம் ஓல்ட் பேஷன் அங்க போனாலும், நீங்க நாலு ரூபாய்க்கு டி குடிக்கணும்.

ஐடியா நெ.1:
----------------

உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறன்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கையாவது ஓரமா உக்காந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் வேற வழி இல்லை.

ஐடியா நெ.2:
----------------
# அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களக்கு தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது,அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கை தூளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களக்கும் ஒரு கப் காபி உண்டு.

(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).

******************

@ உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஐடியா நெ.3:
---------------

# மச்சான் உன் ஆளு இன்னிக்கு inoxல படத்துக்கு போறதா தகவல்
வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் தூட்டுலியே போய் குளிர் காயலாம்.


# "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.

# நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டல்லா போய் சாப்பிட்டு நண்பனின் தூட்டில் மொய் எழுதுலாம்.

எச்சரிக்கை நெ.1:
--------------------
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்ஆ இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களை கண்டுக்க மாட்டான்.

*********************

@ சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா
கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.


ஐடியா நெ.4:
---------------

கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்ஆ பராக்கு பாருங்க,
எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை
பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லன அவளோ தான் ,முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்
.

எச்சரிக்கை நெ.2:
---------------------

பந்தியில உக்காந்த பிறகு நீங்க அரக்க பறக்க உள்ள தள்ளாதிங்க.
பொறுமையா சாப்டனும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.

எச்சரிக்கை நெ.3:

---------------------

சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.

(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள
வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து
மாட்டி கொண்டிர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)

***********

ஜெட்லி பஞ்ச்:

# நம்ம இங்கிலீஷ்காரன் ட்ரீட்ன்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சது தான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். இதை நம்ம ஆளுங்க
கரெக்ட்ஆ பாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க. "மச்சான் என்னிக்கு ட்ரீட்?" இந்த ஒரு வார்த்தையை வெச்சு சில காலம் ஓட்டலாம். ஆனா நம்மகிட்டயே ட்ரீட் கேட்டாங்கனா அப்பத்தான் நாம நட்பை கட் பண்ண வேண்டிய நேரம். இல்லன நாம ஒரு பெரிய அமௌன்ட் செலவு செய்ய நேரிடும்.

உங்கள்

ஜெட்லி.

Monday, June 1, 2009

சுய'இன்பம்' காண்பது தவறா?

சுய 'இன்பம்' காண்பது தவறா?

இந்த கேள்வியை நான் சிவராஜ் சித்த வைத்தியர் கிட்ட கேட்டு இருந்தா அவர் அதை கண்டிப்பா தவறு என்று தான் சொல்வார். அவரின் டி.வி. நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அதை தவறு என்று தான் சொல்வார்கள்.ஆனா நீங்க நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கன்னு எனக்கு தெரியும்ங்க.இது வேற வகையான இன்பம்ங்க ,வாங்க நமக்கு எது இன்பம்னு தெரிஞ்சிக்கலாம்.


இன்பத்தை பல வகையாக பிரிக்கலாம்ங்க:

# சில பேருக்கு அலுவலக வேலை செய்வதே இன்பம்.

(உதாரணம்: கணிபொறியாளர், இவர் வேலை

செய்யலனாலும் செய்ய வச்சிருவாங்க)



# சில பேருக்கு அலுவலக வேலை செய்யாமல் இருப்பதே இன்பம்.


(இதுக்கெல்லாம் உதாரணம் தேவையா? கண்டிப்பா நம்ம வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்).



# சில பேருக்கு காதலி அல்லது காதலன் கூட இருக்கும் போது இன்பமா இருக்கும்.

(சும்மா இருக்கும் போது தாங்க!)



# சில பேருக்கு காதலியை அல்லது காதலனை மாற்றி கொண்டே இருப்பது இன்பமா இருக்கும்.

(இல்லன்னு மட்டும் சொல்லாதிங்க, ஈ.சி.ஆர் ரோட்ல வந்து ஒரு நாள் பாருங்க)


# சில பேருக்கு படம் பார்ப்பதில் இன்பம்.(என்னை மாதிரி).


# சில பேருக்கு ப்ளாக் படிப்பதில், எழுதவதில் இன்பம்.


# சில பேருக்கு பரபரப்பா ப்ளாக் டைட்டில் வைப்பதில் இன்பம்.

( ஹையோ! ஹையோ! என்ன பண்றது அப்பதானே வந்து பாக்குறாங்க)


# சில பேருக்கு சரக்கு அடித்து போதையில் பாதை மாறுவது இன்பம்.


# சில பேர் விதம் விதமா கைபேசியை மாற்றுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நண்பர் கௌரி மாசத்துக்கு இரண்டு கைபேசி மாற்றுவார்).

# பல பேருக்கு புகைப்பதில் , சில பேருக்கு இயலாதவர்களை பார்த்து நகைப்பதில் இன்பம்.

(நம்மால உதவி செய்ய முடியலன ஒதிங்கிரனும், அத உட்டுட்டு சிரிப்பாங்க).


# சில பேருக்கு புத்தகம் படிப்பதில் இன்பம், சில பேர் படித்த புத்தகத்தை பத்து தடவை படிப்பார்கள் அதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

(நம்ம ப்ளாக் குழு உறுப்பினர் சங்கர் தான் அந்த மனுஷன், உறுப்பினர்ன்னு தான் பேர் அய்யாவுக்கு ப்ளாக்க பாக்க கூட டைம் இல்ல)


# சில பேருக்கு அடுத்தவன் காலை வாரி விடுவதில் இன்பம்.

(பார்த்துங்க நீங்க வேலை செய்யுற இடத்திலேயே நிறைய பேர் இருப்பாங்க)


# சில பேர் பணத்தின் மூலம் நண்பர்களை பெருக்கி கொண்டு , உயிர் நட்பு என்று சொல்லி கொள்வதில் இன்பம்.



ச்சோ ச்சோ.... வந்த விஷயத்தை மறந்துட்டேன் பார்த்திங்களா!
எப்படி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் ஒ,
அது மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமான
இன்பம்ங்க.


சில பேர் இருக்காங்க எப்பவும் அடுத்தவனை குறை சொல்லிட்டே இருப்பாங்க,உதாரணத்துக்கு இப்போ ஒருத்தனுக்கு அலுவலக வேலை இன்பமாக இருக்கலாம் அதனால் அவன் அலுவலகமே கதி என்று இருப்பான், அவன் கிட்ட போய் நம்மாளு " டேய், ஏன்டா எப்பவும் வேலை வேலைன்னு ஆபீஸ்லயே இருக்க, உனக்கு என்ன தர போறாங்க" என்று மேதாவி தனமாக கேட்பதாய் எண்ணி கொள்வோரும் உண்டு.இது போல் பல உதாரணம் சொல்லலாம்.


அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு பிடிக்கலனா விட்டுருங்க அதை விட்டுட்டு இப்படி அடுத்தவன் இன்பத்தில் மூக்கை நுழைப்பது நியாயம் இல்லாத ஒரு ஈன செயல். உங்களால் அடுத்தவனுக்கு இன்பம் தான் கொடுக்க முடியலை தயவு செய்து துன்பத்தை கொடுக்காதிங்க.


உங்கள்
ஜெட்லி

Saturday, May 16, 2009

இலவசம் ஐயோ! ஐயோ!


வணக்கம் பதிவர்களே!

வர வர நம்ம நாட்டுல எதுக்கு எதுக்கு இலவசம் குடுக்கறதன்னு விவஸ்தை இல்லாம போச்சுங்க.

இப்படித்தான் மூணு வருஷம் முன்னாடி:

# ஒரு சட்டை வாங்கின ஒரு சட்டை இலவசம்ன்னு சொன்னாங்க .


இரண்டு வருஷம் முன்னாடி


# இரண்டு சட்டை வாங்கின அஞ்சு சட்டை இலவசம்ன்னு சொன்னாங்க.


போன வருஷம்

# ஒரு செல்போன் வாங்கின இரண்டு செல்போன் இலவசம்ன்னு சொன்னாங்க.


இப்போ என்னன்னா

# ஒரு கணினி வாங்கினால் இன்னொரு கணினி இலவசம்ன்னு சொல்றாங்க.....



இலவசங்களை நம்பி நாம் கடைக்கு போனால் அவன் 1008 கண்டிஷன் போடுவான். அப்புறம் நாமும் மேல உள்ள படத்தில் மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவோம் . எது எப்படியோ மேல உள்ள இலவசங்கள் நம் சிலருக்கு தான் உதவும் .

**********************************************

இந்த மாதிரி இலவசம் கிடைச்ச எப்படி இருக்கும்.


#வில்லு, குங்கும பூ, சர்வம் போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு இலவசமாக ஊக்க தொகை அளிக்கலாம்.(எனக்கும் கிடைக்கும்).


# ஒரு லிட்டர் பெட்ரோல் போட்ட இன்னொரு லிட்டர் பெட்ரோல் இலவசம்ன்னு குடுத்த நல்ல இருக்கும்.(புண்ணியமா போகும்).


# விஜய் படத்தை ஓட வைப்பதற்கு ஒரு டிக்கெட் எடுத்தால் பத்து டிக்கெட் இலவசம் என்று கொடுக்கலாம்.


#அஜித் படத்துக்கு டிக்கெட் தரும் போது கூட இலவசமா ஒரு தலைவலி தைலம் தரலாம்.


#டாஸ்மாக் கடையில் ஒரு quarter வாங்கினால் இன்னொரு quarter இலவசமாக தரலாம்.


# ஒரு சவரன் தங்க நகை வாங்கின இன்னொரு சவரன் நகை இலவசம்ன்னு குடுக்கலாம்.


#டி.ஆர் படத்துக்கு போகும்போது இலவமாக ஒரு குரங்கு பொம்மை கொடுக்கலாம்.


இன்னும் உங்களக்கு தோன்றியே இலவசங்களை பின்னூட்டத்தில் எழுதவும்.

Tuesday, April 28, 2009

மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு மில்க் ஷேக்.



இந்தியா டுடே மே 6 இதழில் வந்த சுவாரசியமான செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஷீராஸ் ஹாசன் எனும் நபரால் நடத்தப் படும் "Millions of Milkshake (MoM)" என்னும் கடை உள்ளது. இந்த கடை அமெரிக்கா முழுவதும் மிகப் பிரபலமானது, இங்கு எண்ணற்ற வகையில் மில்க் ஷேக் (துபாய் ஷேக் அல்ல) வகைகள் விற்கப்படுகின்றன. இதன் விசேஷம் என்னவென்றால் ஹாலிவுட் மற்றும் மிக பிரபலமானவர்களின் பெயரில் மில்க் ஷேக் விற்கப் படுகிறது. இப்படி ஒபாமா, பாரிஸ் ஹில்டன், மைலீ சைரஸ், டேவிட் பெக்கம் ஆகியவர்களின் பெயரில் விற்கப்படுகிறது.

இந்த வகையில் நம் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி, குலுக்கல் நாயகி, ஜாக்கி சாண் புகழ் மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு புதிய மில்க் ஷேக் பானத்தை சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதாவது ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் பால் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி குலுக்கு குலுக்கி தருவர். இதன் அறிமுக விழாவில் கலந்துக் கொண்ட அம்மணி ஷேக் (Shake) என்றவுடன் எதோ குலுக்கல் நிகழ்ச்சி என்று அதற்குரிய பிரத்யேக ஆடையுடன் கலந்துக் கொண்டதை கீழே பாருங்கள். அந்த கடையில் இதற்கு முன்பு நடந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும் எந்தவொரு ஹாலிவுட் நடிகையும் இது போன்று இந்த அளவுக்கு தங்கள் அழகை வெளிப்படுத்தவில்லை (அவர்கள் இணையத்தளம் சென்று பார்த்தேன்) ஆனால் கலாசாரம் அபசாரம் என்று பேசும் நம் நாட்டில் இருந்து சென்ற இவரோ இப்படி, ஐயோ ஐயோ.