சிறு தகவல்:
அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட நந்தனம் டர்ன்புல்
மேம்பாலத்தில் அண்ணாசாலை செல்பவர்கள் ஏறும்
போதும் கோட்டூர்புரத்தில் இறங்கும் போதும் பார்த்து
நிதானமாக மெதுவாக ஒட்டவும் காரணம் அங்கு வளைவு
கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது....
எலியட்ஸ் பீச் சென்னையில் இருப்பவர்களுக்கு ஒரு சொர்க்கபூமி
என்றே சொல்ல வேண்டும்.எலியட்ஸ் பீச் அமைந்திருக்கும்
பெசன்ட் நகருக்கு பல சிறப்புக்கள் உள்ளன என்பது உங்களுக்கு
தெரியாதது அல்ல,அதனால் அதை பற்றி சொல்லி மொக்கை
போட விரும்பவில்லை என்பதால் நான் சந்தித்த,சுவைத்த,
பார்த்த சில விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்.
பெசன்ட் பாஸ்ட் புட்:
எலியட்ஸ் பீச்சுக்கு வந்து இந்த பாஸ்ட் புட்டில் சுவைக்காத
நாக்கு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து.
நான் ப்ளஸ் ஒன் படிக்கும் காலத்தில் இருந்து இங்கே
சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.பல பேரை இந்த கடைக்கு
அறிமுகமும் படுத்தியுள்ளேன் காரணம் சுவை.வறுத்த
அரிசி(fried rice) ,பீப், சிக்கன் மஞ்சுரியன் அருமையாக இருக்கும்.
இப்போது இந்த பாஸ்ட் புட்டை சிறு ரெஸ்டாரென்ட் ஆக்கி உள்ளார்கள்.அவர்கள் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(தொழிலில்) நானும் ஒரு சிறு காரணம் அதே போல் நானும் இந்த அளவுக்கு பெருத்ததுக்கு(உடம்பில்) அவர்களும் ஒரு காரணம் என்பதை மறுப்பதருக்கில்லை.
ஓரிரு மாதங்கள் முன் சென்று இருந்தேன் பழைய மாஸ்டர்களை
காணோம்.சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை.
அதன் பின் அங்கு செல்லவில்லை.யாராவது சமீபத்தில் போய்
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா....
karl Schmidt நினைவு சின்னம்:
பல படங்களில் இந்த நினைவுச்சின்னத்தை பார்த்து இருப்போம்.
நான் ஏதோ காதல் நினைவு சின்னம் என்று நினைத்தேன் ஆனால் கடந்த வாரம் நெட்டில் மேய்ந்த போது தான் உண்மை தெரிந்தது. டட்ச் மாலுமி karl Schmidt அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை காப்பாற்ற போகும் போது தன் உயிரை இழந்தார் அதன் நினைவாக இந்த நினைவு சின்னம் கட்டப்பட்டது.
ஆனா இப்போ இந்த நினைவு சின்னம் இருக்குற நிலைமையை
பார்த்து அவர் எலும்பு கூடோடு கடலில் இருந்து எழும்பி வந்து
நம் அரசிடம் "தயவு செய்து இடித்து விடுங்கள்" என்று மனு
கொடுத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை!
கிழே படங்களை பார்க்கவும்..
இப்போதைக்கு நம்ம ஆளுங்க இதை ஒரு உச்சா போகும் இடமாக
மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.
போனஸ் செய்தி:
நான் போட்டோ எடுக்கும் போது ஒருத்தர் அவசரமா பக்கத்தில்
வந்து நின்றார்..நாம படம் புடிக்கிறத கூட ஒருத்தன் வந்து
பார்க்குறனே என்று பீல் பண்ணி என் பாக்கெட்டில் செல்லை
வைத்தேன்..கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தேன்.
அப்போதான் தெரிஞ்சது அவனும் உச்சா போக தான்'
வந்திருக்கான் என்று.
காலையில் கிடைக்கும் மூலிகை ஜூஸ்,பிளானெட் யம்(planet yum),
முருகன் இட்லி ஷாப் என்று நிறைய இடங்கள் உள்ளன.
அதை எல்லாம் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.
முக்கிய அறிவிப்பு:
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பீச்சுக்கு போக நேர்ந்தால்
மணலில் உள்ள பஜ்ஜி கடை பக்கம் பார்க்காமல் போங்க இல்லனா
காலையிலேயே கண்ணு கேட்டு போய்டும்(லவ்வர்ஸ் தான்).
இதெல்லாம் நான் சொன்னா சில பேரு என்னை பார்த்து பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான் உனக்கென்ன என்பார்கள்.
ஜெட்லி கருத்து:
பகோடா சாப்பிடுங்க தப்பில்ல, அதுக்குன்னு இடம் நேரங்காலம்லாம் இருக்குனு தான் சொல்றேன்.
பழைய பாகங்களை படிக்கச் இங்கே கிளிக்அவும்
இது எங்க ஏரியா
பார்ட் 1 இது எங்க ஏரியா பார்ட் 2
நன்றி
உங்கள்
ஜெட்லி சரண்.


