Showing posts with label விமர்சனம் மாதிரி??. Show all posts
Showing posts with label விமர்சனம் மாதிரி??. Show all posts

Friday, July 15, 2011

தெய்வதிருமக(ன்)ள்!!

தெய்வதிருமக(ன்)ள்!!






இதுவரைக்கும் நான் கணபதிராம் தியேட்டர்ல பார்த்த படங்களிலே தெய்வதிருமகள் படத்துக்கு பார்த்த கூட்டத்தை வேற எந்த படத்துக்கும் பார்த்தது இல்லை....தியேட்டர் உள்ளே என்ட்ரி கொடுக்கும் போதே ஒரு டப்பால மிச்சர், ஸ்வீட் லாம் கொடுத்தாங்க...ரைட் நாம படத்துக்கு
போவோம்...!!

விக்ரம் மன நல குன்றியவர்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும்,அதுக்கு அப்புறம் வேற எதுவும் சொல்றதா இல்லை. ஏன்னா நாம படம் பார்க்க போகறதுக்கு முன்னாடி சில பல கற்பனைகள் வச்சிரிப்போம். அதை ஏன் நாம லீக் பண்ணனும். உதாரணாம அமலா பால் யார்?? விக்ரம்க்கு ஜோடி யாரு??....






கிருஷ்ணாவாக விக்ரம்... சான்சே இல்லை. செம ஆக்டிங். கண்டிப்பா இப்ப உள்ள எந்த ஹீவும் நடிக்க தயங்குற கேரக்டர். சண்டை இல்லை, ரோமென்ஸ் சாங்
இல்லை...விக்ரம் நடிப்புக்கு பல இடங்களில் தியேட்டரில் செம கைத்தட்டு. நிலாவாக வரும் விக்ரம் பெண் கூட செம அழகு குட்டி. தன் குழந்தை அப்பா சொல்லும் காட்சியில், இன்னும் நிறைய சொல்லணும் மறந்துட்டேன்.

அனுஷ்கா, வக்கீலாக வருகிறார். பொட்டுக்கு கிழே அந்த விபூதி அனுஷ்காக்கு
கொள்ளை அழகு. அனுஷ்கா அப்பாவாக மகேந்திரன். அனுஷ்கா அசிஸ்டன்ட்
ஆக சந்தானம். வழக்கம் போல் டைமிங் காமெடியில் பின்னுகிறார்.
அமலா பால் எப்படி சொல்றது...

அமலா பாலை விட அனுஷ்காக்கு தான் அதிகம் நடிக்கிற வாய்ப்பை தான்
சொல்றேன். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் கலகலக்க வைக்கிறார்.
ஆனால் முதல் பாதியில் இவரும் பாண்டியும் வர சில காட்சிகள் மொக்கையாக இருக்கு. நாசர் பெரிய வக்கீலாக வருகிறார். பாட்டு பத்தி சொல்லவே வேணாம் ஆரிரோ பாட்டு செம... அப்புறம் கதை சொல்ல போறேன் பாட்டு பிரமாதமா Visualize பண்ணி இருக்காங்க....

படம் எப்படிப்பா...?

படம் கொஞ்சம் பெருசுதான் கிட்டத்தட்ட 2.45 மணி நேரம் ஓடுது...அதே மாதிரி
சில காட்சிகள் நாடகத்தனமா கூட இருந்தது. முக்கியமா நிறைய கொட்டாவி
கூட வந்தது. ஆனா இதையெல்லாம் மீறி கிருஷ்ணாவும் நிலாவும் இணைந்தார்களா?? என்ற பாசத்தில் மேல உள்ளதை கொஞ்சம் ப்ரீயா விட்ரலாம். அட எத்தனை நாள்ங்க கமர்சியல் சினிமா பார்க்கறது... இந்த படத்தையும் பாருங்க... அழகான பாசத்தை காட்டி இருக்கிறார்கள்.

கமர்சியல் இல்லாம படம் வந்திருக்கு. அப்ப ரொம்ப போர் அடிக்குமேனு நீங்க
கேட்கலாம் அப்படியெல்லாம் இல்லை..ஆனா கொஞ்சம் அடிக்கும். அதுவும் சில சமயம் சந்தானம் வந்து சரி பண்ணிடுவார். கண்டிப்பா விக்ரம் இயக்குனர் விஜய் அந்த சின்ன பெண், அப்புறம் அனுஷ்காக்காக கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் தெய்வதிருமகள்.

தெய்வதிருமகள் - வெற்றி திருமகள்!!

தியேட்டர் நொறுக்ஸ்:





# சந்தானம் ஒரு காட்சியில் கோர்ட்க்கு கேஸ் தான் வரும்னு நினைச்சேன்
இவனை மாதிரி லூஸ் வரும்னு எனக்கு எப்படி தெரியும்" அப்படின்னு விக்ரமை பார்த்து அனுச்காவிடம் சொல்லுவார்... இந்த வசனத்துக்கு தியேட்டரில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது....

#கோர்ட் சீனில் ரெண்டு பேரு அடிக்கடி அப்பப்பா...அம்மம்மா..னு சொல்வாங்க...
சில சீனில் காமெடியா இருந்தது ஆனா ஒரு காட்சியில் வெறுப்பான ரசிகர்
ஒருவர்...."யார்ட இவனுங்க..." என்று டென்ஷன் ஆயிட்டார்.

# படம் முக்கா வாசி ஓடி கொண்டிருந்த போது பின்னாடி இருந்த ஒருவர்
அவர் நண்பரிடம் "என்ன மச்சி நாடகம் பார்க்கிற மாதிரி இருக்கு..?"னு
கேட்டார்.

# நாசர் வீட்டில் ஒரு வயதான பெண் டாக்டர் வருவார்...அவரோட வாய் கொஞ்சம் வீங்கி இருந்தது...உடனே கிழே இருந்த ரசிகர்கள்..."மச்சான் மாவா போட்டிருக்குடா..." என்று கத்த ஆரம்பித்தனர்.

#நம்ம அமலா பால் நடிச்ச சிந்து சமவெளி படத்தை திரும்பவும் ரீலீஸ் பண்றாங்க...




இந்த பதிவு பல பேரை சென்று அடைய நீங்க செய்ய வேண்டியதை மறக்காம செய்யுங்க...


நன்றி

ஜெட்லி...(சரவணா...)



Friday, June 17, 2011

அவன் இவன் ... எவன்..??

அவன் இவன் ... எவன்..??





சில பல மாசங்கள் கழிச்சு மொத நா மொத ஷோ அவன் இவன் படத்துக்கு போற வாய்ப்பு கிடைச்சுடுச்சுடோய்னு கொஞ்சம் சந்தோசம். ஆனா சந்தோசம் படம் பார்த்த அப்புறம் இருந்ததா இல்லையான்னு தான் இப்ப முக்கியம். அதை பத்தி நாம பின்னாடி டிஸ்கஸ் பண்ணுவோம்.

அவன் இவன் என்ன கதை....

அவன் இவனின் அப்பாவாக சூப்பர் சிங்கர்ல ஒருத்தர் தாடி வச்சி வருவாரே அவரு....அண்ணனாக விஷால் அவர் அம்மாவாக அம்பிகா தம்பியாக ஆர்யா அவர் அம்மாவாக தெலுங்கு அம்மாயி ஒண்ணு. நொடிஞ்சு இடிஞ்ச ஜமீனாக ஜி.எம்.குமார் ஏதோ ஐநஸ்னு சொல்றாங்க....எப்படி கதையே சொல்றது....?? அண்ணன் தம்பி ரெண்டு பேரும் முதல்ல அடிச்சுப்பாங்க... குமார் ஒரு வேலையை ரெண்டு போரையும் செய்ய சொல்வார்...செய்வாங்க..
அப்போ அப்போ...ஹா அப்போதான் தீடிர்னு வில்லன் ஆர்.கே வருவார்...ரெண்டு பேரும் வில்லனை அடிப்பாங்க. அப்புறம் படம் முடிஞ்சு Film by bala னு கார்ட் வரும்.....!!


அவன் இவன் படத்துல என்ன ஸ்பெஷல்னு உங்களுக்கே தெரியும் அது ஒன்றை கண்ணாக வரும் நம்ம விஷால் தான்னு. ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்கிறார். பயங்கரமான உழைப்பு. இந்த படத்தில விஷால்க்கு அப்புறம் நான் சொல்ல போறது ஆர்யானு நீங்க நினைக்கலாம் ஆனா அது தான் இல்லை...அவர் ஜி.எம்.குமார்... மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார். ஒரு காட்சியில் அம்மணமாக கூட வருகிறார். ஆர்யாவும் நல்லா தான் பண்ணி இருக்கிறார்.என்ன சில காட்சியில் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆனா மாதிரி இருக்குது...சில பல
காட்சிகள் பிதாமகன் மாதிரி தான் இருந்தது.படம் முதலில் இருந்தே காமெடியில் டாப் கீர்ல தான் போச்சு. வசனங்கள் செம.விஷால் மற்றும் ஆர்யாவின் அறிமுக காட்சி சூப்பர்.


பாலாவோட படம் கண்டிப்பா வித்தியாசமான களமா இருக்கும்னு நம்பி போனேன்..இருந்துச்சு...ஆனா சில பல காட்சிகள் அப்படியே அவரோட பழைய படத்தை நினைவு படுத்தியது கொஞ்சம் போர் ஆக இருந்தது. அப்புறம் படத்தோட பல காட்சிகளில் ஒன்ற முடியலை. போலீஸ்காரரை முதலில் ஓட்டும் போது நன்றாக தான் இருந்தது ஆனால் அதற்கு அப்புறம் ஆர்யா ப்ளேட் சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகும் காட்சி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் இருந்தது.

நான் ரொம்ப ரசிச்சு கை தட்டி சிரிச்ச சீன் டுடோரியல் எக்ஸாம் காட்சி...ரெண்டாவது காந்தி யார் கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் வாத்தியார் சொல்லும் "ஏசப்பா".. வாக்கியம்.அப்புறம் நாடக மேடையில் பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும்னு? விஷால் கேட்கும் போது. ஆர்யா "அவனுக்கு என்ன வேணும்னே உனக்கு தெரியல என்னையா நீ கடவுள்..." னு கேட்கும் காட்சி.


சூர்யா வரும் காட்சி கூட எதுக்குனு நான் யோசிச்சப்ப அங்கே விஷாலோட ஆக்டிங் உண்மையிலே சூப்பர். அந்த காட்சியில் மட்டும் தான் கொஞ்சம் மண்டை கீர்னுச்சு....அப்புறம் கடைசில் ஜி.எம்.குமாரை பார்த்து விஷால் அழுகும் காட்சி ..மற்றபடி வேற எதுவும் மனசை தொடலை. ரெண்டு நாயகி..ஒண்ணும் சொல்லும் படியா பெருசா இல்லை..ஆனா ஆர்யா டாவு கட்டுற பொண்ணோட ஏட்டாக வரும் பெண்ணுக்கு வேலை அதிகம் தான். யுவன் மியூசிக் ராசாத்தி ஓகே...ஆர்.கே வை காட்டும் போது ஒரு மியூசிக் அடிக்கடி வரும் அதை எங்கையோ கேட்ட மாதிரி இருந்தது...எங்கனு சொல்லுங்கப்பு...

அது சரி படம் எப்படி...தேறுமானு கேட்டா...என்னத்த சொல்றது..தியேட்டர்ல
கலவையான விமர்சனம் தான். என்னை கேட்டா கஷ்டம்னு தான் சொல்வேன்...
ஒரு தடவை தாரளமா பார்க்கலாம். ரீப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கிறது ரொம்ப
கஷ்டம். ஆமா படத்தோட கதை என்னனே சரியா எனக்கு விளங்கல...ரெண்டு திருடங்க ஜாலிய காமெடி பண்றாங்க போலீஸ்காரனை கலாய்க்கிறாங்க.. .தீடிர்னு ஒரு வில்லன் வரான்... தீடிர்னு பழி வாங்குறாங்க.... ...டீடைல்லா பார்த்தா படத்துல பல விஷயங்கள் இருக்குனு மட்டும் புரியுது....என்னமோ போங்க..


அவன் இவன் - எவனா இருந்தா எனக்கென்ன...!!





தியேட்டர் நொறுக்ஸ்:


# வழக்கம் போல நம்ம கணபதிராம்ல தான் படம் பார்த்தேன்...படுபாவிங்க ஏ.சி.யே போடல...ஆபரேட்டர் தான் பாவம் என்னா திட்டு...

# அம்பிகா ஆர்யாவை பார்த்து "அவனுக்கு குஞ்சுமணியை புடிச்சு ஒழுங்காவே ஒன்னுக்கு போக தெரியாது "என்ற காட்சிக்கு செம ரெஸ்பான்ஸ்...

# ஆர்யாவும் அவர் அம்மாவும் ஆடும் கூத்து ஆட்டத்துக்கு தியேட்டரில் செம விசில்.....

# படம் முடிந்து வண்டி எடுக்கும் போது..ரெண்டு நண்பர்கள் பேசிகொண்டது..

படம் எப்படி...
எனக்கு புடிக்கல...
உனக்கு எப்பவுமே இப்படி தான்...
என்னா கதைன்னு சொல்லு பார்ப்போம்...
என்று பேசி கொண்டே சென்றார்கள்....


இந்த பதிவு பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான வாக்கினை செலுத்த மறவாதீர்....


உங்கள்
ஜெட்லி...(சரவணா...)



Tuesday, December 14, 2010

அய்யனார் - மொக்கையா சக்கையா??

அய்யனார்....






நிறைய பேரு நீங்க ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் படமா நகரம்
பார்த்தீங்கன்னு கேலியும் கிண்டலுமா கேட்டு, காத்திருந்து நல்ல படம்
வரும் போது போய் இருக்கலாம்னு சொன்னாங்க. நல்ல படம் எப்ப
வர்றது நான் எப்போ போய் படம் பார்க்குறதுனு சொல்லிட்டு இந்த வாரம்
அய்யனார் போய்ட்டேன் ஸ்வர்ண சக்தி அபிராமியில் செம கூட்டம்
வாஷ்ரூமில் மட்டும்னு சொல்ல வந்தேன் யுவர் ஆனர்...கொஞ்சம் சின்னது
தான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதுவும் காலி ஆயிடுச்சு தியேட்டர் மாதிரி !!

அய்யனார் படத்துக்கு போறதுக்கு முக்கிய காரணம் தமன்....பாடல்களில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையிலும் தமன் கல் உடைத்து இருக்கிறார். அப்புறம் ஆதி ஈரத்துக்கு அப்புறம் வர்ற படம் எப்படி பண்ணி இருக்கிறார் என்று பார்க்கலாம்னு போனேன். அவர் உடம்புக்கு சண்டை காட்சி எல்லாம் ஓகே தான் ஆனா கொஞ்சம் ஓவர்டோஸ் மாதிரி இருந்தது.


சந்தானம், முதல் பாதியில் மட்டுமே வந்தார் வர்ற சீன்லாம் நல்ல தான் இருந்தது...ஆனா ரெண்டாவது பாதியில் ஆளே காணோம்...நாயகிக்கு ஒண்ணும் பெருசா வேளை இல்லை...ஏதோ ரெண்டு பாட்டுக்கு உதவி பண்ணி இருக்காங்க.முக்கிய கேரக்டர் ஆதியின் தம்பியாக வரும் விஷ்ணுப்ரியன் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வருவார். நல்லாவே பண்ணி இருந்தார். ஆனா ஏன் அவருக்கு ஆதி மேல இவளோ காண்டுனு தெரியலை.

ஆதி, படம் ஆரம்பத்தில் இருந்து ஊதாரி, குடிகாரனா காட்டிட்டு தீடிர்னு வாலிபால் காமிச்சிட்டு கோச்னு சொல்றாங்க...அப்புறம் தீடிர்னு மத்திய அரசு வேலை கிடைச்சுடுச்சுனு சொல்றாங்க.... அப்புறம் குடும்பமா சேர்ந்து பாட்டு பாடுறாங்க...படத்தை பார்த்துட்டு இருந்தப்போ நான் கொஞ்சம் குழம்பிட்டேன் எது ப்ளாஷ்பேக்னு தெரியலை....அப்போ அரைமணி நேரம் கழிச்சு படம் பார்க்கவந்த நாலு பேருக்கும் என்ன புரிஞ்சுருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன்....

இந்த படம் கமர்சியல் படமா இல்லை சஸ்பென்ஸ் படமா என்பதை இயக்குனர் தான் சொல்லவேண்டும். முதல் பாதி சூப்பர்ஆ போச்சு ஆனா இன்டெர்வல் டைம்ல படத்தோட மொத்த கதை, திரைக்கதை எல்லாத்தையும் யூகிக்க முடிஞ்சதும் அதுவே திரையில் வர்றதும் கொடுமையான விஷயம். மாவட்டம்னு ஒருத்தர் வந்து சிக்னல் கிடைக்கலன்னு நடு ரோட்ல வந்து பேசுறது ரொம்ப ஓவர்....சுந்தர புருஷன் படத்தில் இருந்து மாப்பிள்ளையாக வருபவர் இதிலும் மாப்பிள்ளையாகவே வருகிறார் என்பது லிம்கா புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சாதனையாகும்.


இந்த படம் ரொம்ப மொக்கை இல்ல ஆனா மொக்கை தான்.

அய்யனார் - வெறும் தேங்காய் நார்.

இந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை போடுங்கள்...

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)