Tuesday, August 11, 2009
இரத்த தானம்.
இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் WWW.INDIANBLOODDONORS.COM அல்லது http://lionsbloodbank.net/new/ ஆகிய தளங்களில் மூலம் தேடி தொடர்பு கொண்டால் கை மேல் பயன் உடனே கிடைக்கும். அல்லது எழும்பூரில் உள்ள அரிமா சங்க இரத்த வங்கிக்கு நேரில் சென்று கூட கேட்கலாம். நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள்.
நன்றி.
சித்து.
Tuesday, July 7, 2009
எனக்கா (பிரியா)மணி உனக்கா.
நான் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த வாரம் பேப்பரில் நீங்கள் ஒரு பட விளம்பரத்தை
கண்டிப்பாக பார்த்திருக்கலாம். எனக்கா மணி உனக்கா
இதாங்க படம் டைட்டில்.நம்ம அக்கா ப்ரியாமணி நீச்சல்
உடையில் ஒரு ஸ்டில் போட்டிருந்தாங்க. இந்த படம்
தெலுங்கில் துரோனா என்ற பெயரில் வெளியாகி திரும்பவும்
பெட்டிக்குள் போன மொக்கை படம். அதை இப்போது தமிழ்
ரசிகர்களுக்கு மொழிமாற்றம் செய்து ஒரு கேவலமான
விளம்பரத்தால் நம்மை தியேட்டர் பக்கம் இழுக்க
நினைக்கிறார்கள்.
(இந்த ரெண்டு படத்துல்ல எது போட்டங்கனு சரியா
நினைவு இல்லை.அதனால் இரண்டு படங்களும்
உங்கள் பார்வைக்கு. முடிந்தால் ஆறு வித்தியாசங்கள்
கண்டுபிடிக்கவும்.)

படம் பெயரை பார்த்திங்களா, எனக்கா மணி உனக்கா.
இந்த மாதிரி படம் பேர் வைக்கவே 11 பேர் கொண்ட குழுவ
வச்சிருப்பாங்க போல?. துபாய் ராணி, காம சதி லீலாவதி,
பெயர் சந்தியா தொழில் தாசி இந்த மாதிரி டைட்டில் வச்சி
நம்மை போல் உள்ள ரசிகர்களை ,தியேட்டர் பக்கம்
இழுக்க பார்க்கிறார்கள் சில கயவர்கள்.
# சரி இந்த மாதிரி டைட்டில் வச்சா கூட்டம் பிச்சுகுமா என்ன?
# ஏன் இது போல் பட டைட்டில் வைத்து திரைப்படங்களை
கேவலப்படுத்துகிறார்கள்?

# வெறும் கவர்ச்சியை மையமாக வைத்து டப்பிங் படத்தை
வெளியிட்டால் நம் தமிழ் ரசிகர்கள் வந்து பார்த்து விடுவார்களா?
#தயவு செய்து இந்த மாதிரி டைட்டில் வைத்து மற்ற
படங்களை கெடுப்பதை நிறுத்தி கொள்வார்களா சம்பந்தப்பட்டவர்கள்?
ஒரு நிமிஷம் இருங்க போன் வருது பேசிட்டு வரேன்......
****************************************************
ஜெட்லி: சொல்லு பாலா...
பாலா: மச்சான் பல்லாவரம் லட்சுமில மரியா,ரேஷ்மா நடிச்ச வண்ணகிளிகள் படம் ஓடுது மச்சி.
ஜெட்லி: ஹோ அப்படியா, இப்பவே மணி பன்னிரண்டு ஆச்சி.. சீக்கரம் வா அப்பத்தான் படம் ஸ்டார்ட் பண்ணும் போது போக முடியும்.
*********************************************************
சாரிங்க நடுவுல போன் வந்துடுச்சு, எங்கே உட்டேன்
# இவனுங்கள திருத்த முடியாதுங்க.(யாரை???), இந்த மாதிரி
டைட்டில் வச்சி மயக்க பாக்குறாங்க.....
சரிங்க டைம் ஆச்சு நண்பன் வந்துரவான் லேட்ஆ போன
சில நல்ல காட்சிகள் மிஸ் ஆயிடும்.அதனால நெக்ஸ்ட்
டைம் மீட் பண்றேன்.....
(சும்மா ஒரு உதாரணதுக்காகத்தான் மேற்கொண்ட போன்
பேசும் நிகழ்ச்சி, யாரும் என்னை தவறாக எடுத்து கொள்ள
வேண்டாம். எனக்கு பல்லாவரம் எந்த பக்கம் இருக்குன்னு
கூட தெரியாது, நான் இதுவரைக்கும் ஜோதி தியேட்டர் பக்கம்
கூட போனதில்லங்க. நம்பினால் நம்புங்க)
முடிஞ்சா TAMILISHஇல் ஒட்டு போடுங்க அப்பதான் இந்த நல்ல
விஷயம் வெகுஜன மக்கள் இடையே போய் சேரும்.
உங்கள்
ஜெட்லி.
இதென்ன ரோடா இல்ல..........

பொதுவாக இந்த சாலையில் சிக்னல் ரொம்ப கம்மியாக இருக்கும், அதனால் நல்ல வேகமாக செல்ல தூண்டும். ஆனால் நல்லா கூட்டமாக இருக்கும் (பெண்கள் கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா??) இதனால் ஒரு சவாலாக நல்லா வேகமா ஓட்டுறாங்க. இதில் மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. கூட ஒரு பொண்ணு இருந்தா இவனுங்க போற வேகம் இவர்களுக்கே தெரியாது, இவர்கள் வேறு ஒரு லோகத்தில் பறந்துகொண்டிருப்பதாக தான் ஒரு எண்ணம், அப்படியே கண்ட எடத்துல பிரேக் போடுறதும் பள்ளம் மேடு பாத்து பாத்து வேணும்னே ஏற வேண்டியது. பாவம் அந்த புள்ள ஒரு ஷேர் ஆட்டோ பயணம் தான், பெரும்பாலும் இவர்கள் காதலர்களாக தான் இருப்பார் அதனால் ஒரு வயசு முறுக்குல கொஞ்சம் வேகம் போவாங்க ஆனா ரொம்ப வேகம் போன பொண்ணு நல்லா பயத்துல தட்டுவா அதனால் இவர்களால் ஆபத்து கொஞ்சம் கம்மி தான்.
2. நம்ம பய தன நண்பன் கூட ஏதாவது வெட்டி கதை பேசிட்டே போவான், ஆனா வேற ஒருத்தன் சல்லுனு முந்திட்டா போதும் அவ்வளவு தான் சும்மா ஜல்லிக்கட்டு காளை மாதிரி வீறு கொண்டு எழுவான் இவன், உடனே இதை உணர்ந்து பின்னால இருக்கும் நண்பன் கெட்டியா புடிச்சிகிட்டா உண்டு, இல்லைனா அப்புறம் பாப்போம் மச்சினு ரேஸ் கெளம்பிடுவான் நம்ம ஆளு. இவங்களுக்கு ஈகோ தான் பிரச்சனை அதெப்படி karizma பெரிசா இல்லை Pulsar பெரிசா அப்படின்னு சோதனை பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க.

3. இந்த மூணாவது குரூப் தானுங்க டெர்ரர் குரூப் (அவரு மாதிரி டெர்ரர் கிடையாது (:P ). இவனுங்க எப்பவுமே பன்னி மாதிரி, ஒரு கூட்டமா தான் சுத்துவானுங்க இது வந்து ஒரு Gang War மாதிரி. இரண்டு மூன்று குழுக்கள் ஒரு ஏரியால இருப்பானுங்க ஒரு குழுவுக்கு குறைந்தது பத்து நபர் இருப்பானுங்க. ஒரு நபர் 150 ருபாய் கொடுக்கணும் ஆகா 1,500/- பெட் கட்டி ரேஸ் ஆரம்பம் ஆகும். அதாவது பாரிமுனை தொடங்கி லைட் ஹவுஸ் அல்லது பெசன்ட் நகர் வரை யார் அல்லது எந்த குழு முதலில் செல்கிறதோ அவர்களுக்கு தான் அந்த முழு தொகையும். இதற்காக இவர்கள் வண்டியில் பல்வேறு மாற்றங்களை செய்து வைத்திருக்கின்றனர். இந்த வெறி தான் பேய் மாதிரி இவர்கள் செல்வதற்கு காரணம், பத்து பதினைந்து வண்டிகள் தொடர்ச்சியாக நூறு KM வேகத்தில் ரோட்டில் சென்றால் எப்படி இருக்கும்?? இதனால் பெண்களும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். கரணம் தப்பினால் மரணம், சரி இவர்கள் இவ்வாறு சென்று செத்து தொலைத்தால் சரி, தான் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இவர்கள் குடும்பத்தினர்?? இவர்களால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகள்?? யோசிப்பார்களா?? அப்படி ஜெயிக்கும் பணமும் நேராக TASMAC தான் செல்லும்.

இந்த இடத்தில ஒரு சம்பவத்தை நான் கண்டிப்பாக கூற வேண்டும். அதாவது இந்த குழு ஒரு முறை சாந்தோம் சர்ச் எதிரில் ஒரு பேருந்தை முந்தும் பொழுது அங்கு ரோட்டை கடக்க முற்பட்ட ஒரு பெண்னை ஏற்றியதில் அந்த பெண் அங்கேயே இறந்து போனார், இவர்கள் ஒரு நொடி நின்னு கூட எந்த உதவியும் செய்யவில்லை. அந்த பெண் யாரோ அவர் குடும்பம் இன்று என்ன ஆச்சோ?? அது எனக்கு தெரியாது ஆனால் அந்த பெண்னை கொன்றனவனின் நிலை என்ன தெரியுமா?? சரியாக இரு மாதங்களுக்குள் அதே இடத்தில அதே மாதிரி ஒரு பேருந்தை முந்தும் பொழுது எதிரே வந்த பேருந்தில் அடி பட்டு அதே போல் செத்து போனான். இதை என்னவென்று சொல்வது?? விதியா?? அந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதா?? அவளின் குடும்பத்தாரின் சாபமா?? கடவுள் தண்டித்து விட்டாரா?? அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் ரொம்ப கொடுமையான விஷயம் என்னவென்றால் அவனை அவன் நண்பர்கள் நின்று உதவவில்லை அதே போல் சரியாக இரண்டே வாரங்களில் மீண்டும் தங்கள் வேலையே தொடங்கிவிட்டனர். இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஷ்டம்.

இதுங்க வளர்ந்து கெட்டுபோனதுங்க இதுங்கள பாத்து வளர்ற பசங்க என்ன பண்ணுறாங்க தெரியுமா?? நம்ம மன்றோ சிலை இருக்குல, அந்த பக்கம் போகும் பொழுது ரொம்ப ஜாக்ரதையா போங்க. அங்க ஸ்கூல் பசங்க சைக்கிள்ல பண்ற வித்தை இருக்கே யப்பப்பா, இப்படி தான் நான் ஒரு நாள் வேலைய முடிச்சிட்டு இரவு ஒரு 08:30 மணிக்கு அந்த பக்கம் வந்துட்ருந்தேன் கரெக்டா அந்த சிலைய தாண்டியவுடன் நாடு ரோட்டில் ஒரு பத்து பசங்க சைக்கிள்ல முன் சக்கரத்த தூக்கிட்டு ஒரு சக்கரத்துல வேகமா ஓட்டிட்டு எனக்கு எதிர் திசைல வரானுங்க. கொஞ்சம் கூட பயம் இல்லை "இவனுங்க என்ன இடிசிடுவானுங்களா என்ன??" இப்படி ஒரு எண்ணம், சரியா அருகில் வந்தவுடன் அந்த மிலிடரி ரோடுக்குள் ஓடிட்டானுங்க. ஏதாவது கார் வேகமா வந்து இடிச்சா சட்னி தான்.
இந்த வித்தை காட்டுறது வேகமா போறது இதெல்லாம் பண்றதுக்கு தான் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஸ் கோர்ஸ் இருக்கே அங்க போய் பண்ண வேண்டியது தான?? யாரு வேண்டாம்னு சொன்னாங்க?? நம்ம காவல் துறையும் பாவமுங்க இதை ஒன்னும் பண்ண முடியல, முதல்ல இவங்க போற வேகத்துல ஏதாவது தடை பண்ணி அத பாக்காம இடிச்சி செத்து போனா பாவம் இவுங்க தலை தான் உருளும். அப்படியே புடிச்சிட்டா பெரிய எடத்துல இருந்து போன் வரும் உட்டுடுவாங்க.
நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க அடுத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்காதீங்க.
நன்றி.
சித்து.
Saturday, June 20, 2009
காதல் செய்ய ஏற்ற இடம்?
***************************
நேத்து நைட் என் மனசாட்சி என்கிட்ட வந்து ஒரு கேள்வி கேட்டுச்சு...
"டேய் ஜெட்லி கண்ட கண்ட மொக்கை பதிவலாம் போடுறியே,
நாலு பேருக்கு நல்லது செய்யுற மாதிரி எப்ப பதிவு போட போற ...."
என்று கேட்டது.
"சரி காதலர்களுக்கு உதவியா இருக்குற மாதிரி ஒரு பதிவு போடுறேன்" அப்படின்னு சொன்னேன்.
தீடிர்னு அவன்(மனசாட்சி) சிரிக்க ஆரம்பிச்சு
"டேய் உனக்குதான் காதலும் பிடிக்காது, காதல் செய்ரவங்களையும்
பிடிக்காதே. நீ என்ன உதவி செய்ய போற".
அவனை(மனசாட்சி) விடுங்க, அதற்காக தான் இந்த பதிவு... ஸ்பெஷல் காதலர்கள் பதிவு.
# முதல்ல நீங்க இந்த குழந்தைகள் பூங்கா, வண்டலூர் ஜூ
போன்ற இடங்களுக்கு போவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள்.
சின்ன பசங்களை கூட்டிட்டு பாம்பு, பறவையை
பாக்க வந்த நீங்க கண்டதையெல்லாம் பாக்க வைக்கிறிங்க.
#அப்புறம் இந்த அண்ணா நகர் டவர் பூங்கா பக்கம் போக
முடியுல, அப்படி போனாலும் அந்த டவரை சுத்தி பாக்க
முடியுல. செவுரு புல்லா ஒரு காதல் வசனம் பிளஸ்
முகம் சுளிக்கும் வசனம். அந்த டவர் ஏறுறதுக்கு குள்ள
ஒரு பத்து காதல் ஜோடி வழியை மறைச்சி உட்காரிங்க.
நாங்கலாம் டவர் பாக்க வந்தோம் நீங்க என்னன்ன எங்களுக்கு
ஓசியில மலையாளம் படம் காட்றிங்க. அப்புறம் ஏன் mms
எல்லாம் வராது.
டேய் ஜெட்லி என்னடா லவ்வர்ஸ்க்கு ஹெல்ப் பண்றேன்சொல்லி டிப்ஸ் கொடுப்பேன்னு பார்த்தா நீ எங்களையே
கலாய்க்கிரியா என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது.
இதோ வரேன் இருங்க அடுத்தது அதான்........
(பின்வரும் சம்பவம் அனைத்தும் நான் பார்த்தவையே,
எனக்கு இது மாதிரி எதுவும் அமைந்ததில்லை, நான் ஒரு
பார்வையாளன் மட்டுமே)
சரி அப்போ காதலர்களுக்கு ஏத்த இடம் எது அப்படின்னு பார்த்தா
# தியேட்டர் தாங்க, யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்ல.
ஆனா தயவு செய்து புது படம் மற்றும் கூட்டமான தியேட்டர்க்கு
எல்லாம் போகாதிங்க,ஏன்னா திருப்பியும் அது உண்மையாக படம்
பார்க்க வந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். மொக்கை படம்
போன கூட்டம் இருக்காது இருந்தாலும் உங்க காதல் வேலையை நீங்க சவுண்ட் இல்லாம பண்ணா நல்ல இருக்கும்.இப்படிதான்
பாருங்க நம்ம கேபிள்சங்கர் அண்ணே , ராகவன் படத்துக்கு போய் ரொம்ப பயந்துட்டார்.
(எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கு இதை கிளிக்
செய்து படிக்கவும்),

# சென்னை பக்கத்தில் இருக்கும் மாயாஜால் யாரை நம்பி
கட்டிவச்சிருகாங்க நினைச்சிங்க, காதலர்களின் சொர்க்க பூமிங்க
அது.ஆனா காதலன் பர்ஸ் காலி ஆயிடும்.இங்கே போய் படம் பார்த்தா,ஹோ ஸாரி நீங்க படம் பாக்க மாட்டிங்க இல்ல.
இங்கே போய் உட்கார்ந்த யாருக்கும் எந்த வித தொந்தரவும்
இருக்காது.சில மொக்கை படம் ஒரு ஷோ மட்டும் ஓடும் அது
தான் நீங்க தேர்ந்து எடுக்க பட வேண்டிய படம். ரெண்டு பேர் இருந்தா கூட புல் ஏ.சி போட்டு படத்தை போடுவாங்க.
எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....
இந்த விஷயத்தை அனைவரும் படிக்க, நீங்க ஒரு சின்ன
விஷயம் பண்ணுங்க.... ஒட்டு போட்டு போங்க.
உங்கள்
ஜெட்லி
Tuesday, June 2, 2009
ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்திய மாணவர்களின் மீதான தாக்குதல்.

நன்றி : நண்பர் திரு.மெல்பர்ன் பாலச்சந்தர்.
"ஆஸ்திரேலியாவில் படித்து வரும் நம் இந்திய மாணவர்களின் மீதான வன்முறை வெறியாட்டம் மிகவும் வருந்தம் அளிக்கிறது" - மன்மோகன் சிங்க்.
இந்த மாதிரி ஒரு பேட்டியை நானோ அல்லது மற்றொரு பதிவுலக நண்பரோ கூறியிருந்தால் அது ஏற்கத் தக்கது, ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?? பிரதமர் Diplomacy Maintain பண்றாருனு நீங்க சொல்லலாம், உண்மை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது முதல் தாக்குதலா?? இந்த மாதிரி சில மாதங்களுக்குள் எத்தனை முறை நடந்துள்ளது?? அது சரி தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்த பொழுதும், மும்பை தாக்குதல் பொழுதும் கூட கீறல் விழுந்த ரெகார்ட் போல "இதை வண்மையாக கண்டிக்கிறேன், இனியும் இது போன்ற ஒரு தாக்குதலை இந்தியா பொறுமையாக ஏற்றுக் கொள்ளாது!!!!". விளைவு இன்று திரு.கசாப் சொல்றான் "நான் எந்த கொலையும் பண்ணல நீங்க பொய் சொல்றீங்க".
சரி அவரை விடுங்க நல்ல மனுஷன் பாவம் என்ன பண்ணுவாரு, ஆஸ்திரேலியாவில் மொத்தம் 93,000 சொச்சம் இந்தியா மாணவர்கள் படிக்கின்றனர் அதில் மெல்பர்ன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 38,000 பேர். ஒரு ஆண்டுக்கு இவர்களால் அந்த நாட்டுக்கு வரும் வருமானம் 4 Billion Dollars (ஆத்தாடி!!). வருமானம் மொத்தத்தையும் வாங்கி ஜோபிகுள்ள உட்டுகறாங்க ஆனா நம்மள புடிக்காதாம். அதை அந்த அரசாங்கமும் கண்டு கொள்ளாது. இந்த சம்பவம் (Shravan Attack) நடந்து பத்து நாட்களுக்கு விஷயம் அந்த அரசாங்கத்தால் மூடி மறைக்கப் பட்டுள்ளது, மெல்பர்னில் வசிக்கும் என் நண்பர் பாலசந்தர் அவர்களுக்கே இந்த செய்தி TimesofIndia செய்தி வந்த பிறகு தான் தெரியுமாம். நேற்று கூட ஹைதராபாதை சேர்ந்த ஒரு நபர் தாக்க பட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் கூட அவர்கள் எவ்வளவு மூர்க்கமாக தரம்கெட்ட விமர்சனங்கள் கூறுவர் என்பதை நீங்கள் நன்று அறிவீர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்பே இப்படி நடப்பவர்கள் ஆளில்லா இடங்களில் என்னவெல்லாம் செய்வர்??
நாம் செய்ய வேண்டியது என்ன??
அரசாங்கம் : நமது அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் "ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு இல்லை, அதனால் அங்கு படிக்கவும் சுற்றுலா செல்லவும் உகந்த சூழல் வரும் வரை யாரும் அங்கு செல்ல வேண்டாம்" இது அந்த அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் , இப்படி ஒரு எச்சரிக்கை வந்தால் அங்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும். மற்ற நாடுகள் முன் இது ஒரு அவமானமாகும்.
காமன்வெல்த் அமைப்பு மூலமாக நம் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். Diplomatic Tension குடுக்கலாம்.
கிரிக்கெட் : முதலில் IPL இல் உள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆட்டக்காரர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் இதை லலித் மோடி கண்டிப்பா செய்ய மாட்டாரு. அவருக்கு நாட்டை விட பணம் தான் பெருசு. நீங்கள் கூறலாம் விளையாட்டு நட்பை வளர்க்கும் அதனால் இது சரியான வழி இல்லை என்று. நான் கேட்கிறேன், எப்பொழுதாவது இந்தியா பாகிஸ்தான் மோதும் பொழுது நீங்கள் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியதுண்டா?? இல்லை மற்ற நாடுகளை கூட எடுத்துக்கோங்க. சரி அப்படியே வச்சுக்கலாம், ஏன் பாகிஸ்தான் போய் விளையாடல?? போக வேண்டியது தான?? ஏன் இப்ப தென் ஆப்ரிக்கா போனீங்க?? உங்க உயிரு தான் உயிரா?? அப்பா மதவங்களுது என்ன .........??
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் : குறைந்தது ஒரு மாததுக்காவது இந்த Tension இருக்கும் அது வரைக்கும் எங்கு சென்றாலும் ஒரு ஐந்து பேர் குழுவாக செல்லவும், தற்காப்புக்காக Pepper Spray எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். பார், கிளப் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். "Don't be Offensive, be Defensive" இது தான் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய யுக்தி. நாம் ஒன்னும் அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கு தான் நம் தயவு தேவை நமக்கு இல்லை.
பொறுத்தார் பூமி ஆழ்வார்.
இதைப்பற்றி அதிக பதிவுகள் வராதது எனக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது!!!!!
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி அவர்களின் வெறியை அறிந்துகொள்ளவும்.
http://www.news.com.au/heraldsun/comments/0,22023,25565946-2862,00.html
நன்றி
சித்து.
Wednesday, May 13, 2009
முடிந்தது தேர்தல்

அப்பாடா ஒரு வழியா தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்தது, தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட வண்முறை வெறியாட்டம் குறைவாகவே இருந்தது. எங்கள் பகுதியில் அமைதியாகவே தேர்தல் நடந்தது, நான் மதியமே சென்று ஓட்டு போட்டு விட்டேன் பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. அடிக்கடி கருப்பு வெள்ளை சீருடையில் இரு கழகங்களின் குண்டர் படை வந்து தேர்தல் நடப்பதை பார்வையிட்டு சென்றுக் கொண்டிருந்தது. நான் ஓட்டு போட்ட சாவடியில் மூன்று பாகங்களின் வாக்காளர்கள் போடலாம் ஆனால் காவலுக்கு இருந்ததோ வெறும் இரண்டு சிரிப்பு போலீஸ் தான், இத்தனை கம்பெனி அத்தனை கம்பெனி துணை ராணுவம் வந்தது என்று செய்தியில் சொன்னார்களே அவர்கள் எங்கே? புல்லு புடுங்க போய்ட்டாங்களா?? நான் எதிர்பார்த்து போலவே மதியம் மேல் குத்துங்கம்மா ஓட்டு நம்ம நாக்க மூக்க சின்னத்துக்கு என்று ஆரம்பித்து விட்டனர், என் நண்பன் நான்கு மணிக்கு சென்றவன் இதைக் கண்டவுடன் ஓட்டு போடாமலே வந்து விட்டான்.
ஐஸ் ஹவுஸ் தொகுதியில் குப்பை தொட்டி தேர்தலில் நடப்பது போல வண்முறை வெறியாட்டம் அவிழ்த்து விடப் பட்டது, தொகுதியே போர்கோலம் பூண்டது. காவல் நிலையத்திலே வேட்பாளர் தாக்கப் படுகிறார் என்றால் கழக ஆட்சி எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டால் அது உதய சூரியனில் சிகப்பு விளக்கு எரிகிறது என்று அம்மையார் கூறுகிறார், எனக்கு என்னவோ நேற்றைய மின் வெட்டுக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக தான் தெரிகிறது. பொதுவாக மின் வெட்டு ஏற்பட்டாலும் ரயில் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கும் ஆனால் நேற்று அப்படி இல்லை அனைத்துமே இருளில் மூழ்கின. என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.

வட சென்னையில் சில இடங்களில் வோட்டுக்கு நூறு முதல் இருநூறு வரை வழங்கப்பட்டதாக கேள்வி, என்னை பொறுத்த வரையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தவறில்லை. அவர்கள் வாரி வழங்கும் பணத்தை தாராளமாக பெற்றுக் கொள்ளுங்கள் ஆனால் யாருக்கு நீங்கள் ஓட்டு போடுவது என்று முடிவு செய்தீர்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள். என்ன இருந்தாலும் நம் பணம் தானே, அவர்கள் நம் ஓட்டை பெற்றுக் கொண்டு நமக்கு துரோகம் செய்கிறார்கள் நாம் அவர்கள் குடுக்கும் பணத்தை பெற்று துரோகம் செய்வோம், எந்த தவறும் இல்லை.

மக்களின் மனநிலையை பார்க்கும் பொழுது ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை அதனால் இரு நாட்களுக்கு எந்த வேட்பாளருக்கும் தூக்கம் வரப் போவதில்லை (குறிப்பாக கை சின்னத்தவர்கள் நம்பிக்கை இல்லாமல் தான் இருப்பார்). திருமங்கலம் தொகுதியில் அஞ்சா நெஞ்சன் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மார்தட்டினார் அதே போல் நடந்தது (எப்படி என்று அனைவரும் அறிவர்) அதே போல் தி.மு.க முக்கிய வேட்பாளர்கள் சரி வர பிரச்சாரம் கூட செய்யாமல் மிகவும் தைரியமாக பேட்டி அளிக்கின்றனர் அதை நினைக்கும் பொழுது இங்கேயும் பல உள்ளடி வேலைகள் நடந்திருக்குமோ???
ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த நம்ம Gaptain அவர்களை பேட்டி கண்டால் அனைவரையும் போல் நாற்பதும் நமதே என்றார், சரி எப்படி இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர் என்றால் "மற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்களோ அதே போல் தான் நானும் சொல்கிறேன் அஹ்ங்க்க்!!!!!!!!" என்று கூறுகிறார். என்ன கொடுமை இது??? நான் அவர்கள் போல் இல்லை எனக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்து பாருங்கள், உணவகத்துக்குள் சென்று பார்த்தல் தான் தெரியும் அதன் சுவை சும்மா வெளியில் பார்த்துவிட்டு சென்றால் தெரியாது என்று மொக்கையாக பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது தான் அதே குட்டையில் ஊறிய மட்டை என்பதை நிரூபிக்கிறார். பார்ப்போம் இவர் பெரும் வாக்குகளை.
அடுத்ததாக நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல என்ற ரேஞ்சுக்கு ஒருவர் பலரை இம்சை செய்து வருகிறார், அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார் தான் "சும்மா ஆ ஊ நா ஆண்டவன் சொன்னா நிச்சயம் அரசியலுக்கு வருவேன் வெங்காயம் நறுக்குவேன் புல்லு புடுங்குவேன்" என்று பாவம் அவரது அதி தீவிர ரசிகர்களை இம்சிக்கிறார், சரி அவரும் தான் என்ன பண்ணுவாரு குசெலனிலேயே அவர் தெளிவா சொல்லிட்டாரு ஆனாலும் சும்மா தொந்தரவு தந்தா ஏதாவது ஒரு bitta போடவேண்டியது தான் என்று அடிச்சு விடறாரு.
சரி இவ்வளவு நேரம் மொக்க போட்டுட்டு ஏதாவது கிச்சு கிச்சு மூட்டலனா உங்ககிட்ட யாரு தர்ம அடி வாங்கறது? சங்கதி இதுதாங்க இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் டாக்டர் நடிகர் கட்சி ஆரம்பிக்க போறதா கோடம்பாக்கத்து பட்சி ஒன்னு சொல்லுச்சு, நிறைய பதிவர்கள் இத பத்தி ஏற்கனவே எழுதி இருக்காங்க அதனால அந்த செய்து உண்மையாவே நடக்கனும்னு நாம பிரார்த்திப்போம். இவரோட இம்சை தாங்க முடியல.
சரிபா நான் கெளம்புறேன் காத்து வரட்டும், யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்க அப்புறம் அழுதுடுவேன்.
Tuesday, May 12, 2009
செல்லிடப் பேசியும் செல்லாத பேச்சுக்களும்.........

சென்ற செவ்வாய் KVB வங்கி சென்று ஒரு பத்து ருபாய் அதாங்க பத்தாயிரம் ஒரு கணக்கில் Deposit செய்வதற்கு சென்றேன். வெளியில் வெயில் மண்டைய பொலந்துடுக்சு உள்ள போனால் ஒரு ஐம்பது பேர் வரிசையில் நிற்கின்றனர், AC வேலை செய்தும் பயன் இல்லை, ஒரே வியர்வை வாடை வேறு. வரிசையோ ஆமை வேகத்தில் நகர்கிறது. அப்பொழுது ஒரு 40-45 மதிக்கத்தக்க பெண் உள்ளே நுழைந்தார், வரும் பொழுதே செல் போனில் சத்தமாக பேசியவாறே. பிறகு சலான் நிரப்பும் பொழுது கழுத்தை சாய்த்தவாறே பேசிக்கொண்டே இருந்தார்.
வந்து என் பின்னால் நின்று கொண்டார். முதலில் யாரோ ஒரு உறவினரை அக்கு வேறாக ஆணி வேறாக கிழித்து தொங்க விட்டார் "அதெப்படி அந்த ஆளு அப்படி பண்ணலாம்?? பெறகு எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வராரு??" இப்படியாக பேசினார். பிறகு "பேங்க் வந்திருக்கேன், அவரு போய் பத்தாயிரம் பணம் கட்ட சொன்னாரு" இப்படியே பேசிக் கொண்டிருந்தார், வரிசையில் நின்று கொண்டிருந்த பெரும்பாலானோர் இவரின் கச்சேரியை கேட்டவாறே நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் இதெல்லாம் விட அடுத்து சொன்னாரு பாருங்க "சீ நான் காலைலயே குளிச்சுட்டேன் பா, ஆமா நீல கலர் புடவை தான் கட்டிருக்கேன் அதான் பா அன்னிக்கு பாத்தியே அதே தான்!!!!!!!!" இதை பேசும் பொழுது அனேகமாக வங்கியில் இருந்த அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர், உற்சாகத்தில் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார், அனைவரும் தன்னையே பார்க்கின்றனர் என்பதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பொது இடங்களில் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியாமல் இப்படியா பேசுவது?? யாரவது சில்மிஷ ஆசாமி இவர் பேச்சை வைத்து ஏதாவது Comment அடித்தால் அனாவசிய மனக்கஷ்டங்களும் பிரச்சனைகளும் தான் ஏற்படும்.

இப்படி தான் திரை அரங்குகளில் சிலர் பண்ணும் அலம்பல்கள் தாங்க முடியாது, அவனவன் சோக காட்சியில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பான் ஆனால் சிலரோ அங்கேயே முழு மூச்சாக கடலை போட்டு கொண்டிருக்கின்றனர் "அப்படியா பப்பி குட்டி போட்ருக்கா?? வாவ்" இப்படி தொடங்கி இன்னும் என்னனமோ பேசுறானுங்க.
அன்று ஒரு நாள் ஒரு கலந்தாய்வின் பொழுது ஒருவரின் செல் போன் சிணுங்குது "கிட்ட நெறிங்கி வாடி கர்லா கட்ட உடம்பு காரி........" எந்த இடத்தில் செல் பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வெவஸ்தையே கிடையாதா?? இப்படி தான் சமீபத்தில் கூட நடந்த ஒரு கூட்டத்தில் இயக்குனர் இமயம் ஈழத் தமிழர்களுக்காக பேசுகையில் இதே போன்று தான் நடந்துள்ளது அதை இன்று (12/05/2009) தினமலர் பார்க்கவும்.

இந்த செல் போன் வந்தாலும் வந்தது அவனவன் பித்து பிடித்து போல் தனியே பேசுவதும், தலையாட்டுவதும் வாகனம் ஓட்டும் பொழுது கழுதை சாய்த்து கொண்டு பேசுவதும், தலைக் கவசத்துக்குள் சொருகிக் கொண்டு பேசுவதும் இன்னும் என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டுகின்றனர். முதலில் உங்கள் பாதுகாப்பை பார்க்கவும் அடுத்தது சுற்றம் பார்த்து பேசவும்.
சரி நண்பர்களே உங்களுடைய இது போன்ற அனுபவங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி.
Friday, May 8, 2009
நியூட்டனின் 3ஆம் சதி ஸாரி விதி
எனக்கு மொதல்ல இந்த படம் பாக்கனும்னே தோணல.....சில சதியால்
நான் நியூட்டனின் 3ஆம் விதியை வெள்ளிதிரையில் காண நேர்ந்தது. காலத்தின் கட்டாயம். கால கொடுமைன்னு கூட சொல்லலாம்.

சதிகள்:
1) மே 5 வழக்கம் போல் எனக்கு லீவ், சரி படத்துக்கு போலாம்னு யோசிச்சப்ப நான் இன்னும் பாக்காத படம் GAP10'S மரியாதை படம் மட்டும் தான் . மரியாதை படம் பாக்கறதுக்கு வீட்ல DVDல எதாவது இங்கிலீஷ் படம் பாக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த நேரம் பாத்து
திடிர்னு திடிர்னு hang ஆயி என் கம்ப்யூட்டர் சதி பண்ணிடிச்சு.
2) அப்புறம் எப்படியோ முயற்சி பண்ணி பெரிய தலை al pacino நடிச்ச 88 MINUTES படத்தை ஒரு 45 MINUTES படம் ஓடிட்டு இருக்கும் போதே நம்ம கரண்ட் சதி பண்ணிடிச்சு. பொசுக்குன்னு போச்சு, நானும் வரும் வரும்னு பார்த்தேன் வரலே.
3) சரி நாம 1 மணி ஆட்டத்துக்கு எதாவது இங்கிலீஷ் படம் போவலாம்னு ஒரு முடிவு எடுத்தேன், அதுக்குள்ள பல் டாக்டர் போன் பண்ணி 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரி 12 மணிக்கு தானே போயிட்டு ஒரு பத்து நிமிஷ வேலை முடிச்சிட்டு அப்படியே படத்துக்கு போலாம்ன்னு நினைச்சி போன எனக்கு முன்னாடி கிளினிக்ல மூணு பேர் ஆஹா டாக்டரும் சதி பண்ணிட்டாரேன்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடிச்சி.
4) கிளினிக் விட்டு வீட்டுக்கு வரும் போது மணி 1 , இனிமே எங்கே படத்துக்கு போறதுன்னு ப்ளாக் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ சில ப்ளாக்ல நியூட்டனின் விதி நல்லா இருக்குன்னு சொன்னாங்க அத நம்பி 3.20 ஷோ சாந்தம்ல படம் பாக்க நானும் என் நண்பனும் போனோம்.
*********************************
சத்யம் திரைஅரங்கின் வெளிய நடந்த உரையாடல்:
நான்: டேய் இவன் படத்துக்கெல்லாம் 100 ரூபாய் டிக்கெட் அதிகம்டா.?
நண்பன்: வேற எங்க போறது, 10 ரூபாய் டிக்கெட் வாங்குவோமா?
(அங்கே போய் பார்த்தால் 10 ரூபாய் டிக்கெட் ஹவுஸ் புல்)
*************************************
வேற வழியில்லாமல் 100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே அமர்ந்து படத்தை ரசித்தோம். சும்மா சொல்ல கூடாது சாந்தம்ல அவ்ளோ காலிய நான் இது வரைக்கும் எந்த படத்தையும் பார்த்ததில்லை. எங்க ROWல நானும் என் நண்பனும் மட்டும் தான் உட்கார்ந்து இருந்தோம். வழக்கம் போல தள்ளிட்டு வரவங்களுக்கு இந்த படம் ஒரு வரபிரசாதம்(அரை மணி நேரம் பின்னாடி வந்து அரை மணி நேரம் முன்னாடி போறவங்களுக்கு).
படத்தை பத்தி சொல்லனும்னா, அதான் எல்லோரும் சொல்லிட்டங்கலே நல்ல திரைக்கதை, வசனம்,பின்னணி இசை... இந்த மாதிரி படத்தை பாக்கும்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டுக்கள் கண்டிப்பாதேவையான்னு ஒரு கேள்வி எனுக்குள் எழுந்து அமுங்கிடிச்சு . படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரைஅரங்கில் ஒரே சிரிப்பு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கேவலமா கத்துறாங்க. திரைஅரங்கில் சில பேர் தங்கள் நண்பர்களை திட்டி கொண்டு இருந்தார்கள் ஏன்டா சும்மா இருந்தவனை
இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்திங்கன்னு. ஆனால் இயக்குனர் தாய் முத்துசெல்வனை பாராட்டியே ஆக வேண்டும், அவர் திரைகதையில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் பாட்டிலும், ஹீரோ தேர்விலும் செலுத்தி இருக்கலாம்.
Monday, April 27, 2009
தமிழ்நாட்டின் ஒ(சா)பாமா J.K.ரித்தீஸ்
வாக்குறுதி:
எங்கள் அண்ணன் வீரத்தளபதி எம்.பி ஆனால் வீட்டுக்கு ஒரு 2 wheeler மற்றும் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் வழங்கப்படும்.
பொதுஜனம்: ஹ்ம்ம் இல்ல பத்தாது...வீட்டுக்கு ஒரு டிராக்டர் வேணும்.
____________________________________________________________
வாக்குறுதி:
எங்கள் அண்ணன் அள்ளித்தரும் கண்ணன் ரித்தீஸ் அவர்களை டெல்லிக்கு அனுப்பினால் ஒரு ஆளுக்கு 2500 வழங்கப்படும்.
பொதுஜனம்: அய்ய் அஸ்கு மதுரையுல ஒருத்தர்க்கு 5000 தராங்களாம்.
____________________________________________________________
வாக்குறுதி:
வாழும் வள்ளல் பாரியின் வழி வந்த J.K.ரித்தீஸ் அவர்கள் வெற்றி பெற்றால் அனைவருக்கும் தினமும் பிரியாணியும் சரக்கும் தரப்படும்.
பொதுஜனம்: அவ்ளோதான இது பத்தாது..இன்னும் வேணும்.
_____________________________________________________________

வாக்குறுதி:
எங்கள் அண்ணனை நீங்கள் வெற்றி பெற செய்யா விட்டால் நம் ஊரில் உள்ள கேபிள் டி.வியில் தமிழ்நாட்டின் அர்னோல்ட் ரித்தீஸ் அவர்களின் படம் தொடர்ந்து ஒளிபரப்ப படும்.
பொதுஜனம்: அய்யோஅய்யோ...நாங்கெல்லாம் அவருக்கே ஒட்டு போட்டுர்ரோம்...எங்களுக்கு ஒண்ணும் வேணாம், அவரு படத்தல மட்டும் நடிக்காம இருக்க சொல்லுங்க.!
இந்த இடுகை வெறும் கற்பனை மட்டுமே... சிரியிங்கள் முடிந்தால் சிந்தியிங்கள்
மறக்காம TAMILISHil வாக்கு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
Thursday, April 23, 2009
கடையடைப்பு வடசென்னை நிலவரம்.
ஆனால் ஒரு சந்தேகம் முழு கடையடைப்பு என்றால் ஏன் TASMAC கடைகள் மூடப்படவில்லை?? உணவகம் கூட திறக்கவில்லை ஆனால் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இது ஏன் திறந்திருக்கணும்?? ஒரு வேலை கலைஞர் ஆட்சியில் மது அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டதோ?? அல்லது ஈழத் தமிழர்கள் படும் துயரத்தை மறப்பதற்காக அனைவரும் உணவு அருந்தாமல் சரக்கு அடிங்கடா முட்டாள் தமிழர்களே என்று கூறுகிறாரோ?? எனக்கு இந்த பகுத்தறிவு இல்ல பாருங்க அதனால தான் புரியல, யாராவது பகுத்தறிவாளர்கள் இதைப் பற்றி விளக்கினால் மகிழ்ச்சி.
சன் டிவியில் இன்று காலை பத்து மணிக்கே திருடா திருடி போட்டதாக கேள்விப்பட்டேன், அலுவலகத்தில் இருப்பதால் மத்த சேனல்கள் பற்றி சரிவர தகவல் இல்லை, ஆனால் கண்டிப்பாக சிறப்பு திரைப்படம் போட்டிருப்பார்கள். ஏன் இதற்கு விலக்கு?? உங்களுக்கு பொழுது போகலைனா கடையடைப்பா??
இன்னும் எத்தனை முறை தான் தந்தி அடிப்பாரோ (ஆனால் இந்த விஷயத்தில் தலைவர் அடித்த அந்தர் பல்டிகளை விட தந்திகள் குறைவு தான் என்று நினைகிறேன்) இவர் இப்படி செய்வதை விட திரு.பாஸ்கரன் சுப்ரமணியன் அவர்கள் தன் பதிவில் (http://bashkaran.blogspot.com/2009/04/2.html) கூறியது போல செய்யலாம் இப்பொழுது வருவது போல் விரக்தியும் எரிச்சலும் கோபமும் வராமல் நமக்கு சிரிப்பாவது வரும் .




என்ன கொடும கலைஞர் இது????????
குடிதண்ணீரில் ஒரு பன்னியின் ஆட்டம்
சென்னை மாநகராட்சி நம்மை குழாய் தண்ணீரையும் லாரி தண்ணீரையும் நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி பிரச்சாரம் செய்கிறது, ஆனால் கீழே உள்ள படத்தில் லாரியில் தண்ணீர் நிரப்பும் இந்த ஊழியர் செய்யும் அட்டூழியங்களை பாருங்களேன். இதற்கு பின் இந்தத் தண்ணீரை எப்படி குடிப்பது?? தனக்கு வேண்டும் என்றபொழுது மட்டும் மிகுந்த அக்கறையுடன் பிடித்துக் கொல்கிறது பாருங்கள் இந்த ஐந்து அறிவு ஜீவன். ஒரு நொடி கூட தோணாதா இவர்களுக்கு, தனக்கோ அல்லது தன் குழந்தைக்கோ இப்படிப் பட்ட தண்ணீர் யாராவது தந்தாள் எவ்வளவு கோபம் வருமென்று??

இடம்: வியசார்பாடி நீரேற்று நிலையம்
படங்கள்:லோகநாதன்
நன்றி:தினகரன் 18-04-2009
Wednesday, April 22, 2009
பள்ளிகளில் பரவி வரும் லஞ்சம்.
திருநங்கைகளா அல்லது முர(திரு)ட்டு நங்கைகளா ??????????????????????
இயற்கை என்னும் படைப்பாளி செய்யும் சில தவறுகளால் உலகில் எத்தனை பிரச்சனைகள் எத்தனை தொல்லைகள் எந்தனை துன்பங்கள். எத்தனை கண்ணீர்கள் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை அனுதாபங்கள் எத்தனை எகத்தாளங்கள்??? யார் செய்த பிழைக்கு யாருக்கு தண்டனை?? பிறவியிலேயே ஆணாக பிறந்து பருவ மாற்றங்களால், சுரபிகளின் மாற்றங்களால் ஒருவர் தன்னையே பெண்ணாக பாவித்து கொண்டு பிறகு பெண்ணாகவே மாறுவதும் பிறகு அவர்கள் இந்த சமூகத்தில் படும் அவலங்களும் எத்தனை?? ஆனால் இதெல்லாம் அந்த காலம், நான் கூட இவர்களை பார்த்து பரிதாபமும் அனுதாபமும் கொண்டதுண்டு,. தனக்கு வந்தால் தான் தெரியும் வாந்தியும் ............ என்று கூறக்கேட்டதுண்டு அதை நேற்று தான் அனுபவித்தேன். இவர்கள் மேல் நான் கொண்ட ஒரு வித அனுதாபம் இரு சம்பவங்களால் தொலைந்தது. இவர்களிடத்தில் அனுதாபம் கொள்ளத் தேவையில்லை, ஒன்று நம்மால் முடிந்தால் அவர்களுக்கு வேலை வழங்கலாம் அல்லது அவர்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் தலை தெறிக்க ஓட வேண்டும்.காலம் இன்று எவ்வளவோ மாறி விட்டது, இன்று இவர்களைப் போன்றுள்ளவர்களுக்கு மருத்துவ வசதிகள், வேலை வாய்ப்பு வழங்க பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் முன் வருகின்றனர். ஆனால் இவ்வழியே நல்வழியே செல்ல விரும்பாத ஒரு பிரிவினர் செய்யும், செய்த அட்டூழியங்களை எனக்கு நேர்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கடந்த பொங்கல் விடுமுறையில் நண்பர்களுடன் மும்பை செல்லும் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தோம் அப்பொழுது இரண்டு பேர் வந்தனர், அதில் ஒருவர் நேராக எங்கள் நடுவில் வந்து இடித்து கொண்டு மேலும் சில அனாவசிய Censor பிரச்சனைக்குரிய வார்த்தைகளும் செயல்களும் அங்கே அவர்களால் அரங்கேற்றப்பட்டது. இத்தனைக்கும் அவர்கள் வந்து நின்றவுடனேயே இருபது ரூபாய் குடுத்து விட்டோம் பத்தவில்லையாம் எட்டு பேர் சென்றோம் ஆளுக்கு இருபது கொடுக்கணுமாம். இதைப் போல் அன்று மட்டும் சுமார் பத்துக் குழுக்கள் வந்தன (இரண்டு நபர் மட்டும் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வாழ்த்திச் சென்றனர்). இதில் எல்லை தகராறு வேறு. நாங்கள் அந்த பயணத்தின் பொழுது மட்டும் (சென்று வருவது சேர்த்து) செலவு செய்தது ஐநூறு ரூபாய்க்கு மேல்.அடுத்தது நேற்று நடந்த மிகவும் கேவலமான சம்பவம். நாங்கள் எங்களது அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இரு நபர் நேரே உள்ளே வந்து விட்டனர், உற்சாக பானம் (அதாங்க சரக்கு) மிகுதியில் தட்டு தடுமாறி வார்த்தை குழறி அதிரடியாக நின்றனர். என்னவென்று கேட்டதற்கு ரூபா குடு என்றனர், பொதுவாக இவர்களுக்கு ஒரு ருபாய் தான் கொடுப்பார் அதுவும் கையில் கொடுக்க மாட்டார் மேஜையில் அந்த நாணயத்தை தட்டி விட்டு வைத்து விடுவர். ஆனால் நான் அவர்கள் கையில் ஐந்து ருபாய் கொடுத்தேன். அவ்வளவு தான் "என்ன இது?? ஒழுங்கா 101 ருபாய் குடு பாவப்பட்டவங்க நாங்க", நல்ல குடிக்க பணம் இருக்கு இவர்கள் பாவப் பட்டவர்களா?? பிறகு சேலை முந்தானைய வேற நீக்குகிறார்கள், பணம் கொடுத்த தான் போவேன் பாத்துக்கோன்னு மிரட்டல் வேறு. "பொட்டைங்க கிட்ட சாபம் வாங்காதடா ......" என்று வசைமாரி பொழிந்தார்கள். பிறகு எனக்கும் கோபம் வந்து நானும் எகிற ஆரம்பித்தேன் பிறகு சற்று அமைதி ஆகினர். பிறகு பத்து வாங்கிக் கொண்டு இன்னும் சில சாபங்களை பொழிந்து விட்டு சென்றனர். எங்கள் ஊழியர்கள் யாரும் அருகில் கூட வரவில்லை, கேட்டால் இவர்கள் சாபம் விட்டால் அவ்வளவு தானாம். இந்த ஒழுக்கம் கெட்ட மதுவில் மூழ்கிய இவர் கொடுக்கும் சாபம் என்ன செய்யப் போகிறது?? எதற்கு இவர்களுக்கு நாம் இந்த பத்து ருபாய் குடுக்க வேண்டும்?? எதற்கு இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்??
Friday, April 17, 2009
தொலைக்காட்சி பெட்டியும் குடும்ப உறவுகளும்.


நானும் சினிமாவும் மற்றும் மொக்கை படங்களும்

என்னோட சில நண்பர்களிடம் அருந்ததி படம் பார்த்ததாக கூறினேன் நண்பர்களில் பாதி பேர் "ஏன்டா அந்த படத்துக்கு போன" என்று என்னை எதிர் கேள்வி கேட்டார்கள் "நீ இன்னும் படத்துக்கு போறதா உடலையானு" கேட்டாங்க. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நாம டைம்பாஸ்க்கு படத்துக்கு போறோம் எதுக்கு அதை போய் அவர்களிடம் சொல்லி ,ஒரு வேலை நம்ம ஊருல ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படம் மட்டும் தான் பார்க்கணும் போலன்னு நினைத்தேன். அருந்ததி படம் ஓரளவுக்கு சில காட்சிகள் மொக்கையாக இருந்தது தான் ஒத்துக்குறேன் ஆனா அந்த மாதிரி ஒரு படம் தமிழில் வந்ததில்லை அதை டப் செய்து தமிழுக்கு வரும் பொது அதை பார்ப்பதில் தவறு ஏதுமில்லை.
நான் பி.சி.ஏ. படிக்கும் பொது நேரிய மொக்க படம் பார்த்து இருக்கேன் அதை எல்லாம் வெளிய சொன்ன ரொம்ப கேவலமா இருக்கும். சில படங்கள் பாட்டுகாக சில படங்கள் கேமராகாக சில படங்கள் நடிகர்களுக்காக ஆனால் எனக்கு மிஞ்சியது ஏமாற்றம். "சூரி"நு ஒரு படம் விக்னேஷ்,பார்த்திபன் நடிச்சது டைரக்டர் வந்து ஷங்கர் உதவியாளர், அப்புறம் படத்துல ஒரு பெண்களுக்கு எதிர ஒரு பாட்டு. கண்டிப்பா இந்த படம் பாக்கனும்னு நான் முடிவு பண்ணினேன், வூட்லண்ட்ஸ் திரைஅரங்கில் படம் ரிலீஸ் ரிசர்வ் செய்தோமா என்று நினைவில் இல்லை. இதெல்ல வேற என் நண்பர்கள் சிலர் மருகம்மால் படத்துக்கு வந்தனர் படம் பாத்து நொந்தனர். சூரி மாதிரி பல படங்களை நான் நம்பி பாத்துஉள்ளேன். சரி நான் பார்ப்பது இந்த மாதிரி மொக்கை படம் மட்டும் தான? இல்லை நானும் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை முதல் நாள் பார்ப்பேன். ஏன் ரஜினி கமல் விஜய் அஜித்(ஐயோ) போன்றவர்கள் மொக்கை படத்தை நமக்கு தந்தது இல்லையா? பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் , குசேலன், குருவி, வில்லு. அஜித் படத்த பத்தி சொல்லவே வேணாம். ஆனா இப்பவும் நல்ல தரமான படங்கள் வந்து கொண்டு இருக்கிறது வெண்ணிலா கபடி, பொம்மலாட்டம்(இது நேரடி படமாக இருந்தால் கண்டிப்பாக ஓடி இருக்கும்), யாவரும் நலம், நான் கடவுள் போன்று நேரிய படங்கள் வருகின்றன.
எதுக்காக இதெல்லாம் சொல்லி நான் மொக்கை போட்றன்னு நீங்க கேக்கலாம். நான் முடிஞ்ச வரைக்கும் படம் ரிலீஸ் ஆனா ஒரு வாரத்துக்குள் பார்த்து விடுவேன் ஏன் என்றால் படம் பார்ப்பது எனக்கு பிடிக்கும் அதுக்குன்னு மொக்கைநு தெரிஞ்ச நான் போகமாட்டேன். எப்படி அடுத்தவர்கள் கிரிக்கெட் மேட்ச் தொலைகாட்சியில் கண்டு ரசிபார்கோல அது போல் நான் சினிமாவை பார்த்து ரசிக்கிறேன். நான் சினிமா பார்ப்பதை குறை கூறுபவர்களுக்கு (நண்பர்கள், என் வீட்டில் உள்ளவர்கள் ) ஒன்றை மட்டும் சொல்ல ஆசை படுகிறேன் " சினிமா என் முக்கியமான பொழுதுபோக்கு, நான் சினிமா பார்பதனால் யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லை. மொக்கை படம் பார்க்கிறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன் தப்பு".




