தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்து சந்தித்தோம்......
- அள்ளி தந்த வானம்.
புயல் பேர் காரணம் ஒரு சிறு ஆராய்ச்சி:
நிறைய பேருக்கு ஏன் புயலுக்கு லைலானு பேரு வச்சாங்கன்னு ஒரு டவுட் இருக்கு.அது சிம்பிள் மேட்டர். லைலா நடிச்ச படம் பேரு அள்ளி தந்த வானம். இப்ப நமக்கு வானம் மழையை அள்ளி தருது....இது தான் காரணம்...
நேத்து உருவான புயலுக்கு எங்கள் சிரிப்பழகி மற்றும் கன்னகுழி தேவதை லைலாவின் பெயரை புயலுக்கு சூட்டியதற்கு அகில உலக லைலா முன்னேற்ற சங்கம் சார்பில் வானிலை மையத்துக்கு எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நாட்டு மக்கள் நலம் காண மேலும் பல அமலா, மதுபாலா, நிலா ,ஷகீலா புயல்கள் தொடர்ந்து வர வேண்டும் என்று எல்லாம் வல்ல முருகனை வேண்டிகொண்டு என் சிறிய பயண குறிப்பு உங்கள் பார்வைக்கு...
*************************************
கடந்த வெள்ளிக்கிழமை மறுபடியும் ரெண்டு வார இடைவெளிக்கு
பின் மீண்டும் திருப்போரூர் கோவிலுக்கு செல்ல நானும் நண்பனும்
முடிவெடுத்தோம்.அடிக்கிற வெயிலுக்கு பயந்து அதிகாலை ஐந்து
மணிக்கே கிளம்ப முடிவு செய்தோம்.வெயிலுக்கு மட்டும் அல்ல அதிகாலை பயணம் என்பதே ஒரு சுகம் தான். சரியாக 5.20 க்கு நண்பனை நீலாங்கரையில் உள்ள அவனது வீட்டில் பிக்அப் செய்து கொண்டு ஈ.சி.ஆரில் பறந்தோம்.கடந்த ரெண்டு தடவை போகும் போதும் சோழிங்கநல்லூர் ரைட் கட்டிங் எடுத்தோம்..போர் அடித்து விட்டது அதனால் இந்த தடவை கோவளம் ரைட் கட்டிங் எடுப்போம் என்று வண்டியை நேராக விரட்டினேன்.
பின் மீண்டும் திருப்போரூர் கோவிலுக்கு செல்ல நானும் நண்பனும்
முடிவெடுத்தோம்.அடிக்கிற வெயிலுக்கு பயந்து அதிகாலை ஐந்து
மணிக்கே கிளம்ப முடிவு செய்தோம்.வெயிலுக்கு மட்டும் அல்ல அதிகாலை பயணம் என்பதே ஒரு சுகம் தான். சரியாக 5.20 க்கு நண்பனை நீலாங்கரையில் உள்ள அவனது வீட்டில் பிக்அப் செய்து கொண்டு ஈ.சி.ஆரில் பறந்தோம்.கடந்த ரெண்டு தடவை போகும் போதும் சோழிங்கநல்லூர் ரைட் கட்டிங் எடுத்தோம்..போர் அடித்து விட்டது அதனால் இந்த தடவை கோவளம் ரைட் கட்டிங் எடுப்போம் என்று வண்டியை நேராக விரட்டினேன்.
முட்டுக்காடு படகு குழாம்,அந்த காலைவேளையில் அருமையாக
இருந்தது.வாத்துகளும்,மீன் பிடிக்க சின்ன கட்டுமரத்தில் மீனவர்களும் என்று இயற்கை காட்சிகள் சூப்பர். ஒரு பறவை ஒன்று வண்டி ஓட்டும் போது கிராஸ் செய்ஞ்சு போச்சு பாருங்க....செம...
இருந்தது.வாத்துகளும்,மீன் பிடிக்க சின்ன கட்டுமரத்தில் மீனவர்களும் என்று இயற்கை காட்சிகள் சூப்பர். ஒரு பறவை ஒன்று வண்டி ஓட்டும் போது கிராஸ் செய்ஞ்சு போச்சு பாருங்க....செம...
கோவளத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் ரோடை பிடித்தோம். அங்கே குட்டை மீன்களை சிலர் விற்பனைக்கு ரோட்டில் போட்டு இருந்தனர். மீன்கள் மற்றும் நண்டுகள் உயிரோடு இருந்தன. கோவிலுக்கு போவதால் நாங்கள் வாங்கவில்லை. கோவளம் கேளம்பாக்கம் ரோடு கொஞ்சம் ஆபத்தான வளைவுகள் கொண்டது என்பதை போக போக புரிந்து கொண்டேன்.
கடந்த வெள்ளியோடு நான் திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு இதுவரை மூன்று தடவை சென்று வந்திருக்கிறேன்.முதல் ரெண்டு வெள்ளியில் கோவிலில் விக்ரம் நடித்த கந்தசாமி படம் ஒரு வாரம் கழித்து தியேட்டர் எப்படி இருந்ததோ அப்படி இருந்தது....அதாவது காலியா...ப்ரீயா இருந்ததுனு சொல்ல வந்தேன்.ஆனா இந்த தடவை போகும் போது முதல் நாள் கந்தசாமி படம் மாதிரி செம கூட்டம்... விசாரித்த பின்பு தான் தெரிந்தது கார்த்திகை விரதம் என்று...!
திருப்போரூர் கோவிலுக்கு நான் மூணு விசயத்துக்காக போறேங்க..
ஒண்ணு, அதிகாலை பயணம். ரெண்டு, அந்த கோவில் குளத்தில்
உள்ள மீன்களுக்கு பொறி இதர வகைகளை அளிக்க. மூன்று,
முருகனை தரிசிக்க. அது ஏன்னு தெரியலங்க திருவான்மியூர்,
மயிலாப்பூர் குளத்தை சுத்தி வேலி போட்டு சாதாரண மக்கள்
உபயோகிக்க வழி இல்லாம பண்ணீட்டாங்க....போன மாதம்
ஒரு தடவை மயிலாப்பூர் குளத்துக்கு சென்று மீனுக்கு பொறி
போடலாம் என்று போனேன்.... அங்கே இருந்த வாட்ச்மன் ஓவர்ஆ
அதெல்லாம் போடகூடாது கூச்சல் போட ஆரம்பித்தான்....
ஆனா நான் பொறி பாக்கெட் காலி பண்ணிட்டு தான் போனேன்...
மயிலாப்பூர் மீன் ஒண்ணு ஒண்ணும் ஆறு கிலோ இருக்கும்
போல எப்பா....பார்க்கவே பயங்கரமா இருந்தது..!!
ஒண்ணு, அதிகாலை பயணம். ரெண்டு, அந்த கோவில் குளத்தில்
உள்ள மீன்களுக்கு பொறி இதர வகைகளை அளிக்க. மூன்று,
முருகனை தரிசிக்க. அது ஏன்னு தெரியலங்க திருவான்மியூர்,
மயிலாப்பூர் குளத்தை சுத்தி வேலி போட்டு சாதாரண மக்கள்
உபயோகிக்க வழி இல்லாம பண்ணீட்டாங்க....போன மாதம்
ஒரு தடவை மயிலாப்பூர் குளத்துக்கு சென்று மீனுக்கு பொறி
போடலாம் என்று போனேன்.... அங்கே இருந்த வாட்ச்மன் ஓவர்ஆ
அதெல்லாம் போடகூடாது கூச்சல் போட ஆரம்பித்தான்....
ஆனா நான் பொறி பாக்கெட் காலி பண்ணிட்டு தான் போனேன்...
மயிலாப்பூர் மீன் ஒண்ணு ஒண்ணும் ஆறு கிலோ இருக்கும்
போல எப்பா....பார்க்கவே பயங்கரமா இருந்தது..!!
திருப்போரூர் கோவிலில் பயங்கர கூட்டம்...சிறப்பு தரிசனமே நிரம்பி வழிந்தது.அப்புறம் இந்த தடவை தான் புளியோதரை வித்துக்கிட்டு இருந்தாங்க...அஞ்சு ரூபாய்...சூப்பர்ஆ இருந்தது. அது என்னமோ தெரியலை கோவில் புளியோதரை டேஸ்டே தனிதாங்க....!!
நாவலூர் சைட் வரும் போது NRK னு ஒரு கொட்டாய் தியேட்டர்
பார்த்தேன். அங்கே ஒரு படம் பார்க்க வேண்டும் என்று ஆவல்
தூண்டுகிறது.... காரணம் இதுவரைக்கும் நான் எந்த கொட்டாய்
தியேட்டருக்கும் போனதில்லைங்க(டேய்..அதான் வாரம் வாரம்
தியாகராஜா தியேட்டருக்கு போறியேடா!) சரி சரி ப்ரீயா விடுங்க...
நான் பள்ளியில் படிக்கும் போது திருமலை கொட்டாய் என்று
கொட்டிவாக்கத்தில் இருந்தது. எந்நேரமும் அட்டு படம் தான்
போடுவாங்க(முருகா..!!) அதனால அங்கே போறதுக்கு வாய்ப்பு கிடைக்கில!!(நம்பணும்).ஆனா இங்க நல்ல படங்கள் போடுறாங்க ஒரு நாள் போய் பார்க்க வேண்டும்!! வித்தியாசமான அனுபவமா இருக்கும்....
அப்புறம் என்ன ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில்
பொங்கல் வடையுடன் முடித்து வீடு வந்து சேர்ந்தோம். நீங்களும்
ஒரு நாள் அதிகாலை வேளையில் திருப்போரூர் போய் ட்ரை
பண்ணி பாருங்க.....முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்..!!
ஜெட்லி...
39 comments:
நல்ல பயணக் கட்டுரை. அதிகாலைப் பயணம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்போல்லாம் அதுக்கு வாய்ப்பே இல்ல.
மதுபாலா, நிலாவா?....ஸ்ஸ்ஸ்ஸ்....முருகா நீதாம்பா காப்பாத்தணும்!
அப்புறம் பொங்கல், வடை எப்படியிருந்ததுன்னு சொல்லவேயில்லியே?..:(
அதிகாலை பயணமே ஒரு அலாதி. பயண கட்டுரையும் படங்களும் அருமை.
ரஞ்சிதா புயல் வருமா..?
//நேத்து உருவான புயலுக்கு எங்கள் சிரிப்பழகி மற்றும் கன்னகுழி தேவதை லைலாவின் பெயரை புயலுக்கு சூட்டியதற்கு அகில உலக லைலா முன்னேற்ற சங்கம் சார்பில் வானிலை மையத்துக்கு எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.//
லைலா ரசிகர் மன்றமா. அப்பா நீங்க கேபிள் அண்ணா மாதிரி யூத் இல்லியா?
தம்ப்ப்பி கல்யாணம் ஆகணும்னு கோயிலுக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறியா? ரைட்டு ..
அங்கே போனப்ப கூட தியட்டரை விடலை பாரு.. அங்க நிக்குரார்ப்பா ஜெட்லி
@விக்னேஷ்வரி
நன்றி.....
@ரகு
பொங்கல் வடை சுமார் தான் பாஸ்....
அதான் ஒண்ணும் சொல்லல...
@ butterfly Surya
ரஞ்சிதா புயல் தான் ஏற்கனவே வந்துட்டு போய்டுச்சே தலைவரே...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நாங்க அஞ்சாவது படிக்கும் போதே லைலா படத்தை பாக்கெட்டில்
வைச்சுட்டு திரிஞ்சவங்க பாஸ்.......
@ மோகன் குமார்
வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...நடத்துங்க...
//நாவலூர் சைட் வரும் போது NRK னு ஒரு கொட்டாய் தியேட்டர்
பார்த்தேன்//
ஸ்ஸ்ஸ்ஸ்........... அங்கேயுமா??
//நாங்க அஞ்சாவது படிக்கும் போதே லைலா படத்தை பாக்கெட்டில்
வைச்சுட்டு திரிஞ்சவங்க பாஸ்./
ஹலோ..அப்ப அது வேற லைலா.. இவங்க பிதாமகன் லைலாவ சொல்றாங்க...
இனி குஷ்பு புயலாம்...
நல்ல கட்டுரை.. எங்க போனாலும் தியேட்டர் நமக்கு விடாதுன்னு மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் ஜெட்லி வாழ்க.
//ஹலோ..அப்ப அது வேற லைலா.. இவங்க பிதாமகன் லைலாவ சொல்றாங்க..//
பிதாமகன் லைலாவுக்கு என்ன குறை சகா? நேத்துத்தான் சன் டிவியில பிதாமகன் படம் பார்த்தேன். நல்லாத்தான இருக்காங்க லைலா?
நல்ல பயணக் கட்டுரை!!
//தம்ப்ப்பி கல்யாணம் ஆகணும்னு கோயிலுக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறியா//
ethanavathu marriage
ஜெட்லி,
புகைப்படங்கள் அருமை
naming cyclone is american culture...they keep naming their cyclone as rita,Catarina,Alma...etc
our indians are following it in layla,nisha...etc
all indians thinks that following americans as clever....
அதுக்கு பேரு சினிமா கொட்டாய்ங்க...தினமும் அந்த வழியாத்தானே போறேன்!!!!!தினம் ஒரு படம் போடுவாங்க அந்த கொட்டாயில..அப்பறம் சாதா தியாகராஜா இல்ல...அது "கொசுக்கடி தியாகராஜா"....
நல்ல பயணம் :)
USA ல, முதலில் இப்படி பேர் வைக்க ஆரம்பித்தாங்க.... இப்போ இந்தியாவிலும், அந்த லொள்ளை ஆரம்பிச்சி....... அட, அட, அட.....
அடுத்த வருடம், ஆண்கள் பெயரில் வரும் புயலுக்கு உங்கள் பெயரை சிபாரிசு பண்ணியாச்சு. :-)
@ கரிசல்காரன்
வேற என்ன பாஸ் பண்றது...அது தான் நம்ம கண்ணில் படுது...
jetli na..puyal illa ..sooravali ..Namakkaka yethana mokka padatha parthitu namala kaapathuraru.Avar peyar oru sooravali ku thaan vekkanum..
@ கார்க்கி
எல்லாம் ஒரே லைலா தான் அண்ணே....
ஏழாவது படிக்கும் போது பிதாமகன் வந்ததா நினைவு...!!
@ malar
அரசியல்லையா??
@முகிலன்
லைலாக்கு ஒண்ணும் குறை இல்லை...
இது வேற மேட்டர்..
@ Mrs.Menagasathia
நன்றி
@LK
நல்ல கேள்வி...
@காவேரி கணேஷ்
நன்றி அண்ணே....
@hasan
நைட் தான் ரேடியோவில் கேட்டேன்....
லைலா புயல் பெயரை வைத்தது பாகிஸ்தான் என்று
சொன்னார்கள்.....
அதான் நானும் யோசிச்சேன் நம்ம ஆளுங்க மார்க்கெட்
போய் செட்டில் ஆனா நடிகை பேர் வைக்க மாட்டாங்களேனு...
@ உங்கள் தோழி கிருத்திகா
கொசுக்கடி மட்டும் இல்ல மூட்டப்பூச்சி, பாக்கு வாசனை எல்லாம் தூள் பறக்கும்...
@Chitra
நன்றி...சிபாரிசு பண்ணியதற்கு....
@ Dinesh
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சருக்கு தினேஷ்...
லைலா குறிப்பு, பயணம் எல்லாம் ஓகே .. ஒரு பிகர் கூட பார்க்கலையா அந்த அதிகாலைல !!!!
அதிகாலைப் பயணம் ரசிக்கக் கூடிய ஒன்றுதான்..
Photo நல்லா இருக்குங்க.குறிப்பா,ரெண்டாவதும்,மூனாவதும்....
படங்களும் கட்டுரையும் அருமை ஜெட்லி,
ஊர் உலாவா?
Tamil kalacharathoda ponnung koiluku varangala?mangala or bungala matina ok!
5th padikum pothu pocketla vaithiruntha padam dinathanthi "kanni theevu laila" padam thane!
Jayanthila kooda kathada padam pakalam!
திருப்போரூர் அதிகாலைப் பயணம் ரசனையாக இருந்தது.
@~~Romeo~~
அது எல்லாம் இங்கே பதிவு ஆகாது பாஸ்...
@ ஸ்ரீராம்
@ILLUMINATI
நன்றி...
@அக்பர்
நமக்கு அதானே வேலையே....
@மாதேவி
நன்றி...
@வவ்வால்
//5th padikum pothu pocketla vaithiruntha padam dinathanthi "kanni theevu laila" padam thane!
Jayanthila kooda kathada padam pakalam!
//
லைலா கரையை கடந்துடுச்சு...ப்ரீயா விடுங்க....
ஜெயந்தி தியேட்டர் காத்தாட படம் பார்க்கறதுனா
எப்படி??
அங்கே காத்தே வராதே தலைவரே....
மாப்ளே, ஒரு நாள் சொல்லுங்க போகலாம் திருபோரூர் கோவிலுக்கு. வர்ற திங்கள் நான் ப்ரீ தான் மாப்ளே..
@Rajaram
ஓகே...பேசுவோம்
Post a Comment