"வாழ்க்கையே ஒரு விளையாட்டு...
நம்ம உடம்பு தான் மைதானம்...
அந்த உடம்பில் யார் வந்து விளையாடிட்டு போனா என்ன...."
இந்த வாழ்க்கை தத்துவத்தை படத்தில் உதிர்த்தவர் நமது
ஷகீலா என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில்
எங்கள் வாழ்த்துக்களை இயக்குனருக்கு தெரிவித்து கொள்கிறோம்.
இது ஒரு சிறந்த படம்ங்க....ஹலோ ஒரு நிமிஷம் முழுசா படிச்சுட்டு அப்புறம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணுங்க. உண்மையிலே இது ஒரு சிறந்த படம் எதுக்குன்னு கேட்டிங்கனா தள்ளிட்டு போறதுக்கு இது ஒரு சிறந்த படம்னு சொல்ல வந்தேன்.நான் பார்த்த தியேட்டரில் என்னையும் சேர்த்து நூப்பது பேர் தான் இருந்தோம்.அப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஏன்டா, தயாரிப்பாளர் கோடி கோடியா பணம் போட்டு படம் எடுத்தா அதை இப்படியா சொல்லுவே என்று நீங்கள் யாராவது கேட்கலாம். ஆனா இந்த குரு சிஷ்யன் படத்தை பார்த்தா நீங்க இப்படி கேட்க மாட்டிங்கனு இருநூறு சதவீதம் நான் நம்புறேன்.
அகில கெரகம் சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பாக இந்த விமர்சனத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தோட கதை பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் அதன் திரைக்கதையை எங்க பக்கத்துக்கு வீட்டு அஞ்சு வயசு பையன் கூட சொல்லிவிடுவான் என்பது படத்தின் ஹைலைட். சுந்தர்.சி வழக்கம் போல் சூப்பர் பாக்கு தலையுடன் வருகிறார் . படம் முழுவதும் கழுத்தில் ஒரு துண்டை சுற்றி கொண்டு வருகிறார். தீடிர்னு ஒரு சீனில் முதுகு பின்னாடி இருந்தெல்லாம் துண்டு எடுக்கிறார்....(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)
சத்யராஜ் சார் உங்களுக்கும் விஜயகாந்த்க்கும் ஏதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்க வேண்டியது தானே...அதுக்குன்னு அவரோட ஈத்து போனா பழைய அரசியல் டயலாக் பேசி ஏன் கடுப்பு ஏத்துரிங்க??அதுவும் இல்லாம எங்க தல அஜித்தை வேறு கிண்டல் பண்றீங்க...படத்தில் சத்யராஜ் பேரு காலுங்க....
அதுக்கு அவர் சொல்ற காரணம் தலைன்னு ஒருத்தர் இருக்கும் போது கால்னு ஒண்ணு இருக்க கூடாதா என்பார்.....சத்யராஜ்,கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷமா இதே மாதிரி இதே விக் வச்சி நடிச்சிட்டு வர்றார்....முடியல...
இந்த கதாநாயகி நடிச்ச மூணு படத்தையும் இந்த பிரபஞ்சத்தில் பார்த்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன் என்று நம்புகிறேன். படத்துக்கு படம் பேர் மாத்துறாங்க ஆனா முகத்தில் மட்டும் எந்த படத்திலும் ரியாக்சன் மாத்த மாட்டறாங்க.....வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெருசா இல்லைன்னு சொல்லமுடியாதுனு ஸ்டில்லை பார்த்தால் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அநேகமா இது தான் அந்த அம்மணிக்கு கடைசி படமாக இருக்கும் என்று நம்புகிறேன், காரணம் இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்ஒ ஹிட்ங்க.(இந்திரவிழா, நான் அவனில்லை 2 ). பேசாம கிரணையாவது நாயகியாக போட்டிருக்கலாம்...!!
சந்தானம் இவர் மட்டும் இல்ல..இன்டெர்வல் முன்னாடியே வெளியே வந்திருப்பேன். சந்தானம் காமெடி உண்மையிலே நல்லா இருந்தது.ஆனா அதுக்காக முழு படமெல்லாம் பார்க்கமுடியாது.நான் கிளைமாக்ஸ்க்கு முன்னாடியே வெளிநடப்பு செய்ஞ்சிட்டேன் என்பதை இங்கே சொல்லி கொள்கிறேன் யுவர் ஆனர்!!
சக்தி சிதம்பரம், ஐயா நீங்க ஒரு படமெடுக்க அந்த டைம்மில்
வந்த பத்து படங்களில் இருந்து சீனை எடுத்து நீங்கள் ஒரு
படம் எடுத்துடுறீங்க....மசாலா படம் நாங்க பார்ப்போம் அதுக்காக
ஓவர் மசாலா படமெல்லாம் பார்க்க முடியாது.....அப்புறம் ஒரு
சின்ன request தயவு செய்து நீங்க இனிமே ரஜினி பட டைட்டில்
யூஸ் பண்ணாதீங்க....!!
தியேட்டர் நொறுக்ஸ்:
#படத்தில் இன்டெர்வல்க்கு பிறகு ஒரு காட்சி...எப்பா எப்படி
இப்படி யோசிக்கிறாங்கனு தெரியல அதுவும் இல்லாம ஒரு
பாட்டு வரும் பாருங்க "தம்பி இல்லடா,இவன் தாயை போலடா"னு
அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது...
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!
# படத்திலே மிகவும் பிடித்த இடம் ராஜ்கபூரும் நாயகியும் நடிச்ச ரேப் சீன்தான். ஆனா கொஞ்ச நேரத்தில் அந்த காட்சி முடிந்து விட்டது என்பது கொடுமையான விஷயம்.இந்த சீனுக்கு ஒருத்தர் தியேட்டரில் கைதட்டினார்....சத்தியமா நான் அவன் இல்லைங்க....
# ஈவ்னிங் ஷோ இன்டெர்வல் அப்பவே நாலைந்து பேர் இந்த
காவியத்தை பார்த்து மட்டையாகி விட்டார்கள்.
# இன்டெர்வல் ஆரம்பிச்சதில் இருந்து ஒரு முக்கா மணி நேரம்
சந்தானம் வரவே மாட்டார்(நடுவில் சும்மா ஒரு சீனில் வருவார்) அவ்ளோ தான் போல வீட்டுக்கு போய்விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே பெண் வேடத்தில் சந்தானம் வரும் காட்சி வந்தது......ஆனா பாருங்க அப்போ தான் ஒரு ஜோடி வேற வெளியே போறாங்க...அந்த பெண் கடைசி வரை ஸ்க்ரீனை பார்த்து கொண்டே போனாள்....இதிலிருந்து நாம் பெறும் நீதி :
படத்தை தலைவர் கவுண்டர் பார்த்து இருந்தா என்ன
சொல்லிருப்பார்.....
"படமாடா இது, என்னாமா டகால்டி காட்றானுங்க,...காவியம்டோய் !! இதுக்கு தான் நான் அந்த சூப்பர் பாக்கு மண்டையன் நடிச்ச படத்தை பார்க்குறது இல்லை.... சும்மா வீட்ல இருந்தவனை கூட்டிட்டு வந்து...தலைவலி கொடுத்துட்டாங்க....."
குரு சிஷ்யன் - போதும்டா சாமி!!
சுந்தர்.சி ரசிகர்கள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் கவலை
கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்...கூடிய விரைவிலே நம்மை மகிழ்விக்க வாடா படம் வரும் என்று நம்பிக்கை கொள்வோம்!!
இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய ஓட்டு போடுங்கள்...
ஜெட்லி...(சரவணா...)
50 comments:
அது எப்படி ஜெட்லி, ஒரு படம் விடாம எல்லாத்தையும் பாத்து விடுறீங்க., உங்கள நினைச்சா எனக்கு பொறாமை யா (பாவமா ங்கறது வேற விஷயம்) இருக்கு :)
விமர்சனம் அருமை.,
பாக்கு மண்டையன்?!?! சுந்தர் சி க்கு இப்படி ஒரு பெயரா, சீக்கிரமே இந்தப் பெயருக்கு ஒரு காப்பி ரைட் வாங்கிடுங்க தலைவா, இல்லேனா, சுந்தர் சீயே அடுத்த படத்துல் பேருக்கு முன்னாடி போட்டுட போறார்.
நமது கைங்கர்யம்: 'வெத்தலை வாயன்' என்ன பேரு நல்லாருக்கா? (சுந்தர் சி கிட்ட கேட்டு சொல்லுங்க தலைவா, நான் பேர் வெக்கிறதுக்கு காசு வாங்க மாட்டேன், ப்ரீ தான்)
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் ஒரு விமர்சனம் கூட படிக்காம எப்படி இவனுங்க படத்துக்கெல்லாம் போக முடியுது?
ஆரம்பம் முதல் கடைசி வரை செம காமடியா இருக்குங்க.. படமில்லை. விமர்சனம்.
உங்களின் வலி, எங்களுக்கு சிரிப்பாகிறது.
300 followers-க்கு வாழ்த்துக்கள் ஜெட்லி மற்றும் சங்கர்
விபுசி.. விபுசி.. விபுசி.. விபுசி.. :D
//"தம்பி இல்லடா,இவன் தாயை போலடா"னு
அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது...
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!//
:))
விமர்சனம் மச காமெடிங்னா... கலக்கீட்டீங்க... இந்த மாதிரி விமர்சனம் படிக்கவே நீங்கள் நிறெய மொக்கை படம் பார்க்க வேண்டுகிறோம்.
மனோ
அகில கெரகம் சுந்தர்.சி நாறபணி மன்றம்
is this spelling mistake or from bottom of your heart?
ஏன் ஜெட்லி உங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது?...:(
நல்ல வேள காப்பாத்துன மச்சான்...
இன்னிக்கு நைட் ஷோ போலாம்னு இப்போதான் ஒருத்தன் பேசிட்டு போனான்...
நான் பலிகடா ஆக மாட்டேன்பா சாமி...
ஒட்டு போட்டாச்சு ...... எவ்வளவு கவர்ச்சி என்பதை நீங்க சொல்லவே இல்லையே ???? ரேப் சீன் கொஞ்ச நேரம் தானா ; ரொம்ப அநியாயமுங்க
(இந்த படத்துக்கு போக கூடாதுன்னு தோழி தடை போட்டு இருக்காங்க....சோ நான் பிழைத்து கொண்டேன்)
kiran yai patri onnum sollave illaiye
ஓகே.. ஓகே.. கூல் டவுன் ஜெட்லி ஸார்..!
இந்த வாரம் மகனே உன் மருமகனே வருதாம்..! அவசியம் பார்த்துட்டு உடனே சொல்லுங்க..!
200 ரூ எல்லாம் கொடுத்து மொக்க படம் பாக்கறவங்களுக்கு 50ரூ பெருசுங்ளாண்ணா:))
உண்மைத்தமிழன் அண்ணன படிச்சிட்டு பாக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். இதுக்கப்புறாம் உலகத்தொலைக்காட்சியிலன்னு சீக்கிரம் சிங்கையில போட்டாலும் பாக்கிறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்! நன்றிங்க தம்பி!
பிரபாகர்...
வடிவேலு பெருமூச்சு விட்டு இருப்பார். தப்பித்தோம் என்று! மானங்கெட்ட சத்யராஜ் பத்தி இன்னும் கிழிச்சி இருக்க வேண்டும்.
ரொம்ப நல்லாருக்கு - நான் படத்த சொல்லல
எத்தனாவது இடம்னு சொல்லலை ஜெட்லி. :(
இந்த கதாநாயகி நடிச்ச மூணு படத்தையும் இந்த பிரபஞ்சத்தில் பார்த்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன் என்று நம்புகிறேன். படத்துக்கு படம் பேர் மாத்துறாங்க ஆனா முகத்தில் மட்டும் எந்த படத்திலும் ரியாக்சன் மாத்த மாட்டறாங்க.....வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெருசா இல்லைன்னு சொல்லமுடியாதுனு ஸ்டில்லை பார்த்தால் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அநேகமா இது தான் அந்த அம்மணிக்கு கடைசி படமாக இருக்கும் என்று நம்புகிறேன், காரணம் இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்ஒ ஹிட்ங்க.(இந்திரவிழா, நான் அவனில்லை 2 ). பேசாம கிரணையாவது நாயகியாக போட்டிருக்கலாம்...!!
.....ha,ha,ha,ha,ha,ha......உங்கள் விமர்சனத்தை ரொம்ப ரசிச்சு படித்தேன். படத்தை விட இது நல்லா இருக்குங்க.
yenga epdi marana mokka padathukku poreenga...
cable anna kooda innum indha padatha paakala....
@ ராம்
எல்லாம் ஒரு தவம் மாதிரி.... :))
@பனங்காட்டான்
'வெத்தலை வாயன்' - நல்லாத்தான் இருக்கு வாடா பட
விமர்சனத்துக்கு யூஸ் பண்ணிடுவோம் நண்பரே....
@ மோகன் குமார்
வாழ்த்துக்கு நன்றி அண்ணே....
வலிலாம் ஒண்ணும் இல்லை இதென்ன நமக்கு புதுசா.....
@ Siva Ranjan
//விபுசி//
எதுவும் தீட்டுரீங்களா??
ஒண்ணும் புரியல
@ D.R.Ashok
நன்றி அண்ணே...
@MANO
கண்டிப்பா..உங்க வேண்டுதல் வீண் போவாது....
@hasan
இதயத்தில் இருந்து வந்தவை தான்....
@ ரகு
நோ பீலிங்க்ஸ்....
@அகல்விளக்கு
உஷார் மாமே உஷார்....
@டம்பி மேவீ
கிரணை நாயகி ஆக்கிருக்கலாம் என்று எழுதி இருந்தேன்....
நன்றாக திறமையை வெளிப்பதியுள்ளார் விச்சு...
@ உண்மைத் தமிழன்(15270788164745573644)
ஏன் தலைவரே....போகலாம்...எவ்வளவோ பார்த்துடோம்
அதை பார்க்க மாட்டோமா....!!
@வானம்பாடிகள்
நான் கடைசியா இருநூறு கொடுத்து பார்த்த படம் கந்தசாமி
தான்......அதற்கு பிறகு எந்த படத்துக்கும் இருநூறு செலவழிப்பதில்லை
ஐயா......
@பிரபாகர்
ரைட்...நன்றி அண்ணே.....
@Thameez
விடுங்க...அடுத்த படத்தில் பார்ப்போம்...
@சதீஷ்
நன்றி....
@V.Radhakrishnan
கடைசி இடம் தான்....
@Chitra
நன்றி...ரசித்து படித்ததற்கு...
@kanagu
சும்மா டைம் பாஸ் தான் கனகு அண்ணே....
கேபிள் அண்ணே இந்த நேரத்துக்கு பார்த்திருப்பார்
என்று நம்புவோம்....
ஆனாலும் எதையும் தாங்கும் இதயம்தான் உங்களுக்கு...
Guru Shishyan..Raja leelai madhri 100 naal odungala?[:D]
உண்மை தமிழன் அண்ணன் விமர்சனம் படிச்சேன் .. டாரு டாரா கிழிச்சு தொங்க விட்டுட்டாரு.. அதே போல இங்க ..
எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.
http://romeowrites.blogspot.com/
போச்சா.............
// மிகவும் பிடித்த இடம் ராஜ்கபூரும் நாயகியும் நடிச்ச ரேப் சீன்தான் இந்த சீனுக்கு ஒருத்தர் தியேட்டரில் கைதட்டினார் . சத்தியமா நான் அவன் இல்லைங்க....//
Nice .. funny article..Best wishes
என்ன ஒரு ஆதங்கம் ...சத்தியமாவா ?
அதுவும் இல்லாம எங்க தல அஜித்தை வேறு கிண்டல் பண்றீங்க.
"வாழ்க்கையே ஒரு விளையாட்டு...
நம்ம உடம்பு தான் மைதானம்...
அந்த உடம்பில் யார் வந்து விளையாடிட்டு போனா என்ன...."
ஆய் தத்துவம் நல்லா இருக்கே...
@ஸ்ரீராம்
இதை தான் முன்னாடி இருந்து சொல்லிட்டு வரேன் அண்ணே...
@Dinesh
நான் ராஜலீலையை மறந்தாலும் நண்பர்கள் மறக்க மாட்டாங்க
போல.....
@ ~~Romeo~~
நன்றி நண்பரே...கண்டிப்பா வரேன்....
@புலவன் புலிகேசி
அம்பது தான்....பி.வி.ஆர்.ல பார்க்கலாம்னு நினைச்சேன்...தப்பிச்சேன்..
@S.Sudharshan
சத்யமாதான் எஜமான்...
@Menan
நான் எப்ப கிண்டல் பண்ணேன்.....
சத்யராஜ் பண்ணுவார்னு தானே சொன்னேன்....
ஒய்..கொலைவெறி...
@ஜாக்கி சேகர்
நானும் இந்த தத்துவத்தை ரொம்ப ரசிச்சேன் அண்ணே....
அதான் மக்கள் பயன்பெற ஸ்டார்ட்டிங்லேயே போட்டுடேன்!!
//(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)//
//அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது.
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!//
எப்பூடி அண்ணே இப்படி. படிச்சுட்டு எனக்கும் கண்கலங்கிடுச்சு. இருங்க நான் கொஞ்சம் அழுது கொண்டே சிரிச்சுக்கிறேன். ஹி ஹி ஹா ஹா ஹூ ஹூ
//(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)//
//அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது.
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!//
எப்பூடி அண்ணே இப்படி. படிச்சுட்டு எனக்கும் கண்கலங்கிடுச்சு. இருங்க நான் கொஞ்சம் அழுது கொண்டே சிரிச்சுக்கிறேன். ஹி ஹி ஹா ஹா ஹூ ஹூ
விமர்சனத்துல உங்களை அடிச்சிக்க ஆள் இல்லை.
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
///சத்யராஜ்,கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷமா இதே மாதிரி இதே விக் வச்சி நடிச்சிட்டு வர்றார்....முடியல...///
என்னது? கப்பு தாங்கமுடியலியா.. என்னகொடுமை இது சரவணா..
ஜெட்லி,
தமிழ்க்கூறும் நல்லுலகம் ச்சே தமிழ்க்கூறும் பதிவுலகின் நலனுக்கு தன்னைத்தானே எரியவிட்டு வெளிச்சம் தரும் மெழுகுவத்தி ரேஞ்சுக்கு வந்துட்டீங்களே? ஒரு பதிவுக்காக இந்த பாடாவதிஎல்லாம் பார்க்கறீங்களே? உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே கிடையாதா? முடியல! சிரிச்சு! செம காமடி!
Post a Comment