Tuesday, March 30, 2010

எல்லாம் ஒரு வெளம்பரம் தான்!!

கோவா vs தமிழ்ப்படம் விளம்பர மோதல்!! இன்ன பிற விளம்பரங்களும்

சமீபத்தில் நான் ரசித்த மற்றும் சிரித்த சில விளம்பரங்களை
உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.நீங்க இந்த
விளம்பரத்தை பார்த்து இருக்கலாம் இருந்தாலும் வெளிநாட்டில்
உள்ளவர்களுக்கும் பேப்பர் படிக்காதவர்களுக்கும் என்னால்
முடிந்த சிறு உதவி!!

முதல்ல....

கோவா படத்தின் விளம்பரம்...கடந்த வெள்ளிக்கிழமை கோவா படத்தின் 9 வது வாரம் வெற்றி??? விளம்பரத்தில் சரோஜா சிவா ஸ்டில்லை போட்டு "எனக்கு தமிழ்ப்படம்- களிலேயே மிகவும் பிடித்த படம் கோவா" என்று தமிழ்ப்படத்தை நக்கல் அடித்தனர் கோவா குழுவினர்.தமிழ்ப்படம் விளம்பரத்தில் "ஊரறிய ஜெயிச்சவன் நான்தாண்டி,என்கிட்டே
காட்டாத பூச்சாண்டி" என்று அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில்
சிவா நடிக்கும் பூச்சாண்டி படத்தின் வாசகத்துடன் வெளம்பரம் வந்தது....









ஆஹா...சண்டையே ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்தேன்...
சண்டே பேப்பரில் தமிழ்ப்படம் விளம்பரத்தில் வந்ததை
நீங்களே படத்தை கிளிக் பண்ணி பாருங்க....கோவா படத்தை
செமையா ஒட்டி இருக்காங்க!!





சிவா: அண்ணே கோவாக்கு டூர் போனீங்களே என்ன ஆச்சு??

சண்முகசுந்தரம்: ஊராப்பா அது? ஒரு மூஞ்சி கூட பார்க்குற
மாதிரி இல்ல.அதான் திரும்பி இங்கியே வந்துட்டேன்.




ஆனா ரெண்டு படத்துக்கும் மிக பெரிய ஊறுகாயாக சிவாவும் ஷண்முகசுந்தரமும் இருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!!




கண்டிப்பா இவங்க இதை ஜாலிக்கு தான் பண்றாங்கனு நினைக்கிறேன்.நாம் நண்பர்களை கலாய்ப்பது போல் அவர்கள் பேப்பர் விளம்பரத்தில் செய்கிறார்கள் போலும். ஏற்கனவே ndtv hands - up ஷோவில் மாற்றி மாற்றி கலாய்த்து இருக்கிறார்கள்.உங்களை யாராவது ஒட்டுனா நீங்க திருப்பி கலாய்க்க மாட்டீங்களா.... ஓட ஓட ஓட்டுறது இல்ல அந்த மாதிரி தான் இதுவும்!!



சில பேர் இதை நம்மை april fool பண்ணத்தான் செய்கிறார்கள்
என்று சொல்கிறார்கள்.அவுங்க மாத்தி மாத்தி கிண்டல் பண்றதை
நாம் ரசிக்கிறோம் அவ்ளோதான்...இதில் april fool பண்ண என்ன
இருக்கிறது...!


இன்னைக்கு கோவா விளம்பரம் பாருங்க.....கொஞ்சம் ஓவர்ஆ தான் இருக்கு....கோவா சூப்பர் படமாக இருந்தா அவர்கள் விளம்பரம் செய்வதை ரசிக்கலாம் ஆனால் இப்போது அவர்கள் விளம்பரத்தை பார்த்தால் "செத்த கிளிக்கு ஏன்டா சிங்காரம்" என்று தான் தோன்றுகிறது.....

(செவ்வாய்க்கிழமை(இன்றைய) கோவா விளம்பரம்)


நாளைக்கு தமிழ்ப்படம் என்ன விளம்பரம் பண்ண போறாங்கனு ஆர்வமா இருக்கேன்...கண்டிப்பா இதே பதிவில் நாளைக்கு அப்டேட் செய்வேன் வந்து பாருங்க....


**************************************

அசல் வெற்றி...

ஹேஹே....ஹேஹே.... எங்கே தல படம் நூறு நாள் ஓடிடுச்சு... ஸாரி அம்பது நாள் ஓடிடுச்சு....இது தான் அசல் வெற்றி..... எனக்கு ஒரு டவுட்ங்க ஏகன் படம் கூட சாந்தி தியேட்டர்ல தான் ஒடிச்சு! என்னை பொருத்தவரை அசலுக்கு ஏகன் எவ்வளவோ பரவாயில்லை.சொந்த தியேட்டர் சொந்த தயாரிப்பு மட்டுமே அசல் படம் ஓட காரணம் என்பது சின்ன குழந்தைக்கு கூட
தெரியும்.




இதை நான் ஏன் சொல்றேன்னா எனக்கு அஜித்தை இந்த விஷயத்தில் ரொம்ப பிடிக்கும் படம் நல்லா இல்லைன்னா காசு கொடுத்து நூறு நாட்கள் ஓட்டமாட்டார்.அஜித் இது போன்று விளம்பரங்களை வெறுப்பவர். என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்தால் சரி!!

மறுபடியும் சொல்றேன் நான் அஜித் எதிர்ப்பாளன் கிடையாது, அவரின் கோடான கோடி நலவிரும்பிகளில் நானும் ஒருவன், ரசிகனாக அல்ல!!




குறிப்பு: சைடில் உள்ள படங்களை(வடிவேலு,சின்ன பையன்) பார்த்து தவறாக நீங்களே எதுவும் எண்ணி கொள்ள வேண்டாம்!!

***********************************************************

ஆயிரத்தில் ஒருவன்:



நாம எப்போவும் நேர்மையா இருக்கணும்....
ஆயிரத்தில் ஒருவன் ஒரு நல்ல பொழுதுப்போக்கு படம்
என்பதில் இதுவரை எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!!
ஆனால் இவர்களின் 75 நாள் விளம்பரம் கொஞ்சம் எரிச்சலை
ஏற்படித்தியது, காரணம் படம் பேபி ஆல்பர்ட்இல் இருந்து
தூக்கி ஒரு வாரம் ஆச்சி!! கண்டிப்பா கார்த்தியின் செல்வாக்கை
உயர்த்த தான் இந்த நூறு நாள் மோகம்....!
வேண்டாம் கார்த்தி காமெடி ஆயிடும்.....
என்ன ஏற்கனவே ஆயிடுச்சா?? மீ எஸ்கேப்.....

உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டும் விவாதிக்க பின்னூட்டமும்
போடுங்கள்!!




ஜெட்லி

16 comments:

Raju said...

கார்த்தி இனிமேதான் பையால காமெடியாகப் போறார்ன்னு தோணுது!!
பார்க்கலாம்.

கார்க்கிபவா said...

வெங்கட் டீம் எப்போதுமே அடுத்ட்வர்களை கலாய்க்கும் போது, ஹர்ட் ஆகாதபடி செய்ய மாட்டார்கள்.. ஏன் இந்த வேலை?

அதுவும் கழுதை என்பதெல்லாம் ஓவரு.. நாளைக்கு செம பல்பு வாங்க போறாங்க. அது மட்டும் நிச்சயம்..

அஜித் காசு கொடுத்து ஓட்ட மாட்டாரு சரி. ஆனா ஒரே ஒரு தியேட்டர்ல அதுவும் சொந்த தியேட்டர்ல பகல் காட்சி 50 நாள் ஓட்டிட்டு ராக்கிங் ஹிட்ன்னு எப்படித்தான் போடறாஙக்ளோ?

அதுக்கும் அஜித்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு தெரியும். அதே மாதிரிதான் படம் ஓடறதுக்கு அவருக்கும் சம்பந்தம் இல்ல. :))

ஜெட்லி... said...

@ ♠ ராஜு ♠

வர்ற வெள்ளி தெரிஞ்சிடும் அண்ணே....

ஜெட்லி... said...

@ கார்க்கி

//தியேட்டர்ல பகல் காட்சி 50 நாள் ஓட்டிட்டு ராக்கிங் ஹிட்ன்னு எப்படித்தான் போடறாஙக்ளோ?
//

பாஸு...நாலு ஷோ ஓடுது...ஒரு ஒரு ஷோவுக்கும் குறைந்தது இருபது பேராவது படம் பார்க்கிறார்கள்....வரலாறு தப்பாக கூடாது....

Ashok D said...

daily பேப்பர் படிக்கறது பதிவு போட உதவுதுன்னு ‘மணியா’ சொல்லிட்டீயேப்பா...

கோவா தமிழ்ப்படம மேட்ரு ஜூப்பரு...

துபாய் ராஜா said...

//நாளைக்கு தமிழ்ப்படம் என்ன விளம்பரம் பண்ண போறாங்கனு ஆர்வமா இருக்கேன்...கண்டிப்பா இதே பதிவில் நாளைக்கு அப்டேட் செய்வேன் வந்து பாருங்க....//

தம்பி,உன் சமூக சேவை ஃபுல் அடிச்சாலும் அரிக்குதுப்பா... :))

அகல்விளக்கு said...

//நாளைக்கு தமிழ்ப்படம் என்ன விளம்பரம் பண்ண போறாங்கனு ஆர்வமா இருக்கேன்...கண்டிப்பா இதே பதிவில் நாளைக்கு அப்டேட் செய்வேன் வந்து பாருங்க....//

நானும் ஆர்வமாயிருக்கிறேன்...

தமிழ் உதயம் said...

உண்மையிலேயே இந்த படங்கள் ஓடுதா. இல்ல போஸ்டர் மட்டும் ஒட்டிக்குவாங்களா

ப்ரியமுடன் வசந்த் said...

அமுதனுக்கு கோவம் வந்து கோவால 'கோ'க்கு அடுத்து 'ண' சின்ன எழுத்தாவும் 'வா'க்கு அடுத்து 'யன்' சின்ன எழுத்தாவும் போட்டு நாறடிக்காம இருந்தா சரி..

சிநேகிதன் அக்பர் said...

எங்களைப்போன்றோருக்கு இந்த செய்தி புதுசுதான். நன்றி ஜெட்லி.

Chitra said...

நீங்கள் போஸ்டர் விளம்பரங்களில் "பார்த்ததும் படித்ததும்" பற்றி, உங்கள் பதிவுகள் மூலமாக எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
"ஆயிரத்தில் ஒருவன்" அய்யா, நீர். வாழ்த்துக்கள்!

Raghu said...

'கோவா' ப‌ட‌த்தை இன்னும் தியேட்ட‌ரை விட்டு எடுக்க‌ல‌ங்க‌ற‌தே பெரிய‌ விஷ‌யம். இதுல‌ அவ‌ங்க‌ 'த‌மிழ்ப் ப‌ட‌'த்தை இந்த‌ள‌வு வார்ற‌துலாம் டூ டூ டூ ம‌ச்!

//என்னை பொருத்தவரை அசலுக்கு ஏகன் எவ்வளவோ பரவாயில்லை//

ஜெட்லி, தெளிவாத்தானே இருக்கீங்க‌?...;)

கார்த்தியை 'பையா' காப்பாத்திடுவார்னு நினைக்கிறேன், பார்ப்போம்...

Raghu said...

'கோவா' ப‌ட‌த்தை இன்னும் தியேட்ட‌ரை விட்டு எடுக்க‌ல‌ங்க‌ற‌தே பெரிய‌ விஷ‌யம். இதுல‌ அவ‌ங்க‌ 'த‌மிழ்ப் ப‌ட‌'த்தை இந்த‌ள‌வு வார்ற‌துலாம் டூ டூ டூ ம‌ச்!

//என்னை பொருத்தவரை அசலுக்கு ஏகன் எவ்வளவோ பரவாயில்லை//

ஜெட்லி, தெளிவாத்தானே இருக்கீங்க‌?...;)

கார்த்தியை 'பையா' காப்பாத்திடுவார்னு நினைக்கிறேன், பார்ப்போம்...

எம்.எம்.அப்துல்லா said...

கோவா-தமிழ்படம் மேட்டர் நான் எழுத நினைச்சேன். முந்திட்டீங்க. பொழச்சுப்போங்க :)

Bala De BOSS said...

ஊரு ரெண்டுபட்டா நம்மள மாதிரி கூத்தாடிக்கு கொண்டாட்டம்தான். ஹி ஹி ஹி

Manoj (Statistics) said...

april fool....