Monday, March 1, 2010

பழவேற்காடு - ஜாலி ட்ரிப்!!

பழவேற்காட்டில் நண்பர்களுடன்





கல்லூரி இறுதி ஆண்டின் இறுதித் தேர்வுகளுக்கு முந்தைய வாரத்தில், வகுப்பின் முப்பத்து ஒன்பது நண்பர்களும் மாமல்லபுரம் சென்றோம். ஆயன சிற்பியை அருகில் சென்று பார்ப்பதாய்ச் சொல்லி, யானையின் அருகே குனிந்து தலையில் இடித்துக் கொண்ட நண்பன் நடராஜ், நொடராஜ் ஆனதும், கொலம்பஸ் மாதிரி வழி கண்டுபிடிப்பதாய் சொல்லி பாறையில் ஏறி குப்புற விழுந்து கண்ணாடியைப் பறக்க விட்ட ஸ்ரீராமும், போகும் வழியில் கோவளத்துக்கு முன், இறங்கிக் குளிக்கும் போது, சுனாமிக்கு முன்பே கடலோடு போகவிருந்து கரையில் அள்ளிப் போடப்பட்ட நண்பன் செந்திலும், இன்றுவரை நிகழும் நண்பர் சந்திப்புகளில் கட்டாயம் பேசப்படும் விஷயங்கள்.


அதற்குப் பிந்தைய, இந்த ஆறு வருடங்களில், ஆளுக்கு ஒரு திசையில் போனபின் சந்திப்புகள் குறைந்து போய், எப்போதாவது ஏற்பாடு செய்யப்படும் கடற்கரைக் கூட்டங்களிலும், நண்பர்களின் திருமணங்களிலும் ஐந்து அல்லது ஆறு பேர் வருவதே பெரிய விஷயமாகிப் போனது. இந்த நேரத்தில் தான் வேடந்தாங்கல் செல்வது பற்றி நான், சித்து, நட்டு, மற்றும் ஜெட்லி பேசிக்கொண்டிருந்த போது, இதை ஏன் மீண்டுமொரு நண்பர் சந்திப்பாக ஆக்கக்கூடாது என தோன்றியது. பிற நண்பர்களிடம் சொன்னபோது, பாண்டி, பர்வதமலை, திருவண்ணாமலை என்று ஆளுக்கு ஒன்று சொல்ல, சந்தோஷ் சொன்ன பழவேற்காடு இறுதி முடிவானது. வழக்கம் போல இருபது பேர் வருவதாய் ஒப்புக்கொண்டார்கள், வழக்கம் போலன்றி இறுதிப்பட்டியல் பதினேழு பேரில் முடிந்தது.


ஆறு வருடங்களுக்கு முன் போன (சற்றேறக்குறைய) அதே நாளில், போய் வந்த பயணம் பற்றி ஜெட்லியும் சித்துவும் தொடர்கிறார்கள்




அனைவரும் பேசி தீடிரென்று நடந்தது இந்த பழவேற்காடு GET-TOGETHER. பொன்னேரி தாண்டி இருபது கிலோமீட்டர் சென்றால் அழகான பழவேற்காடு நம் கண்களுக்கு விருந்தாய் அமையும்

நண்பர்கள் சென்னை மாநகரம் முழுவுதும் படர்ந்து இருப்பதால் புழல் ஜெயிலை மீட்டிங் பாயிண்ட் ஆக பிக்ஸ் பண்ணினோம். எனக்கு நண்பர் கௌரி காரில் இடம் கிடைத்தது. கௌரி ஏற்கனவே மூணு நாலு தடவை பழவேற்காடு சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர் புழல் போக பாடி ப்ரிட்ஜ் லெப்ட் எடுத்து ஆவடி செல்லும் போது என் மனசில் மணி அடித்தது, அது, "அநேகமா நாங்க ரேணிகுண்டா தான் போக போறோம்" என்று.


பழவேற்காடு செல்லும் வழி

பழவேற்காடு செல்ல இரு வழிகள் உள்ளன


1.மணலி, மீஞ்சூர், பொன்னேரி வழியாக அல்லது


2.புழல், பஞ்செட்டி (தாண்டியவுடன் Right Turn எடுத்து), பொன்னேரி வழியாக.





அங்கு சென்றவுடன் வழியெங்கும் பலர் படகு வேண்டுமா என்று கேட்பார்கள், அதில் உங்களுக்கு சரியான ஆள் யாரென்று படுகிறதோ அவர்களுடன் பேசி (ஒரு படகு 500 ருபாய்) செல்லலாம். காலை முதல் மாலை வரை அந்த படகு உங்களுக்காக தான்.

படகை வாடகைக்கு எடுத்து சிறிது தூரம் சென்ற பின் நண்பர்கள் படகை நிறுத்த சொன்னார்கள் காரணம் இன்று பிறந்தநாள் காணும் எனக்கும் (ஜெட்லி) , நாலாநேத்து பிறந்தநாள் கண்ட கெளரிக்கும் சேர்த்து கேக் வெட்ட சொன்னார்கள். கேக் எடுத்தவுடன் நண்பர்கள் எழும்பி நடக்க படகு பயங்கரமா ஆடியது.படக்கோட்டி வேறு அவரிடம் இருந்த பதினைந்து அடி கம்பை எடுத்து முட்டு கொடுத்து பார்த்தார். ஹ்ம்ம், ஆடுகிற படகை நிறுத்த முடியவில்லை. எனக்கு வேறு வரும் போது பொன்னேரியில் சாப்பிட்ட தோசை வெளியே வர மாதிரி இருந்தது.




பின்பு ஆழமில்லா இடத்தில் படகை நிறுத்தி அங்கு பிறந்தநாளை கொண்டாடினேன்.சத்தியமா இது வரைக்கும் இப்படி ஒரு பிறந்தநாளை நான் கொண்டாடியது இல்லை.நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....!


அங்கே முதலில் சவுக்கு தோப்புக்கு உங்களை அழைத்து செல்வார்கள், அது ஒரு குப்பை காடு (அவ்வளவும் நம்மை போல சென்றவர்களின் கைங்கரியம் தான்). இங்கு ஒரு நல்ல இடத்தில் camp போடலாம். பல இடங்களில் கண்ணாடி பாட்டில் உடைந்து கிடக்கும் பார்த்து செல்லவும். அங்கு உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, கார்த்தியிடம் வேறு குரூப்பை சேர்ந்த ஒருவன் வந்து "ரெண்டு தங்கராஜா வடிக்கட்டி இருந்தா கொடுங்க" என்றார். கார்த்தி இல்லை என்று சொல்லி பார்த்தாலும் அவன் போவதாக இல்லை. தன் நண்பர்கள் வாங்க சென்று இருக்கிறார்கள் வந்தவுடன் தந்து விடுகிறேன் என்று கேட்டு ஒன்று வாங்கி சென்றார்.


ஒரு முக்கா மணிநேரம் கழித்து மறுபடியும் வந்தான், திரும்பவும் தனக்கு தங்கராஜா வடிக்கட்டி வேணும் என்றான்.அப்போது மற்றொரு நண்பர் அடித்த கமெண்ட் "வரும் போது வெறும் வாயை மட்டும் தான் எடுத்து வந்திருப்பான் போல" என்றார். இந்த சம்பவத்தில் இருந்து தெரிவது என்னவென்றால் பழவேற்காட்டில் படகில் ஏறும் முன் அனைத்து பொருளையும் வாங்கி வைப்பது நலம்.நாங்க கொண்டு போன தண்ணி தீர்ந்து போச்சு ரொம்ப அவஸ்தைபட்டோம்.அட குடிக்கிற தண்ணி தாங்க!!





அடுத்ததாக மணல் திட்டு பகுதிக்கு அழைத்து செல்வர் இங்கு தண்ணீர் முட்டி அளவு தான் இருக்கு இங்கு நான் என் நீச்சல் திறமையை நண்பர்களுக்கு காட்டினேன்.



தனது ஹேர்ஸ்டைல் காரணமாக "புறா" என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த, பிரபல மொக்கைப் பதிவர் சங்கரின் படகு ஓட்டும் திறமையைப் பார்த்த நண்பர்கள் "சுறா" என்று புதுப்பெயர் சூட்டி மகிழ, நொந்து போனார் அவர்.







பழவேற்காடு முழுவதும் ஒற்றை துண்டுடன் வலம் வந்த 'கவர்ச்சி கண்ணன்' கார்த்தி, நான் போஸ் கொடுக்க கூலிங்கிளாஸ் தந்த ஜெய்சன், எனக்கு 'ஒத்துழைப்பு' தந்த சித்து, நட்டு, ராகேஷ், ஆல்-இன்-ஆல் அருணாச்சலம், ஜீத், பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்த சந்தோஷ், எப்போதாவது கண்களுக்கு காட்சி தரும் முஜிபுர், என் முகத்தில் கேக் தடவிய சங்கர். எப்போதும் போல அமைதியாகவே இருந்தஸ்ரீராம், பிரபுராஜ், சாய்கணேஷ், நவீன்..... அனைவருக்கும் என் நன்றிகள்.

முக்கியமான ஒருத்தரை மறந்துட்டேனே.....




10.2 MEGA PIXEL,THAILAND மேக் மூலம் நமக்கு தெளிவில்லாதவர்களையும் தெளிவாக படம் எடுத்த, பக்கத்து வீட்டு குட்டிப் பையனிடம் கடனை வாங்கி வந்திருந்த கிரிக்கெட் மட்டையை தண்ணீரில் ஊறவைத்து வாழை மட்டைபோல் ஆக்கியதால், என்ன சொல்லப் போகிறானோ என்று புலம்பிக்கொண்டே போன, அம்பத்தூர் லெனின் நகர் சரவணன் அவர்களுக்கு நன்றிகள்......

ஆறு வருடங்கள் முடிந்து விட்ட போதும், சந்தித்த மறுகணம் அத்தனையும் தொலைந்து பதின்ம வயதுகளுக்கு பயணம் செய்ய வைத்த இது போன்ற பயணங்கள் இனி அடிக்கடி நடக்க வேண்டும் என்பதைக் கூறி, அடுத்த வாரம் நடக்க உள்ளே நண்பன் முஜிபுர் ரஹ்மானின் திருமணத்தில் சந்திப்பதாய் சொல்லி விடைபெற்றோம்


நன்றி
சங்கர், ஜெட்லி, சித்து

40 comments:

Bala De BOSS said...

எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு நண்பா. நான் வரும்போது மட்டும் யாரும் வரமாட்றீங்க. யார கேட்டாலும் வேலை இருக்கு, நான் ரொம்ப பிசின்னு பந்தா காட்றீங்க. எப்படியோ உங்க பயணம் நல்லபடியா இருந்த சரிதான்.

தமிழ் உதயம் said...

சந்தோஷமாக இருந்தீர்களா. அது போதும் எங்களுக்கு. நாங்களும் பங்கெடுத்தால் தான் அந்த சந்தோஷத்தை உணரமுடியுமா என்ன

Paleo God said...

நல்லா இருங்கப்பா !!:))

CS. Mohan Kumar said...

அசத்துங்க . ஜெட் லி மற்றும் சங்கர் ஹாப்பியா இருக்காங்க. படங்கள் அருமை

Sri said...

I missed it machi...by the way...Mujibur kalyanama? eppo?

vasu balaji said...

pirantha naal vaazhthugal!:).

Ashok D said...

வாழ்த்துகள் ஜெட்லி.. Ensoyyyyyyyy... :)

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெட்லி..

உங்க கூட நானும் ட்ரிப் வந்த மாதிரி இருந்தது..

ஜெட்லி... said...

@ bala de boss

மாமே...உன் ஆதங்கம் புரியுது...
என்ன இருந்தாலும் நாங்க பிளடி இந்தியன்ஸ் தானே!!

ஜெட்லி... said...

@ தமிழ் உதயம்

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

@ மோகன் குமார்

நன்றி அண்ணே....

ஜெட்லி... said...

@Sri


வர்ற சண்டே டா....பத்திரிக்கையை கொடுத்துட்டு
புடிங்கிட்டான்.....

ஜெட்லி... said...

@ வானம்பாடிகள்


நன்றி ஐயா...

@ D.R.Ashok

நன்றி டாக்டர் அண்ணே..

ஜெட்லி... said...

@முகிலன்

நன்றி முகிலன்....

வெற்றி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெட்லி..நீங்கள் மென்மேலும் வளர்ந்து இன்னும் பல அரிய மொக்கைகளை போட வாழ்த்துக்கள் :)

ஜெட்லி... said...

@ வெற்றி


நன்றி மொக்கை மன்னிக்கவும் வெற்றி!!!

vinodhu said...

enga area manali pakkam vandhurukalam..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்துங்க..வாழ்த்துகள்

வெற்றி said...

வெறும் நன்றி மட்டும் சொல்லி தப்பிசுட்டா எப்புடி...ட்ரீட் கொடுங்க :)

ஜெட்லி... said...

@ vinodhu

அது தனியா ஒரு நாள் வரேன்....

ஜெட்லி... said...

@ T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி ஐயா...

ஜெட்லி... said...

@வெற்றி

என்ன வேணும் உனக்கு....
நேர்ல வா பெருசா தருவோம்...!!

geethappriyan said...

சூப்பர் டூர் நண்பா
கலக்கிட்டீங்க
சரவணன் என்கிற ஜெட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மரா said...

நிறையா சென்சார் செஞ்சிருக்கீங்களோன்னு என் உள்மனம் சொல்லுது...... :))

Raghu said...

(தாம‌த‌மானாலும்) பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் ஜெட்லி:) க‌ல‌க்க‌ல் ட்ரிப், ந‌ல்லா என்ஜாய் ப‌ண்ணியிருக்கிங்க‌;)

சுசி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெட்லி..

//ஆறு வருடங்கள் முடிந்து விட்ட போதும், சந்தித்த மறுகணம் அத்தனையும் தொலைந்து பதின்ம வயதுகளுக்கு பயணம் செய்ய வைத்த//

எல்லார் முகத்திலேம் அந்த சந்தோஷம் தெரியுது..

Thenammai Lakshmanan said...

நல்லா புது மாதிரியா பிறந்த நாள் கொண்டாடி இருக்கீங்க வாழ்த்துக்கள் ஜெட்லி

Nathanjagk said...

பார்க்காத இடங்கள்.. ஏக்கமா இருக்கப்பா!
அசத்தலான travelogue இது!!

புலவன் புலிகேசி said...

ஒரு ட்ரிப் ரெடி பண்ணுங்க போயிட்டு வருவோம்

Romeoboy said...

என்ஜாய் மாமே என்ஜாய் ..

ஜெட்லி... said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்


மிக்க நன்றி...

ஜெட்லி... said...

@ மயில்ராவணன்

அதெல்லாம் வெளியே சொல்ல கூடாது பாஸ்....

ஜெட்லி... said...

@ர‌கு

மீண்டும் நண்பர்களை பார்த்த சந்தோசம் தான்...
நன்றி ரகு...

ஜெட்லி... said...

@ சுசி

நன்றி

ஜெட்லி... said...

@ thenammailakshmanan


கண்டிப்பா...

நன்றி..

ஜெட்லி... said...

@ ஜெகநாதன்

உடனே உங்க பழைய நண்பர்களை கூப்பிட்டு
போங்க பாஸ்....

ஜெட்லி... said...

@ புலவன் புலிகேசி

ட்ரிப் போடுவோம் புலிகேசி....!!

ஜெட்லி... said...

@ ROMEO

நன்றி ரோமியோ....

ஜெட்லி... said...

@ ROMEO

நன்றி ரோமியோ....

Jackiesekar said...

நல்லா சுத்தி பார்த்திட்டிங்க போல...பகிர்தலுக்கு நன்றி...
குரூப்பா போனாலே ஒரு சந்தோஷம் இருக்கதான் செய்யும்..

பனித்துளி சங்கர் said...

கடந்த நினைவுகளை மீண்டும் கண்முன் நிறுத்தியது உங்களின் சந்திப்பு பற்றிய இந்த பதிவு . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி