Monday, February 15, 2010

JOY OF FEEDING

ஜாய் ஆப் பீடிங் (JOY OF FEEDING)



நீங்க திருவான்மியூர், நாவலூர் சைட் போகும் போது
எப்போதாவது உங்கள் கண்ணில் ஒரு பெரியவர் வெள்ளை
உடையுடன் அடைக்கலம் இல்லாத நாய்களுக்கு உணவு
அளித்து கொண்டிரப்பதை பார்த்து இருக்கலாம்.அந்த
நாய்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அருகில் இருந்து
பின்னர் தண்ணீர்,பால் கொடுத்து தினம்தோறும் தவறாமல்
செய்கிறார்.இந்த லிஸ்ட்இல் பூனைகளும் அடக்கம்.













கடந்த பதினைந்து வருடங்களாக அடைக்கலம் இல்லாத
நாய்களுக்கு உணவு உபசரித்து வருகிறார் இந்த 72 வயதான
தேவிதாஸ்.முதலில் திருவள்ளுவர் நகரில் வசித்தவர் பின்பு
வாடகை காரணமாக தற்போது கேளம்பாக்கத்தில் வசித்து
வருகிறார்.முன்பு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர்
இப்போது அதை விட்டுவிட்டார்.





















ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர், சிலருக்கு ஆங்கில
வகுப்பு கூட எடுத்து இருக்கிறார்.நாலைந்து ஆங்கில
சுயமுன்னேற்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.பப்ளிஷ்
பண்ண வசதி இல்லாததால் அதை நகல் எடுத்து பலருக்கு
விற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு
நியூமராலஜியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்.

"எனக்கு என்னமோ தெரியல இவங்களுக்கு சாப்பாடு
வச்சா தான் மனசுக்கு சந்தோசமா இருக்கு,என் பிசினஸ்
நல்லா இருந்த போது இவர்களுக்கு பிரியாணி வாங்கி
கொடுப்பேன்....ஆனால் இப்போ ஒரு அம்மா டெய்லியும்
கறி சோறு கொடுத்து உடுறாங்க...அப்படியே போகுது"
என்றார் அவர்.

சில பேர் அவர் உணவு உபசரிக்கும் காட்சியை
கண்டவுடன் மூஞ்சியை சுளிச்சிக்கிட்டு ஏதோ தீட்டு
போல் பத்து அடி தள்ளி நடப்பார்கள் என்றும் தனக்கு
பிறகு இந்த வாயில்லா ஜீவன்களை யார் கவனிக்க
போகிறார்கள் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

இது போன்று கிட்டத்தட்ட ஐம்பது நாய்கள் மற்றும்
பூனைகளுக்கு தினம்தோறும் உணவு பரிமாற
கேளம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் வந்து
செல்கிறார்.கண்டிப்பாக இதையெல்லாம் செய்ய
பொறுமை அவசியம்.அவர் இந்த வாயில்லா
ஜீவன்களுக்கு செய்து வரும் சேவையை வாழ்த்துவோம்.


************************************************




பைரவ சாமியின் வாகனமாக கருதப்படும் (நாட்டு)நாயை
நம் மக்கள் அவ்வளவாக சீண்டுவதில்லை.சென்னையை
பொருத்தவரை அடைக்கலம் இல்லாத நாய்களை ப்ளூ கிராஸ்
போன்ற அமைப்புகள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும்
கட்டுப்படுத்த முடியவில்லை என்றே சொல்லவேண்டும்.

நம்மில் பல பேருக்கு இது போன்ற நாய்கள் மேல்
பயமில்லாமல் இல்லை.முக்கியமா இரு சக்கர
வாகனங்களில் செல்பவர்களை சில நாய்கள் துரத்தி
வந்து கடிக்க பாயும்.என் நண்பனை கடித்திருக்கிறது
கண்டிப்பாக அவன் அந்த நாயை மறந்திருக்க மாட்டான்.
நானும் பல சமயம் காலை தூக்கி வண்டி ஒட்டி இருக்கேன்.


இது போன்று ஒரு சில விஷயங்கள் இருந்தாலும் பல ஏரியாக்களில் இந்த நாய்கள் தான் காவல் காக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அடைக்கலம் இல்லாத நாய்களுக்கு செக்யூரிட்டி மற்றும் வாட்ச்மேன்கள் தான் ஆதரவாளர்கள் என்றே கூற வேண்டும்.





பல ஏரியாக்களில் சிலர் அடைக்கலம் இல்லாத நாய்களுக்கு உணவு உபசரித்து வருகின்றனர். பாவம் அதுவும் வாயில்லா ஜீவன் தானே...
முடிந்தால் நீங்கள் வேலை செய்யும் இடம் அருகிலோ,வீட்டு அருகிலோ, டீ கடையோ, பாஸ்ட் பூட் கடையோ என்று எங்கையாவது இது போன்ற நாய்களை பார்த்தால் ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கி போடுங்கள். அதன் பின்பு நீங்கள் எப்போது அதை பார்த்தாலும் அது வாலாட்டி அதன் அன்பை தெரிவிக்கும் போது நம் மனம் மகிழும், அது தான்..... ஜாய் ஆப் பீடிங்!!


உங்களுக்கும் இது போன்று அனுபவங்கள் இருந்தால்
கமெண்ட்இல் பகிர்ந்து கொள்ளவும்.....



ஜெட்லி.......

52 comments:

Paleo God said...

அருமை ஜெட்லி !

அந்த பெரியவரை நிச்சயம் பாராட்டவேண்டும். சக உயிரினங்களின் மேல் அன்பும், அரவணைப்பும் முடிந்தவரை செய்வது நல்லது.

பகிர்வுக்கு நன்றி சகோதரா.:)

CS. Mohan Kumar said...

தம்பி ரொம்ப நல்ல பதிவு இந்த மாதிரியும் அப்பப்ப எழுதுங்க

vinodhu said...

romba touch panitinga jetli...

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Chitra said...

அந்த பெரியவருக்கு முதலில் யாராவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. தன்னை பற்றி கவலைப் படாமல், இந்த வயதிலும் இத்தனை ஜீவன்களுக்காக மெனக்கெட்டு உணவு தர வருகிறாரே? அவரின் நல்ல உள்ளத்தை கண்டு நெகிழ்ந்தேன்.
இப்படிப்பட்டவரை, அடையாளம் கண்டு பதிவில் எழுதிய உங்களுக்கு நன்றி. உங்கள் நல்ல உள்ளமும் தெரிகிறது.



நெல்லையில், எங்கள் தெருவில், ஜிம்மி என்ற நாய், தெருவில் எல்லார் வீட்டுக்கும் செல்ல பிள்ளையாக இருந்து, நோய் கண்டு இறந்து விட்டது. ஜிம்மியை ஞாபகப் படுத்தி விட்டீர்கள். :-(

ManA © said...

அந்தப் பெரியவரின் பெருந்தன்மையை பாரட்டியே ஆஹ வேண்டும்,,
எனக்கும் ஆசைதான் ஆனா என்னக் கண்டா ஒரு நாய் கூட கிட்ட வரமாடெங்குது,, என்ன பண்ணலாம்..

ஜெட்லி... said...

@ஷங்கர்

நன்றி அண்ணே, அவரை மறுபடியும்
பார்க்கும் போது சொல்கிறேன்....

ஜெட்லி... said...

@ மோகன் குமார்

ரைட்... என்ன சொல்ல வரீங்கன்னு புரிஞ்சுது...

ஜெட்லி... said...

@ vinodhu

தொட்டுட்ட நண்பா.....

ஜெட்லி... said...

@ Chitra

நன்றி....
கண்டிப்பா அவர் செய்யும்
விஷயம் யாராலும் முடியாது....
ஜிம்மிக்கு :((

ஜெட்லி... said...

@ManA ©

சில நாய்கள் முதலில் கிட்ட வர
தயங்கும்....அப்புறம் போக போக
சரி ஆயிடும் பாஸ்..

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு...

ஸ்ரீராம். said...

நல்ல மனிதர்.
நான் கூட எங்கள் ஏரியா வில் உள்ள சில நாய்களுக்கு அவ்வப்போது பன், பிஸ்கட் வாங்கிக் கொடுப்பதுண்டு..

துபாய் ராஜா said...

உண்மையான அன்பு வைத்தால் எந்த ஒரு உயிரையும் உள்ளத்தால் நெருங்கிவிடலாம்.

நெகிழ்ச்சியான பதிவு.

vasu balaji said...

good one! இப்படி கொஞ்ச பேராலதான் மழைன்னு ஏதோ பெய்யுது:)

settaikkaran said...

பிராணிகளின் மீது கருணை காட்டும் அந்தப் பெரியவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அருமையான பதிவு; தெளிவான புகைப்படங்களும் சரளமான நடையும் பதிவை நெஞ்சில் பதிய வைத்திருக்கின்றன.

ஆர்வா said...

எல்லா உயிர்களையும் நேசிக்கணும் பாஸு

Unknown said...

நல்ல இடுகை.. நானும் பெங்களூரில் இருந்த போது பி.டி.எம் லே அவுட் நாய்களுக்கு அவ்வப்போது பொறை பிஸ்கட் வாங்கிப் போடுவதுண்டு. சுயநலக் காரணங்களுக்காக - இரவில் வரும் போது வாலாட்டி குலைக்காமல் இருக்கும்.. :)

Raja said...

கலக்கிட்டீங்க நண்பா

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:)

ஜெட்லி... said...

@அண்ணாமலையான்


நன்றி சார்....

ஜெட்லி... said...

@ ஸ்ரீராம்


உங்கள் தொண்டு வளர்க...

ஜெட்லி... said...

@ துபாய் ராஜா


கரெக்ட்ஆ சொன்னிங்க அண்ணே...
நன்றி..

ஜெட்லி... said...

@ வானம்பாடிகள்

தாங்கள் சொல்வது சரிதான் ஐயா...

ஜெட்லி... said...

@ சேட்டைக்காரன்

நன்றி நண்பரே.....

ஜெட்லி... said...

@ கவிதை காதலன்


சரிதான் அதைதான் நானும் சொல்றேன்....

ஜெட்லி... said...

@ Raja


கலக்கினது நான் இல்ல அந்த பெரியவர்....

ஜெட்லி... said...

@ நாளைப்போவான்

நன்றி...

Menaga Sathia said...

அருமை ஜெட்லி!!நிச்சயம் அந்த பெரியவரை பாராட்டியே ஆகனும்...

kanagu said...

miga arumaiyaana padhivu thala..

andha periyavarukku oru salute... :) :)

புலவன் புலிகேசி said...

சூப்பர் தல இதே மாதிரி எங்க அலுவலகம் அருகில் ஒரு பெண் தினம் அங்கு திரியும் நாய்கலுக்கு ஒரு குடுவை நிறைய பால் கொண்டு வந்து தருவதைப் பார்த்திருக்கிறேன்...இடம் எஸ்.ஆர்.பி.டூல்ஸ்

ஜெட்லி... said...

@ Mrs.Menagasathia

கண்டிப்பா...நன்றி...

ஜெட்லி... said...

@ kanagu

நன்றி கனகு...

ஜெட்லி... said...

@ புலவன் புலிகேசி

ஒரு ஒரு ஏரியாவிலும் சிலர்
இருக்கிறார்கள் நண்பா.

சிநேகிதன் அக்பர் said...

அந்த பெரியவருக்கு என் நன்றிகள்.

பகிர்வுக்கு நன்றி ஜெட்லி.

DREAMER said...

அருமையான பதிவு... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அடுத்த முறை திருவான்மியூர் போனால், அந்த பெரியவரை பல கண்கள் தேடும்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

jodhi said...

Thanks for sharing jetli.

Sanjai Gandhi said...

மிகச் சிறந்த மனிதர்..

ஜெட்லி... said...

@ அக்பர்

நன்றி...

ஜெட்லி... said...

@ஹரீஷ் நாராயண்


உண்மை தான் நண்பரே....
நன்றி....

ஜெட்லி... said...

@ jodhi

thanks jodhi..

ஜெட்லி... said...

@SanjaiGandhi™


கண்டிப்பா அண்ணே...

சரவணகுமரன் said...

ஜெட்லி, அருமையான பதிவு...

Romeoboy said...

இவரை போன்று ஒருவர் எங்க ஏரியால இருக்கிறார். ஆனால் அவரு உதவுவது மரங்களை. எனக்கு தெரிந்து இது வரை 10,000 மரங்களுக்கு மேல் வளர உதவி புரிந்துள்ளார்.

மீன்துள்ளியான் said...

ஜெட்லி அருமையான பகிர்வு . சென்னைல இந்த மாதிரி நிறைய பாத்து இருக்கேன் .. கடைல எதாவது சாப்பிட்டுகிட்டு இருப்பாங்க அந்த பக்கம் வந்து ஒரு நாய் நிக்கும் . கைல இருக்கிற cake இல்லேன்னா முறுக்கு கொஞ்சம் உடைச்சு அதுக்கு கொடுப்பாங்க.

இது பத்தி கொஞ்சம் என்னோட பதிவுல கூட எழுதி உள்ளேன் http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_7156.html

ஜெட்லி... said...

@ சரவணகுமரன்

நன்றி ....

ஜெட்லி... said...

@~~~Romeo~~~

கிரேட்...இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்...

ஜெட்லி... said...

@ மீன்துள்ளியான்


நன்றி மீன்துள்ளி....
வேலை எப்படி போகுது...?

Unknown said...

அருமையான பகிர்வு தல..,

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

antha periyavarukku ungal moolamaai en vaNakkangaL...

ஜெட்லி... said...

@ பேநா மூடி

நன்றி நண்பரே....

@ நாளைப்போவான்

கண்டிப்பா சொல்கிறேன் நண்பரே...

cheena (சீனா) said...

எப்பா ஜெட்லீ

உருப்படியா ஒரு பதிவு எழுதி இருக்கே - நல்லாருக்கு - நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் - நலவாழ்த்துகள் ஜெட்லி

rengarajan said...
This comment has been removed by the author.