முன்தினம் பார்த்தேனே....-ஒரு பார்வை.
செவன்த் சேனல் மாணிக்கம் தயாரிப்பில்,கௌதம் மேனன்
சிஷ்யர் மகிழ் திருமேனி இயக்கத்தில்,தமன் இசையமைப்பில்,
புதுமுகங்கள் சஞ்சய்,ஏக்தா இன்னும் ரெண்டு நடிகை(பேர் எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு...) நடித்திருக்கும் படம் முன்தினம் பார்த்தேனே....கூடிய விரைவில் வெளிவரபோகும் படத்தின்பாடல்கள் பற்றி ஒரு பார்வை....
தமன் அடுத்து கமல் நடித்து கே.ஸ்.ரவிக்குமார் இயக்கம் யாவரும் கேளிர் படத்துக்கு இவர் தான் இசையமைக்க போகிறாராம்.ஈரம்,சிந்தனை செய் படத்தின் மூலம் தன்முத்திரையை பதித்ததமனின் இசையில் மற்றொரு படம்.இவர் இசையமைத்தமாஸ்கோவின் காவேரி படத்தின்பாட்டும் நன்றாக இருக்கும்,இன்னும் படம் தான் ரீலீஸ் ஆகிற மாதிரி தெரியலை.
************************************************
# இன்றே இன்றே : பாடலாசிரியர்- ப்ரியன்.
ரஞ்சித் வாய்ஸ்இல் ஒரு நல்ல காதல் பாட்டு...
அநேகமா இந்த பாட்டு ஹீரோவுக்கு காதல் பூக்கும்
போது வர பாட்டா இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஈரம் படத்தின் மழையே பாட்டை கேட்ட மாதிரி பீலிங்...
#பேசும் பூவே : பாடலாசிரியர்:விவேகா
கிருஷ் வாய்ஸ் தான் இந்த பாட்டில் ஸ்பெஷல்...
முதலில் மெதுவாக ஆரம்பிக்கும் பாட்டு சில
நொடிகளில் ஜெட் வேகத்தில் பறக்கிறது....
கிருஷ் அடிச்சு தூள் கிளப்பி இருக்கிறார்....
# மனதின் அடியில் : பாடலாசிரியர்:ப்ரியன்
பிரியதர்ஷனி குரலில்..குரலா ஆமாம் அவங்க
பாடுற சவுண்ட் கேக்கவே இல்லை...மியூசிக் பீட்
மட்டும் தான் கேக்குது...பார்ப்போம் போக போக
பிடிக்குதா என்று....
# மாயா : நரேஷ் ஐய்யர் பாடலாசிரியர்:ரோஹிணி
மாயா....மாயா என்று நரேஷின் குரலில் மெலடி
போகிறது....இந்த பாட்டும் எனக்கு பிடிக்கவில்லை...
# கனவென... : ஹரி சரண்,சுசித்ரா பாடலாசிரியர்:ரோஹிணி
சின்ன பாட்டு...ஹரி சரணின் குரலில் நன்றாக இருக்கிறது.
நடுவுல சுசித்ரா அக்கா இங்கிலீஷ்ல ஏதோ ஜிங்க்லஸ்
பாடுறாங்க....சத்தியமா ஒரு வார்த்தை கூட எனக்கு
புரியலை.... ஆ.அஅ ...ஹோ ஹோ என்று தமன் குரல்
வருகிறது.பல பாட்டில் கேட்டு இருந்தாலும் அலுக்க
வில்லை....
# முன்தினம் பார்த்தேன்...தமன் பாடலாசிரியர்: ப்ரியன்
ஜாஸ் ஸ்டைலில் வந்திருக்கும் பாடல்...ஜாஸ் மியூசிக்கும்
தமனின் குரலும் காதுகளை ஈர்க்கின்றன....கேட்க வேண்டிய பாடல்....
************************************************
தமன் சிந்தனை செய்மூலம் கவனிக்கப்படவில்லை
என்றாலும் ஈரம் மூலம் கவனிக்கப்பட்டார்(எனக்கு
சிந்தனை செய் பாடல்கள் பிடிக்கும்!!) .பொதுவா
அவரோட எல்லா பாடல்களிலும் அவரோட குரல்
ஆஆஆஆ... என்று வருகிறது.நல்லா இருந்தாலும் போக
போக சலிச்சுடும்.அப்புறம் இப்போ முன்தினம் பார்த்தேனே படத்தின் பாடல்கள் முன்னாடி வந்த ஈரம் பாடல்களையும் நினைவுப்படுத்தியது.வருங்காலத்தில் தமன் வித்தியாசமான இசைகளை நம் செவிக்கு விருந்தாக்கினால் நலம்!
முன்தினம் பார்த்தேனே பாடல்களை பற்றி கோவா ஜெய்
ஸ்டைல்லா சொல்லனும்னா
"நீங்க believeஒ notஒ நாலு பாட்டு chance no ...,my ears
are குளிரிங்...."
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நன்றி:INDIAGLITZ!!
இந்த படத்தின் பாடல்களை கேட்டு இருந்தால்
பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்....
ஜெட்லி....
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
வாங்க தமன் ரசிகர் மன்ற தலைவர் அவர்களே.. (எனக்கு?? இந்த வரியில் தமன் பின்னே ஒரே ஒரு எழுத்து சேக்கணும் அவ்ளோ தான் )
தமன் பட பாடல்கள் எல்லாம்,ஏற்கெனவே அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை நினைவு படுத்தினாலும்,முதன் முறை கேட்பதற்கு இனிமையாகவே இருக்கின்றன.பேசும் பூவே,கனவென பாடல்கள், இந்தப் படத்தில் எனக்குப் பிடித்திருந்தது.
வரும் காலத்தில், கே.எஸ்.ஆருடன் பணியாற்றாத இசையமைப்பாளர்களே
இருக்க மாட்டார்கள் போல..!
@மோகன்
அது உச்சரிப்புக்கு ”ஒரு” எழுத்து..ஆனா எண்ணிக்கைல ”ரெண்டு”.! கரிக்கிட்டா..?
all songs are nice but i fee maskowin kaviri songs are better than this
ஒளிப்பதிவு பி.ஸியின் ஆஸ்தான சிஷ்யன் வின்சன்ட்ன்னு கேள்விபட்ட . ஒளிப்பதிவு எப்படி இருக்கு?
//இன்னும் ரெண்டு நடிகை(பேர் எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு...)//
பெயர் எழுத கஷ்டமா இருந்தா ரெண்டாவது படம் மாதிரி படமாவது போட்டிருக்கலாம்ல்ல.... :))
"நீங்க believeஒ notஒ நாலு பாட்டு chance no ...,my ears
are குளிரிங்...."
.........."நீங்க believeஒ notஒ ......உங்க music review, நல்லா இருக்கீங்..............
@ மோகன் குமார்
அண்ணே...யார் தமன்னா ரசிகர்னு
இந்த உலகத்துக்கே தெரியும்......
@ Mohan
நல்லா தான் இருக்கு...ஆனா அதையே
திருப்பி திருப்பி போட்ட சலிச்சுடும்,,,,
@ ♠ ராஜு ♠
அப்படி தான் எனக்கும் தோணுது.....
@ DHANS
i thnk both are good....
@ அடலேறு
தலைவரே இது வெறும் பாட்டுக்கான
பார்வை தான்.....படம் இன்னும் வரல...
தலைப்பை பார்த்தே கேள்வி கேப்பிங்க
போல....
@ துபாய் ராஜா
உங்க ஏக்கம் புரியுது அண்ணே...
வேற நல்ல படம் எதுவும் சிக்கல...
@Chitra
நன்றி....நான் போட்டத எனக்கே ரீப்பீட்ஆ??
நான் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்காததால் பின்னூட்டம் போடவில்லை.!
\\மனதின் அடியில் , பேசும் பூவே//
பெஸ்ட் சாங் சகா. எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்கள் இப்போது இதுதான்.
பாட்டு ஹிட் ஆயிருச்சின்னா படமும் ஹிட்டுதான். சரியா ஜெட்லி
அனைத்து பாடல் வரிகளும் தம்ன் மாதிரி அற்புதம். ஆனந்தம். வாழ்த்துக்கள்
இன்னைக்கே டவுன்லோடு பண்ணிடுறேன்..
நான் இன்னும் கேக்கல, ஆனா மாஸ்கோவின் காவிரி படத்துல, கார்த்திக், சுசிதரா வாய்ஸ்ல வர்ற "கோரே கோகோரே" பாட்டு சிம்ப்ளி சூப்பர்ப்:)
ஈரம் படத்துல பிண்ணணி இசையிலும் தமன் பின்னியிருந்தார்!
Post a Comment