Friday, February 5, 2010

அசல் - டொட்டொடய்ங்!!!

அசல் - டொட்டொடய்ங்!!!




அஜித்தின் 49வது படம் அசல்,பரத்வாஜ்ஜின் இசை எப்படி
என்று உங்களுக்கு தெரியாதது அல்ல.அஜித்தின் கெட்அப்
சூப்பர்.அசல், சரண் எடுத்த வாந்தியா,பூந்தியா இல்ல பேதியா
என்று கடைசியில் சொல்கிறேன்.



ஆனாலும் இந்த அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஓவர்ஆக தான்
என்னை திட்டுறாங்க.....என்னமோ அவர் நடிச்ச பல தோல்வி
படங்கள் நல்ல படம் மாதிரியும் ஏதோ நான் தான் ஓவர்ஆக
சொல்வதாகவும் பீல் பண்றாங்க.பரமசிவனை முதல் நாள்
பார்த்த வலி எனக்கு தானே தெரியும்.

ஒரு வேளை அசல் ஆழ்வார் போல் இருக்குமோ என்று
நீங்கள் நினைத்தால்...ச்சே ச்சே யூகி சேது ஓரளவுக்கு
ஏதாவது நல்ல கதை பண்ணியிருப்பாரு என்று மனதை
தேத்தி கொள்ளலாம்.

அசல் படம் முன்பதிவு அப்போ கொஞ்சம் அசால்ட்டா
இருந்துட்டேன்....கணபதிராம் தியேட்டர் அதுக்குள்ள
புல் ஆயிடுச்சு... மாயாஜால் போலாம்னு பார்த்தா அவன்
200 ரூபாய் டிக்கெட்னு சொல்றான்.சட்டுன்னு மனசுல
கந்தசாமி முதல் நாள் மாயாஜாலில் பார்த்த பிளாஷ்பேக்
வேற வந்துச்சு.....சகுனம் சரியில்ல என்று அதையும்
லூஸ்ல விட்டுட்டேன்.


பார்த்தியா இது தான் அஜித் மாஸ் முதல் நாள் முதல்
ஷோ டிக்கெட் உனக்கு கிடைக்கல என்று சரியா தப்பா
எடை போடதிங்க....அஜித் படம்னு இல்ல மற்ற படங்களும்
டிக்கெட் கிடைக்காததுக்கு காரணம் பண்பலை (F.M)
அலைவரிசைகள் பண்ணும் ரவுசு தான்.ஆனா ஊனா படம்
ரீலீஸ் ஆகும் போது முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்
தரோம்னு சொல்லி பயங்கர கஷ்டமான அறிவு பூர்வமான
கேள்வி கேக்குறாங்க.....சாம்பிள்

அஜித் நடிச்சிருக்கும் புது படத்தின் பெயர் என்ன?

A. அசல்

B. வட்டி.


அப்புறம் எப்படி என்னை மாதிரி ரசிகர்களுக்கு டிக்கெட்
கிடைக்கும்......?.இந்த கேள்வி கேட்டு டிக்கெட் கொடுப்பது
கிட்டதட்ட கருப்பு மார்க்கெட்டில் டிக்கெட் விப்பது போல
தான்....பண்பலை அலைவரிசைகளுக்கு பெருத்த லாபம்.
பேசாம நானும் இனிமே இது போன்று அறிவுப்பூர்வமான
கேள்விக்கு பதில் அனுப்பலாம்னு இருக்கேன்.....


மற்றபடி போன வருஷம் ஏகன் படம் பார்த்த சாந்தி
தியேட்டர் காண்டீனில் பாப்கார்னில் சோளம் இல்லை,
அவன் கொடுத்த குளிர்பானத்தில் குளிர் இல்லை.
அய்யோயோ பார்க்க மறந்துட்டனே! பாத்ரூமில் தண்ணி
வந்ததா என்று பார்க்கலையே,யாராவது அசல் பார்க்க
அந்த தியேட்டருக்கு போனால் பார்த்து தண்ணி வருதா
இல்லையா என்று சொல்லவும்!!

முதல் முதலா இப்பதான் படம் பார்க்காம முதல் நாள்
படத்தின் தொடர்பாக இடுகை போடுகிறேன்.
டிக்கெட் எடுக்க தீவிர முயற்சி எடுக்கவில்லை என்று
வைத்து கொள்ளலாம், கொஞ்சம் வேலை பளு என்று
கூட சொல்லலாம்.ஆனால் தயவு செய்து அஜித் படத்தின்
மேல் நம்பிக்கை காரணமாக நான் போகவில்லை என்று நினைக்க வேண்டாம்.ஏன்னா நான் வேட்டைக்காரனே முதல் நாள் பார்த்தேன் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.....


நான் இந்த இடுகையில் அஜித்தை பத்தி தனிமனித தாக்குதல்
நடத்தவில்லை....என் வருத்தம் எல்லாம் உங்களுக்கு நடுநிலையாவோ சைட்நிலையாவோ அசல் பற்றி கருத்து தெரிவிக்கமுடியவில்லையே என்பது தான்!! நண்பர் ஒருவர்
அபிராமி தியேட்டரில் இன்னைக்கு நைட் ஷோ டிக்கெட் வைத்திருக்கிறார்...ஆனா நான் எதா இருந்தாலும் ரிசல்ட் வச்சி போலாம்னு இருக்கேன்.நீங்க பார்த்திங்கனா சொல்லுங்க..... :).

உங்கள் ஆதரவை ஒட்டு மற்றும் பின்னூட்டம் போட்டு
தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.....

உங்கள்


ஜெட்லி....

36 comments:

kanagu said...

padam nalla irukkam... naan iniku evenign show poren.. paathutu solren.. :) :)

கார்க்கிபவா said...

வேட்டைக்காரன் போன்ற குப்பைகளையும் முதல் நாளே பார்த்து எழுதும் ஜெட்லீ, அசலை பார்க்காமலே நிராகரித்து அசிங்கபப்டுத்தியதை கண்டிக்கிறேன்.

அசல் நல்லா இருக்கும்.

Raghu said...

இன்னைக்கு வ‌ந்த‌வுட‌னே உங்க‌ ப‌திவுதான் முத‌ல்ல‌ பாத்தேன், ப‌ட‌ம் பாக்காம‌ ஏமாந்து(த்தீ)ட்டீங்க‌ளே:((

ஸ்ரீராம். said...

அசலான விமர்சனமா ?

துபாய் ராஜா said...

//முதல் முதலா இப்பதான் படம் பார்க்காம முதல் நாள்
படத்தின் தொடர்பாக இடுகை போடுகிறேன்.//

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு..... :))

Unknown said...

அன்பு ஜெட்லிக்கு,
உங்கள் வலைப்பதிவை நீண்ட நாட்களாய் படித்து வரும் , சராசரி மனிதனில் நானும் ஒருவன், எனக்கு கமல் அஜித் விக்ரம் சூரியா விஜய் என யார் நடித்திருந்தாலும், படம் நன்றாக இருந்தால் பிடிக்கும்.. சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகன்.. தனிப்பட்ட முறையில் அஜித் மீது மரியாதை உண்டு... சரி விசயத்துக்கு வருகிறேன்... இத்தனை நேரமாக உங்களின் அசல் விமர்சனத்துக்காக காத்திருந்தேன்.

இதுதான் உங்களுடைய தலைப்பு "அசல் - டொட்டொடய்ங்!!! ".. இதை பார்த்தவுடன் விமர்சனம் எழுதி விட்டீர்களோ என்று நினைத்தேன். ஆனால் வாசகர்களை ஈர்ப்பதற்காக செய்யப்பட்ட தந்திரம் என்று. (I never Expect these kind of cheap act from you). இந்த பதிவு முழுதுமே வாசகனை ஈர்ப்பதற்காக எழுதப்பட்ட கவர்ச்சி குப்பை. என்னதான் மறுத்தாலும் இந்த பதிவை தெளிவாய் படிக்கும் போது ஒரு வித ஏளனமும் வன்முறையும் தெரிகிறது.. கலையில் தினமும் எழுந்து உங்கள் பதிவை படிக்கும் என்னுடைய முட்டாள் தனத்திற்கு கிடைத்த அடியாக உணர்கிறேன்.. நான் இத்தனை நாள் படித்தது ஒரு மூன்றாம் தர பதிவு என்பதை உணர்கிறேன். படம் பார்த்து உண்மையை உணரும் நிலையை விட்டு விட்டு, குப்பைகளுக்கு நடுவே தெரு நாயை போல முகர்ந்து கொண்டிருக்கிறேன்.. எழுத்துக்களை கொண்டு மற்றவர்களின் எண்ணங்களை முட்டாளாக்காதீர்கள்... Now i am Realaxed. Now i am happily removing your blog from my Chrome bookmark.. Bye..

மேவி... said...

ஏகன் .....நயன் தாரா காட்டி இருப்பாங்களே அந்த படம் தானே ........ஒரு பாட்டை தவிர மற்ற பாடல்களில் நயன் தாறவை பார்த்து ரொம்ப பயந்து போயிட்டேன் தெரியுமா ........பிறகு அறைக்கு வந்த வேகத்தில் நயன் தார POSTER யை கிழித்து போட்டுட்டேன் ...


அண்ணா தியட்டர் போய் இருக்கிங்களா .... திருச்சி க்கு அரசு பஸ் ல போன மாதிரி இருக்கும் ....

ஜெட்லி... said...

@ kanagu

சொல்லுங்க பாஸ்...

ஜெட்லி... said...

@கார்க்கி

ஹலோ...என்ன இது...ஏன் இந்த கொலைவெறி....
கூடிய விரைவில் அசல் விமர்சனம்
அசத்தலா வரும்.......
அசல் படம் ஹிட்டாம் கார்க்கி...

ஜெட்லி... said...

@ லோகு
@ குறும்பன்

தலைவா...வேலை கமிட் ஆயிடுச்சு...
சீக்கரம் போட்டுடுவோம்....

ஜெட்லி... said...

@ஸ்ரீராம்


சத்தியமா இல்லை

ஜெட்லி... said...

@ ராஜா

நன்றி அண்ணே....

ஜெட்லி... said...

@gpmforever


நீங்க சொல்றது அனைத்தும் சரியே...
அதற்கான பதில்களும் இடுகையில் இருக்கின்றன....

//ஆனால் வாசகர்களை ஈர்ப்பதற்காக செய்யப்பட்ட தந்திரம் என்று.
(I never Expect these kind of cheap act from you).//

கண்டிப்பா.....நீங்க சொல்றது சரிதான் நான் அடுத்தவர்களை
ஈர்க்கவே தலைப்பை வைத்தேன்.....
ஜாலியா இருங்க பாஸ் அது தான் எங்க ப்ளாக் மந்திரமே...

Dinesh said...

seekarama padam parthutu sollunga..
ajith pass ah illa fail ah nu..

Pavam 2 adi vangitu ukandukitu irukaru..

Inda padam aachu hit aagatum..yenaku saran mela nambikkaiye illa..
Becoz attakasam la anda madri attakasam pannirundaru..

So neenga thaan sollanum jetli

ஜெட்லி... said...

//அண்ணா தியட்டர் போய் இருக்கிங்களா .... //


அந்த கொடுமையை ஏன் கேக்குறிங்க...
டி.வி வச்சி படம் போடுவாங்களே அந்த
தியேட்டர் தானே.....

ஜெட்லி... said...

@ Dinesh

நான் தான் பலி ஆடு போல....
சொல்றேன் பாஸ்...

Menaga Sathia said...

அப்போ நீங்க இன்னும் பார்க்கலயா படத்தை...

Chitra said...

அசல், சரண் எடுத்த வாந்தியா,பூந்தியா இல்ல பேதியா
என்று கடைசியில் சொல்கிறேன்.

.............படத்தை பாத்துட்டுதானே?

Kannan said...

@ gpmforever

நான் அசல் படத்தை பார்த்துவிட்டு தான் இந்த இடுகை பார்த்தேன், என் மனதில் என்ன தோன்றியதோ அதை நீங்கள் பதிவு செய்திருந்தீர்கள். உங்கள் உணர்வு சரியானது. மிக்க நன்றி.

Even I am gonna delete the bookmark of this site and never gonna come back again to this kinda third grade website......


@ ஜெட்லீ

நீ வேஸ்ட் மா....நானும் என்னவோ நினைச்சேன். யூ டூ ப்ரூடஸ்.....

கண்ணன் பண்ச்:-

படம் பாக்காம Comment எழுதின Bloggerரும், Cheap publisity தேடிகிட்ட வெப்‌ஸைட்டும், HIT ஆனாத சரித்திரமமே இல்ல.

ரோஸ்விக் said...

Same Title-yaa - அசல்....டொட்டோடொயின்

http://veliyoorkaran.blogspot.com/2010/02/blog-post_5019.html

Paleo God said...

ஜெட்லி..

ப்ளாக் குக்கு வெச்ச சூன்யத்த இன்னும் எடுக்கலியா..:))

சீக்கிரம் பரிகாரம் பண்ணுமா ..:))

ஜெட்லி... said...

@Kannan

//@ ஜெட்லீ

நீ வேஸ்ட் மா....நானும் என்னவோ நினைச்சேன். யூ டூ ப்ரூடஸ்.....
//


நன்றி நண்பரே....நீங்க என்னை பத்தி என்ன நினைச்சிங்கனு முன்னாடியே சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும்....ஆனா இதுவரைக்கும் பாராட்ட கூட ஒரு கமெண்ட் போடாத நீங்க திட்டறதுக்கு கமெண்ட் போட்டதுக்கு மிக்க நன்றி.......

உங்க பஞ்ச் அருமை......

ஜெட்லி... said...

@ Mrs.Menagasathia

டவுட் வேறயா உங்களுக்கு??

ஜெட்லி... said...

@ Chitra

கரெக்ட்....

ஜெட்லி... said...

@ ஷங்கர்

அதான் ஒன்னும் புரியல அண்ணே....

ஜெட்லி... said...

@ ஷங்கர்

அதான் ஒன்னும் புரியல அண்ணே....

திவ்யாஹரி said...

//முதல் முதலா இப்பதான் படம் பார்க்காம முதல் நாள்
படத்தின் தொடர்பாக இடுகை போடுகிறேன்.//

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு..//
:)

கடைக்குட்டி said...

கொடும...

வெள்ளிக்கிழமேயே திட்டலாம்னு பாத்தேன்.. டைம் செட் ஆகல...

முக்கியமா மீட்டிங் போரதுக்கு முன்னாடி.. நீங்க விமரசனம் போட்டது தெரிங்சது.. சரி அது இதுன்னு காரணம் சொல்லிட்டு வந்து படிச்சா..

மக்கா இப்படி மொக்க போட்டு வெச்சுருக்கீக..

உங்கள திட்டுன அந்த தலைவர் வாழ்க..

ரெண்டு நாளாகியும் இன்னும் விமர்சனத்தக் காணோம்..

கேபிளார் மேக்கிங் அது இதுன்னு புரியாம பேசுறார்.. நீங்களாவது தெளிவா சொல்லுங்க :-)

புலவன் புலிகேசி said...

தல படம் வேஸ்ட் தல...அந்த காலத்து அரச்ச மாவு..காசு போனதுதான் வருத்தமா இருக்கு. அப்பறம் அஜீத் நல்லா ஸ்டைலா சூப்பரா இருக்கரு. எதாவது ஃபேசன் சோல கலந்துக்கலாம்.

ஜெட்லி... said...

@ திவ்யாஹரி

நன்றி...

ஜெட்லி... said...

@கடைக்குட்டி

நாளைக்கு போறேன்...
கண்டிப்பா போடுவேன்...

ஜெட்லி... said...

@ புலவன் புலிகேசி

//எதாவது ஃபேசன் சோல கலந்துக்கலாம்//

ஹா ஹா....

DR said...

நேத்து தான் படம் பாத்துட்டு வந்தேன். இந்த கதய எடுக்குறதுக்கு எதுக்கு தான் ஃபிரான்ஸ் போனாங்காண்ணு தெரியல... படம் ஒண்ணும் ஸ்வாரஸ்யம் இல்ல...

Dinesh said...
This comment has been removed by the author.
Dinesh said...

na appave sonnen...indha saran lam nambi padathuku poga kudathu nu..idu yepadi iruku theriyuma ..ne kelen..ne kelen...jetli neenga thaan kelungalen..

ஜெட்லி... said...

@Dinesh

என் பிட்டை எனக்கே ஒட்டுரியா....