Friday, November 27, 2009

யோகி?? - விமர்சனம்

யோகி ??



இயக்குனர் அமீரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யோகி.
சுப்ரமணியன் சிவா கதையிலும் இயக்கத்திலும் அமீரின்
வசனத்திலும் திரைக்கதையிலும் இன்று உலகம் முழுவதும்
ரிலீஸ்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதாலும்
அமீரின் தயாரிப்பு என்பதாலும் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு
இருந்தது உண்மை.ஆனால் யோகி எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா??

பாசம் கிடைக்காமல் கொலை மற்றும் கொள்ளை
செய்யும் மனிதனாக அமீர் அவன் வாழ்வில் தீடிர்னு
ஒரு குழந்தை வந்தா என்ன ஆகும் இது தான் கதை.
அமீர் திரையில் தோன்றி முதல் பாடலில் குத்து மற்றும்
பரத நாட்டிய டான்ஸ் எல்லாம் ஆடுகிறார்.அமீரின்
கூட்டாளியாக பாடலாசிரியர் சிநேகன் ஒன்னும் பெருசா
வேலை இல்லை.மதுமிதா தன் பங்கை சிரிப்பாக செய்து
இருக்கிறார்.வின்சென்ட் அசோகன்,சுவாதிக்கா எல்லாம் வந்து
போகிறார்கள்.


ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.அமீரின் வசனம் படத்துக்கு பெரிய
ப்ளஸ்.முதல் பாதி முழுவதும் அமீரின் கேரக்டர் என்னவென்று
புரியவில்லை ஒரு வேளை சினிமா ரவுடி எல்லாமே இப்படிதான்
இருப்பாங்களா என்று டவுட் வருகிறது.ஒபெநிங் சீன் கொஞ்சம்
வித்தியாசமா இருந்தது.

காரில் குழந்தை கிடைத்தவுடன் அமீரின் தீடிர் மாற்றம் நமக்கு
விளங்க வில்லை.குழந்தையின் அழுகையை நிறுத்த அவர்
செய்யும் குறும்புகளை மற்றும் ரஜினி பாட்டுக்கு டான்ஸ்
ஆடுவது எல்லாம் ஒரு பத்து வருஷம் முன்னாடியே பார்த்த
காரணத்தால் சலிப்பு ஒன்றே ஏற்படுகிறது.அது ஏங்க புள்ளை
ரவுடி ஆனா அப்பாவை மட்டும் காரணம் சொல்றாங்க??
பிளாஷ்பேக் காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை அமீரின்
மேல் பரிதாபத்தையும் வரவழைக்கவில்லை என்பது மட்டும்
உண்மை.

படம் திருவான்மியூர் ஏரியாவில் நடப்பதாக காட்டுகின்றனர் அதுவும் நான் படம் பார்த்த ஜெயந்தி தியேட்டர் பெயரை கூட ஒரு சீனில் சொல்வார்கள்.ஆனால் திருவான்மியூரில் இருக்கும் அமீர் குழந்தையுடன் சிட்டி சென்டர் சென்று பர்ச்சேஸ் செய்து விட்டு சத்யம் சினிமாஸ் பாத்ரூம்க்கு போறது கொஞ்சம் ஓவர்.

கஞ்சாகருப்பு செம மொக்கை ,ஈ படத்தில் வருகிற ஜீவாக்கும்
அமீர்க்கும் ரெண்டு வித்தியாசம் தான் ஜீவா ஈ படத்தில் யாரையும்
கொன்று விட்டு கொள்ளை அடிக்க மாட்டார் யோகியில் அமீர்
கொலை செய்ய தயங்காதவர். ஜீவா ஈயில் பாசத்துக்கு எல்லாம்
ஏங்க மாட்டார் ஆனால் இதில் அமீர் குழந்தை வந்தபின் எதற்கெடுத்தாலும் கண்கலங்கி விடுகிறார் பின்னணி வேற அந்த வயோலின் இசை(முடியல!).

குழந்தையை ஊரே தேடுமாம் ஆனா நம்ம அமீர் அண்ணன்
மட்டும் குழந்தையை பையில் அல்லது கூடையில் வைத்து அடிக்கடி மதுமிதா வீட்டுக்கு போய் குழந்தைக்கு பால் ஊட்ட சொல்வாராம்,இதை வேற கடைசியில் போலீஸ் விசாரணையில் தான் கண்டு பிடிப்பார்கலாம்.காதுல ஒரு முழம் சுத்தலாம் ஒரு பூக்கூடையை சுற்றினால் எப்படி.அமீரின் இயக்கி நடிக்காத அடுத்த படைப்பான கண்ணபிரானை காண துடிக்கும் அமீரின் ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஜெட்லி டவுட்:

# அது ஏன் கிளைமாக்ஸ் சீன் மட்டும் கட்டி முடிக்கப்படாத
பில்டிங்ல வைக்கிறாங்க?? அதுவும் மொட்டை மாடியில்
போய் ஏன் நிக்கிறாங்க??. பதில் தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.

தியேட்டர் ரசிகர்கள் கமெண்ட்ஸ்:

# நல்லதானே படம் எடுத்துட்டு இருந்தார்..ஏன் இப்படி??

# கடைசியில் HULK மாதிரி கத்தி பைட்லாம் ஓவர் மச்சி.

இந்த விமர்சனம் பல பேரை சேர ஒட்டு போடவும் முக்கியமா
கமெண்ட் போடுங்க.

உங்கள்
ஜெட்லி சரண்.

36 comments:

venkat said...

உங்கள் விமர்சனம் அருமை நண்பா....

குறை ஒன்றும் இல்லை !!! said...

Yogi -------> plz dont GO Ji ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்த விமர்சனம் பல பேரை சேர ஒட்டு போடவும் முக்கியமா
கமெண்ட் போடுங்க.
//

போட்டுடுவோம்

சரவணகுமரன் said...

சுட சுட விமர்சனத்திற்கு ஜெட்லி...

Anbu said...

தல..விமர்சனம் தூள்..இப்பொழுதுதான் நண்பன் சொன்னான்.படம் முதல் பாதி புரியவேயில்லை அப்படின்னு..

நல்லாருக்கு உங்க விமர்சனம்

எம்.எம்.அப்துல்லா said...

அது ஏன் கிளைமாக்ஸ் சீன் மட்டும் கட்டி முடிக்கப்படாத
பில்டிங்ல வைக்கிறாங்க?? அதுவும் மொட்டை மாடியில்
போய் ஏன் நிக்கிறாங்க??. பதில் தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்

//


மேட்டர் சிம்பிள்ணே. கட்டிமுடிச்ச கட்டிடத்துல ஷூட்டிங்போது கூட்டம் கூடும். கட்டிமுடிக்காத பில்டிங்ல யாரு இருக்கபோறா??

அப்புறம் மொட்டைமாடியில் எடுத்தால் லைட்டிங் செலவு பில்லில் குறையும்.

தட்ஸ் ஆல் :)

kanagu said...

naan innum vimarsanam padikala.... nalaiku padathuku poitu vandhutu solren... :)

சென்ஷி said...

//ஆனால் திருவான்மியூரில் இருக்கும் அமீர் குழந்தையுடன் சிட்டி சென்டர் சென்று பர்ச்சேஸ் செய்து விட்டு சத்யம் சினிமாஸ் பாத்ரூம்க்கு போறது கொஞ்சம் ஓவர்.//

ஏன் தலைவா.. திருவான்மியுர்லேந்து சிட்டி செண்டருக்கு பஸ் போறது கிடையாதா?!

பாலா said...

அதானே... ‘தாயைப் போல பிள்ளை’-ன்னுதானே ரைமிங்கா சொல்லுவாங்க?? :) :)

இந்தப் படத்துக்கு இதுதான் முதல் விமர்சனம் (நான் ஃபாலோ பண்ணுவர்களில்). :) :)

கலக்குங்க!

வாசு said...

நல்ல வேளை உங்கள் விமர்சனத்தால் தப்பித்தேன். நிச்சயம் பார்க்கமாட்டேன்

ஜெட்லி... said...

@ அப்துல்லா

//அப்புறம் மொட்டைமாடியில் எடுத்தால் லைட்டிங் செலவு பில்லில் குறையும்.
//

அதான் மேட்டர் ஆ ...

ஜெட்லி... said...

@ அன்பு

எனக்கு கடைசி வரைக்கும் புரியல அன்பு

@ சுரேஷ்

நன்றி தல யோகி ??

ஜெட்லி... said...

@ சரவணகுமரன்

நன்றி நண்பா...

@ குறை ஒன்றும் இல்லை

சரியா சொன்னிங்க ஜி..

ஜெட்லி... said...

@ வெங்கட்

மிக்க நன்றி


@ வாசு

நீங்க தப்பிச்சிங்க நான் சிக்கிடேனே

ஜெட்லி... said...

@ஹாலிவுட் பாலா

தங்கள் கருத்துக்கு நன்றி

ஜெட்லி... said...

@ சென்ஷி

//ஏன் தலைவா.. திருவான்மியுர்லேந்து சிட்டி செண்டருக்கு பஸ் போறது கிடையாதா?! //

பஸ் இருக்கு பாஸ்...ஆனா சிட்டி சென்டரில் இருந்து சத்யம் தியேட்டர்க்கு வந்து டாய்லட் மட்டும் போவது சாத்தியமா??
நீங்க வேணா படத்தை பாத்துட்டு சொல்லுங்க பாஸ்......

ஆனா இது ஒரு மேட்டர் இல்ல சும்மா எழுதுனேன்...

ஜெட்லி... said...

@ கனகு

உங்க தலை வீதி...
பார்த்துட்டு சொல்லுங்க

gulf-tamilan said...

//படம் திருவான்மியூர் ஏரியாவில் நடப்பதாக காட்டுகின்றனர் //
உண்மைத்தமிழன் திருவெற்றியூர் என்று சொல்கிறார்!!

தமிழ் உதயம் said...

இயக்குனர்கள் இயக்குவதற்கு சோம்பல் பட்டால் நடிகராகி விடுகிறார்கள். இது ஒரு வியாதி. இனி மேலாவது இந்த வியாதி இயக்குனர்களுக்கு வராமல் இருக்கட்டும்.

Raju said...

ஒரு வேளை, சேரன் கூட சுத்துறதுனால அந்த வாடை அடிச்சுருச்சோ..!

Unknown said...

//அது ஏன் கிளைமாக்ஸ் சீன் மட்டும் கட்டி முடிக்கப்படாதபில்டிங்ல வைக்கிறாங்க?? அதுவும் மொட்டை மாடியில்போய் ஏன் நிக்கிறாங்க??. //

ஒரு குளோபல் லுக்குப் படத்திறகுக் கிடைக்கும்.

Chitra said...

."அமீரின் இயக்கி நடிக்காத அடுத்த படைப்பான கண்ணபிரானை காண துடிக்கும் அமீரின் ரசிகர்களில் நானும் ஒருவன்."
appadi podu aruvaalai........!

hasan said...

hey this is remake of an SOUTHAFRICAN film "TSOTSI"...this film won OSCAR AWARD AND GOLDEN GLOBE AWARD...for trailer of this film follow the link http://www.youtube.com/watch?v=DYnqbNl7VMM

hasan said...

the mistakes which u have said is not ameer mistake...its the director of tsotsi"s mistake

hasan said...

just follow the link http://www.youtube.com/watch?v=DYnqbNl7VMM

250WcurrentIsay said...

Great escape....padam houseful so ended up watching naan avan illai 2.... its OK..... appo yogiya thala muzhugida vaendiyadhuthaan

வஞ்சமில்லா said...

I've not watched the movie, not sure if i would. But complaining the movie being a copy cat of Tsotsi seems to be too much. People are critical and complaining, of too many things in this movie, when they accepted almost everything they are accusing about this movie when it came from others in other movies.

What about Avvai Shanmugi, Panchathanthiram, Chandramuki...there are many more copy cats from lots of big guys like Kamal, Manirathnam, Shankar etc, you are saying because these movies are copy cat, one shouldnt watch?

I feel like something more is running behind all these reviews, rather just a movie review.

One of the things might be that people expected the same kinda aura like Paruthiveeran in this movie and they are not getting it and complaining.

ஜெட்லி... said...

@ gulf-தமிழன்

நானும் உண்மை தமிழன் அண்ணன்கிட்ட
கேட்டேன்..அவர் பதிலுக்கு காத்திருக்கிறேன்...

ஜெட்லி... said...

@ tamiluthayam

அப்படி சொல்ல முடியாது....
நடிகர்களின் வாயை அடக்கவே
சில இயக்குனர்கள் நடிகர்கள் ஆகிறார்கள்
என்பது தான் உண்மை...

ஜெட்லி... said...

@ ராஜு

இருக்கலாம்...

@ ரவிசங்கர்

அந்த எழவு லுக்கே வேணாம் தல...

ஜெட்லி... said...

@ ஹசன்

தங்கள் கருத்துக்கு நன்றி...
நானும் அமீரை குறை கூற வில்லை.

ஜெட்லி... said...

@ சித்ரா

நன்றி...



@ ஏதுமில்லை

நீங்க சொல்வது சரிதான்...
நான் ஒன்றும் பருத்திவீரன் போல் படத்தை
எதிர்பார்க்கவில்லை... ஒரு புதுபேட்டை
அளவுக்கு பார்த்தேன் ஆனால் சுத்தம்.

thiyaa said...

பாத்தால் தெரியும்
பாத்திட்டு சொல்லுறன்

hasan said...

nandri jetli

Thamira said...

கரெக்டா சொல்லியிருக்கீங்க.. ஆமா படம் முச்சூடும் சுட்ட கதையாமே, அதை விட்டுட்டீங்களே.!

ஜெட்லி... said...

@ தியாவின் பேனா

பார்த்துட்டு சொல்லுங்க...


@ ஆதி

சுட்ட கதைன்னு கேபிள் அண்ணே எனக்கு
சொன்ன பிறகு தான் தெரியும்...